அறிவுக்கு விருந்து – 25.11.2019 (திங்கள்)

அறிவுக்கு விருந்து – 25.11.2019 (திங்கள்)

வரலாற்றில் இன்று - நவம்பர் 25 (November 25) கிரிகோரியன் ஆண்டின் 329 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 330 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·  885வைக்கிங்கு படையினர் 300 கப்பல்களில் செயின் ஆற்றில் சென்று பாரிசைக் கைப்பற்றினர்.
·  1034இசுக்கொட்லாந்து மன்னர் மாயெல் கோலுயிம் இறந்தார். அவரது பேரன் டொன்சாட் புதிய மன்னனாக முடிசூடினான்.
·  1120இங்கிலாந்து மன்னன் முதலாம் என்றியின் மகனும், முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் வில்லியம் இறந்தான்.
·  1343திரேனியக் கடலில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை ஏற்பட்டதில் நாபொலி உட்படப் பல நகரங்கள் சேதமடைந்தன.
·  1510போர்த்துக்கீசக் கடற்படை அபோன்சோ டி அல்புகெர்க்கே தலைமையிலும், உள்ளூர் கூலிப்படையினரின் உதவியிலும், கோவாவை பிஜப்பூர் சுல்தானகத்திடம் இருந்து கைப்பற்றியது. 451 ஆண்டு கால போர்த்துக்கீசக் குடியேற்ற ஆட்சி ஆரம்பமானது.
·  1667காக்கேசியாப் பகுதியில் செமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80,000 பேர் வரை உயிரிழந்தனர்.
·  1759பெய்ரூத், திமிஷ்கு நகரங்களை நிலநடுக்கம் தாக்கியதில் 30,000-40,000 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

·  1835ஆண்ட்ரூ கார்னேகி, இசுக்கொட்டிய-அமெரிக்கத் தொழிலதிபர் (. 1919)
·  1844கார்ல் பென்ஸ், செருமானியத் தொழிலதிபர் (. 1929)
·  1880லெனார்ட் வூல்ஃப், ஆங்கிலேய அரசியல் கோட்பாட்டாளர், எழுத்தாளர், பதிப்பாளர்
·  1915அகஸ்தோ பினோசெட், சிலியின் 30வது அரசுத்தலைவர் (. 2006)

இறப்புகள்

·  1943இராசா சாண்டோ, தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1894)
·  1950யொகான்னசு வி. யென்சென், நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு எழுத்தாளர்
·  1960மிராபல் சகோதரிகள், டொமினிக்கன் குடியரசுப் போராளிகள்
·  1964துவாரம் வேங்கடசுவாமி நாயுடு, தெலுங்கு கருநாடக, வயலின் இசைக் கலைஞர்
·  1973வி. . அழகக்கோன், இலங்கை அரசியல்வாதி (பி. 1903)

·  1974 தாண்ட், பர்மிய வழக்கறிஞர், ஐநாவின் 3வது பொதுச் செயலர்

சிறப்பு நாள்

 குறளறிவோம்-  112. நடுவு நிலைமை / Impartiality
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.
மு.வரதராசனார் உரை:தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
Translation: Though only good it seem to give, yet gain
By wrong acquired, not e'en one day retain! .
Explanation: Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.
சிந்தனைக்கு    ஒரு அறிவாளி என்பவன் என்றுமே முட்டாள்களுக்கு மத்தியில் தான் சொல்வது சரியே என்று தர்க்கம் செய்து கொண்டிருக்க மாட்டான்வீண் வாதங்கள் என்றுமே வாழ்க்கைக்கு நன்மை பயப்பது இல்லை.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல் 

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல் 

விடுகதை விடையுடன்
தாடிக்காரன், மீசைக்காரன். கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?   தேங்காய்
பழமொழி- பத்தியத்துக்கு முருங்கைக்காய் வாங்கிவா என்றால், பால் தெளிக்கு அவத்திக்கீரை கொண்டுவருவான்.
பொருள்/Tamil Meaning  நோயாளி பத்தியமாகச் சாப்பிட்டு குணம் பெறவேண்டி முருங்கைக்காய் வாங்கிவரப் போனவன், அதைத் தாமதித்து, நோயாளி இறந்துவிட்டதும் மூன்றாம் நாள் பால் தெளிக்க அகத்திக்கீரை வாங்கி வந்தானாம்.
Transliteration  Pattiyatthukku murunkaikkay vankiva enral, paal telikku avatthikkeerai kontuvaruvan.
தமிழ் விளக்கம்/Tamil Explanation  செய்யவேண்டியதை உரிய காலத்தில் செய்யாததன் விளைவைப் பழமொழி சுட்டுகிறது.
Enrich your   vocabulary
whimper  குசுகுசுவென்று பேசு
whine குறை தெரிவித்து புலம்பு
whip   கசையால் அடி

Proverb Absence makes the heart grow fonder.

