அறிவுக்கு விருந்து – 14.11.2019 (வியாழன்)


அறிவுக்கு விருந்து – 14.11.2019 (வியாழன்)

லாற்றில் இன்று - நவம்பர் 14 (November 14) கிரிகோரியன் ஆண்டின் 318 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 319 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·  1579 – "கிறித்தவ சமயப் போதனை" என்ற நூல் போர்த்துக்கீசிய யூதர் என்றிக்கே என்றிக்கசினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
·  1751இரண்டாம் கர்நாடகப் போர்: பிரித்தானியா-பிரான்சுக்கிடையில் ஆற்காடு சண்டை முடிவுக்கு வந்தது.
·  1886பிரீட்ரிக் சொன்னெக்கென் என்பவர் முதல்தடவையாக காகித துளை கருவியை வடிவமைத்தார்.
·  1889நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.
·  1918செக்கோசிலோவாக்கியா குடியரசாகியது.
·  1922பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.
· 1940இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தில் கவெண்ட்ரி நகரம் செருமனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதமடைந்தது. கவெண்ட்ரி தேவாலயம் முற்றாக அழிந்தது.
·  1941இரண்டாம் உலகப் போர்: வானூர்தி தாங்கிக் கப்பல் ஆர்க் ரோயல் மூழ்கியது.

பிறப்புகள்

·  1650மூன்றாம் வில்லியம், இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து மன்னர் (. 1702)
·  1765ராபர்ட் ஃபுல்டன், நீராவிக் கப்பலைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர்
·  1840கிளாடு மோனெ, பிரான்சிய ஓவியர் (. 1926)
·  1889ஜவகர்லால் நேரு, இந்தியாவின் 1வது பிரதமர் (. 1964)
·  1891பீர்பால் சகானி, இந்திய தாவரவியலாளர் (. 1949)
·  1907ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென், சுவீடிய எழுத்தாளர் (. 2002)
·  1922தி. கோ. சீனிவாசன், தமிழக எழுத்தாளர், இதழாசிரியர், அரசியல்வாதி (. 1989)
·  1924பாறப்புறத்து, மலையாள சிறுகதை, புதின எழுத்தாளர் (. 1981)

இறப்புகள்

·  565முதலாம் ஜஸ்டினியன், பைசாந்தியப் பேரரசர் (பி. 482)
·  683முதலாம் யசீத், உமையா கலீபா (பி. 647)
·  1263அலெக்சாந்தர் நெவ்ஸ்கி, உருசியப் புனிதர் (பி. 1221)
·  1682ரைக்லாவ் வொன் கூன்சு, ஒல்லாந்தக் கிழக்கிந்தியப் பகுதி ஆளுநர் (பி. 1619)
·  1916சாகி, பிரித்தானிய சிறுகதை எழுத்தாளர் (பி. 1870)
·  1920சுபோத் சந்திர மல்லிக், இந்தியத் தொழிலதிபர், பல்லூடகவாதி (பி. 1879)
·  1716கோட்பிரீட் லைப்னிட்ஸ், செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1646)
·  1831எகல், செருமானிய மெய்யியலாளர் (பி. 1770)

