அறிவுக்கு விருந்து – 31.10.2019 (வியாழன்)


அறிவுக்கு விருந்து – 31.10.2019 (வியாழன்)


வரலாற்றில் இன்று - அக்டோபர் 31 (October 31) கிரிகோரியன் ஆண்டின் 304 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 305 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  475ரோமுலசு ஆகுஸ்டலசு உரோமைப் பேரரசராக முடி சூடினார்.
·  683மெக்கா முற்றுகையின் போது கஃபா தீப்பற்றி அழிந்தது.
· 1517கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்: மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை செருமனியின் விட்டன்பேர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார்.
·  1863நியூசிலாந்தில் நிலை கொண்ட பிரித்தானியப் படைகள் "வைக்காட்டொ" என்ற இடத்தில் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து மவோரி போர் மீண்டும் ஆரம்பமானது.
· 1903அமெரிக்கா, இந்தியானாபொலிசில் தொடருந்து விபத்தில் 17 உயிரிழந்தனர்.
பிறப்புகள்
·  1632யொகான்னசு வெர்மிர், டச்சு ஓவியர் (. 1675)
·  1711லாரா மரியா, இத்தாலிய மருத்துவர், இயற்பியலாளர் (. 1778)
·  1760ஒக்குசாய், சப்பானிய ஓவியர் (. 1849)
·  1795ஜோன் கீற்ஸ், ஆங்கிலேயக் கலைஞர் (. 1821)
·  1815கார்ல் வியர்ஸ்ட்ராஸ், செருமானியக் கணிதவியலாளர் (. 1897)
·  1828ஜோசப் வில்சன் ஸ்வான், ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர்
·  1861நாராயண ஐயங்கார், தமிழக இதழாசிரியர், ஆய்வாளர், நூலாசிரியர்
·  1875வல்லபாய் பட்டேல், இந்திய அரசியல்வாதி (. 1950)
·  1887சங் கை செக், சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (. 1975)
·  1918இயான் ஸ்டீவன்சன், அமெரிக்க உளவியலாளர் (. 2007)
·  1922நொரடோம் சீயனூக், கம்போடியாவின் 1வது பிரதமர் (. 2012)
இறப்புகள்
·  1926ஆரி உடீனி, அங்கேரிய-அமெரிக்க மாயவித்தைக் காரர் (பி. 1874)
·  1929நார்மன் பிரிட்சர்டு, இந்திய-ஆங்கிலேய நடிகர் (பி. 1877)
·  1962கேபிரியேல் இரெனவுதோத் பிளம்மாரியன், பிரென்சு வானியலாளர் (பி. 1877)
· 1975எஸ். டி. பர்மன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர்
·  1984இந்திரா காந்தி, இந்தியாவின் 3வது பிரதமர் (பி. 1917)

·  1990எம். எல். வசந்தகுமாரி, திரைப்பட, கருநாடக இசைப்பாடகி (பி, 1928)

