அறிவுக்கு விருந்து – 9.10.2019 (புதன்)


அறிவுக்கு விருந்து – 9.10.2019 (புதன்)

வரலாற்றில் இன்று  -  அக்டோபர் 9 (October 9)
கிரிகோரியன் ஆண்டின் 282 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 283 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  768முதலாம் கார்லொமேன், சார்லமேன் ஆகியோர் பிராங்குகளின் மன்னர்களாக முடிசூடினர்.
·  1238முதலாம் யேம்சு வாலேன்சியாவைக் கைப்பற்றி வலேன்சையா இராச்சியத்தை உருவாக்கினான்.
·  1446அங்குல் எழுத்துமுறை கொரியாவில் வெளியிடப்பட்டது.
·  1582கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துகல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
·  1604சூப்பர்நோவா 1604 பால் வழியில் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புகள்
·  1852எர்மான் எமில் பிசர், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (. 1919)
·  1864ரெசினால்டு டையர், பிரித்தானிய இராணுவ அதிகாரி (. 1927)
·  1873கார்ல் சுவார்சுசைல்டு, செருமானிய இயற்பியலாளர், வானியலாளர் (. 1916)
·  1876தர்மானந்த தாமோதர் கோசாம்பி, இந்தியப் பௌத்த பேரறிஞர் (. 1947)
·  1879மேக்ஸ் வோன் உலோ, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (. 1960)
·  1897எம். பக்தவத்சலம், தமிழ்நாட்டின் 6வது முதலமைச்சர் (. 1987)
·  1908மு. இராமலிங்கம், ஈழத்து எழுத்தாளர், நாடகாசிரியர் (. 1974)
·  1909. நல்லையா, இலங்கைக் கல்வியாளர், அரசியல்வாதி
இறப்புகள்
·  892இமாம் திர்மிதி, பாரசீக உலமா (பி. 824)
·  1943பீட்டர் சீமன், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. 1865)
·  1967சே குவேரா, அர்ச்செந்தீன-கியூப கெரில்லா தலைவர், மருத்துவர் (பி. 1928)
·  1974ஆஸ்கர் ஷிண்ட்லர், செக்-செருமானியத் தொழிலதிபர் (பி. 1908)
·  1987வில்லியம் பாரி மர்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1892)
சிறப்பு நாள்
குறளறிவோம்-  77 . அன்புடைமை
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை: மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
மு.வரதராசனார் உரை: அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
Translation: The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow.
Explanation:  The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.
சிந்தனைக்கு
உன் அறிவு ஒரு விளக்கு, மற்றவர்கள் தங்கள் மெழுகுவர்த்திகளை அதில் ஏற்றிக்கொள்ளட்டும்.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்
 -----> தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம் 
ளு  -----> நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம் 
று  -----> எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம் 
விடுகதை விடையுடன்
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்? நாக்கு
பழமொழி - அங்கிடுதொடுப்பிக்கு அங்கு இரண்டு குட்டு, இங்கு இரண்டு சொட்டு.
பொருள்/Tamil Meaning
கோள்சொல்லுவோனுக்கு எங்கும் எப்போதும் பிரச்சினைதான்.
Transliteration
Angkittuthotuppikku anku irantu kuttu, inku irantu chottu.
தமிழ் விளக்கம்/Tamil Explanation
அங்கிடுதொடுப்பி என்பது குறளை கூறுவோனை, அதாவது கோள்சொல்லுவோனைக் குறிக்கிறது. தொடுப்பி என்ற சொல்லுக்கே புறங்கூறுவோன் என்ற பொருளிருக்க, அங்கிடு என்ற முற்சேர்க்கையின் பொருள் அகராதியில் இல்லை. ஆயினும், அங்கிட்டோமம் என்ற சொல்லுக்கு அக்கினிட்டோமம் (அக்னிஷ்டோமம்) அன்று பொருள் கூறியிருப்பதால், அங்கி என்ற சொல்லுக்கு அக்னி என்று பொருள்கொள்ள இடமிருக்கிறது. இடுதல் என்றால் வைத்தல் என்பதால், அங்கிடுதொடுப்பி என்பவன் இன்றைய வழக்கில்பற்றவைப்பவன்ஆகிறான்! (என் விளக்கம்).சொட்டு என்ற சொல்லுக்குக் குட்டு, அடித்தல் என்ற பொருள்களுண்டு.
Enrich your   vocabulary
unyoke     நுகத்தடியை, அவிழ்
upgrade    பதவி உயர்த்து
uphold      ஆதரி, காப்பாற்று
Opposite Words 
