அறிவுக்கு விருந்து – 23.10.2019 (புதன்)


அறிவுக்கு விருந்து – 23.10.2019 (புதன்)

 

வரலாற்றில் இன்று -  அக்டோபர் 23 (October 23)
கிரிகோரியன் ஆண்டின் 296 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 297ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  கிமு 42உரோமைப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை மார்க் அந்தோனியும், ஒக்டோவியனும் தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டசு தற்கொலை செய்து கொண்டான்.
·  1157டென்மார்க்கில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மன்னன் மூன்றாம் சுவெயின் கொல்லப்பட்டு முதலாம் வால்டிமார் அரசனானான்.
·  1295இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை இசுக்காட்லாந்தும் பிரான்சும் பாரிசில் செய்து கொண்டன.
·  1694வில்லியம் பிப்சு தலைமையிலான பிரித்தானிய/அமெரிக்க குடியேற்றப் படையினர் கியூபெக்கை பிரான்சிடம் இருந்து கைப்பற்றத் தவறினர்.
·  1707பெரிய பிரித்தானியாவின் முதல் நாடாளுமன்றம் கூடியது.
·  1739பிரித்தானியப் பிரதமர் ராபர்ட் வால்போல் எசுப்பானியா மீது போரை அறிவித்தார்.
பிறப்புகள்
·  1491லொயோலா இஞ்ஞாசி, கத்தோலிக்கப் போதகர் (. 1556)
·  1844சாரா பேர்ண்ஹார்ட், பிரான்சிய நடிகை (. 1923)
·  1873வில்லியம் டி. கூலிட்ச், அமெரிக்க இயற்பியலாளர் (. 1975)
·  1875கில்பர்ட் நியூட்டன் லூயிசு, அமெரிக்க வேதியியலாளர் (. 1946)
·  1894எம்மா வுசோத்சுகி, அமெரிக்க வானியலாளர் (. 1975)
·  1900வலேரியன் கிராசியாஸ், கத்தோலிக்க திருச்சபையின் முதல் இந்தியக் கர்தினால்
·  1905. சீனிவாச ராகவன், தமிழக எழுத்தாளர் (. 1975)
·  1920புச்சியித்தா தெத்துசுயா, சப்பானிய-அமெரிக்க அறிவியலாளர் (. 1998)
·  1923பைரோன் சிங் செகாவத், இந்திய அரசியல்வாதி (. 2010)
இறப்புகள்
·         1921ஜான் பாய்டு டன்லப், இசுக்கொட்டிய தொழிலதிபர் (பி. 1840)
·         1986டபிள்யூ. எம். எஸ். தம்பு, இலங்கைத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர்
·         2010அமுது, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (பி. 1918)
·         2011ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்க கணினியியலாளர் (பி. 1927)
·         2012சுனில் கங்கோபாத்யாயா, வங்காளக் கவிஞர் (பி. 1934)

சிறப்பு நாள்

குறளறிவோம்-  89. விருந்தோம்பல்

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
மு.வரதராசனார் உரை: செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
Translation: To turn from guests is penury, though worldly goods abound;
'Tis senseless folly, only with the senseless found.
Explanation:  That stupidity which exercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.

சிந்தனைக்கு  
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல. உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே.

தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
மீ
 மேலே , உயர்ச்சிஉச்சி
மூ
 மூப்புமுதுமை
மே
 மேல்
மை
 கண்மை (கருமை), அஞ்சனம்இருள்
மோ
 மோதல்முகரதல்
 தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்

விடுகதை விடையுடன்
பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?

தலைமுடி
பழமொழி- இமைக்குற்றம் கண்ணுக்குத்தெரியாது.
பொருள்/Tamil Meaning  இமையின் குறைபாடுகளை அதன் கீழேயே உள்ள கண்ணால் பார்க்கமுடியாது.
Transliteration  Imaikkurram kannukkuttheriyaathu.
தமிழ் விளக்கம்/Tamil Explanation அதுபோல, நம்மனம் நமக்குள் இருந்து எப்போதும் நம்முடன் உறவாடிக்கொண்டிருந்தாலும், நாம் அதன் கசடுகள் நமக்குத் தெரிவதில்லை. இதனையொத்த பிற பழமொழிகள்:கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது.தன் முதுகு தனக்குத் தெரியாது.

