அறிவுக்கு விருந்து – 22.10.2019 (செவ்வாய்)


அறிவுக்கு விருந்து – 22.10.2019 (செவ்வாய்)

வரலாற்றில் இன்று -  அக்டோபர் 22 (October 22) கிரிகோரியன் ஆண்டின் 295 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 296 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  362அந்தியோக்கியா அருகில் அமைந்திருந்த அப்போலோவின் ஆலயம் தீக்கிரையானது.
·  794பேரரசர் கன்மு சப்பானியத் தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோத்தோ) மாற்றினார்.
·  1383போர்த்துக்கல் மன்னன் முதலாம் பேர்டினண்டு ஆண் வாரிசு அற்ற நிலையில் இறந்ததை அடுத்து நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
·  1633டச்சு கிழக்கிந்தியக் கம்பனியுடன் மிங் படை சீனாவின் தெற்கு பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெற்றது.
·  1707சில்லி கடற்படைப் பேரழிவு: பிரித்தானியாவின் நான்கு அரச கடற்படை கப்பல்கள் கடல்வழிநடத்துதலின் தவறால் சில்லி தீவுகளில் மூழ்கியதில் ஆயிரக்கணக்கான கடற்படையினர் உயிரிழந்தனர். இதன் காரணமாக முதலாவது நெடுங்கோட்டுச் சட்டம் 1714 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
·  1784உருசியா அலாஸ்காவில் கோடியாக் தீவில் குடியேற்றத்தை அமைத்தது.
·  1797பதிவு செய்யப்பட்ட முதலாவது வான்குடைப் பாய்ச்சல் அந்திரே-சாக் கர்னெரின் என்பவரால் பாரிசு நகருக்கு 3200 அடி மேலாக நிகழ்த்தப்பட்டது.
·  1844பாரிய எதிர்பார்ப்பு: வில்லியம் மில்லரின் படிப்பினைகளைப் பின்பற்றிய மில்லரிய கிறித்தவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையும் உலக முடிவையும் எதிர்பார்த்திருந்தனர். அடுத்த நாள் பெரும் ஏமாற்ற நாளாக அறிவிக்கப்பட்டது.
·  1859எசுப்பானியா மொரோக்கோ மீது போர் தொடுத்தது.
பிறப்புகள்
·  1511எராசுமசு இரீன்கோல்டு, செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (. 1553)
·  1811பிரான்சு லிசித்து, அங்கேரிய இசைக்கலைஞர் (. 1886)
·  1844சாரா பேர்ண்ஹார்ட், பிரான்சிய நடிகை (. 1923)
·  1870செ. இராசநாயகம், ஈழத்து வரலாற்றாளர், எழுத்தாளர் (. 1940)
·  1881கிளிண்டன் ஜோசப் டேவிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (. 1958)
·  1887ஜான் ரீட், அமெரிக்க ஊடகவியலாளர், கவிஞர் (. 1920)
·  1900அஷ்பகுல்லா கான், இந்திய விடுதலைப் போராளி (. 1927)
·  1902டபிள்யூ. தகநாயக்க, இலங்கைப் பிரதமர், அரசியல்வாதி (. 1997)
·  1905கார்ல் குதே யான்சுகி, அமெரிக்க இயற்பியலாளர், கதிர்வீச்சுப் பொறியியலாளர் (. 1950)
இறப்புகள்
·  1864மிரோன் வின்சுலோ, தமிழ் ஆங்கில விரிவான அகராதியைத் தொகுத்த அமெரிக்க மதப்பரப்புனர் (பி. 1789)
·  1906பால் செசான், பிரான்சிய ஓவியர் (பி. 1839)
·  1918திமித்ரி துபியாகோ, உருசிய வானியலாளர் (பி. 1849)
·  1925. மாதவையா, தமிழக புதின எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (பி.1872)
·  1964கவாஜா நசிமுத்தீன், பாக்கித்தானின் 2வது பிரதமர் (பி. 1894)
·  1975அர்னால்ட் ஜோசப் டாயின்பீ, பிரித்தானிய நூலாசிரியர், வரலாற்றாசிரியர்
·  1986ஆல்பர்ட் செண்ட்-ஜியார்ஜி, நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1893)

