அறிவுக்கு விருந்து – 15.11.2019 (வெள்ளி )


அறிவுக்கு விருந்து – 15.11.2019 (வெள்ளி )

லாற்றில் இன்று - நவம்பர் 15 (November 15) கிரிகோரியன் ஆண்டின் 319 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 320 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·  565மூன்றாம் யசுட்டின் பைசாந்தியப் பேரரசராக தனது மாமா முதலாம் யசுட்டினியனுக்குப்ப் பின்னர் முடிசூடினார்.
·  1505போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்சு டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
·  1532பிரான்சிஸ்கோ பிசாரோயின் தலைமையில் எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர்கள் இன்காத் தலைவர் அத்தகுவால்பாவை முதல் தடவையாகச் சந்தித்தனர்.
·  1705சிபோ நகர சமரில் ஆத்திரிய-டென்மார்க்குப் படைகள் அங்கேரியர்களை வென்றன.
·  1791முதலாவது அமெரிக்கக் கத்தோலிக்கக் கல்லூரி ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.
·  1915வின்ஸ்டன் சர்ச்சில் லிபரல் அரசில் இருந்து பதவி விலகி, மேற்கு முன்னணியின் 6-வது படைப் பிரிவில் இணைந்தார்.
·  1920உலக நாடுகள் சங்கத்தின் முதலாவது அமர்வு ஜெனீவாவின் இடம்பெற்றது.

பிறப்புகள்

·  1738வில்லியம் எர்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர், இசையமைப்பாளர்
·  1849மேரி எம்மா பிருடு, அமெரிக்க வானியலாளர் (. 1934)
·  1875பிர்சா முண்டா, இந்தியப் புரட்சியாளர், விடுதலைப் போராட்டப் போராளி (. 1900)
·  1877அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், கருநாடக இசைக் கலைஞர் (. 1945)
·  1885கிஜூபாய் பதேக்கா, இந்தியக் கல்வியாளர் (. 1939)
·  1887ஜோர்ஜியா 'கீஃப், அமெரிக்க ஓவியர் (. 1986)
·  1891இர்வின் ரோமெல், செருமானிய இராணுவ அதிகாரி (. 1944)

இறப்புகள்

·  1280பெரிய ஆல்பர்ட், செருமானிய இறையியலாளர், மெய்யியலாலர் (பி. 1193)
·  1630யோகான்னசு கெப்லர், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1571)
·  1856மதுசூதன் குப்தா, இந்திய மருத்துவர் (பி. 1800)
·  1908டோவாகர் சிக்சி, சீனப் பேரரசி (பி. 1835)
·  1917எமில் டேர்க்கேம், பிரான்சிய சமூகவியலாளர், மெய்யியலாளர் (பி. 1858)
·  1937ஜெய்சங்கர் பிரசாத், இந்திய எழுத்தாளர் (பி. 1889

சிறப்பு நாள்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.
மு.வரதராசனார் உரை:தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
Translation: Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise.
Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes.
Explanation: (The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.
சிந்தனைக்கு    காணாமல் போனவர்களை தேடலாம் அதில் சிறிதும் தவறு இல்லை. ஆனால் கண்டும் காணாமல் போனவர்களை மட்டும் நீ தேடி விடாதே. உன் தேடல்களில் அவர்கள் இல்லை என்று நினைத்துக்கொள்.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை 

போ -----> செல் 

 ----->  சந்திரன், எமன் 

விடுகதை விடையுடன்
பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்?கிளி
பழமொழி- ஏற்றப் பாட்டிற்கு எதிர்ப் பாட்டில்லை.
பொருள்/Tamil Meaning ஏற்றம் இறைப்பவன் பாடும் பாடலை எதிரொலிப்பவர்களோ அல்லது எதிராகப் பாடுபர்வகளோ கிடையாது.
Transliteration Errap pattirku etirp paattillai.
தமிழ் விளக்கம்/Tamil Explanationஏற்றக்காரனின் பாட்டு அவன் மனம்போனபடி சிறுசிறு சொற்றொடர்களில் இருக்கும். அதற்கு பதில் அளித்து உடனே பாடுவது முடியாது. உதாரணத்துக்கு ஒரு ஏற்றப்பாட்டு (கம்பர் கேட்டது):மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரே தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே. தன் செயலுக்கு விமரிசனங்கள் கூடாது என்று சொல்லுபனுக்கு இந்த பழமொழி உதாரணம் காட்டப்படுகிறது.
Enrich your   vocabulary
work  வேலை செய், இயக்கு, உண்டாக்கு, விடை காண், பயன் விளை
worry தொந்தரவு கொடு, கவலைப்படு
worsen  மோசமான நிலை அடை
Proverb
Procrastination is the thief of time
இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்
Opposite Words 
Friend X Enemy
  • Don’t worry, you’re among friends.
  • Cats and dogs have always been natural enemies.
Frown X Smile
  • She frowned as she read the letter.
  • Mark read the message and smiled to himself.
மொழிபெயர்ப்பு
லீக்ஸ்
இலைக்கோசு
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + Shift + L
எளிதில் புல்லட் பாய்ண்ட் கிரேட் செய்ய.
Ctrl + Shift + F
பாண்ட் சைஸ் மாற்ற
இனிக்கும் கணிதம்      .. கால அளவு..
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
அறிவியல் அறிவோம்
எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
அறிவியல் துளிகள்
HIV வைரஸை கண்டுபிடித்தவர்-  இராபர்ட் கேலோ
தினம் ஒரு மூலிகை கனோடெர்மா
Ganoderma lucidum 01.jpgகனோடெர்மா என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனாஜப்பான்கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கனோடெர்மா லூசிடம் (Ganoderma Lucidum) எனும் தாவரவியற் பெயரின் மூலம் அழைக்கப்படும் இந்த மூலிகையானது ஜப்பானியர்களால் ரிஷி (Reishi) என்றும் சீனமக்களால் லிங்சி(LingZhi) என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. லிங்சி எனும் சீன வார்த்தை நீண்ட ஆயுளைக்குறிப்பதாகும். இம்மூலிகையானது உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தருகின்றது. கனோடெர்மாவில் 200 வகையான மருத்துவ சக்தி வாய்ந்த மூலக்கூறுகள் அமைந்துள்ளன. இது மூலிகைகளின் அரசன் எனவும் அழைக்கப்படும்.
·         சிறந்த ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தருகின்றது.
·         உடலின் சக்தியை அதிகரிக்கக்கூடியது.
·         உடலில் தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுப்பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றும்.
·         குருதியினால் கொண்டு செல்லப்படும் ஒட்சிசனின் அளவைக் கூட்டுவதனால் உடற்கலங்களினால் உறிஞ்சப்படும் ஒட்சிசனின் அளவையும் அதிகரிக்கும்.
·         உடற்சமநிலையைப் பேணவல்லது.
உணவு     ஊட்டசத்து மதிப்பீட்டைப் பொறுத்து உணவை வகைப்படுத்துதல்
* தானியங்கள் மற்றும் நெல் அல்லாத தானிய வகைகள்
* லெகியூம்கள் (legumes) ) பருப்பு வகைகள்
* எண்ணெய் வித்துக்கள்
* காய்கறிகள்
* கீரைகள்
* கிழங்குகள்
* மற்ற காய்கறி வகைகள்

