வரலாற்றில்
இன்று - அக்டோபர் 16 (October 16) கிரிகோரியன் ஆண்டின்
289 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில்
290 ஆம்
நாள்.
நிகழ்வுகள்
·
1590 – வெனோசா இளவரசரும், இசையமைப்பாளருமான கார்லோ கேசுவால்தோ
தனது மனைவி டொனா மரியா, அவளது காதலன் அந்திரியா குறுநில ஆட்சியாளர் பாப்ரிசியோ கராபா ஆகியோரை நாபொலியில்
படுகொலை செய்தார்.
·
1736 – வால்வெள்ளி
பூமியைத்
தாக்குவதில் தோல்வி கண்டது என வில்லியம் உவிசுட்டன் என்ற
கணிதவியலாளர் எதிர்வு கூறினார்.[1]
·
1780 – 1780 இன் மிகப்பெரும் சூறாவளி
ஆறாவது நாளில் முடிவுக்கு வந்தது, சிறிய அந்திலீசில்
20,000 முதல்
24,000 பேர்
வரை உயிரிழந்தனர்.[2]
·
1793 – பிரெஞ்சுப் புரட்சியின்
உச்சக் கட்டத்தில் பதினாறாம் லூயி மன்னரின் மனைவி மரீ அன்டோனெட் தலை துண்டிக்கப்பட்டு
மரணதண்டனைக்கு
உட்படுத்தப்பட்டார்.
பிறப்புகள்
இறப்புகள்
·1946
– ஆல்பிரட் ரோசன்பெர்க்,
எசுத்தோனிய அரசியல்வாதி, நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தினால்
மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர் (பி. 1893)
சிறப்பு நாள்
குறளறிவோம்- 83. விருந்தோம்பல்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
பருவந்து பாழ்படுதல் இன்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை: விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.
மு.வரதராசனார் உரை:தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
Translation: Each day he tends the coming guest with kindly care;
Painless, unfailing plenty shall his household share.
Painless, unfailing plenty shall his household share.
Explanation: The domestic life of the man that daily entertains the
guests who come to him shall not be laid waste by poverty.
சிந்தனைக்கு
வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்.
தமிழ்
அறிவோம்ஒத்தச் சொற்கள்
சா
|
இறத்தல், சாக்காடு
|
சீ
|
லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்
|
சு
|
விரட்டடுதல், சுகம், மங்கலம்
|
சே
|
காலை
|
சை
|
அறுவறுப்பு
ஒலி, கைப்பொருள்
|
சோ
|
மதில், அரண்
|
விடுகதை
விடையுடன்
அரசன் ஆளாத கோட்டைக்கு பகல் காவல்காரன்
ஒருவன், இரவுக் காவல்காரன் ஒருவன் அவர்கள் யார்? ? சூரியன், சந்திரன்4
பழமொழி- கண்டால் காமாச்சி நாயகர்,
காணாவிட்டால் காமாட்டி நாயகர்.
பொருள்/Tamil Meaning ஒருவனைக் கண்டபோது அவன
மரியாதைக்கு உரியவனாகவும், காணாதபோது அவன்
மடையன்
என்றும் சொல்வது.
Transliteration Kantaal kamacci nayakar, kanavittal kaamaatti nayakar.
தமிழ் விளக்கம்/Tamil Explanation
காமாச்சி நாயகர்
என்பது
அநேகமாக சிவனைக்குறிப்பது; இது
புகழ்ச்சியின் எல்லை.
காமாட்டி என்பது
மண்வெட்டுவோனை, நிலத்தைத் தோண்டுவோனைக் குறிக்கும் சொல்,
பட்டிக்காட்டான் என்று
மறைமுகமாகச் சொல்வது.
Enrich your vocabulary
Proverb
A good face needs no paints
அழகிய
முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை
Opposite Words
Doctor
X Patient
Antonyms
examples:
- She was treated by her local doctor.
- St Dominic’s Hospital treats about 10,000 patients a year.
Doubt X
Trust
- The incident raises doubts about the safety of nuclear power.
- You shouldn’t put your trust in a man like that.
மொழிபெயர்ப்பு
மெல்லிய அவரை
|
|
முருக்கங்காய்/ முருங்கைக்காய்
|
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl
+
|
ஒரு வார்த்தை வலது பக்கம் நகர்த்த
|
Ctrl
+ <அம்புக்குறி>
|
வரி அல்லது பத்தி தொடக்கத்தில் நகரும்
|
இனிக்கும் கணிதம்
கால அளவு..
