அறிவுக்கு விருந்து – 17.10.2019 (வியாழன்)


அறிவுக்கு விருந்து – 17.10.2019 (வியாழன்)

வரலாற்றில் இன்று -  அக்டோபர் 17 (October 17) கிரிகோரியன் ஆண்டின் 290 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 291 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  1091இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது.
·  1346இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு மன்னன் இசுக்காட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் இலண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான்.
·  1448கொசோவோ போரில் அங்கேரிய இராணுவம் உதுமானியப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டது.
·  1534திருப்பலி வழிபாடுகளில் உல்ரிச் ஸ்விங்ளியின் நிலையை ஆதரித்து பாரிசு, மற்றும் நான்கு பிரெஞ்சு நகரங்களில் கத்தோலிக்கத்துக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
·  1610பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னராக முடி சூடினார்.
பிறப்புகள்
·  1817சையது அகமது கான், இந்திய மெய்யியலாளர் (. 1898)
·  1820ஏதவார்து உரோச்சே, பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (. 1883)
·  1887எவுப்ராசியம்மா எலுவத்திங்கல், இந்தியக் கத்தோலிக்கப் புனிதர் (. 1952)
·  1892ஆர். கே. சண்முகம் செட்டியார், இந்தியப் பொருளாதார அறிஞர் (. 1953)
·  1906கே. பி. ஹரன், இந்திய-ஈழப் பத்திரிகையாளர் (. 1981)
·  1913பூரணி, தமிழக எழுத்தாளர் (. 2013)
·  1915ஆர்தர் மில்லர், அமெரிக்க எழுத்தாளர் (. 2005)
இறப்புகள்
·  1690மார்கரெட் மரி அலக்கோக், பிரான்சிய புனிதர், அருட் சகோதரி (பி. 1647)
·  1849பிரடெரிக் சொப்பின், போலந்து செவ்விசைக் கலைஞர் (பி. 1810)
·  1887குசுத்தாவ் கிர்க்காஃப், செருமானிய இயற்பியலாளர் (பி. 1824)
·  1920ஜான் ரீட், அமெரிக்கப் பத்திரிகையாளர், கவிஞர் (பி. 1887)
சிறப்பு நாள்

