வரலாற்றில்
இன்று - அக்டோபர் 18 (October 18) கிரிகோரியன் ஆண்டின்
291 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில்
292 ஆம் நாள்.
நிகழ்வுகள்
· 1009 – எருசலேமின்
திருக்கல்லறைத் தேவாலயம்
என்ற கிறித்தவத் தேவாலயம் கலீபா
அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றாக அழிக்கப்பட்டது.
· 1867
– உருசியப் பேரரசிடம்
இருந்து அலாஸ்கா
மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா
7.2 மில்லியன் அமெரிக்க டாலர்
விலை கொடுத்து வாங்கியது. இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
பிறப்புகள்
இறப்புகள்
சிறப்பு நாள்
- அலாஸ்கா நாள் (அலாஸ்கா, அமெரிக்கா)
- விடுதலை நாள் (அசர்பைஜான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)
குறளறிவோம்- 85. விருந்தோம்பல்
வித்தும்
இடல்வேண்டும்
கொல்லோ
விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
மிச்சில் மிசைவான் புலம்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?.
மு.வரதராசனார் உரை:விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.
Translation: Who first regales his guest, and then himself supplies,
O'er all his fields, unsown, shall plenteous harvests rise.
O'er all his fields, unsown, shall plenteous harvests rise.
Explanation: Is it necessary to sow
the field of the man who, having feasted his guests, eats what may remain ?.
சிந்தனைக்கு
கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை. கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.
தமிழ்
அறிவோம்ஒத்தச் சொற்கள்
தை
|
தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
|
நா
|
நான், நாக்கு
|
நி
|
இன்பம், அதிகம், விருப்பம்
|
நீ
|
முன்னிலை
ஒருமை, நீக்குதல்
|
தை
|
தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
|
நா
|
நான், நாக்கு
|
விடுகதை
விடையுடன்
நான் பார்த்தால் அவன் பார்ப்பான், நான் சிரித்தால் அவன்
சிரிப்பான் அவன் யார்? முகம் பார்க்கும் கண்ணாடி
பழமொழி- தூர்த்த கிணற்றைத் தூர்வாராதே.
பொருள்/Tamil Meaning கிணற்றைத் தூர்த்து முடிவிட்டபின், மீண்டும் அதைத்
தோண்டித் தூர்வாரினால் பயன்
உண்டோ?
Transliteration Thoorttha kinarrait thoorvaaraadhae.
தமிழ் விளக்கம்/Tamil Explanation
முடிந்துபோன விஷயத்தை மீண்டும் கிளறுவது குறித்துச் சொன்னது.
Enrich your vocabulary
Proverb
A guilty conscience needs no Accuser
குற்றமுள்ள நெஞ்சு
குறுகுறுக்கும்
Opposite Words
Dry X
Wet
Opposites
examples:
- The air was dry and hot, as if she were in a sauna.
- Deidre whipped the door open, ignoring the sting of her wet hair against her shoulders.
Dusk X
Dawn
- The street lights go on at dusk.
- The boats set off at dawn.
மொழிபெயர்ப்பு
நோக்கோல்
|
|
நோக்கோல் (ஊதா)
|
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl
+ Backspace
|
கர்சரை இடது பக்கம் நீக்க.
|
Ctrl
+ End
|
ஒரு டாக்குமெண்டில் இறுதிக்கு செல்ல
|
இனிக்கும் கணிதம்
கால அளவு..
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
அறிவியல் அறிவோம்
பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது - நைட்ரஜன்
அறிவியல் துளிகள் - மின்மோட்டார் AC - நிக்கோலா தெல்சா
அறிவியல் துளிகள் - மின்மோட்டார் AC - நிக்கோலா தெல்சா
2. தாவரப்பெயர் :- COCUTUS HIRSUTUS.
3. தாவரக்குடும்பம் :- MENISPERMACEAE.
4. பயன்தரும் பாகங்கள் :- இலை மற்றும் வேர் ஆகியன.
5. வளரியல்பு :-
கட்டுக்கொடி ஓர் ஏறு
கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும்,
மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து
வளரக்கூடியது. தமிழகத்தில் எல்லாப்பகுதிகளிலும் வளர்கிறது. இதன் தாயகம் வட அமெரிக்கா,
ஆசியா, மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். 45
அடி நீளம் வரை படரக்கூடியது. பூத்துக் காய்காய்க்கும். தன்
மகரந்தச் சேர்க்கையால் பழம் விடும். பழம் நீல நிறமாக 4 எம்.எம்.
உருண்டையானது. இலைச் சாற்றை நீரில் கலந்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும்.
இதில் சிறு கட்டுக்கொடி, பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும்
மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால்
வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.
6. மருத்துவப்
பயன்கள் :- இது குளிர்ச்சியூட்டியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.பாக்களவு
இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும். இலை, வேப்பங்கொழுந்து
சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு,
ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகு மூத்திரம் தீரும். சிறுநீர்ச்
சர்க்கரையும் தீரும். பெருங்கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத்
தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும். இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால்,
சர்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க
பேதி தீரும். கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும்
இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்கக்
குழந்தைகளுக்குக் காணும் வயிற்றுவலி தீரும்.
கென்யாவில்
இதன் இலையை வயிற்று வலிக்குப் பயன்படுத்துகிறார்கள். பாக்கிஸ்தானிலும்
இந்தியாவிலும் நரம்புத் தளர்ச்சிக்காகப் பயன்படுத்துகிறார்கள் சைனாவில் வேரை உடல்
பருமனைக் குறைக்கப் பயன்படுத்துகிறார்கள். ராஜஸ்தானில் இலையை சமைத்து மாலைக்கண்
உண்டாவதைக் குணப்படுத்துகிறார்கள். இதன் இரு கொடிகளையும் பிலிப்பையின்ஸ் மற்றும்
ஆப்பிரிக்காவில் கூடைகள் செய்யவும் பயன் படுத்திகிறார்கள். தமிழ் நாட்டில் இந்தக்
கொடியை பிரமணை செய்வதற்கும், சிம்மாடு செய்வதற்கும்
பயன்படுத்துகிறார்கள்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் – பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படும் நிறமிகள்
பிளேவினாய்டுகள் (flavinoids)
ஃபினோலிக் (Phenolic) வகையைச் சார்ந்த நிறமிகள் ஆன்தோசையானின்(Anthocyanin), ஆன்தோசான்தின்
(Anthoxanthin), லூக்கோ
ஆன்தோசான்தின்
(Leucoanthoxanthin), கேட்டகின்
(Catechin), குயினோன்கள்
(Quinones) மற்றும் பீட்டாலின் (Betalin) ஆகும். முதல் நான்கு நிறமிகளும், பிளேவினாய்டுகள் (flavinoids)
என்று கூட்டாக அழைக்கப்படுகிறது.
வரலாற்றுச் சிந்தனை உலகிலேயே
வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
தன்னம்பிக்கை கதை - ஐயோ
ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா?
ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம்.
உமாதேவியார்
பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம்.
அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக்
கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான்
காப்பாற்றுகிறேன் என்றாராம். இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப்
போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம்.
அவன் இருந்த
கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ”
என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில்
செத்துப்போனான். உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன்
சொன்னாராம், அவன் எமனின் மனைவி “ஐயோ”
வை அல்லவா கூப்பிட்டான். அதான், ஐயோ வந்து
அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.அதான் “ஐயோ” என்று ஏன் சொல்லக்கூடாது என்பதற்காக
ஒரு சின்ன கதை
No comments:
Post a Comment