சிறப்பு நாள்

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.
மு.வரதராசனார் உரை: குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.
Translation:  Kindness of men of stainless soul remember evermore!
Forsake thou never friends who were thy stay in sorrow sore!.
Explanation:  Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.
சிந்தனைக்கு     
மாற்றங்கள் என்ற ஒன்று இருக்கும் வரை மனிதர்கள் அனைவருமே சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இங்கு நிறம் மாறும் பச்சோந்திகள்…! மனம் மாறும் தந்திரர்கள்…!
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
பா
 பாட்டுகவிதை
பூ
 மலர்
பே
 நுரைஅழகுஅச்சம்
விடுகதை விடையுடன்
காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்? பலூன்
பழமொழி- தேளுக்கும் மணியம் கொடுத்தால் ஜாம ஜாமத்துக்குக் கொட்டும்.
பொருள்/Tamil Meaning தேள் போன்ற கொடியவர்களுக்கு அதிகாரம் கொடுத்தால் அவர்கள் அதை துஷ்பிரயோகம் செய்வார்கள்.
Transliteration Telukkum maniyam kotutthaal jaama jaamatthukkuk kottum.
தமிழ் விளக்கம்/Tamil Explanationஒரு ஊரின் தலையாய அதிகாரிக்கு மணியக்காரர் என்று பெயர். மணியம் என்பது ஊர், கோயில் முதலியவற்றில் மேல்விசாரணை செய்வதாகும்.
Enrich your   vocabulary
wonder ஆச்சரியப்படு, வியப்படை
woo கெஞ்சி அன்பை வேண்டு
word வார்த்தைகளால் விவரி, வார்த்தைகளில் எழுது
Proverb
Good Homer sometimes nods
ஆனைக்கும் அடி சறுக்கும்
Opposite Words 
Freeze X Boil
  • The water pipes have frozen.
  • We were advised to boil the water before drinking it.
Fresh X Stale
  • The beans are fresh from the garden.
  • French bread goes stale very quickly.
மொழிபெயர்ப்பு
கோகிலத்தண்டு
Lady's Finger/ Okra
வெண்டைக்காய்/ வெண்டிக்காய்
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + Y
நிகழ்த்தப்பட்ட கடைசி செயலை மீண்டும் செய்.
Ctrl + Z
கடைசி செயலை நீக்கு
இனிக்கும் கணிதம்      .. கால அளவு..
60 விநாடி = 1 விநாடி-நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
அறிவியல் அறிவோம்  எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு
அறிவியல் துளிகள்
ஐந்துலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் R.H.விட்டேக்கர்
தினம் ஒரு மூலிகை கழுதைப்பிட்டி அல்லது கழிமுள்ளி
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/63/Acanthus_ilicifolius.jpg/240px-Acanthus_ilicifolius.jpgகழுதைப்பிட்டி அல்லது கழிமுள்ளி (தாவரவியல்:Acanthus ilicifolius; ஆங்கிலம்: Holy Mangrove; சீனம்), கழுதைமுள்ளி என அழைக்கப்படும். இச்செடி, தமிழகத்தின் மூலிகைகளில் ஒன்றாகும்.மேலும், இது அலையாத்தித் தாவரங்கள் அல்லது கண்டல் தாவரங்களில் (mangrove) ஒன்றாகும். இது கடலின் கரையோரங்களில் உள்ளஉவர் சதுப்பு நிலங்களில் வளரும் தாவரம் ஆகும். இது தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்பதன் கீ்ழ் வரும், தாவரங்களில் ஒன்றாகும்.[2] இந்தியசீன பாரம்பரிய மருத்துவ முறைகளில் இது பயன்படுத்தப் படுகிறது.
 தாயகம் இலங்கையின் புங்குடு தீவில் இருக்கும் பகுதியானகழுதைப்பிட்டித் துறை என அறியப்படுகிறது. அதனால் தான் இதன் பெயரில் கழுதைப்பிட்டி என்ற அடைமொழி அமைகிறது.