குறளறிவோம்-  88. விருந்தோம்பல்

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.
மு.வரதராசனார் உரை: விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.
Translation:  With pain they guard their stores, yet 'All forlorn are we,' they'll cry,
Who cherish not their guests, nor kindly help supply.
Explanation:  Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, "we have labored and laid up wealth and are now without support."
சிந்தனைக்கு  
கடமையைப் பற்றி கனவு காணுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
பூ
 மலர்
பே
 நுரைஅழகுஅச்சம்
பை
 கைப்பை
போ
 செல்ஏவல்
 சந்திரன்எமன்
மா
 பெரியசிறந்தஉயர்ந்தமரம்
விடுகதை விடையுடன்
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? கரும்பு
பழமொழி- அம்மி மிடுக்கோ, அரைப்பவள் மிடுக்கோ?
பொருள்/Tamil Meaning  அம்மியில் அரைப்பதன் ஆற்றல் அம்மிக்கல்-குழவியில் உள்ளதா, அரைக்கும் பெண்ணின் வலிமையில் உள்ளதா?
Transliteration  Ammi mitukko, araippaval mitukko?
தமிழ் விளக்கம்/Tamil Explanation மிடுக்கு என்ற சொல்லினை நாம் பொதுவாக இறுமாப்பு, செருக்கு என்றபொருளில் அறிந்தாலும், அதற்கு வலிமை என்றொரு பொருள் உண்டு. ஒரு அழகான பெண் தன் ஆற்றலில் உள்ள கர்வம் தெரிய முழுக்கவனத்துடன் அம்மியில் அரைப்பதை விழுதாக அரைத்துப் பாராட்டுவாங்குவதை இந்தப் பழமொழி அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.இந்தக்காலத்தில் பெண்ணை அம்மையில் அரைக்கச்சொன்னால், சொன்னவர்மேலுள்ள கோபத்தில் அவள் மிடுக்கு--ஆற்றல் அதிகமாவது நிச்சயம்!
Enrich your   vocabulary
unfurl  கொடியேற்று, அவிழ்
unify  ஒன்று சேர்
unite  ஒன்றாக இணை, சேர்
Proverb
A journey of a thousand miles begins with a single step
ஆயிரம் கல் தொலைவுப் பயணமும் ஒரே ஒரு எட்டில்தான்
Opposite Words 
Effective X Ineffective
  • Training is often much less effective than expected.
  • The chemical was almost totally ineffective in killing the weeds.
Elementary X Advanced
  • You’ve made a very elementary mistake.
  • She is learning advanced physics.
மொழிபெயர்ப்பு
இலைக்கோசு (சிகப்பு)
தாமரைக்கிழங்கு
கணினி ஷார்ட்கட் கீ
Alt + Ctrl + F2
புதிய டாக்குமெண்ட் ஓபன் செய்ய.
Ctrl + F1
டாஸ்க் pane ஓபன் செய்ய
இனிக்கும் கணிதம்      நீட்டல் அளவை வாய்ப்பாடு
8 மயிர் – 1 கடுகு
8 கடுகு – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 நெல்
அறிவியல் அறிவோம்
போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து
அறிவியல் துளிகள் - பென்சுலின் - சர் அலெக்ஸான்டர் பிளமிங்க்
தினம் ஒரு மூலிகை -  கள்ளிமுளையான்
1) மூலிகையின் பெயர் -: கள்ளிமுளையான்.
2) தாவரப்பெயர் -: CARALLUMA FIMBRIATUM.
3) தாவரக்குடும்பம் -: ARACEAE.
4) வேறு பெயர்கள் -: கள்ளிமுடையான்.
5) தாவர அமைப்பு –  கள்ளிமுளையான் ஒரு சிறு கள்ளி வகையைச் சார்ந்தது. கற்றாழை போல் குத்தாக வளரும் அடிபாகம் நாற்சதுரமாகவும் வளர,வளர நுனி சிறுத்தும் மூங்கில் போத்துப் போல வளரும். சாம்பல், சிவப்பு நிறங்கலந்து, பசுமையாக வளர்ந்திருக்கும். சுமார் இரண்டடி உயரம்வரை வளரும். வறட்சியைத் தாங்கும். நுனியிலும் பக்கங்களிலும் சிறிய பூக்கள் பூக்கும். இயற்கையாக சிறு குன்றுகளில் ஒட்டுப் பாறைகளின் ஓரங்களில் அதிகம் காணப்படும். ஆதிவாசிகள் மலையில் நடக்கும் போது தண்ணீர் தாகம் ஏற்பட்டால் இதன் தண்டைச் சாப்பிடுவார்கள. இது கைப்பு, கார்ப்பு, புளிப்பு கலந்த ஒரு சுவை இருக்கும். இனப் பெருக்கம் வேர், பக்கக்கன்றுகள் அல்லது தண்டுகள் மூலம் நடைபெரும்.
6) பயன்படும் பாகங்கள் - : தண்டுகள் மட்டும் பயன்படும்.
7) மருத்துவப் பயன்கள் - :  கள்ளிமுளையான் உமிழ் நீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும், குளிர்ச்சி உண்டாக்கும். செரிப்பை விரைவு படுத்தும், உடலை உரம்பெற வைக்கும். குமட்டல் வாந்தியை நிறுத்தும், நாவின் சவையுணர்வை ஒழுங்கு படுத்தும், நீர் வேட்கையை அடக்கும்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்
பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படும் நிறமிகள்
லுகோ ஆன்தோசான்தின்கள் (LEUCOANTHOXANTHIN)
இவை நிறமற்றவை. எனினும் இவை சில வகை உணவுப்பொருட்களில் நமைச்சலை உண்டாக்கும் பண்பைப் பெற்றுள்ளது. (.கா) ஆப்பிள், ஆலிவ் பழங்களுக்கு சுருங்குதல் தன்மையை அளிக்கிறது. மேலும் இது பழங்களில் நொதிகளின் செயலால் ஒருவித பழுப்பு நிறம் அடைதலுக்கு காரணமாக விளங்குகிறது.
வரலாற்றுச் சிந்தனை 
உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.

