வரலாற்றில் இன்று -நவம்பர் 28 (November 28) கிரிகோரியன் ஆண்டின்
332 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில்
333 ஆம்
நாள்.
நிகழ்வுகள்
·
1520 – தென்னமெரிக்கா
ஊடாகப் பயணம் செய்த போர்த்துகேய
நாடுகாண்பயணி மகலன்
மகெல்லன் நீரிணையூடாகச்
சென்றார்.
·
1660 – கிறிஸ்டோபர் ரென்,
இராபர்ட் வில்லியம் பாயில்
உட்பட 12 பேர் இணைந்து அரச கழகம்
எனப் பின்னர் அழைக்கப்பட்ட அமைப்பை ஆரம்பித்தனர்.
·
1814 – இலண்டனின் தி டைம்ஸ்
நாளிதழ் நீராவியால் இயக்கப்படும் அச்சியந்திரத்தைக்
கொண்டு முதன்முதலாக வெளியிடப்பட்டது.
பிறப்புகள்
இறப்புகள்
சிறப்பு நாள்
விடுதலை நாள் (அல்பேனியா, துருக்கியிடம் இருந்து 1912)
- விடுதலை நாள் (மூரித்தானியா, பிரான்சிடம் இருந்து 1960)
- விடுதலை நாள் (பனாமா, எசுப்பானியாவிடம் இருந்து 1821)
- குடியரசு நாள் (புருண்டி)
- குடியரசு நாள் (சாட்)
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
கோடாமை சான்றோர்க் கணி.
கலைஞர்
மு.கருணாநிதி உரை: ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த
இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.
மு.வரதராசனார் உரை:கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
Translation:
The gain and loss in life are not mere
accident;
Just mind inflexible is sages' ornament.
Just mind inflexible is sages' ornament.
Explanation:
Loss and gain come not without
cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).
சிந்தனைக்கு நாய்க்கு இல்லை
ஆறாவது
அறிவு
ஆனால்
அதற்கு
உண்டு
நன்றி
உணர்வு…
பகுத்தறிவு உள்ள
நம்மில் பலருக்கும் என்னவோ
சிறிதும் இல்லை
அந்த
நன்றி
உணர்வு…
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
று
-----> எட்டில் ஒரு
பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்
|
|
விடுகதை
விடையுடன்
விரல் இல்லாமலே ஒரு கை அது என்ன? உலக்கை
பழமொழி- ஆகட்டும் போகட்டும், அவரைக்காய் காய்க்கட்டும்,
தம்பி
பிறக்கட்டும், அவனுக்குக் கல்யாணம் ஆகட்டும், உன்னைக் கூப்பிடப்போறேனோ?
பொருள்/Tamil Meaning
தன்னை ஒரு சுப நிகழ்ச்சிக்கும் கூப்பிடவது இல்லை என்று குறைந்துகொண்டவளிடம் இவள் கூறியது.
தன்னை ஒரு சுப நிகழ்ச்சிக்கும் கூப்பிடவது இல்லை என்று குறைந்துகொண்டவளிடம் இவள் கூறியது.
Transliteration
akattum pokattum, avaraikkay kaykkattum, tampi pirakkattum, avanukkuk kalyanam akattum, unnaik kooppitapporeno?
akattum pokattum, avaraikkay kaykkattum, tampi pirakkattum, avanukkuk kalyanam akattum, unnaik kooppitapporeno?
தமிழ் விளக்கம்/Tamil Explanation
மறதியையும் தாமதத்தையும் குறித்து வழங்கும் பழமொழி.
மறதியையும் தாமதத்தையும் குறித்து வழங்கும் பழமொழி.
Enrich your vocabulary
whore பரத்தையாக்கு
|
Proverb Actions speak louder than words.
Actions are a better reflection of one’s character because it’s easy to say things, but difficult to act on them and follow through.Example: Julie always says she’ll donate to the school, and she never does, so I doubt she will this year. Actions speak louder than words, after all.
Opposite Words
Hero X
Coward
- He had dared to speak out against injustice, and overnight he became a national hero.
- Perhaps I should have turned back but I didn’t want to be known as a quitter and a coward.
High X
Low
Opposites
examples:
- The camp was surrounded by a high fence.
- The sun was low in the sky.
