வரலாற்றில் இன்று - அக்டோபர்
12 (October 12) கிரிகோரியன் ஆண்டின் 285 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 286 ஆம் நாள்.
நிகழ்வுகள்
கிமு 539 – பாரசீகத்தின் சைரசின் இராணுவம் பாலிலோனைப் பிடித்தது.
1492
– கிறித்தோபர் கொலம்பசும் அவரது
குழுவினரும் கரிபியனில் பகாமாசை அடைந்தனர். அவர் கிழக்கிந்தியத் தீவுகளை அடைந்ததாக
நினைத்தார்.
1582
– கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை
அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில்
இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1654
– நெதர்லாந்தில் டெல்ஃப்ட் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில்
நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1785
– ரிச்சார்ட் ஜான்சன் என்பவர் தமிழ்நாட்டின் முதல் செய்திப்பத்திரிகையான மதராசு
கூரியர் என்ற ஆங்கில வார இதழை வெளியிட்டார்.
1792
– கொலம்பசு நாள் முதல் தடவையாக நியூயார்க் நகரில்
கொண்டாடப்பட்டது.
பிறப்புகள்
1537
– ஆறாம் எட்வர்டு, இங்கிலாந்து
மன்னர் (இ. 1553)
1798
– முதலாம் பேதுரு, பிரேசில் பேரரசர்
(இ. 1834)
1864
– காமினி ராய், வங்காளக் கவிஞர், சமூகப் பணியாளர்
(இ. 1933)
1891
– இதித் ஸ்டைன், செருமானிய-யூத மெய்யியலாளர் (இ.
1942)
1891
– எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழறிஞர்,
பதிப்பாளர் (இ. 1956)
இறப்புகள்
1845
– எலிசபெத் ஃபிரை, ஆங்கிலேயத்
தாதி, சமூக சேவகர் (பி. 1780)
1870
– ராபர்ட் ஈ. லீ, அமெரிக்க இராணுவத் தளபதி, பொறியியலாளர்
(பி. 1807)
1914
– மார்கரெட் ஈ. நைட், அமெரிக்க
கண்டுபிடிப்பாளர் (பி. 1838)
1967
– ராம் மனோகர் லோகியா, இந்திய
அரசியல்வாதி (பி. 1910)
1976 – ராணி சந்திரா, மலையாளத் திரைப்பட நடிகை (பி.
1949)
சிறப்பு நாள்
- கொலம்பசு நாள் (எல் சால்வடோர், உருகுவை, வெனிசுவேலா, பெலீசு, கோஸ்ட்டா ரிக்கா)
- விடுதலை நாள் (எக்குவடோரியல் கினி, எசுப்பானியாவிடம் இருந்து 1968)
- குழந்தைகள் நாள் (பிரேசில்)
குறளறிவோம்- 81. விருந்தோம்பல்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: இல்லறத்தைப் போற்றி
வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
மு.வரதராசனார் உரை: வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து
இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி
உதவி
செய்யும் பொருட்டே ஆகும்.
Translation: All household cares and course of daily life have this in
view.
Guests to receive with courtesy, and kindly acts to do.
Guests to receive with courtesy, and kindly acts to do.
Explanation: The whole design of living in the domestic state and laying
up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.
சிந்தனைக்கு
அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது அது மனதை ஒருமுகப்படுத்துவது.
தமிழ்
அறிவோம்ஒத்தச் சொற்கள்
எ
|
வினா எழுத்து, ஏழு
என்பதின் தமிழ் வடிவம்
|
ஏ
|
அம்பு, உயர்ச்சிமிகுதி
|
ஐ
|
அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை
|
விடுகதை
விடையுடன்
நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன்,
உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம்
கொடுப்பான் அவன் யார்? நாற்காலி
பழமொழி - குரங்குப்புண்
ஆறாது.
பொருள்/Tamil Meaning குரங்கு
தன்மேலுள்ள புண்ணை ஆறவிடுமா?
Transliteration kuranguppun aaraatu.
தமிழ் விளக்கம்/Tamil Explanation இங்குக் குரங்கு என்றது மனிதவர்க்கத்தைக் குறிக்கிறது. அதுவும்
குரங்குபோல அமைதியற்று அலைவது. புண் என்றது மனிதனிடம் உள்ள தீயகுணத்தை. குரங்கு தன்
புண்ணை ஆறவிடாது; மனிதனும் தன் தீயகுணத்தை மாறவிடான்.
Enrich your vocabulary
Opposite Words
Deep
—— Shallow
Opposites
examples:
- The castle is on an island surrounded by a deep lake.
- The lake is quite shallow.
Demand
—— Supply
- I demand to know what’s going on.
- An informer supplied the police with the names of those involved in the crime.
மொழிபெயர்ப்பு
மீனாக்கொழுந்து
|
|
ஒரு
வகைச் சீமைக்கீரை
|
Proverb
A
drawing man will catch at a straw
நீரில் மூழ்குபவனுக்கு துரும்பும் தெப்பமாகும்
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl
+ Shift +>
|
செலேக்ட் பண்ண டெக்ஸ்ட் சைஸ் அதிகப்படுத்த.
|
Ctrl
+ Shift + <
|
செலேக்ட் பண்ண டெக்ஸ்ட் சைஸ் குறைக்க
|
இனிக்கும்
கணிதம் பெய்தல் அளவு..
