அறிவுக்கு விருந்து – 20.11.2019 (புதன்)


அறிவுக்கு விருந்து – 20.11.2019 (புதன்)

வரலாற்றில் இன்று - நவம்பர் 20 (November 20) கிரிகோரியன் ஆண்டின் 324 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 325 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·  284டயோக்கிளேசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார்.
·  1194புனித உரோமைப் பேரரசர் ஆறாம் என்றி பலெர்மோவைக் கைப்பற்றினார்.
·  1658இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் இடச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.[1]
·  1789நியூ செர்சி உரிமைகளின் சட்டத்தை ஏற்றுக் கொண்ட முதலாவது அமெரிக்க மாநிலமானது.
·  1820தென் அமெரிக்காவில் 80-தொன் எடையுள்ள எண்ணெய்த் திமிங்கிலம் ஒன்று எசெக்சு என்ற திமிங்கில வேட்டைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
·  1910பிரான்சிஸ்கோ மடேரோ மெக்சிகோ அரசுத்தலைவர் போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை அரசுத்தலைவராகவும் அறிவித்தார். மெக்சிக்கோ புரட்சி ஆரம்பமாயிற்று.
·  1923செருமனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்)
·  1936எசுப்பானிய அரசியல்வாதி ஒசே அந்தோனியோ பிறிமோ டெ ரிவேரா கொல்லப்பட்டார்.

பிறப்புகள்

·  1750திப்பு சுல்தான், மைசூர் பேரரசர் (. 1799)
·  1858செல்மா லோவிசா லேகர்லாவ், நோபல் பரிசு பெற்ற சுவீடிய எழுத்தாளர் (. 1940)
·  1889எட்வின் ஹபிள், அமெரிக்க வானியலாளர் (. 1953)
·  1905மினூ மசானி, இந்திய அரசியல்வாதி (. 1998)
·  1910எம். கே. ராதா, தென்னிந்திய நாடக, திரைப்பட நடிகர் (. 1985)
·  1923நாடின் கார்டிமர், நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (. 2014)
·  1925இராபர்ட் எஃப் கென்னடி, அமெரிக்க அரசியல்வாதி (. 1968)

இறப்புகள்

·  1861பியர்ரே பிரெடெரிக் சாரசு, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1798)
·  1882என்றி டிரேப்பர், அமெரிக்க மருத்துவர், வானியலாளர் (பி. 1837)
·  1910லியோ டால்ஸ்டாய், உருசிய எழுத்தாளர் (பி. 1828)
·  1934வில்லெம் தெ சிட்டர், இடச்சுக் கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர்

சிறப்பு நாள்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.
மு.வரதராசனார் உரை:எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
Translation: Who every good have killed, may yet destruction flee;
Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free!.
Explanation:  He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.
சிந்தனைக்கு    சில சமயங்களில் அனைவரிடமும் கலந்து ஆலோசனை செய்வதை விட எதை செய்யும் முன்னரும் அதனால் கிடைக்க பெறும் நன்மையையும் தீமையையும் நீ சிந்தனை செய்வாயேயானால் உனக்கான சிறந்த முடிவை நீயே அறிந்து கொள்வாய்.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
மோ -----> முகர்தல், மோதல் 

யா -----> அகலம், மரம் 

விடுகதை விடையுடன்
வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன?   உழுந்து
பழமொழி- ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான், பலபேரைக் கொன்றவன் பட்டம் ஆளுவான்.
பொருள்/Tamil Meaning ஒருவனைக் கொன்றவனுக்கு தண்டனை விரைவில் கிடைத்து அவன் மாள்வான். ஆனால் பலரைக் கொன்றவன் பட்டம் ஆள்பவனாக இருப்பான்.
Transliteration Oruvanaik konravan utane saavaan, palaperaik konravan pattam aaluvan
தமிழ் விளக்கம்/Tamil Explanation ஒருவனைக் கொல்பவன் சுயநல நிமித்தம் அதைச் செய்கிறான். பலரைக் கொல்பவனின் நிமித்தம் (motive) எதுவாக இருந்தாலும் அவனது படைபலம் அவனை அரியணையில் அமர்த்துகிறது. இருப்பினும், அவனது நிமித்தம் பொதுநலத்தைத் தழுவி இராவிட்டாள் காலம் காலனாக மாறி அவன் கணக்கை இயற்கையாகவோ செயற்கையாகவோ முடிக்கும்.
Enrich your   vocabulary
wrest பலவந்தமாய் எடுத்துக் கொள், பிடுங்கு
wrestle மல்யுத்தம் செய்
whelm அமிழ்த்து
Proverb

A bad workman always blames his tools.