இது இந்தியா, முதல் ஆத்திரேலியா வரை உள்ள பல நாட்டுக் கடற்கரையின், சதுப்பு நிலக் காடுகளில் காணப்படுகிறது. இலைகளின் விளிம்புகள் முட்களுடன் காணப்படும். அதிகப்படியான உப்பு, இலையின் வெளியில் தள்ளப்படுவதால், சில நேரங்களில் உடலின் மேற்பகுதி உப்புப் படர்ந்து காணப்படும். மூன்று மீட்டர் வரை வளரக்கூடியது. பூக்களின் இதழ் வெளிர் நீலமாக இருக்கும். ஒரு பெரிய பூவிதழை உடையது. பூக்கள் கொத்துகளாகக் காணப்படுகிறது. திசம்பர் முதல் மே மாதம் வரை பூக்கள் பூக்கின்றன. விதைப்பை வெடிக்கும் போது, விதைகள், இரண்டு மீட்டர் சென்று விழும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. தாவர இனப்பால்(sap) உப்புச் சுவை உடையதாக உள்ளது. மகரந்தச்சேர்க்கையானது, தச்சுத்தேனீக்களினால் (carpenter bees) பெரும்பாலும் நடக்கிறது. சில நேரங்களில் தேன்சிட்டுகளாலும் (sunbirds) நடக்கிறது. தாவரத்தின் மேற்புற பகுதிகள் இஞ்சியுடன் சேர்த்து பயன்படுத்தும் போது, கால்களில் ஏற்படும் புண்கள்மலச்சிக்கல் போன்றவை குணமாகின்றன. குழந்தை பிறத்தழின் போது, அது எளிதாக, சில சித்த மருத்துவர்கள், இந்த இலைச்சாற்றைக் குடிக்க கொடுக்கப்படுகிறது. பாம்பு கடிக்கும் பயன்படுத்தப்படுகிறது. அலங்காரத்தாவரமாக பலர் இதனை வளர்க்கிறார்கள்.
உணவு     ஊட்டச்சத்தும் உடல்நலமும்
உணவு என்பது நாம் உட்கொள்ளும் பொருள். இது உடலுக்குள் சென்று, உடலுக்கு தேவையான சக்தி மற்றும் வலிமையைத் தருகிறது. மேலும் உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. சத்துணவு கவனிப்பில் செவிலியரின் பங்கு மிக முக்கியமானது. ஏனெனில் அவள் தான் நோயாளியின் பராமரிப்பில் தொடர்ச்சியாக இருக்கிறாள். ஒரு செவிலியர், மருத்துவருக்கும், உணவைத் திட்டமிடுபவருக்கும் நடுவில் இருந்து பரிந்துரைக்கப்படும் உணவுகளை கொடுப்பதில் உதவ வேண்டும். ஒரு ஆசிரியரைப் போன்று சத்துணவு முறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.
உணவு பலவித சத்துப்பொருட்களாலானது (Nutrients). அவையாவன, கொழுப்பு, புரோட்டின், தாதுக்கள், உப்பு சத்துகள், வைட்டமின்கள் மற்றும் நீர்.
வரலாற்றுச் சிந்தனை  ஆண்டுகள்  முக்கிய நிகழ்வுகள்
1995 . நா. சபை பொன்விழா
1997  பாலிகா சம்ரிதி யோஜனா
1998  சுவ சக்தி திட்டம்
தன்னம்பிக்கை கதை- கோபத்தை அடக்குவது எப்படி?
ஜென் குரு பங்கேயின் மாணவன் ஒருமுறை அவரிடம் வந்து "மாஸ்டர், எனக்கு அடக்க முடியாத கோபம் வருகிறது. இதை எப்படி குணப்படுத்துவது?" என்று கேட்டான். அப்படியெனில் "ஏதோ ஒன்று உன்னை பயங்கரமாக ஆட்டி வைக்கிறது. சரி, இப்பொழுது அந்த அடக்க முடியாத கோபத்தை காட்டு" என்று சொன்னார். அதற்கு மாணவன் "அதை இப்பொழுதெல்லாம் காட்ட முடியாது" என்றான். "வேறு எப்பொழுது காட்ட முடியும்?" என்று குருவும் கேட்டார். அதற்கு அவன் "அது எதிர்பாராத நேரத்தில் தான் வருகிறது" என்றான். அப்போது குரு "அப்படியென்றால் அது உன்னுடைய சொந்த இயல்பாக இருக்க முடியாது. அவ்வாறு உனக்கு சொந்தமானதாக இருந்தால், நீ எந்த நேரத்திலும் எனக்கு அதை காண்பித்திருப்பாய். நீ பிறக்கும் போது அதை கொண்டு வரவில்லை, உன் பெற்றோரும் உனக்கு அதை கொடுக்கவில்லை. அப்படியிருக்க உனக்கு சொந்தமில்லாத ஒன்றை ஏன் உன்னுள் வைத்துள்ளாய் என்று யோசித்து பார். பின் உனக்கே புரியும்" என்று சொன்னார்.
பார்ப்போம் பாடுவோம்/ பேசுவோம் -  ஔவையார்  பாடல்கள் 
இணையம் அறிவோம்  தமிழில் கணினி செய்திகள்
செயலி Avvai Noolgal

https://play.google.com/store/apps/details?id=com.softecks.aathichoodi

No comments:

Post a Comment