குறளறிவோம்-  84. விருந்தோம்பல்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
மு.வரதராசனார் உரை: நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
Translation:  With smiling face he entertains each virtuous guest,
'Fortune' with gladsome mind shall in his dwelling rest.
Explanation:  Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.
சிந்தனைக்கு  
வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
ஞா
  பொருத்துகட்டு
தா
 கொடுகேட்பது
தீ
 நெருப்பு , தீமை
து
 உண்
தூ
 வெண்மைதூய்மை
தே
 கடவுள்
விடுகதை விடையுடன்
பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன?  வானொலிப் பெட்டி
பழமொழி- உருட்டப்புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.
பொருள்/Tamil Meaning ஒருவனது வஞ்சகச் செயல்களால் அவனுக்குள் இருக்கும் உண்மை ஒடுங்கிவிடும்.
Transliteration Uruttappuratta ullatum ullukku vankum.
தமிழ் விளக்கம்/Tamil Explanation உருளச்செய்தல் என்ற பொருளில் வரும் உருட்டு என்ற சொல், வார்த்தைகளை உருட்டி ஏமாற்றுவதையும் குறிக்கிறது: "சப்தஜா லத்தால் மருட்டுதல் கபடமென்றுருட்டதற்கோ"--தாயுமானவர், நின்ற.3.புரட்டு என்ற சொல் மாறுபட்டபேச்சைக் குறிக்கிறது. ’பொய்யும் புராட்டும்என்பது பொதுவழக்கு. ’இந்த உருட்டலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்என்கிறோம்.உள்ளது என்பது ஒருவனுக்குள் உள்ள உண்மையை, அதாவது ஆத்மாவைக் குறிக்கிறது. உள்ளம் உண்மையை ஆராயாது கள்ளத்தை ஆராயும்போது, ஆத்மா மேன்மேலும் உள்ளுக்குள் ஒடுங்கிவிடுவதை இந்தப் பழமொழி எளிய சொற்களில் விளக்குகிறது.
Enrich your   vocabulary
underrate  குறைத்து மதிப்பிடு
undersell  குறைந்தவிலைக்கு விற்பனை செய்
undershoot  நிலப்பரப்போடு சுடு
Proverb
A good reputation is a fair estate
நற்குணமே சிறந்த சொத்து
Opposite Words 
Downwards X Upwards
  • Share prices continued their downward trend.
  • Stroke the cream onto your skin in an upward direction.
Drunk X Sober
  • David would get drunk and I would have to take him home and put him to bed.
  • He’s a nice guy when he’s sober.
மொழிபெயர்ப்பு
கற்பூசணி
பரட்டைக்கீரை
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + <அம்புக்குறியை>
முடிவில் நகரும்.
Ctrl + Del
கர்சரின் வலதுபுறத்தில் வார்த்தை நீக்க.
இனிக்கும் கணிதம்      கால அளவு..
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
அறிவியல் அறிவோம்
நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயந்படும் இரும்பின் வகை -தேனிரும்பு
அறிவியல் துளிகள் - மின் மாற்றி Transformer - மைக்கேல் ஃபாரடே
தினம் ஒரு மூலிகை -  ஐயம்பனா
1) வேறு பெயர்கள்: Apana, Ayapana, Inpana
2) தாவரப் பெயர்கள்: Eupatdrium Triplinerve
3) வளரும் தன்மை:
இது ஒரு அரிதான மூலிகைச் செடி. இது முதன்முதலில் மெக்சிகோ நாட்டை பூர்விகமாகக் கொண்டது. இது அங்கிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவியது. இது மருத்துவ குணமுடைய செடி. 30 முதல் 60 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும். இதன் தண்டு கெட்டியாகவும் வேர் விட்டுப் படரும் தன்மையும் கொண்டது. இலைககள் மென்மையாக கரும்சிவப்பு நிறத்தில் இருக்கும். இலைகள் எதிர் வரிசையில் 5 முதல் 6 சென்டிமீட்டர் நீளத்தில் வாசனையுடன் கூர்மையான நுனியைக் கொண்டிருக்கும். இது முதிரும் போது 6 முதல் 7 மில்லி மீட்டர் நீளமுள்ள சுமார் 20 மலர்கள் நீல நிறத்துடன் சிறிய காம்புகளைக் கொண்டதாக ஐந்து இதழ்களுடன் பூக்கும். இதழ்கள் ஒவ்வொன்றும் 2 மில்லி மீட்டர் நீளம் கொண்டது. இந்த இலையில் 1.14 சதவீதம் அபயன் எண்ணெய் உள்ளது. இது கட்டிங் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.
4) பயன்படும் உறுப்பு: இலைகள்
5) பயன்கள்:
இது தமிழ்நாட்டில் அதிகமாகக் காணப்படுவதில்லை. ஆனால் கேரளா மாநிலத்தில் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சில பேர் இதை ரகசியமாக வைத்துக் கொண்டு மூல நோயைக் குணப்படுத்தி பொருள் ஈட்டுகிறார்கள். இதன் பயன்பற்றி Koster’ என்பவர் கூறும் போது இதன் புளிப்பான இலையை சாப்பிடும் போது குளிர் காய்ச்சலைக் குணப்படுத்துவதுடன், வயிற்றுப்போக்கையும் குணப்படுதுக்கிறது என்றார். தலைவலி வந்தால் இதன் இலையை ஆமணக்கு விளக்குச் சுடரில் வாட்டி முன் நெற்றியில் வைத்தால் குணமடையும். இதன் ஆயிலை மருந்தாகவும் டானிக்காகவும் பயன்படுத்துகிறார்கள். இதை குளிர்பானமாக பயன்படுத்தும்போது குடல்புண், சீதபேதி, இரத்தக் கடுப்பு, அல்சர் போன்ற நோய்களும் இதனால் குணமடைகிறது.
Bouton
என்பவர் தனது Med Plants of Mauritius’ என்ற புத்தகத்தில் 96ம் பக்கத்தில் it appears to hold a high place among the medicinal plants of the Mauritius, being there in daily use in the form of infusion given in dyspepsia and other affection of the bowels and lungs’. மேலும் இதை டானிக்காவும் பயன்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் ஜீரண சக்தியை தூண்டி வயிற்றைக் காலி செய்துவிடும்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படும் நிறமிகள்
கரோடினாய்டுகள் (CAROTENOIDS)
கொழுப்பில் கரையும் நிறமிகளான மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்றவை கரோட்டினாய்டுகள் எனப்படும். இவை மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன: காரட், பச்சையிலை காய்கறிகள் மற்றும் பழ வகைகளில் உள்ள கரோட்டீன்கள், தக்காளிக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கும் லைக்கோபீன்கள் (Lycopenes) மற்றும் மஞ்சள் நிற பழங்களில் உள்ள சான்தோஃபில் (Xanthophil) நிறமிகள் ஆகியவை ஆகும்.
வரலாற்றுச் சிந்தனை  ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.
தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது. 
இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான். தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

செய்துபார்ப்போம் - Diwali Decoration Paper Craft

இணையம் அறிவோம்  http://kalamtnpscacademy.blogspot.com/2016/10/blog-post_32.html

செயலி - MAT Exam Previous Question Papers

https://play.google.com/store/apps/details?id=com.iexamonline.matprevpapers

No comments:

Post a Comment