சிறப்பு நாள்

·         ஆலோவீன்

குறளறிவோம்-  94. விருந்தோம்பல்

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை எனும் துன்பமில்லை.
மு.வரதராசனார் உரை: யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
Translation: The men of pleasant speech that gladness breathe around,
Through indigence shall never sorrow's prey be found.
Explanation: Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.
சிந்தனைக்கு     நியாயத்திற்கு நன்மை உறுதி
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
மே
 மேல்
மை
 கண்மை (கருமை), அஞ்சனம்இருள்
மோ
 மோதல்முகரதல்
 தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்
விடுகதை விடையுடன்
எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?  நண்டு
பழமொழி- இல்லது வாராது, உள்ளது போகாது.
பொருள்/Tamil Meaning- நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த வினைகள் அதன் விளைவுகளை அனுபவிக்கும்வரை நீங்காது.
Transliteration -  Illatu vaaraatu, ullatu pokatu.
தமிழ் விளக்கம்/Tamil Explanation - இதைவிட எளிய சொற்களில் கர்மபலன் விதியைச் சொல்ல முடிய்மோ? முற்பகல் தாண்டியதும் பிற்பகல் வருவது தவிர்க்க இயலாதது போலத்தான் முற்பகல் செய்தது பிற்பகல் விளைவதும்.
Enrich your   vocabulary
validate செல்லத்தாக்கு
value மதி, விலை மதிப்பிடு
vamp காலணி பழுது பார்
Proverb
A little string will tie a little bird
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
Opposite Words 
Exterior X Interior
  • The dome is tiled on the exterior.
  • The interior of the church was dark.
External X Internal
  • An external auditor will verify the accounts.
  • Some photos contain internal evidence that may help to date them.
மொழிபெயர்ப்பு
பூசணிக்காய்/ பறங்கிக்காய்/வட்டக்காய்
செங்கோசு
கணினி ஷார்ட்கட் கீ
Shift + Enter
ஒரு பேரகிராஃப் கிரேட் செய்ய
Shift + Alt + D
தற்போதைய தேதியை சேமிக்கும்
இனிக்கும் கணிதம்      பொன்நிறுத்தல்..
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
அறிவியல் அறிவோம் - பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல் அறிவியல் துளிகள் - இடிதாங்கி - பெஞ்சமின் பிராங்க்ளின்
தினம் ஒரு மூலிகை அசாய் பனை  :
அசாய் பனை (açaí palm) அல்லது அச்சாய் பனைஎன்பது ஈட்டர்பே ஒலெராசியா குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். பழத்திற்காகவும் மேன்மையான நுங்குக்காவும் பயிரிடப்படும் ஈட்டர்பே பேரினத்தைச் சேர்ந்த பனை மர இனமாகும். 'அழுகின்ற அல்லது தண்ணீர் வெளியேற்றும் பழம்' என்று பொருள்படும் துபியன் வார்த்தையான இவாசா'ய் யின் (ïwasa'i) ஐரோப்பியத் தழுவலிலிருந்து இப்பெயர் வந்ததாகும். குறிப்பாக இவை சதுப்பு நிலங்கள் மற்றும் வெள்ளப் பெருக்குச் சமவெளிகளில் வளர்கின்றன. அசாய்ப் பனைகள் 3 மீட்டர்கள் நீளம் வரையான இறகு வடிவ இலைகளுடன், 15 முதல் 30 மீட்டர்கள் வளரக்கூடிய உயரமான ஒல்லி பனைகள் ஆகும். சமீப ஆண்டுகளில் அசாய் பழத்துக்கான உலகளாவிய தேவை விரிவடைந்து வருகிறது. அந்த நோக்கத்தை முதன்மையாகக் கொண்டே தற்போது அசாய்ய் பனை பயிரிடப்படுகிறது.
பிரேசிலின் வட மாநிலமான பாராவில் அசாய்க் கூழானது கிழங்குகளுடன் சேர்த்துக் "கியுயியாஸ்" என்று அழைக்கப்படும் குடுவைகளில் பாரம்பரியமாகப் பரிமாறப்படுகின்றன. அசாயில் உள்ள கொழுப்பு உட்பொருட்களாக ஒலீயிக் அமிலம் (மொத்த கொழுப்புகளில் 56.2%), பாமிற்றிக் அமிலம் (24.1%) மற்றும் லினோலியிக் அமிலம் (12.5%) ஆகியவையும் இருக்கின்றன.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்  பழுப்பாதல் (BROWNING)
பழங்கள் மற்றும் காய்கறிகளான ஆப்பிள், வாழைப்பழம்., உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் போன்றவற்றை நறுக்கும் போது, அதன் மேற்பரப்பில் பழுப்பு நிறம் தோன்றும். இது நொதிகளால் ஏற்படக்கூடிய செயலாகும். இதை நொதிகளால் பழுப்பாதல் என்று கூறுவர்.
காய்கறிகளிலுள்ள திசுக்கள் அடிபடும்போதோ, அல்லது நறுக்கப்படும்போதோ, நறுக்கப்பட்ட பகுதியின் மேற்பரப்பு காற்றுடன் வினைபுரிகிறது. அப்பொழுது பீனால் ஆக்ஸிடேஸ் (phenol oxidise enzymes) நொதிகள் மேற்பரப்பில் வெளியிடப்படுகிறது. பழங்களில் உள்ள பாலிஃபீனாலை, ஃபீனால் ஆக்ஸிடைஸ் நொதிகள் ஆக்ஸிகரணம் அடையச் செய்து, ஆர்த்தோம் யினோன்களை உருவாக்குகிறது. இது நறுக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு பழுப்பு நிறத்தைக் கொடுக்கிறது.
வரலாற்றுச் சிந்தனை 
அர்த்தசாஸ்திரத்திலிருந்து அசோகரின் எந்த அமைப்பை பற்றி நாம் அறியலாம்?
நிர்வாகம்
தன்னம்பிக்கை கதை- 100 சதவீத அன்பை காட்டுங்கள்
ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது. அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று கேட்டான். குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள். அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்.குட்டி பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள். அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக உறங்கினாள். அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை.
அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்திருப்பாளா இல்லை நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் அவஸ்த்தைப்பட்டான். நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். இது காதலுக்கும், நட்புக்கும்,வேலை செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி தொழிலாளி உறவுக்கும் பொருந்தும். எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை காட்டுங்கள்....!!!!

படிப்போம் பாடுவோம் -Kanavu Meipada Vendum | Bharathiyar Songs

https://www.youtube.com/watch?v=GQtTCVIfQpM

இணையம் அறிவோம்

http://www.tamilvu.org/ta/courses-degree-c011-c0112-html-c0112111-13003

செயலி பாரதியார் கவிதைகள்

https://play.google.com/store/apps/details?id=com.natarajan.bharathiarkavithaigal

தொகுப்பு

No comments:

Post a Comment