When people we love are not with us, we love them even more.
Example: When I was with her she always fought with me but now she cries for me on phone. I think distance made her heart grow fonder.
Opposite Words 
Harmful X Harmless
  • Scientists tend to agree that most diets don’t work and can be harmful.
  • Her brother’s a bit simple, but he’s quite harmless.
Harsh X Mild
  • The Canadian winter is very harsh.
  • We had an exceptionally mild winter last year.
மொழிபெயர்ப்பு
பச்சோய்
வேர்க்கோசு
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + Del
கர்சரின் வலதுபுறத்தில் வார்த்தை நீக்க.
Ctrl + Backspace
கர்சரை இடது பக்கம் நீக்க.
இனிக்கும் கணிதம்      .. நீட்டல் அளவை
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
அறிவியல் அறிவோம் இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம் 
அறிவியல் துளிகள் எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை - 78o C
Arum palaestinum flower.jpgதினம் ஒரு மூலிகை கொண்டை ராகிசு:  கொண்டை ராகிசு (Arum) அல்லது (ARUM LYRATUM) என்பது ஒரு பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த மூலிகைத் தாவரம் ஆகும். ஐரோப்பாவைப் பூர்வீகமாகக்கொண்ட இத்தாவரம் அரேசியா (Araceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். ஆப்பிரிக்கா, ஆசியா பகுதிகளில் இத்தாவரம் மூலிகை மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. இதன் பழம் விசத் தன்மை கொண்டதாக உள்ளது.
உணவு     மனிதனின் ஆற்றல் சிதைவுறுதலைப் பாதிக்கும் காரணிகள்
வயது : ஒருவரின் வயதும் மொத்த சிதைவுறுதலைப் பாதிக்கிறது. (.கா) விடலைப் பருவத்தினருக்கு (Adolescents) வயதானவர்களை விட அதிக ஆற்றல் தேவை.
வெப்பநிலை : உடலின் வெப்ப இழப்பை ஈடுகட்ட உடலிற்கு உணவு அவசியமாகிறது. உடலின் வெப்ப இழப்பு கீழ்க்கண்ட காரணிகளைப் பொறுத்தது.
வரலாற்றுச் சிந்தனை  வரலாற்று அறிஞர்கள் அறிவோம்: ஜவஹர்லால் நேரு
விடுதலை போராட்டத்தில் நேரு:
1912 - இல் பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
1916 - இல் லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் காந்தியை முதன்முதலாக சந்தித்தார்.
1916 - இல் கமலா கவுல் என்பவரை மணந்தார்.
1916 - இல் கிஷான் சபையின் துணைத்தலைவரானார்.
தன்னம்பிக்கை கதை- உடல் நலமில்லாத மகன் ஜிட்டுவோடு டாக்டரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தாள் ஜானகி. Ôமாட்டுவண்டியில் காட்டு வழியாகப் போக வேண்டியிருக்கிறதேÕ என்று கவலையோடு இருந்தாள்.
காட்டுக்குள் செல்லச்செல்ல இருட்டு அதிகமாயிற்று. காட்டின் நடுவே போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று வண்டி நின்றுவிட்டது. பயந்தபடியே திரும்பிப் பார்த்தாள் ஜானகி.