மொழிபெயர்ப்பு
பூசணிக்காய்/ பறங்கிக்காய்/வட்டக்காய்
|
|
செங்கோசு
|
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl
+ Alt + 2
|
ஹெட்டிங்2 டெக்ஸ்ட் மாற்ற
|
Alt
+ Ctrl + F2
|
புதிய டாக்குமெண்ட் ஓபன் செய்ய.
|
இனிக்கும் கணிதம் .. நீ பொன்நிறுத்தல்..
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்
அறிவியல் அறிவோம்
* நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி - உயர் வெப்பநிலை
* கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்ரொள்ளப்படும் செயல்முறை - காய்ச்சிவடித்தல்
* கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்ரொள்ளப்படும் செயல்முறை - காய்ச்சிவடித்தல்
தினம் ஒரு மூலிகை சிக்கரி
சிக்கரி என்பது ஒருவகைச் செடி ஆகும். இதன் தாவரப் பெயர் சிகோரியம் இண்டிபஸ் ஆகும். சிக்கரி
செடியின் வேர் முள்ளங்கி போன்றிருக்கும்.
சிக்கரி
செடியின் வேரைக் காயவைத்து,
வறுத்துப் பொடியாக்குவதன் மூலம் பெறுவது சிக்கரித் தூள் ஆகும். காப்பி சுவையாக இருக்க, காப்பிக் கொட்டைத் தூளுடன்,
சிக்கரித் தூளை 80க்கு 20 என்ற விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுகிறது.
இந்தியாவில்
சிக்கரி செடி பஞ்சாப் மற்றும் ஆந்திரபிரதேசம், பீகார், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், அசாம், மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட
மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.
சிக்கரி
உடல் சூட்டைத் தணித்து மூச்சுத் திணறல், அஜீரணம், தலைவலி ஆகியவற்றை நீக்குகிறது. மூளையை சுறுசுறுப்பாக்கும் மருந்தாகவும்
செயல்படுகிறது. சிக்கரிக் கசாயம் மாதவிடாய் போக்கை சீர் செய்கிறது. ஈரல் நோய்களை
குணமாக்கி, சிறுநீர் கழிப்பை அதிகப்படுத்துவதுடன்,
சிக்கரி கால்நடைகளின் வயிற்றுப்பூச்சிகளை அகற்றுகிறது
உணவு – மனிதனின் ஆற்றல் சிதைவுறுதலைப் பாதிக்கும் காரணிகள்
கார்போஹைடிரேட்டுகள்
மோனோசாக்கரைடுகள்
இவை
எளிய சர்க்கரைகள் எல்லா கார்போஹைடிரேட்டுகளும் உடலில் உறிஞ்சப்படுவதற்கு முன் மோனோசாக்கரைடுகளாக மாற்றப்பட வேண்டும்.
குளுக்கோஸ்
: இவை உடலின் முக்கியமான சக்தி தரும் பொருளாக இருக்கின்றன. இது எல்லா வகையான
பழங்களிலும், தேனிலும் தாராளமாய் கிடைக்கிறது.
வரலாற்றுச்
சிந்தனை வரலாற்று அறிஞர்கள் அறிவோம்: ஜவஹர்லால் நேரு
விடுதலை
போராட்டத்தில்
நேரு:
1947 - ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா
சுதந்திரம் அடைந்தபோது "விதியோடு செய்து கொண்ட ஒப்பந்தம்" என இந்தியா - பாகிஸ்தான்
பிரிவினையையும், "உலகம் உறங்கும்போது இந்தியா விழித்துக்கொண்டது" எனவும் வர்ணித்தார்.சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக மெளண்ட்பேட்டன் பிரபுவால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
தன்னம்பிக்கை கதை- சிங்கமும் பங்கும்
சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். கழுதைப் புலியோ, “நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?” என்று கேட்டது.குட்டி கழுதைப்புலி சொல்லியது: “நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்”.
அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. “ஏன் இங்கே வந்தாய்?” – கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.
பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: “ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்”.
குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: “பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?”
“மகனே! சிங்கம் மிகக் கொடுரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக” என்றது தாய் கழுதைப்புலி.
நீதி : நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.
விஞ்ஞானம் அறிவோம் / செய்துபார்த்து அறிவோம்
இணையம் அறிவோம் விஞ்ஞானிகளை அறிவோம்
No comments:
Post a Comment