அறிவுக்கு விருந்து – 12.11.2019 (செவ்வாய்)


அறிவுக்கு விருந்து – 12.11.2019 (செவ்வாய்)

வரலாற்றில் இன்று - நவம்பர் 12 (November 12) கிரிகோரியன் ஆண்டின் 316 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 317 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  764திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன.
·  1028பின்னாளைய பைசாந்தியப் பேரரசி சோயி பேரரசர் மூன்றாம் ரொமானொசின் மனைவியாக முடிசூடினார்.
·  1555திருத்தந்தைகளுக்கு எதிராக 1529 முதல் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு கத்தோலிக்க திருச்சபையை இங்கிலாந்தில் மீண்டும் கொண்டுவரும் சட்டத்தை மகாராணி முதலாம் மேரி கொண்டு வந்தார்.
·  1893அன்றைய பிரித்தானிய இந்தியாவுக்கும் (தற்போதைய பாக்கித்தான்) ஆப்கானித்தானுக்கும் இடையேயான துராந்து எல்லைக்கோடு கீறப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
·  1905நோர்வே மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.
·  1918ஆஸ்திரியா குடியரசாகியது.

பிறப்புகள்

·  1817பகாவுல்லா, பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பாரசீகர் (. 1892)
·  1819மானியர் வில்லியம்ஸ், பிரித்தானிய மொழியியலாளர் (. 1899)
·  1840ஆகுஸ்ட் ரொடான், பிரான்சிய சிற்பி (. 1917)
·  1842சான் வில்லியம் ஸ்ட்ரட், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (. 1919)
·  1866சுன் சியன், சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (. 1925)
·  1879சே. . இராமசுவாமி, இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (. 1966)
·  1896சலீம் அலி, இந்திய இயற்கையியலாளர் (. 1987)

இறப்புகள்

·  1623யோசபாத்து, இலித்துவேனியப் பேராயர் (பி. 1582)
·  1916பெர்சிவால் உலோவெல், அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1855)
·  1946மதன் மோகன் மாளவியா, இந்திய அரசியல்வாதி (பி. 1861)
·  1969லு சாஃவ்சி, சீனக் குடியரசின் 2வது அரசுத்தலைவர் (பி. 1898)
·  1994வில்மா ருடோல்ஃப், அமெரிக்க தடகள விளையாட்டு வீரர் (பி. 1940)