This proverb is used when someone blames the quality of their equipment or other external factors when they perform a task poorly.
Example: X: The turkey isn’t cooked well because the oven is not functioning well. Y: Well, it’s the case of a bad workman blaming his tools.
Opposite Words 
Giant X Tiny
  • Giant cabbages grew in the garden.
  • You only need to use a tiny amount of salt.
Give X Receive
  • I’ve got some old diaries that my grandmother gave me years ago.
  • All the children will receive a small gift.
மொழிபெயர்ப்பு
(மிகப்பெரிய வகையான) பூசணி
வட்டுப்பூசணி
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + <left arrow>
ஒரு வார்த்தையை இடது பக்கம் நகரும்.
Ctrl + <right arrow>
ஒரு வார்த்தையை வலது பக்கம் நகரும்.
இனிக்கும் கணிதம்      .. நீட்டல் அளவை
8 மயிர் – 1 கடுகு
8 கடுகு – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 நெல்
அறிவியல் அறிவோம் இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
அறிவியல் துளிகள் மின் கலம் – லூயி கால்வானி
தினம் ஒரு மூலிகை குடசப்பாலை
குடசப்பாலை (கருப்பாலைHolarrhena pubescens) மூலிகையானது மருத்துவத்தில் பயன்படும் சிறுமரமாகும். வலுவான கிளைகளைக் கொண்ட இதன் பட்டை தடிப்புடையதாகச் சொரசொரப்பான பொருக்குகளுடன் பழுப்பு நிறமாக இருக்கும். இதன் பட்டை, இலை, விதை ஆகியன மருத்துவப் பயனுடையவை. இது சீதக்கழிச்சல் போக்க உதவும்.
உணவு     உணவுப்பொருட்களின் ஆற்றல் மதிப்பீடு
உடல் வெப்பநிலை, வளர்சிதை மாற்றம், வளர்ச்சி மற்றும் உடல் செயல்பாட்டிற்கு ஆற்றல் உடலிற்கு தேவைப்படுகிறது. ஆற்றல் தரும் உணவு தொழிற்சாலைகளான கார்போஹைடிரேட்டுகள், கொழுப்பு மற்றும் புரதம், ஆக்ஸிஜனின் உதவியால் உடல் செல்களில் சிதைக்கப்பட்டு வெப்பம், நீர் மற்றும் கார்பன்டை ஆக்சைடாக மாறுகின்றன.
வரலாற்றுச் சிந்தனை  வரலாற்று அறிஞர்கள் அறிவோம்: ஜவஹர்லால் நேரு
1936 - இல் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாக செயல்பட்டு வந்த கமலா நேரு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
நூல்: நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார்.
தன்னம்பிக்கை கதை- முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவர் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். கிழடாகிப் போன அந்தப் பூனையால் எலிகளைப் பிடிக்க முடியவில்லை. இந்தப் பூனையால் எந்தப் பயனும் இல்லை. இதைக் காட்டில் விட்டு விடுவோம், என்று நினைத்தார் அவர். அப்படியே அதைக் காட்டில் விட்டுவிட்டு வந்தார். அந்த காட்டில் பூனையே கிடையாது. அங்கே உலவிக் கொண்டிருந்தது பூனை. பெண் நரி ஒன்று அதைப் பார்த்தது.
ஐயா! தாங்கள் யார்? இப்பொழுது தான் தங்களை முதன் முறையாகப் பார்க்கிறேன்என்று கேட்டது அது.
நான் பூனை பிரபுஎன்று கம்பீரமாகச் சொன்னது பூனை.
