அறிவுக்கு விருந்து – 04.11.2019 (திங்கள்)


அறிவுக்கு விருந்து – 04.11.2019 (திங்கள்)
வரலாற்றில் இன்று - நவம்பர் 4 (November 4) கிரிகோரியன் ஆண்டின் 308 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 309 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  1576எண்பதாண்டுப் போர்: பிளாண்டர்சில் எசுப்பானியப் படையினர் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது.
·  1677பின்னாளைய இங்கிலாந்தின் இரண்டாம் மேரி ஆரஞ்சு இளவரசர் வில்லியத்தைத் திருமணம் புரிந்தார். இவர்கள் பின்னர் இணைந்து முடிசூடினர்.
·  1847குளோரோஃபோர்மின் மயக்கநிலை இயல்புகளை இசுக்கொட்டிய மருத்துவர் யேம்சு சிம்ப்சன் கண்டுபிடித்தார்.
·  1864அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அமெரிக்கப் படையினரின் களஞ்சியச் சாலை ஒன்றை குண்டு வைத்துத் தகர்த்தன.
·  1869அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
·  1890இலண்டனின் முதலாவது பாதாளத் தொடருந்து வழி அமைக்கப்பட்டது.
·  1921சப்பானியப் பிரதமர் அரா தக்காசி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
·  1922எகிப்தில், பிரித்தானியத் தொல்லியலாளர் ஆவர்டு கார்ட்டர் மன்னர்களின் சமவெளியில் துட்டன்காமனின் கல்லறைக்கான வழியைக் கண்டுபிடித்தார்.
பிறப்புகள்
·  1845வாசுதேவ் பல்வந்த் பட்கே, இந்தியப் புரட்சியாளர் (. 1883)
·  1884ஜம்னாலால் பஜாஜ், இந்தியத் தொழிலதிபர் (. 1942)
·  1897ஜானகி அம்மாள், இந்தியத் தாவரவியலாளர் (. 1984)
·  1906ழான் ஃபில்லியொசா, பிரான்சியத் தமிழறிஞர் (. 1982)
·  1915வீ கிம் வீ, சிங்கப்பூரின் 4வது குடியரசுத் தலைவர் (. 2005)
·  1929சகுந்தலா தேவி, இந்தியக் கணிதவியலாளர், வானியலாளர் (. 2013)
இறப்புகள்
·  1918வில்ஃபிரட் ஓவன், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1893)
·  1920உலூத்விக் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (பி. 1858)
·  1981திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர்
·  1985டி. கே. இராமானுஜக் கவிராயர், தமிழறிஞர், புலவர் (பி. 1905)
·  1988கி. வா. ஜகந்நாதன், தமிழக இதழாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர்

·  1988ஜேம்ஸ் இரத்தினம், ஈழத்து எழுத்தாளர். (பி. 1905)

சிறப்பு நாள்

ஒற்றுமை நாள் (உருசியா)