சிறப்பு நாள்

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.
மு.வரதராசனார் உரை:ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
Translation: Each benefit to those of actions' fruit who rightly deem,
Though small as millet-seed, as palm-tree vast will seem.
Explanation: Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a Palmyra fruit.
சிந்தனைக்கு     
நீ என்றுமே எந்த விஷயத்திலும் அமைதியையும் நிதானத்தையும் கடைபிடித்தாயேயானால் பல சிக்கல்களையும் ஆராய்ந்து எது சரி எது தவறு என்ற தீர்வை தரும்.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
நீ -----> நின்னை 
நே -----> அன்பு, நேயம் 
நை -----> வருந்து, நைதல் 
விடுகதை விடையுடன்
தட்டச் சீறும் அது என்ன?  தீக்குச்சி
பழமொழி- அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
பொருள்/Tamil Meaning அதிகாரியின் வீட்டில் உள்ள ஒரு சிறு துரும்பும் குடியானவன் போன்ற எளியவர்களை ஆட்டிவைக்கும்.
Transliteration Atikari veettuk kolimuttai kutiyanavan veettu ammiyai udaitthathaam.
தமிழ் விளக்கம்/Tamil Explanation ஒரு பழமொழியின் வசீகரம் அதில் உள்ள செய்தியை அழுத்தமாக, வியப்பூட்டும் உவம-உருவகங்களைப் பயன்படுத்திச் சொல்வதில் இருக்கிறது. கோழிமுட்டையை அதிகாரி வீட்டு அடிமட்ட வேலைக்காரனுக்கும் அம்மியைக் குடியானவன் வீட்டு தினசரி வாழ்வுக்கான முக்கியப் பொருளுக்கும் உவமை கூறியது மெச்சத்தக்கது. ஒரு அதிகாரியின் வேலையாட்கள் தம் யஜமானரின் அதிகாரம் தமக்கே உள்ளதுபோலக் காட்டிக்கொண்டு எளியோரை வதைக்கும் வழக்கம் பழமொழியில் அழகாகச் சுட்டப்படுகிறது.
Enrich your   vocabulary
wither வாடிப்போ , உலர்ந்து போ
withhold தொடாமல் வைத்துக் கொள், தடுத்து நிறுத்து
withstand எதிர்த்து நில், தடை செய்
Proverb
A stitch in time saves nine
ஒரு தையல் போட்டால், ஒன்பது தையலை தவிர்க்கும்
Opposite Words 
Forgive X Blame
  • I’ve tried to forgive him for what he said.
  • The report blames poor safety standards for the accident.
Fortunate X Unfortunate
  • I’ve been fortunate to find a career that I love.
  • He has an unfortunate habit of repeating himself.
மொழிபெயர்ப்பு
கற்பூசணி
பரட்டைக்கீரை
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + U
தேர்ந்தெடுக்கப்பட்ட உரையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
Ctrl + V
ஒட்டு. தற்போது திறந்த ஆவணத்தை மூடுக.
இனிக்கும் கணிதம்      .. கால அளவு..
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
அறிவியல் அறிவோம் 
சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்
அறிவியல் துளிகள்
ரத்தம் சிவப்பு செல்களால் ஆனது என்பதை கண்டு பிடித்தவர்-ஆண்டன் வான் லூவன்ஹாக்
தினம் ஒரு மூலிகை ஈக்குசெட்டம்
ஈக்குசெட்டம் (Equisetum) என்பது மிகவும் பழங்காலத் தாவரம் ஆகும். இது சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிகளவில் வாழ்ந்தன. இது ஈக்குசெட்டேசி (Equisetaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சில இனங்கள் 30 மீட்டர் உயரம் கொண்ட மரங்களாகவும் இருந்தன. அவை அழிந்து விட்டன. சில மட்டும் இன்று வரை உள்ளன. ஆகவே இதை உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் புதை படிவத் தாவரம் ( Living Fossil) என்கின்றனர்.
இதன் தண்டானது கணு கணுவாக இருக்கும். ஒவ்வொரு கணுவும் 2 செ.மீ முதல் 30 செ.மீ நீளம் கொண்டது. கணுக்களில் பல சிறு கிளைகள் தோன்றும்.இதைப் பார்க்கும் போது குதிரையின் வால் போல் காட்சித் தரும்.ஆகவேதான் இவைகளுக்கு குதிரைவால்(Horsetail) செடி என பெயர் வைத்துள்ளனர்.
இதை கரடு முரடான குதிரைவாலி ,பாம்பு புல் என் அழைக்கின்றனர்.கடல் மடத்தில் இருந்து 2530 மீட்டர் உயரத்திலும் வளர்கின்றன.ஏரி ,குளம் மற்றும் நீரோடைகளைச் சுற்றி இது வளர்ந்து இருப்பதைக் காணலாம்.இவை 3 அடி உயரம் வரை வளரும்.நாணல் போன்ற தண்டு உடையது.தண்டிலிருந்து இசைக் கருவிகள் செய்கின்றனர்.
இச்செடியைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் டீ தயாரிக்கின்றனர்.இதன் இளம் குருத்தை ஜப்பான் மற்றும் கொரியாவில் காய்கறியாகச் சமைக்கின்றனர்.இதில் வைட்டமின் A,E,C ஆகியனவும் உள்ளன. இது தோல் வியாதி, சிறுநீரகப் பிரச்சனை போன்றவற்றிற்கு நாட்டு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
உணவு     ஊட்டச்சத்துக்கள்
ஊட்டச்சத்து என்பது உடல்நலத்திற்கு இன்றியமையாதது. சரிவிகித உணவு உண்ணாமல், நல்ல ஆரோக்கியத்தைப் பெறமுடியாது. (போதுமான ஊட்டச்சத்து உடல்நலத்திற்கு அடிப்படையானது). எனவே "உடல்நலம் என்பது WHO-ன் படி, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. மேலும் நோய் மற்றும் முதிர்ச்சி இல்லாத தன்மையை குறிப்பது அல்ல
வரலாற்றுச் சிந்தனை  ஆண்டுகள்  முக்கிய நிகழ்வுகள்
1990  தேசிய பெண்கள் ஆணையச்சட்டம்
பாரத் ரத்னா விருது அம்பேத்காருக்கு வழங்கப்படுதல்
1992  சிறுபான்மையினர் தேசிய ஆணைசட்டம்
1993  பெண்களுக்கான தேசிய கடன் வழங்கும் நிதியகம்
தன்னம்பிக்கை கதை- அனைத்துமே புத்த போதனைக்கு சமமானவை தான்!!! பல்கலைக்கழக மாணவன் ஒருவன், கசன் என்கின்ற ஜென் துறவியை பார்க்கச் சென்றான். அப்போது அவரிடம் "நீங்கள் எப்போதாவது கிரிஸ்துவர் பைபிளைப் படித்ததுண்டா?" என்று கேட்டான். அதற்கு அந்த துறவியும் "இல்லை. எங்கே, அதை எனக்கு படித்து காட்டு" என்றார். அந்த மாணவனும் உடனே தன்னிடம் இருந்த பைபிளைத் திறந்து செயின்ட் மத்யு-வின் வாசகத்தை வாசித்தான். அந்த பைபிள் வாசகத்தில் ஒன்றான: "என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள். ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கும் போது நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?.... உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிகம் நிச்சயமல்லவா? ஆகையால் நாளைக்காக கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்." என்று படித்து முடித்தான். உடனே அந்த துறவி "எவனொருவன் இந்த வார்த்தைகளை கடைபிடிக்கிறானோ, அவன் பெரும் ஞானம் கொண்டவனாவான்" என்று கூறினார். மேலும் அந்த மாணவன் மறுமுறை அந்த பைபிளில் மற்றொரு வாக்கியத்தைப் படித்தான். அந்த வாசகம் என்னவென்றால் "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்." என்பதாகும். இந்த வாசகத்தைக் கேட்டதும் துறவி "அருமை. இதைத் தான் புத்த போதனையிலும் சொல்லப்படுகிறது. ஆகவே இந்த உலகில் எதுவும் புத்த போதனையை விட அப்பாற்பட்டது அல்ல. அனைத்தும் புத்த போதனைக்கு நெருங்கினவை தான்" என்று குறிப்பிட்டார்.
பார்ப்போம் பாடுவோம்/ பேசுவோம் -  ஔவையார் பேச்சு https://www.youtube.com/watch?v=uhCNCRHuA_U
இணையம் அறிவோம்  * ஆன்லைன் -ல் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் பயனுள்ள தளம். HTTP://WWW.CUTMYPIC.COM/

செயலி Avvai Noolgal

https://play.google.com/store/apps/details?id=com.Aathichudi.TamilBooks.prathap

No comments:

Post a Comment