மூன்று திருடர்கள் வண்டியை இழுத்துக் கொண்டிருந்தனர்.
ஜானகி கைகூப்பினாள். ஐயா! நான் என் பையனுக்கு வைத்தியம் பார்க்கிற துக்கு போயிட்டிருக்கேன்தயவுசெய்து விட்டுடுங்க
ஏய்அதெல்லாம் முடியாது. உன் நகை, பணம் எல்லாம் தந்தாத்தான் விடுவோம். இல்லை, ரெண்டு பேரை யும் கொன்னுடுவோம் என்றார்கள். வேறுவழியில்லாமல் தன் வளையல்கள், சங்கிலி, பணம் எல்லாம் தந்தாள் ஜானகி. திருடர்கள் ஓடி மறைந்தார்கள்  வண்டி மறுபடி புறப்பட்டது.
பக்கத்துக் கிராமத்தில் போய் மருத்துவரிடம் ஜிட்டுக்கு வைத்தியம் பார்த்தாள் ஜானகி. பணம், நகை கொள்ளை போனது பற்றி கூறினாள்.
மருத்துவரும், பரவாயில்லை, இன்னொரு முறை வரும்போது பணம் தந்தால் போதும் என்று கூறி அனுப்பி விட்டார்.
மறுபடியும் வண்டி நடுக்காட்டை கடந்து கொண்டிருக்கும்போது மாடு மிரண்டது. யாரோ வண்டியைப் பிடித்து இழுத்தார்கள். இந்த முறை ஜானகிக்கு தைரியம் வந்துவிட்டது. அவளிடம்தான் பணம் ஏதும் இல்லையே! ஏய், திருடர்களா! மரியாதையாய் வண்டியைப் போகவிடுங்க!ÕÕ & ஜானகி மிரட்ட
ஹா.. ஹா.. ஹாஎன்று இடிக்குரலில் ஒரு சிரிப்பு சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால்.. ஒரு பெரிய பூதம் நின்றிருந்தது. சர்வநாடியும் ஒடுங்கிவிட்டது ஜானகிக்கு.  நான் ஒன்றும் திருடனில்லை & பூதம் கர்ஜனை செய்தது. சட்டென்று ஒரு யோசனை உதித்தது ஜிட்டுவுக்கு. நான் நம்பமாட்டேன்நீதான் மூன்று திருடர்களைப் போல மாறுவேடம் போட்டு வந்து அப்போது கொள்ளையடித்தாய் என்று கத்தினான்.
ச்சே! அது வேறு யாரோ! & பூதமும் கத்தியது.
நான் நம்பமாட்டேன் & மறுபடியும் ஜிட்டு சொல்ல  தன் தலையில் இரு கைகளையும் பதித்துக்கொண்டு கத்தியது பூதம், நானில்லை அது! அப்படியானால் உனக்கு அரைமணி நேரம் அவகாசம் தருகிறேன், அதற்குள் அவர்களைப் பிடித்துக்கொண்டு வா! அப்புறம் உன்னை நம்புகிறேன். & கத்தினான் ஜிட்டு. உடனே திரும்பி தன் அம்மாவைப் பார்த்து ஜாடை காட்டினான். சட்டென்று மாட்டை உசுப்பி விரட்டினாள் ஜானகி. வேகவேகமாய் வண்டி ஓடியது. ஊர் விரைவாக நெருங்கிக் கொண்டிருந்தது.  ஊரின் எல்லையருகே மறுபடி தொம் என்று குதித்தது பூதம். அதன் கைகளில் கொள்ளையடித்த பொருட்களுடன் மூன்று திருடர்கள்!
தொம்தொம்தொம்என்று மூன்று பேரையும் பூமியில் வீசியடித்தது. சத்தம் கேட்டு ஊர் ஜனங்கள் எல்லாம் கூடிவிட்டார்கள். ஐயோ! அம்மா! என்று விழுந்தார்கள் திருடர்கள்.
ஆகா! நீ திருடனில்லைரொம்ப நல்ல பூதம்தங்கமான பூதம்!ÕÕ என்று கத்தினான் ஜிட்டு. ஊர்மக்களும் நல்ல பூதம், தங்கமான பூதம்! என்று கோஷம் போட்டார்கள்.
எல்லோரும் தன்னைப் பாராட்டியதால் சந்தோஷப்பட்ட பூதம், யாரையும் துன்பம் செய்யாமல் காட்டுக்குள் போய் மறைந்தது.
விஞ்ஞானம் அறிவோம் / செய்துபார்த்து அறிவோம்
இணையம் அறிவோம்  வளரும் விஞ்ஞானிகள்

No comments:

Post a Comment