60 விநாடி = 1 விநாடி-நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
அறிவியல் அறிவோம்
ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.*சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை –
12
அறிவியல் துளிகள் - எலெக்ட்ரிக் ஜெனரேட்டர்
- மைக்கேல் ஃபாரடே
1. மூலிகையின் பெயர் -: எழுத்தாணிப் பூண்டு.
2. தாவரப் பெயர் -: PRENANTHES SARMENTOSUS.
3. தாவரக்குடும்பம் -: COMPOSITAE.
4. வேறு பெயர் -: முத்தெருக்கன் செவி என்பர்.
5. பயன்தரும் பாகங்கள் -: செடியின் இலை மற்றும் வேர்.
6. வளரியல்பு -: எழுத்தாணிப் பூண்டு ஒரு குறுஞ்செடி. பற்களுள்ள, முட்டை வடிவ, காம்புள்ள இலைகளையும், உருண்ட தண்டுகளில் (எழுத்தாணி போன்ற) நீல நிறப் பூக்களையும் உடைய நேராக வளரும் செடி.. எல்லா வளமான இடங்களிலும் வளரும். நஞ்சை நிலங்களில் வரப்புகளில் தானே வளர்வது. இதற்கு முத்தெருக்கன் செவி என்ற பெயரும உண்டு. மல மிளக்கும் குணமுடையது. விதைகள் மூலம் இனப்பெருக்கும் செய்கிறது..
7. மருத்துவப் பயன்கள் -: எழுத்தாணிப் பூண்டின் இலைகள் 5-10 கிராம் எடுத்து நன்கு அரைத்துச் சற்று தாராளமாக மலம் போகும் அளவாகக் காலை, மாலை கொடுத்துவரக் குடல் வெப்பு நீங்கிப் புண் ஆறும். சீதபேதி குணமாகும்.
இதன் இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணைய் கலந்து பதமுறக் காய்ச்சி உடம்பில் தடவி வரச் சொறி, சிரங்கு முதலியவை குணமாகும்.
7. மருத்துவப் பயன்கள் -: எழுத்தாணிப் பூண்டின் இலைகள் 5-10 கிராம் எடுத்து நன்கு அரைத்துச் சற்று தாராளமாக மலம் போகும் அளவாகக் காலை, மாலை கொடுத்துவரக் குடல் வெப்பு நீங்கிப் புண் ஆறும். சீதபேதி குணமாகும்.
இதன் இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணைய் கலந்து பதமுறக் காய்ச்சி உடம்பில் தடவி வரச் சொறி, சிரங்கு முதலியவை குணமாகும்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் – பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படும் நிறமிகள்
குளோரோஃபில் (CHLOROPHYLL):
குளோரோஃபில் என்னும் பச்சை நிறமி பச்சையிலை கீரைகள் மற்றும் பச்சை நிற காய்கறிகளுக்கு பச்சை
நிறத்தை அளிக்கிறது.
வரலாற்றுச் சிந்தனை முதன்
முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.
ஒரு காட்டில்
ஒரு காகம் கூடுகட்டி வாழ்ந்து வந்தது. அக் காகம் விவாகமாகி ஆண் காகமும்
பெண்காகமும் அக்கூட்டிலே வாழ்ந்தனர். பல நாட்கள் சென்ற பின் பெண் காகம் 5 முட்டைகள் இட்டது. அதனைக் கண்ட ஆண்காகம் தான் ஐந்து
பிள்ளைகளுக்கு தந்தையாக போவதையிட்டு மிக மகிழ்ச்சியடைந்தது. பெண்காகம் முட்டைகளை
அடைகாத்து வந்தது. ஆண் காகம் பெண் காகத்திற்கு வேண்டிய இரையை தேடிக்கொடுத்து
பெண்காகம் அடைகாப்பதற்கு உதவி செய்தது, இருவரும் தமக்கு 5
பிள்ளைகள் பிறக்கப் போகிறார்கள் என்று மிகவும் சந்தோசமாகவும்
மகிழ்ச்சியாகவும் இருந்தனர்.
அக்காட்டில்
ஒரு நரியும் குடும்பமாக வசித்து வந்தது. அந்த நரியும் காகமும் நல்ல நண்பர்களாக
வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் ஆண்காகம் இரைதேடி வரும் வழியில் வேட்டைக்காரர்கள்
காட்டினுள் நுளைவதைக் கண்டது. உடனே காகம் நரி நண்பர் வசிக்கும் இடத்திற்கு சென்று
வேட்டைக்காரர் காட்டில் வருவதையும் பாதுகாப்பாக எங்காவது மறைந்து இருக்கும்
படியும் கூறியது. அத்துடன் தனக்கும் ஐந்து பிள்ளைகள் பிறக்க உள்ளார்கள் என்றும்
நண்பனான நரிக்கு கூறியது. அப்போது நரி தங்களுக்கு பாட்டி வைக்கும்படி கேட்டது.
