நிகழ்வுகள்
· 1147 – செல்யூக்குகள்
செருமானிய சிலுவை வீரர்களை
டொரிலெயம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.
· 1147 – நான்கு மாத முற்றுகையின் பின்னர் முதலாம் அபொன்சோ என்றிக்கசு தலைமையில் சிலுவை வீரர்கள் லிஸ்பன்
நகரை மோளக் கைப்பற்றினர்.
· 1415 – நூறாண்டுப் போர்:
அஜின்கோர்ட் சமரில் இங்கிலாந்தின்
ஐந்தாம் என்றியின் காலாட் படையினரும்,
விற்படையினரும்
பிரான்சின்
குதிரைப்படைகளைத்
தோற்கடித்தனர்.
பிறப்புகள்
இறப்புகள்
- 1400 – ஜெஃப்ரி சாசர், ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1343)
- 1949 – மேரி அக்வர்த் எவர்ழ்செடு, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1867)
- 1955 – சடாகோ சசாகி, அணுகுண்டினால் பாதிப்படைந்த சப்பானியர் (பி. 1943)
- 1958 – செ. நாகலிங்கம், இலங்கை நீதிபதி (பி. 1958)
- 1975 – காளிதாஸ் ராய், வங்காளக் கவிஞர் (பி. 1889)
- 2012 – ஜஸ்பால் பட்டி, இந்திய நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1955)
சிறப்பு நாள்
- முதலாம் போன்பாசு விழா (கத்தோலிக்கம்)
- இறைமை நாள் (சுலோவீனியா)
குறளறிவோம்- 91. விருந்தோம்பல்
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
மு.வரதராசனார் உரை: ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.
Translation: Pleasant words are
words with all pervading love that burn;
Words from his guileless mouth who can the very truth discern.
Words from his guileless mouth who can the very truth discern.
Explanation: Sweet words are those
which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.
சிந்தனைக்கு
* உங்களை
ஓர்
ஏழை
என்று
எப்போதும் நினைக்காதீர்கள், பணம் சக்தியல்ல, பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும். பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.
தமிழ்
அறிவோம்ஒத்தச் சொற்கள்
வை
|
வைக்கவும், கூர்மை
|
வௌ
|
வவ்வுதல்
|
நோ
|
வருந்து
|
ள
|
தமிழெழுத்து
நூறு என்பதன் வடிவம்
|
ளு
|
நான்கில்
மூன்று பகுதி, முக்கால்
என்பதன் வடிவம்
|
று
|
எட்டில்
ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்
|
விடுகதை
விடையுடன்
நன்றிக்கு வால்
கோபத்துக்கு வாய்
அது
என்ன?
நாய்
பழமொழி- குப்பையும் கோழியும் போல குருவும் சீஷனும்.
பொருள்/Tamil Meaning- கோழி
குப்பையைக் கிளறித் தான் உண்ணுவதைத் தேடுவதுபோல, சீடன் குருவிடம் விசாரணை மூலம் தன் உண்மையை அறிந்துகொள்ளவேண்டும்.
Transliteration
- Kuppaiyum koliyum pola kuruvum
ceeshanum.
தமிழ் விளக்கம்/Tamil Explanation- சீடன் கோழியென்றால் குரு குப்பை என்று பொருளல்ல. கோழி குப்பையை கிளறும் உவமை சீடனுக்காகக் கூறப்பட்டது, குருவுக்காக அல்ல. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் குப்பைபோன்றதாகையால் தகுந்த குருவை அணுகி அவர் மூலம் தன் குப்பையை கிளறி உண்மையை அறியவேண்டும் என்பது பழமொழியின் தாத்பரியம்.
Enrich your vocabulary
void வெறுமையாக்கு
|
Proverb
A little learning is a dangerous
thing
அரை
குறை
படிப்பு ஆபத்தானது
Opposite Words
Evil X
Good
- There is too much evil in the world.
- I learn to see life as a titanic moral struggle between good and evil.
Excited
X Bored
- I’m so excited that we’re going to New York.
- After a while, I got bored and left.
மொழிபெயர்ப்பு
பச்சோய்
|
|
வேர்க்கோசு
|
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl
+ F2
|
பிரிண்ட் பிரிவியூ ஓபன் செய்திட.
|
Ctrl
+ Shift +>
|
செலேக்ட் பண்ண டெக்ஸ்ட் சைஸ் அதிகப்படுத்த.
|
இனிக்கும் கணிதம் நீட்டல் அளவை வாய்ப்பாடு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
அறிவியல் அறிவோம் - நீரில் கரையாத பொருள் – கந்தகம்
அறிவியல் துளிகள் - ரேடியம், பொலோனியம் -
மேரி கியூரி
தினம் ஒரு மூலிகை ரோம விருட்சம்
ரோம
விருட்சம் என்கிற மரத்தின் இலைகளை அரைத்து 45 நாட்கள் தலையில் தேய்த்து, கொல்லிமலையில் உள்ள
ஆகாய கங்கை அருவியில் குளித்துவர தலை முடி உதிர்வது உடனே நின்று, கருகரு முடியை பெறலாம். இந்த இலையின் சாற்றை தவறியும் கை, கால் உள்ளிட்ட உடம்பின் வேறு பகுதியில் தேய்த்து குளிக்கக் கூடாது,
அந்த சாறு பட்ட இடங்களில் முடிவளர தொடங்கி விடுமாம்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் –
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் –
பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படும் நிறமிகள்
குயினோன்கள் (QUINONE)
மஞ்சள் நிற, நிறமியான குயினோன்கள்
அக்ரூட் கொட்டைகளுக்கு நிறத்தை அளிக்கிறது.
வரலாற்றுச் சிந்தனை
அலெக்ஸாண்டர் எந்த நாட்டின் மன்னனாக இருந்தார்? மாசிடோனியா
தன்னம்பிக்கை கதை - உச்சியை தொட செவிடாய் இரு
சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன. ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர். போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் “இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியை தொடவே முடியாது! — சாத்தியமே கிடையாது!” என கூறினார் கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன. மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியிலிருந்து நீங்கி கொண்டன “இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது” — கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.
இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது. எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது சில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது அனைவரும் வியந்து பொய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினாவினார்கள் அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று. “முடியாதவர்கள், அவர்களால் முடியாததை உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள். சொல்லுபவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ, செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது,” உன் காதில் சங்கே ஊதினாலும் உன் வழி செல் | வெற்றி உனக்கே
No comments:
Post a Comment