Enrich your   vocabulary
vilify  இழிவு படுத்து
vindicate மெய்பித்துக் காட்டு
violate  உடைத்தெறி, சீர்குலை, பங்கபடுத்து,கற்பழி

Proverb
A liar is not believed when he speaks the truth
பொய்யன் உண்மை பேசும் போது யாரும் நம்புவதில்லை

Opposite Words 
Employer X Employee
  • They’re very good employers.
  • The firm has over 500 employees.
Empty X Full
  • The fuel tank’s almost empty.
  • The kitchen was full of smoke.
மொழிபெயர்ப்பு
(மிகப்பெரிய வகையான) பூசணி
வட்டுப்பூசணி
கணினி ஷார்ட்கட் கீ
F7
தேர்வு செய்த எழுத்து ( ) லைன்னில் உள்ள க்ராமர் தவறு கண்டுப்பிடிக்க
Shift + F3
கேப்பிடல் லெட்டர் இருக்கும் டெக்ஸ்ட்- ஸ்மால் லெட்டராக மாற்றலாம், முதல் எழுத்து கேப்பிடலாக வர
இனிக்கும் கணிதம்      நீட்டல் அளவை வாய்ப்பாடு
8 சிறுகடுகு - 1 எள்                     
8 எள் - 1 நெல்                                
8 நெல் - 1 விரல்

அறிவியல் அறிவோம் 
நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை –ஆக்சைடு

அறிவியல் துளிகள் - நீராவி இயந்திரம் - ஜேம்ஸ் வாட்

தினம் ஒரு மூலிகை -  கார்போகரிசி
1) மூலிகையின் பெயர் -: கார்போகரிசி      2) தாவரப்பெயர் -: PSORALEA CORYLIFOLIA.
3) தாவரக்குடும்பம் -: LEGUMINACEAE, (PAPILLIONACEAE, & FABACEAE)
4) முக்கிய வேதிப் பொருள் -: சொரோலின் மற்றும் ஐசோசொரோலின் (PSORALEN).
5) பயன் தரும் பாகங்கள் -: இலை, பழம்,விதை மற்றும் வேர் முதலியன.
6) வளரியல்பு - :
 கார்போகரிசி ஒரு செடி வகையைச் சேர்ந்தது. ஆரம்பத்தில் சைனாவிலும் இந்தியாவில் அதிகமாகக் காணப்பட்டது இது சுமார் 3 அடி உயரம் வரை வளரும். இது ஊட்டச்சத்துள்ள மணற்பாங்கான மண்ணில் நன்கு வளரும். இதன் விதையிலிருந்து (ரோகன் பாப்சி) எண்ணெய் எடுப்பார்கள். இதன்இலை,பழம், விதை, வேர் யாவும் மருத்துவப்பயனுடையவை. இதை வணிக ரீதியாகப் பயிர் செய்வார்கள். ஒரு எக்டருக்கு 7 கிலோ விதைகளை 2 அடிக்கு 2 அடி என்ற இடைவெளியில்
பண்படுத்திய நிலத்தில் நடுவார்கள். தண்ணீர் விட்டு பயிர் பாதுகாப்புச் செய்து 7-8 மாதங்களில் முதிர்ந்த பழுத்த சற்று பழுப்பக் கலந்த கருப்பாகமாறி ஒரு வகை வாடை கண்ட பொழுது அறுவடை செய்ய வேண்டும்.
பின் விதைகளை நிழலில் உலர்த்த வேண்டும். ஒரு எக்டருக்கு சுமார் 2000 கிலோ காய்ந்த விதைகள் கிடைக்கும். இதிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள். வருடசெலவு ரூ.30,000 வரவு ரூ.75000 வருமானம் 45,000கிடைக்கும்.