காகமும் அன்று இரவு பாட்டி தர அழைக்க வருவதாக கூறியது. உடனே நரியார் குடும்பம்
நன்றி கூறி விட்டு ஓடி ஒழித்துக் கொண்டது.
ஆண் காகம்
இரையுடன் பெண்காகம் அடைகாத்துக் கொண்டிருந்த கூட்டுக்கு வந்தது. அப்போது பெண்காகம்
அழுது கொண்டிருந்தது. காரணம் வினவிய போது. பாம்பொன்று வந்து தனது முட்டைகளை
குடித்துவிட்டதாக கூறிப் புலம்பியது. அதனைக் கேட்ட ஆண்காகமும் விம்மி அழுத்துடன்.
அந்தப் பாம்பு தமது பிள்ளைகளை அழித்ததுடன் தமக்கு எனிமேலும் பிள்ளைகள் பிறக்க
விடமாட்டாது அதனை கொன்றே தீருவேன் என சபதம் எடுத்தது.
மறு நாள்
நரியார் காகம் இருந்த கூட்டடிக்கு சென்று காகத்தை அழைத்தது. காகம்ம் இரண்டும்
பறந்து வந்து சோகமாக இருந்தன. அதனை கண்ட நரி உங்களுக்கு என்ன நடந்தது என்று
கேட்டது. அப்போது ஆஅண் காகம் முழு விபரத்தையும் சொல்லி புத்திசாலியான நரியிடம் பாம்பைக் கொல்ல ஒரு உபாயம்
சொல்லும் படி கேட்டது. நரியும் அவர்களுக்கு எப்படியும் உதவி செய்ய வேண்டும்
எண்ணத்துடன் ஆலோசித்தது. மறு நாள் நரி வெளியே சென்ற போது மகாராணியார் ஆற்றில்
குழிப்பதற்காக தோழியருடனும் காவலருடனும் வருவதை அவதானித்தது. மகாராணி தனது நகைகள்
கழட்டி ஆற்றங்கரையில் வைத்து விட்டு குழித்துக் கொண்டிருந்தார்.
உடனே நரிக்கு
உபாயம் தோன்றியது மாகாராணி நாளைக்கு குழிக்கும் போது கரையில் வைத்த நெக்ளெஸ்சை
காகம் தூக்கிக் கொண்டு போய் பாம்பின் புற்றுக்குள் போட்டால் அரச காவலாளிகள்
பாம்பைக் கொலை செய்து நகைகளை மீட்பார்கள் அப்போது எனது நண்பரின் எதிரி இறந்து
விடுவான் என திட்டம் போட்டு, தனது திட்டத்தை
காகங்களுக்கு கூறியது. மறுநாள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே காகங்களும்
நரியும் அவ் ஆற்றங்கரைக்குச் சென்று சரியான சூழ்நிலை வரும் வரை காத்து இருந்தன.
மகாராணியாரும்
வழ்காகம் போல் நகைகள்ல் லழட்டி ஆற்றங்கரையி; வைத்து
விட்டு குழிக்கச் சென்றாள். இதனைக் கண்ட காகன் இதுதான் த்ருணம் என எண்ணி ராணி
நகைகள் வைத்திருந்த இடத்திற்குச் சென்று நெக்ளெஸை தூக்கிச் சென்றது. காவலாளிகள்
காகத்தைத் பின் தொடர்ந்தார்கள். காகம் அந்த நெக்கிளெஸ்சை எதிரியான பாம்பு இருந்த
புற்றினுள் போட்டது.. காவலாளாளிகள் நெக்ளெஸ்சை எடுக்க முயற்சித்தார்கள் அப்போது
அதனுள் இருந்த பாம்பு சீறிக்கொண்டு வெளியே வந்தது. உடனே பாம்பை அடித்து கொலை
செய்தபின் நெக்ளெஸ்சை மீட்டுச் சென்றார்கள். அதன் பின் காகங்கள் நின்மதியாக
வாழ்ந்தது. ஆபத்தான நேரத்தில் காகம் நரியின் குடும்பத்தைக் காப்பாற்றியதால்
நரியின் உதவியுடன் காகம் தனது குடும்பத்தை காப்பாற்றியது.
No comments:
Post a Comment