அதன் அழகிலும் கம்பீரத்திலும் மயங்கியது நரி. “ஐயா! என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவியாக நான் நடந்து கொள்வேன். உங்கள் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி வைப்பேன், ஒரு பிரபுவை கல்யாணம் செய்துக் கொண்ட பெருமை எனக்கு கிடடக்கும்என்றது.
பூனையும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது. இரண்டிற்கும் திருமணம் நடந்தது.
தான் சொன்னபடியே நடந்தது நரி. தனியே சென்று கோழிக் குஞ்சுகளைப் பிடித்து வரும் பூனைக்கு உண்ணக் கொடுக்கும். சில சமயம் அது பட்டினியாகவே கிடக்கும்.
ஒரு நாள் உணவு தேடச் சென்றது நரி. வழியில் அதை முயல் ஒன்று சந்தித்தது.
நண்பனே! உன் வீட்டிற்கு நான் வரலாம் என்று இருக்கிறேன். எப்பொழுது வருவது?” என்று கேட்டது முயல்.
என் வீட்டிற்கு வரும் எண்ணத்தை விட்டுவிடு. அங்கே பூனை பிரபு இருக்கிறார். அவர் கொடூரமானவர். உன்னைக் கண்டால் ஒரு நொடியில் கொன்று தின்று விடுவார்என்றது நரி.
அங்கிருந்து ஓடிய முயல் வழியில் ஓநாயைச் சந்தித்தது. “உனக்குச் செய்தி தெரியுமா? நரியின் வீட்டில் பூனை பிரபு இருக்கிறாராம். அவர் மிகக் கொடூரமானவராம். யாரையும் கொன்று தின்று விடுவாராம்என்றது அது.
இந்த விந்தையான செய்தியைப் பன்றியிடம் சொன்னது ஓநாய். பன்றி இதைக் கரடியிடம் சொன்னது. முயல், ஓநாய், பன்றி, கரடி நான்கும் ஒன்றாகக் கூடின.
எப்படியாவது பூனை பிரபுவை நாம் பார்க்க வேண்டுமே?” என்றது கரடி.
உயிரின் மீது உனக்கு ஆசை இல்லையா?” என்று கேட்டது முயல்.
எனக்கு நல்ல வழி ஒன்று தோன்றுகிறது நாம் நால்வரும் சேர்ந்து பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்வோம். பூனை பிரபுவையும் நரியையும் விருந்திற்கு அழைப்போம்என்றது ஓநாய்.
எல்லோரும் இதற்கு ஒப்புக் கொண்டனர்.
மேசையின் மேல் விதவிதமான உணவுப் பொருள்கள் பரிமாறப் பட்டன.
யார் சென்று பூனை பிரபுவை அழைப்பது?” என்ற சிக்கல் எழுந்தது.
எனக்கு தூங்கி வழிகின்ற முகம். நான் சென்று எப்படி அழைப்பேன்?” என்று மறுத்தது பன்றி.
எனக்கு அதிக வயதாகி விட்டது. உடல் நலமும் சரியில்லைஎன்றது ஓநாய்.
ஏதேனும் ஆபத்து என்றால் என்னால் வேகமாக ஓட முடியாதுஎன்றது கரடி.
மூன்றும் முயலைப் பார்த்து, “விருந்துச் செய்தியை நீதான் சொல்லிவர வேண்டும்என்றன.
முயல் நடுங்கிக் கொண்டே நரியின் வீட்டை அடைந்தது. நீண்ட நேரம் வெலியிலேயே காத்திருந்தது. வெளியே வந்த நரி முயலைப் பார்த்து வியப்பு அடைந்தது.
பன்றி, ஓநாய், கரடி மூன்றும் என்னை இங்கே அனுப்பின. நால்வரும் சேர்ந்து விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். உங்களுக்காகவே இந்த விருந்து நீங்களும் பூனை பிரபுவும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்என்றது முயல்.
http://www.mybunnies.com/images/danc…/7bunnyani.gif
நல்லது. நான் விருந்திற்கு வருகிறேன். பூனை பிரபுவும் என்னுடன் வருவார். நாங்கள் வரும் போது நீங்கள் நால்வரும் எங்காவது ஒளிந்து கொள்ளுங்கள் பூனை பிரபு உங்களைப் பார்த்தால் நீங்கள் செத்தீர்கள். விருந்து எங்கே நடக்கிறது?” என்று கேட்டது நரி.
