லாற்றில் இன்று - நவம்பர் 19 (November 19) கிரிகோரியன் ஆண்டின்
323 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில்
324 ஆம்
நாள்.
நிகழ்வுகள்
·
636 – ராசிதீன் கலீபாக்கள்
ஈராக்கின்
அல்-காடிசியா நகரில் சாசானியப் பேரரசுப்
படைகளைத் தோற்கடித்தனர்.
·
1493 – கிறித்தோபர் கொலம்பசு
முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா
(பின்னாளைய புவேர்ட்டோ ரிக்கோ)
எனப் பெயர் சூட்டினார்.
·
1794 – அமெரிக்கப் புரட்சிப் போரின்
பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும்
பிரித்தானியாவுக்கும்
இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
·
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்:
அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன்
கெட்டிசுபெர்க்கு உரையை
நிகழ்த்தினார்.
பிறப்புகள்
இறப்புகள்
சிறப்பு நாள்
- அனைத்துலக ஆண்கள் நாள்
- உலகக் கழிவறை நாள்
- விடுதலை நாள் (மாலி)
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
கலைஞர்
மு.கருணாநிதி உரை: ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல்
அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர்
நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.
மு.வரதராசனார் உரை:முன் உதவி செய்தவர்
பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த
ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
Translation:Effaced straightway is deadliest injury,
By thought of one kind act in days gone by.
By thought of one kind act in days gone by.
Explanation:
Though one inflict an injury great
as murder, it will perish before the thought of one benefit (formerly)
conferred.
சிந்தனைக்கு இலக்கு பெரியதாக இருக்கும் போது
உன்
மன
வலிமை,
பொறுமை,
திட்டமிடும் தன்மை,
சமயோஜித சிந்தனை, தன்னம்பிக்கை என
இவை
அனைத்துமே உன்னில் உயர்ந்ததாக இருக்க
வேண்டும்.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
மூ
-----> மூன்று
|
|
மே
-----> மேன்மை, மேல்
|
|
மை
-----> அஞ்சனம், கண்மை, இருள்
|
|
விடுகதை
விடையுடன்
வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை
அது என்ன ? செருப்பு
பழமொழி- துறவிக்கு வேந்தன் துரும்பு.
பொருள்/Tamil Meaning துறவி தன்
உயிரின் நிலைமையும் யாக்கை
நிலையாமையும் நன்கு
அறிந்தவர். எனவே
ஒரு
மன்னனின் ஆணைகள்
அவரை
ஒன்றும் செய்ய
முடியாது.
Transliteration Turavikku ventan turumpu.
தமிழ் விளக்கம்/Tamil Explanation
இந்தப்
பழமொழியை நிரூபிக்கும் வகையில் பரமஹம்ஸ யோகானந்தாவின் ’ஒரு
யோகியின் சுயசரிதம்’ புத்தகத்தில் ஒரு
கதை
உள்ளது
(அத்தியாயம் 41). அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பின்போது அந்த
மன்னன்
தக்ஷசீலத்தில் முகாமிட்டிருந்தான். அப்போது அவன்
தக்ஷசீலத்தில் பெயர்பெற்ற சந்நியாசியான ’டண்டமிஸ்’-ஸை
அழத்துவர ஆள்
அனுப்பினான். வர
மறுத்தால் துறவியின் தலையைச் சீவிக்
கொன்றுவிடும்படி ஆணை
அந்த
தூதுவனுக்கு. ஆனால்
அந்த
யோகி
தான்
படுத்திருந்த நிலையிலிருந்து தன்
தலையைக் கூட
நிமிர்த்தாமல் அந்த
தூதுவனுக்கு ஆன்மீக
விளக்கம் அளித்து தான்
மரணத்துக்குப் பயப்படவில்லை என்றும், மன்னர்கள் தனக்கு
ஒரு
பொருட்டல்ல என்றும் கூறிவிட, கலவரம்
அடந்த
தூதுவன் தன்
மன்னனிடம் போய்
விவரம்
கூறினான். ஆச்சரியம் அடைந்த
அலெக்ஸாண்டர் தக்ஷசீலத்தில் இருந்த
பல
பிராமணத் தவசிகளை வரவழைத்துக் கேள்விகள் கேட்டு
ஆத்மாவின் உண்மையைப் புரிந்துகொண்டு, கல்யாணா (இவர்
பின்னர் கிரேக்கர்களால் காலனாஸ் என்று
அழைக்கப்பட்டார்.) என்ற
யோகியைத் தன்னுடன் அழைத்துச் சென்றான். அவர்
ஒரு
குறிப்பிட்ட நாளில்
பாரசீகத்தில் ஸுசா
என்ற
நகரில்
மாஸிடோனியாவின் அனைத்துப் படைகளுக்கு முன்
தன்
வயதான
உடலை
நீத்தார். தனக்கு
மிக
நெருங்கிய தோழர்களைத் தழுவி
விடைபெற்ற அவர்,
அலெக்ஸாண்டரிடம் அவ்வாறு செய்யாமல், "நான் உன்னை
பின்னர் பாபிலோனில் சந்திக்கிறேன்" என்று மாத்திரமே குறிப்பிட்டார். அலெக்ஸாண்டர் மறு
வருடமே
பாபிலோனில் மரணம்
அடைந்தான்.