தன்னம்பிக்கை கதை -  சுயநலம்

புத்தரின் திருவுருவச் சிலை முன்பு ஊதுவத்திகளை ஏற்றி வழிபடும் வழக்கம் கொண்ட பெண் ஒருத்தி இருந்தாள். அவள் எங்கே சென்றாலும் தன்னோடு தங்கத்தாலான ஒரு புத்தரின் சிலையைய் எடுத்துச் செல்வாள். போகும் இடமெல்லாம் புத்தரின் சிலைக்கு ஊதுவத்தி ஏற்றி வழிபடுவாள். ஆனால் அந்த ஊதுவத்தியின் நறுமணத்தை அடுத்தவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்ற சுயநல எண்ணம் கொண்டவள். அதனால், ஊதுவத்தியில் இருந்து ஒரு குழாயைய் புத்தரின் மூக்குக் குழாய்க்கு பொறுத்தி விட்டாள். இதனால் நாளாக நாளாக தங்க மூக்கு கறுத்துவிட்டது. இது சுயநலம் பற்றி ஜென் மதத்தினர் சொல்லும் கறுப்பு மூக்கு புத்தர் கதை.

நாமும் சில சமயங்களில் இந்த பெண்மணியைய் போலத்தான் தாம் செய்வதுதான் சரி என்றும் தான் செய்கின்ற செயல் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது அதனால் அவர்கள் பயனடையக்கூடாது என்ற சுயநலத்துடனும் வாழ்கிறோம். இது போன்ற செயல்களை செய்கையில் புத்தருக்கு மூக்கு கறுத்தது போல் சில சமயங்களில் நமக்கும் தீமையே விளைகின்றன தவிர நன்மை அல்ல.

நீதி : உதவி பெறுபவர் மகிழ்ச்சியைவிட, கொடுப்பவர் மகிழ்ச்சியே நிலையானது!!!  

செய்துபார்ப்போம் - How To Make Paper Flowers

https://www.youtube.com/watch?v=4SYJDQg_Uv4

இணையம் அறிவோம்   https://www.edgalaxy.com/education-quotes

செயலி - Mental Ability NTSE-NMMS

https://play.google.com/store/books/details/Disha_Experts_NTSE_NMMS_OLYMPIADS_Champs_Class_6_M?id=M601DwAAQBAJ

No comments:

Post a Comment