மருத்துவப் பயன்கள்-  ஆதிகாலத்தில் சைனாவிலும், இந்தியாவிலும் இதன் எண்ணெயை உடல் வெளி பாகத்தில் தேய்த்து தோல் வியாதிகளைப் போக்கினர் மேலும் உடலுக்குப் புத்துணர்ச்சியூட்ட இதை உபயோகித்தார்கள். இதன் வேர் பல் வியாதிகளுக்குப் பயன் படும். இலை அமீபாவால் வரும் வயிற்றுப் போக்கிற்கும், புண்களை ஆற்றவும் வல்லது.
இதன் பழம் வாந்தி, மூலம், இரத்தசோகை, சுவாச சம்பந்தமான நோய்கள் குணப்படுத்தும். முடிவளரவும் பயன் படுத்தப் பட்டது.
வயிற்று வலி, முதுகு வலி, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப் படுத்தும். இதன்விதையிலிருந்து எண்ணெய் எடுத்து அதை இருதய சம்பந்தமான நோய்களுக்கும், யானைக்கால் வியாதியைக் குணப்படுத்தவும், இரத்த ஓட்டசம்பந்தமான வியாதியை சீர் செய்யவும், தோல்வியாதிகளைக் குணப்படுத்தவும், மற்றும் வெண்குஷ்டம், குஷ்டம், "AIDS" க்கும் நல்ல மருந்தாகப்பயன்படுகிறது.

பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படும் நிறமிகள்  -கேட்டகின்கள் (CATACHINS)  இந்த நிறமிகள் நொதிகளின் செயலால் பழங்களில் ஒருவித பழுப்பு நிறத்தை தோற்றுவிக்கக் காரணமாக விளங்குகின்றன.

வரலாற்றுச் சிந்தனை 
கி.மு. 250-ல் யாரால் புத்த மாநாடு கூட்டப்பட்டதுத?  அசோகர்

தன்னம்பிக்கை கதை -  பிறர் வாழ எண்ணினால்
ஒரு நாள் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஐஸ் கிரீம் கடைக்குச் சென்றான். ஒரு இருக்கையில் உட்கார்ந்தான். ‘ஐஸ் கிரீம் கோன் எவ்வளவு?’ என்று கடையில் உள்ள  பணிப்பெண்ணிடம் கேட்டான். அவள் பத்து ருபாய் என்றாள். தன் கையில் இருந்த சில்லரைக்காசுகளை எண்ணத் தொடங்கினான். பிறகு அவன்ஒரு சிறிய அளவு ஐஸ் கிரீம் எவ்வளவு?’ என்று கேட்டான். அவள் பொறுமையிழந்துஎட்டு ரூபாய்என்று பதிலளித்தாள். அந்தச் சிறுவன்எனக்கு ஒரு சிறிய ஐஸ் கிரீம் கப் வேண்டும்என்றான். அவனுக்கு ஐஸ் கிரீம் கிடைத்தது, தொகைக்கான சீட்டும் கிடைத்தது. பிறகு, பணம் கொடுத்துவிட்டு வெளியேறினான்.   அந்த வெற்றுத்தட்டை எடுக்க வந்த பணிப்பெண், மனமுருகிப் போனாள். அந்தத் தட்டுக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயம் அந்தப் பெண்ணின் சேவைக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த சிறுவன் ஐஸ் கிரீமை வாங்குவதற்கு முன்னால் அந்தப் பெண்ணின் சேவைக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்திருக்கிறான். அவன் தனது உணர்வையும், அக்கறையையும் காட்டி விட்டான். தான் தன்னைப் பற்றி எண்ணுவதற்கு முன்னால்பிறரைப் பற்றிஎண்ணியிருந்திருக்கிறான்.

நாம் எல்லோரும் அந்தச் சிறுவனைப் போல் எண்ணினால், நாம் வாழ்வதற்குரிய மகத்தான இடத்தைப் பெறுவோம். அக்கறையையும், பண்பட்ட தன்மையையும் காட்டுங்கள். பிறரைப் பற்றி எண்ணுதல் என்பது ஒரு அக்கறையான மனப்பாங்கைக் காட்டும்.

செய்துபார்ப்போம் - Origami Lily Flower

https://www.youtube.com/watch?v=3wpqWBDorNU

 

இணையம் அறிவோம்   https://nroer.gov.in/welcome

 

செயலி - Tamil GK 2019 , TNPSC , பொது அறிவு 2019

https://play.google.com/store/apps/details?id=tamil.gk.tnpsc

No comments:

Post a Comment