Cruel  X  Kind
  • The prisoner was a hard cruel man.
  • She’s a very kind and generous person.
Customer X  Supplier
Opposite words examples:
  • We aim to offer good value and service to all our customers.
  • You will need to be able to deal with both customers and suppliers.
மொழிபெயர்ப்பு
Cucumber
வெள்ளிரிக்காய்
வெண் முள்ளங்கி
Proverb
A constant guest is never welcome
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + 2
டபுள் லைன் கொடுக்க.
Ctrl + Alt + 1
ஹெட்டிங்1 டெக்ஸ்ட் மாற்ற 
இனிக்கும் கணிதம்      பெய்தல் அளவு..
300
நெல் - 1 செவிடு
5
செவிடு - 1 ஆழாக்கு
2
ஆழாக்கு - 1 உழக்கு
அறிவியல் அறிவோம்  மூலிகைப் பொடிகள்
*கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
அறிவியல் துளிகள்    - மின் கல அடுக்கு Battery - அலெக்சான்ட்ரோ வால்டா
தினம் ஒரு மூலிகை -  முசுமுசுக்கை  :
முசுமுசுக்கை ( (தாவர வகைப்பாடு : Mukia maderaspatana) கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். இது நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சுவாசக்குழல்சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம்அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.
முசுமுசுக்கைக்கு முசுக்கை, இருகுரங்கின் கை, மொசுமொசுக்கை, அயிலேயம் ஆகிய வேறு பெயர்கள் உள்ளன. இத்தாவரம் முழுவதும் ரோம வளரிகளைக் கொண்டிருப்பதால், தடவும்போது, ‘முசுமுசு’வென்ற உணர்வைக் கொடுப்பதால் ‘முசுமுசு’க்கை என்று பெயர் பெற்றது.
முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்பப்பாளி
ஆப்பிளும் ஆரஞ்சும் பெறும் மதிப்பை பழ வகைகளில் அதிக சத்து வாய்ந்த பப்பாளி. ஏனோ பெறவில்லை .விலையும் ஏனோ மிக மலிவே ஆனால் வாங்குவோர் தான் மிகக் குறைவு அதிலும் அதைக் குறித்து பலவேறு வேறு தவறான கருத்துக்கள் வேறு .உலவுகின்றன.
பப்பாளி உலகின் வெப்ப மற்றும் மிதவெப்ப நாடுகளில் ஏராளமாக வளர்கிறது. இந்தியா முழுவதும் பரவலாகத் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. பப்பாளி பழம் மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து 16 ஆம் நுற்றண்டில் டச்சு வணிகர்களால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
பின்பு இந்தியாவில் இருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பரவியது .நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வீட்டுக்கொல்லையில் முளைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அற்ப்புத மரம் இது.
பச்சையும், மஞ்சளும் கலந்த பப்பாளிப் பழங்களில்என்ஸைம்எனப்படும் நொதிகள் அடங்கியுள்ளன. இவை தோலிலுள்ள செல்களை மிருதுவாக்கி, அழுக்குகளையும் இறந்த செல்களையும் போக்கக் கூடியவை.
பழத்தின் மஞ்சள் நிற சதைப்பகுதியை எல்லாவிதமான சருமம்கொண்டவரும் முகத்திற்கு மாஸ்க்காகப் போடலாம். மற்றைய பழங்களை விட பப்பாளியில் கரோட்டின், வைட்டமின்’, ‘சிசத்துகள் நிறைந்துள்ளன. குறைந்த கலோரியில் நிறைந்த சத்துகளைக் கொடுக்கக்கூடிய எளிய மிகவும் மலிவான பப்பாளி எல்லாப் பருவத்திலும் கிடைக்கும் இனிய பழம் ஆகும்.
பப்பாளியிலுள்ளபப்பாயின்என்னும் நொதிப் பொருள் ஜுரண சக்திக்கு ஏற்றது.
ஆல்ஃபா ஹைடிராக்ஸி ஆஸிட்எனப்படும் பழ ஆசிட் பப்பாளியில் இருப்பதால் இது சருமத்தை மிருதுவாக்கும். சருமத்தில் உள்ள மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும். அஸ்கார்பிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, தயாமின், ரிபோபிளேவின் மற்றும் நயாசின் சத்துகள் அடங்கியுள்ளன. சோடியம் பொட்டாசியம் சத்துகளும், குறைந்த சர்க்கரை அளவும் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.
அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பிற்கும், தலை சுத்தம் செய்யும் திரவம் செய்யவும் உபயோகப்படுத்தப்படுகிறது.