இடத்தைச் சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்தது முயல். தன் நண்பர்களைச் சந்தித்து நடந்ததைச் சொன்னது அது. பயந்து போன நான்கும் என்ன செய்வது என்று சிந்தித்தன.
நான் அந்த மரத்தில் ஏறிக் கொள்கிறேன்என்றது கரடி.
அந்தப் புதரில் நான் ஒளிந்து கொள்கிறேன்என்றது ஓநாய்.
உன் அருகிலேயே நானும் பதுங்கிக் கொள்கிறேன்என்றது முயல்
அடர்ந்த அந்த மரங்களுக்குப் பின்னால் நான் மறைந்து கொள்கிறேன்என்றது பன்றி.
பூனை பிரபுவும் நரியும் வரும் ஓசை கேட்டது. நான்கும் பதுங்கிக் கொண்டன.
பலவிதமான உணவுப் பொருள்களைப் பார்த்தது பூனை. அதற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ‘மியாவ், மியாவ்என்று கத்திக் கொண்டே சாப்பிடத் தொடங்கியது.
புதரில் இருந்த ஓநாய், “எவ்வளவு பயங்கரமான விலங்கு? என்ன கொடூரமான குரல்? சாப்பிடும் வேகத்தைப் பார்த்தால் நம் விருந்து அதற்குப் போதாது. நம்மையும் கொன்று தின்னும் போல இருக்கிறதுஎன்றது.
ஆமாம்என்று நடுங்கிக் கொண்டே சொன்னது முயல்.
மரத்தில் இருந்த கரடியும் மறைந்து இருந்த பன்றியும் நடுங்கின.
பூனை விருந்தை வயிறார உண்டது. மேடையின் மேல் படுத்துத் தூங்கத் தொடங்கியது.
மரத்தின் மறைவில் பதுங்கி இருந்த பன்றியின் வாலைக் கொசு ஒன்று கடித்தது. உடனே பன்றி தன் வாலை அசைத்தது.
சத்தம் கேட்டு விழித்தது பூனை. பன்றியின் வாலை எலி என்று தவறாக நினைத்தது அது.
மாட்டிக் கொண்டாயா?” என்று கத்திக் கொண்டே எலியைப் பிடிக்கப் பாய்ந்தது. நேராகப் பன்றியின் முகத்தில் போய் மோதியது அது.
எதிர்பாராமல் நடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது பன்றி. அங்கிருந்துதப்பித்தேன்என்று கத்திக் கொண்டே ஓட்டம் பிடித்தது.
பன்றியைக் கண்டு பயந்த பூனை ஒரே பாய்ச்சலில் அருகில் இருந்த மரத்தில் ஏறியது.
அங்கிருந்த கரடி தன்னைத்தான் பூனை பிரபு கொல்ல வருகிறார் என்று பயந்தது. விரைந்து மரத்தின் உச்சிக் கிளைக்குச் சென்றது. அதன் எடை தாங்காமல் கிளை முறிந்தது. புதரில் மறைந்திருந்த ஓநாயின் மேல் விருந்தது அது.
அலறி அடித்துக் கொண்டு ஓநாயும் ஓட்டம் பிடித்தது. முயலும் அதைத் தொடர்ந்து ஓடியது. வலியைத் தாங்கிக் கொண்டுதப்பித்தோம் பிழைத்தோம்என்று கரடியும் ஓடியது.
நீண்ட நேரத்திற்குப் பிறகு நான்கும் சந்தித்தன.
பூனை பிரபு பார்ப்பதற்குச் சிறியவராக இருக்கிறார். நம் நால்வரையும் கொன்று தின்றிருப்பார். நல்ல வேளை தப்பித்தோம்என்றது கரடி.
மற்ற மூன்றும்ஆமாம்என்றன.
அதன் பிறகு பூனை பிரபுவின் வழிக்கே அவை செல்லவில்லை. வயதானாலும், அதிஷ்டத்தாலும், தன் வாய்சொல் திறமையாலும் பூனையானது மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது
பார்ப்போம் பாடுவோம்/ பேசுவோம் -  ஔவையார்  பாடல்கள் 
இணையம் அறிவோம் 
செயலி Avvai Noolgal

https://play.google.com/store/apps/details?id=com.raintreedevelopers.avvaiyar

தொகுப்பு

No comments:

Post a Comment