Enrich your vocabulary
wrap
சுற்றிப் போர்த்து, உறையிடு
|
Proverb
Time and tide wait for no man
ஐயர்
வருகிற
வரையில் அமாவாசை நிற்குமா?
Opposite Words
Giant X
Tiny
- Giant cabbages grew in the garden.
- You only need to use a tiny amount of salt.
Give X
Receive
- I’ve got some old diaries that my grandmother gave me years ago.
- All the children will receive a small gift.
மொழிபெயர்ப்பு
(மிகப்பெரிய வகையான) பூசணி
|
|
வட்டுப்பூசணி
|
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + Shift + <
|
லைன் மற்றும் எழுத்து சைஸ் குறைக்க.
|
Ctrl + [
|
தேர்வு செய்த எழுத்து சைஸ் குறைக்க.
|
இனிக்கும் கணிதம் .. நீட்டல் அளவை
8 அணு – 1 தேர்த்துகள்
8 தேர்த்துகள் – 1 பஞ்சிழை
8 பஞ்சிழை – 1 மயிர்
அறிவியல் அறிவோம் பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா அறிவியல்
துளிகள்– ஊசல் கடிகாரம் – கிறிஸ்டியன்
ஹைஜென்ஸ்
தினம் ஒரு மூலிகை காட்டுப்பூரான் கொடி
காட்டுப்பூரான் கொடி (தாவர வகைப்பாடு : Andrographis
serpyllifolia [1] என்பது தமிழக மூலிகைகளில் ஒன்றாகும். சீயான் கொடி என்றும் அழைப்பர். இலையுதிர் காடுகள் உள்ள வறட்சியான மலைகளில், 600 மீட்டர் உயரத்தில்
காணப்படுகின்றன. இம்மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் தெற்கு, நடு மலைகள் ஆகும். ஈரப்பதம் அதிகமுள்ள
இடங்களில் இத்தாவரங்கள் வளருவதில்லை. சித்தமருத்துவத்தில் இச்செடியுடன், வேறு சில தாவர இனத்தின் சாற்றினைக் கலந்த, பூச்சு
நஞ்சு முறிப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது
உணவு – உணவுப்பொருட்களின் ஆற்றல் மதிப்பீடு
1 கிராம் கார்போஹைடிரேம் - 4 கி.கலோரிகளைத் தரும்
1 கிராம் கொழுப்பு - 9 கி. கலோரிகளைத்தரும்
1 கிராம் புரதம் - 4 கி.கலோரிகளைத்தரும்
வரலாற்றுச் சிந்தனை வரலாற்று அறிஞர்கள் அறிவோம்: ஜவஹர்லால் நேரு
திருமணம்:
1916 பிப்ரவரி
8 ஆம் தேதி கமலா கவுல்
என்ற காஷ்மீரி பிராமணப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இந்திராபிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தார்,
பின்னாளில் அவர் இந்திரா காந்தி
என்று அழைக்கப்பட்டார்.
1920
- இல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 இல் நேரு முதல்
முறையாகச் சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால்
நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள்
சிறையில் கழிக்க வேண்டிவந்தது.
தன்னம்பிக்கை
கதை- காசிக்குப்
போறேன்ஒருவர் காசியாத்திரை செல்ல நினைத்தார். அந்தக் காலத்தில் போக்குவரத்து வசதி இல்லாத காலம். காசிக்குப் போய் திரும்பி வரவே ஆறு மாதங்களுக்கு மேலாகலாம். வனப்பகுதி வழியாக செல்லும்போது, சிங்கம், புலி அடித்துச் செத்துப் போய் திரும்பாமலும் போகலாம். அதனால், காசி யாத்திரை புறப்பட்டவர், காசிக்குச் செல்லும் முன்பே தனது சொத்தை தன் மூன்று மகன்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டார். தனக்கு என்று எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. திரும்பி வருவோம் என்பதும் உறுதியில்லை.

மூத்த மகன் வீட்டுக்குச் சென்றார்.