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
அறிவியல் அறிவோம் – எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
அறிவியல் அறிவோம் – எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)
அறிவியல் துளிகள் - டீசல் எஞ்சின் - ருடோல்ஃப்
கிரிஸ்டியன் கார்ல் டீசல்
1. மூலிகையின் பெயர் -: அழிஞ்சில்.
2. தாவரப்பெயர் -: ALANGIUM LAMARCKII,
3. தாவரக்குடும்பம் -: ALANGIACEAE.
4. இன வேறுபாடு -: கறுப்பு, வெள்ளை, சிவப்புப் பூக்களையுடையவை வேறுபடும்.
5. பயன் தரும் பாகங்கள் -: வேர்ப்பட்டை, இலை,
மற்றும் விதை முதலியன.
6. வளரியல்பு -: அழிஞ்சில் எல்லா நிலங்களிலும் வளர்க் கூடிய சிறு மரம். ( 15-20
அடி உயரம் )நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம். செம்மஞ்சள் நிறமுள்ள
பழங்களையுடையது. தமிழகமெங்கும் புதர் காடுகளிலும் வேலிகளிலும், தானே வளர்கிறது. இதில் சிவப்பு, கறுப்பு,
வெள்ளை முதலிய பூக்களையுடைய மரங்கள் உண்டு. இவற்றில் சிவப்புப் பூ
உடைய மரம் மருத்துவப் பயன் மிக்கதாகக் கருதப்படுகிறது. இது விதை மூலம் இனப்பெருக்கம்
செய்யப்படுகிறது.
7. மருத்துவப் பயன்கள் -: நோய் நீக்கி, உடல் தேற்றுதல்.
வாந்தி உண்டு பண்ணுதல். பித்த நீர் சுரப்பை மிகுத்தல், வயிற்றுப்
பூச்சிகளைக் கொல்லுதல் காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவ குணமுடையது. அழஞ்சிலில் செய்யப்படும்
மருந்துகளைத் தொடர்ச்சியாக 1 வாரத்திற்கு மேல் கொடுப்பின்
வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை
ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட வேண்டுமாயின் இடையிடையே ஒரு வாரம் மருந்தை நிறுத்தி
மீண்டும் சாப்பிடலாம்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் –
ட்ருப்ஸ் (DRUPES)
ட்ருப்ஸ் இன பழவகைகள், உண்ணக்கூடிய பகுதியுடன் மெலிதான தோலை கொண்டிருக்கும். சத்துள்ள சதைப்பகுதி ஒரு விதையை (Single Seed) கொண்டிருக்கும். ஏப்ரிகாட்ஸ், செர்ரி பழங்கள், பீச் மற்றும் ஆல்ப்பகடா பழங்கள் (plums) இவ் வகையில் அடங்கும்.
வரலாற்றுச் சிந்தனை உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.
ஒரு கோடை காலம், பகல் நேரம். கொழுத்தும் வெயில் மக்களையும், பறவைகளையும் வருத்தியது. தாகம் எல்லோருக்கும் ஏற்பட்டது
பறவைகள் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இன்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தன. அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது. அது தண்ணீருக்காக அலையும் போது. ஒரு வீட்டின் வெளியே வாய் குறுகிய குடுவை பாத்திரம் ஒன்றைக் கண்டது. அங்கே சென்று பார்த்தபோது அப்பாதிரத்தில் கொஞ்சத் தண்ணிர் இருந்ததைக் கண்டு மகிழ்வுற்றது. உடனே குடுவையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகால் தண்ணீரைக் குடிக்கப் பார்த்தது. ஆனால் அதன் அலகிற்கு தண்ணீர் மட்டத்தை எட்ட முடியவில்லை. அதனால் பாத்திரத்தில் இருந்த நீரை காகத்தால் குடிக்க முடியவில்லை.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என காகம் மனம் வருந்தியது. இதைவிட்டால்
வேறு இடத்தில் தண்ணீர் கிடக்கவும் மாட்டாது என எண்ணி அதனை எப்படியாவது குடிக்க
வேண்டுமென சுற்றுமுற்றும் பார்த்து யோசனை செய்தது. பக்கத்தில் சிறு சிறு
கூழாங்கற்கள் கொட்டிக் கிடந்தன.உடனே அதற்கு ஒரு யுக்தித் தோன்றியது. ஒவ்வொரு
கூழாங்கற்களாக எடுத்து. அதை அந்தக் குடுவையில் போட்டது. கூழாங்கற்கள் விழ,விழ..தண்ணீரின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில்
குடுவையின் வாயருகே தண்ணீர் வந்து விட்டது. உடன், அந்தக்
காகம் தண்ணீரில் தன் அலகை வைத்து. தாகம் தீர தண்ணீர் அருந்தி மகிழ்ந்தது. எந்தப்
பிரச்னையாயினும் அதற்கு ஒரு தீர்வு உண்டு. நமது புத்தியை பயன்படுத்தி,யோசித்து..தீர்வு கண்டால் பிரச்னை தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும்.
No comments:
Post a Comment