குறளறிவோம்-  97. விருந்தோம்பல்

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.
மு.வரதராசனார் உரை:
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
Translation:
The words of sterling sense, to rule of right that strict adhere,
To virtuous action prompting, blessings yield in every sphere.
Explanation:
That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).
சிந்தனைக்கு     
பிறர் குற்றங்களை மன்னிக்கும் உயர்ந்த குணம், குற்றமற்ற நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
நோ
 வருந்து
 தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு
 நான்கில் மூன்று பகுதிமுக்கால் என்பதன் வடிவம்
று
 எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்
விடுகதை விடையுடன்
ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?
பற்கள்
பழமொழி- குதிரை குணம் அறிந்து அல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை!
பொருள்/Tamil Meaning
குதிரையின் மனம் தெரிந்துதான் ஆண்டவன் அதைக் கொம்புள்ள மிருகமாகப் படைக்கவில்லை.
Transliteration
kutirai kunam arintu allavo tampiran kompu kotukkavillai!
தமிழ் விளக்கம்/Tamil Explanation
குதிரையின் போக்கு அதன் மனப்போக்கு. இதனால்தான் குதிரைக்குக் கடிவாளம் போடுவது. தம்பிரான் என்பது சிவனைக் குறிக்கும் சொல் (’தம்பிரா னடிமைத் திறத்து’--பெரிய புராணம், இளையான்குடி 1). சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தம்பிரான் தோழர் என்று ஒரு பெயர் உண்டு. தவிர, தம்பிரான் என்பது சைவ மடத் தலவர்களைக்குறிக்கும் பட்டம்.
Enrich your   vocabulary
vend
விற்பனை செய்
veneer
நல்லவகை மரத்தகடு
venerate
பெருமதிப்பு கொடு
Proverb
A pen is mightier than a sword
கத்தி முனையைவிட பேனா முனை வலிமை வாய்ந்தது
Opposite Words 
Fashionable X Old Fashioned
  • He looked to be about her age and his blond hair was neatly combed into a fashionable style.
  • Many houses, especially in State, Danforth and Congress streets, are simple in style and oldfashioned in architecture.
Fast X Slow
  • I’m a fast learner.
  • The wound was slow to heal.
மொழிபெயர்ப்பு
பிசுக்கங்காய்/ பீர்க்கங்காய்
ஒரு வகை பெரிய இலைக்கீரை
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + D
விருப்பமனனா தேர்வுகள் சாளரத்தை திறக்கவும்.
Ctrl + E
வரி அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட உரையை சீரமைக்கிறது.
இனிக்கும் கணிதம்      பண்டங்கள் நிறுத்தல்..

32
குன்றிமணி - 1 வராகனெடை
10
வராகனெடை - 1 பலம்
அறிவியல் அறிவோம் - வெப்ப கடத்தாப் பொருள் – மரம்
அறிவியல் துளிகள் - நுன் துகள் கொள்கை- நியூட்டன்
தினம் ஒரு மூலிகை ஏசிசுட்டாசியா டாய்சில்லியனா 
ஏசிசுட்டாசியா டாய்சில்லியனா (தாவர வகைப்பாடு : Asystasia dalzelliana; ஆங்கிலம் : Violet Asystasia ) என்பது தமிழக மூலிகைகளில் ஒன்றாகும். பூக்கும் தாவரத்தின் முண்மூலிகைக் குடும்பத்தில் உள்ள ஏசிசுட்டாசியா பேரினத்தின் கீழ் இத்தாவரம் வருகிறது. பல்லாண்டு வாழ்கின்ற(perennial) இயல்புடைய, இத்தாவரம் 60-100 மீட்டர் படரும் தன்மையுடையது ஆகும். தண்டின் கணுக்கள் சற்று பெரியதாக முடிச்சு போன்று இருக்கும். இலைகள் எதிர் எதிராக, முட்டைப் போன்ற வடிவத்துடன், சமச்சீரற்று காணப்படுகின்றன. பூக்கன் வெளிர்நீலமாகவும், உட்புறம் அடர்நீல நிறமாகவும் அமைந்து இருக்கின்றன. அடர்நிறத்தில் வெளிர்நிற புள்ளிகள் காணப்படுகின்றன. பூக்கும் பருவம் ஆகஸ்ட்  முதல் நவம்பர் வரை ஆகும்.

Asystasia dalzelliana (3806047687).jpg
ஏசிசுட்டாசியா டாய்சில்லியனா 
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்  பழுப்பாதல் (BROWNING)

பழுப்பாதலை தடுக்கும் முறைகள்

  • அஸ்கார்பிக் அமிலம் போன்ற ஆக்ஸிகரணத்தை தடுக்க உதவும் காரணிகளை பயன்படுத்தி ஆக்ஸிகரணத்தைக் குறைத்தல் போன்றவையாகும்.
வரலாற்றுச் சிந்தனை  ஆண்டுகள்  முக்கிய நிகழ்வுகள்

1746  முதல் கர்நாடகப்போர்
1748  இரண்டாம் கர்நாடகப்போர்
1756  மூன்றாம் கர்நாடகப்போர்

தன்னம்பிக்கை கதை- உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும்
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது. சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான். பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான். பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான். பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

பார்ப்போம் பாடுவோம் பாரதியார் பாடல்கள்  https://www.youtube.com/watch?v=j3PHhBP5AJk
இணையம் அறிவோம்     http://vue.tufts.edu/

செயலி பாரதியார் கவிதைகள் https://play.google.com/store/apps/details?id=com.giri.albums.bharathiyar