பப்பாளி மரத்தின் இலை, காய், பழம், பால் எல்லாமே மருத்துவ பயன்கள் உடையது. உடல் பருமனைக் குறைக்கவும் தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது பப்பாளிக்காய். பப்பாளிப் பழத்திற்கு உடல்வலிமை, ஆண்மை தரும் சக்தி உண்டு. சொறி, சிரங்கு, காயம் ஆகியவற்றைப் போக்கிவிடும். கண்பார்வை கூர்மையடையவும், நீரடைப்பு குணமாகவும், இரத்தம் ஊறவும், பல் சம்பந்தமான கோளாறுகள் நீக்கவும் இது பயன்படுகிறது. பப்பாளி இலையை கசக்கிச் சாறுபிழிந்து அதை தினமும் படர் தாமரையின் மேல் தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவி வர படர்தாமரை குணமாகும்.
வாரம் இருமுறை பப்பாளிக் காயை சமைத்து உண்டு வர உடல் பருமன் குறைய வாய்ப்புள்ளது. இதை அதிகமாக வேக வைத்தால் வைட்டமின்சத்து குறைந்து விடும். வைட்டமின்என்ற உயிரிச்சத்து நிறைந்தது. உடலில் அதிக இரத்தத்தை உண்டு பண்ணும். மனித உடல் வளர்ச்சியடையவும், உடல் பலம் பெறவும், இரத்தத்தை விருத்தி செய்யும் நரம்புகளுக்கு உறுதியைக் கொடுக்கவும், கண்பார்வையைக் கூர்மைப்படுத்தவும், பற்களைப் கெட்டிப்படுத்தி ஈறுகளுக்கு பலத்தைக் கொடுக்கவும், பல் சம்பந்தமான நோய் வராமல் தடுக்கவும், அறிவை வளரச் செய்யவும், நல்ல ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் கூடிய அபார சக்தி வைட்டமின்உயிரிச்சத்துக்குத்தான் உண்டு. 35 கிராம் இறைச்சியைச் செரிப்பதற்கு ஒரு கிராம் பப்பாயின் போதும் என்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள். அதனாலதான் மாமிச உணவுத் தயாரிப்புக்களை மென்மைப்படுத்த பப்பாயின் பயன்படுத்தப்படுகின்றது.
வரலாற்றுச் சிந்தனை  இடி அமீன் (கி.பி. 1971 - 1979)
             உகாண்டாவில் தேர்தலில் ஜெயித்து வந்த மக்கள் அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு, ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தார். அடுத்த 8 ஆண்டுகள் உகண்டாவை உண்டு இல்லையென ஆக்கினார். 3 லட்சம் மக்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்றார். இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர்கள் சொத்துக்களை பிடுங்கிக்கொண்டு, நாட்டை விட்டு விரட்டினார்! ராணுவத்திற்காக அதிகம் செலவழித்ததால், நாடு கடுமையான பொருளாதாரத்
தட்டுப்பாட்டில் திணறியது.
தன்னம்பிக்கை கதை -  "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு"
ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலகள் ஆரம்பமானது.
அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன.  அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன.
தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான். நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான்.
அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன. சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன.
இதனைக் கண்ட வேடன், "அய்யய்யோ... புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே...'' என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.

பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, "எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்... அவ்வளவுதான்'' என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, "நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது'' என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது.
இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் "ஒற்றுமை நீங்கியதால் அனை வருக்கும் தாழ்வு" என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி'' என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

செய்துபார்ப்போம் +2 Maths Part 45 Int Cal Ex 7 1 sum 3,4

https://www.youtube.com/watch?v=gsCevdhjTrU&list=PLrEkyHXS85Xv4WQuaDID_NPsNiTOqeYkM

இணையம் அறிவோம்

https://www.learner.org/interactives/

செயலி (Free Sample) NTSE Stage 1 Question Bank - 9 States Past (2012-19) + Practice Question Bank 3rd Edition

No comments:

Post a Comment