“”மகனே! சவுக்கியமா? உன் மனைவி, குழந்தை குட்டிகள் நலமா? வாழ்க்கை எப்படி ஓடுகிறது? நான் கொடுத்த பணத்தை என்ன செய்தாய்?” என்று நேரடியாகக் கேட்காமல் சுற்றி வளைத்துக் கேட்டார்.
“”நீங்கள் கொடுத்த பணத்தைப் பார்த்ததும் என் மனைவி, தனக்கு நகைகள், பட்டுப்புடவை வேண்டும் என்றாள். அந்தப் பணத்திற்கு எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டேன். தினக்கூலி வேலைக்கு சென்று தான் காலம் ஓடுகிறது. அதனால், நீங்கள் பணம் கொடுத்தும் எனக்கு எந்தப் பயனும் இல்லையப்பா!” என்று சலித்துக் கொண்டான் அவன்.
இன்னொரு மகன் எப்படியிருக்கிறான் என்று பார்க்க அவன் வீடு சென்றார். “”மகனே! உன் வாழ்க்கை எப்படியிருக்கிறது. நான் கொடுத்த பணத்தை என்ன செய்தாய்?” என்று நேரடியாகவே கேட்டுவிட்டார்.
“”பத்திரமாக அப்படியே இருக்கிறது அப்பா. அதிலிருந்து ஒரு பைசாகூட எடுக்கவில்லை. அப்படியே அந்தப் பணத்தை நெற்குதிருக்கு அடியில் ஒரு குழி தோண்டிப் புதைத்து பத்திரமாக வைத்துள்ளேன். எடுத்துக் காண்பிக்கட்டுமா தந்தையே?” என்றான்.
அவனை விட இவன் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டார். மூன்றாவது மகனிடம் சென்றார்.
“”என்னப்பா… நான் கொடுத்த பணத்தை என்ன செய்தாய்? சவுகரியமாக இருக்கிறாயா? காசிக்குப் போனாலும் உங்கள் நினைப்பு தான். எப்படி இருக்கிறீர்களோ, என்ன செய்கிறீர்களோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.”
“”காசிக்குப் போயும் கர்மம் தொலையவில்லை என்பது இதுதான் போலும். அதற்கு நீங்கள் காசிக்கே போயிருக்க வேண்டாம். இங்கிருந்து கொண்டே நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று பார்த்துக் கொண்டிருந்திருக்கலாமே!
“”பணத்தைப் பற்றி கேட்டீர்கள் அல்லவா? அதை மூலதனமாக வைத்து ஒரு சிறிய பெட்டிக் கடை ஆரம்பித்தேன். நம் ஊரில் கடையே இல்லையா? என் கடை ஊருக்கே பெரிதும் உபயோகமாக இருக்கிறது. எனக்கும் நல்ல லாபம்.
“”இவ்வளவுக்கும், குறைந்த லாபம் வைத்துத்தான் விற்கிறேன். அப்படியும் நிறைய விற்பதால் லாபம் அதிகரித்துவிட்டது. கடையிலுள்ள சரக்கு, கையிலுள்ள ரொக்கம் எல்லாம் ஆயிரத்திற்கும் மேல் இருக்கிறது. இந்த ஆறு மாத காலமாக, கடை வியாபாரத்தில் வந்த லாபத்தில்தான் குடும்பமே நடந்தது!” என்று கூறினான்.
“”அப்பா! என் வீட்டிலேயே இருங்கள். நீங்கள் கடையில் அமர்ந்து கல்லாவை பார்த்துக் கொண்டால் போதும்… நான், சரக்குகள் எடுத்து வருவது போன்ற வெளி வேலைகளைச் செய்வேன். இன்னொரு கடையும் மலிவான விலைக்கு வருகிறது அப்பா… அதையும் வாங்கிப் போடப் போறேன்,” என்றான் மகன்.
அதிசயத்துப் போனார் தகப்பனார். ஒன்றை பத்தாக்கும் புத்திசாலித்தனம் வேண்டும். அதைச் சின்ன மகன் நன்கு தெரிந்து வைத்துள்ளான் என்பதை நினைத்து மகிழ்ந்தார். மூன்று பேருக்கும் ஒரே மாதிரியாகத்தான் பணம் கொடுத்தார். இருந்தும் மூவரும் அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொண்ட முறையில்தான் எவ்வளவு வேறுபாடு பார்த்தீர்களா குட்டீஸ்… மூளையை யூஸ் பண்ணுங்க.
பார்ப்போம் பாடுவோம்/ பேசுவோம்
- ஔவையார் பாடல்கள்
இணையம் அறிவோம்
செயலி – Avvai Noolgal
No comments:
Post a Comment