வரலாற்றுச் சிந்தனை  வரலாற்று அறிஞர்கள் அறிவோம்: ஜவஹர்லால் நேரு

இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியாகவும், அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவராகவும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான "நவீன இந்தியாவின் சிற்பி" பாரத ரத்னா ஜவகர்லால் நேரு
பிறப்பு: 14.11.1889 அன்று உத்திரப் பிரதேச மாநிலம்  (அலகாபாத் ஆனந்தபவன்)
இறப்பு: 27.05.1964
பெற்றோர்: மோதிலால் நேரு - சொரூபராணி
தன்னம்பிக்கை கதை- கோபத்தை அடக்குவது எப்படி?
ஆனந்தபுரி என்ற கிராமத்தில் ஆண்டியப்பன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்தான். அவனுக்கு மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். மூத்த பெண் திருமண வயதை எட்டி நின்றாள். ஆண்டியப்பன் கடும் உழைப்பாளி. ஆனால், கடுமையாக உழைத்தும் அவன் வீட்டில் வறுமை தலை விரித்து ஆடியது. அன்றும் வழக்கம் போல் வயலில் இருந்து வீடு திரும்பினான் ஆண்டியப்பன். சோகமாக தூணில் சாய்ந்தபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.
“”ஏனுங்க, ஒங்களைத்தானே கேட்கிறேன், என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று கேட்டாள் அவள் மனைவி ராசாத்தி, “”மூத்தவ திருமண வயதை தாண்டிவிட்டாள். அவளுக்கு மணம் முடித்து வைக்கணுமே. அதுக்கு பணம் வேண்டுமேநான் எங்கே போவது பணத்துக்கு? அதை நினைக்கிறப்ப தூக்கமே வரமாட்டேங்குதடி,” என்றான். “”இதுக்குப் போய் இப்படி இடிஞ்சு போனா எப்படி? எங்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு. ரொம்ப காலம் சேமித்து வச்சது,” என்றாள் அவள்.
சற்று நேரத்தில் சிறிய பானை ஒன்றுடன் திரும்பி வந்தாள். பானையில் இருந்த பணத்தை கணவன் முன் தரையில் கொட்டினாள். காலையில் உற்சாகத்துடன் எழுந்து ஆண்டியப்பன் மனைவியிடம் விடைபெற்றுக் கொண்டு வயலுக்கு புறப்பட்டான். வழக்கத்தை விட உற்சாகமாக வேலை செய்யும் ஆண்டியப்பனை வியப்புடன் பார்த்தனர் உடன் வேலை செய்பவர். மதிய உணவுக்குப் பிறகு அனைவரும் வயல் ஓரம் மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். “”அண்ணே, நேத்து ராத்திரி பக்கத்து கிராமத்திலே கொள்ளைக்காரங்க புகுந்து கொள்ளை அடிச்சிட்டாங்க,” அதைக் கேட்டு அனைவரும் திடுக்கிட்டனர்.
ஆண்டியப்பன் சற்று கூடுதலாகவே திடுக்கிட்டான். “”அய்யய்யோ! மகள் திருமணதுக்கு வைத்திருக்கும் பணத்தை படுபாவிங்க கொள்ளையடிச்சா என்ன செய்வேன்,” என்று தனக்குள் பதட்டத்துடன் கூறினான் ஆண்டியப்பன். மாலையில் வீடு திரும்பிய ஆண்டியப்பன் கவலையுடன் இருப்பதைக் கண்டு மனைவி திடுக்கிட்டாள். “”ஏனுங்க, என்னங்க ஆச்சு. ஏனிப்படி பேயறைஞ்சாப்ல இருக்கீங்க?” என்று கேட்டாள் ராசாத்தி. “”அடியே நேத்திக்கு பக்கத்து கிராமத்துல கொள்ளைக்காரங்க புகுந்து ஏகப்பட்ட பொருட்களை கொள்ளை அடிச்சாங்களாம்!” என்றான். மனைவி பயத்தால் வாய் பொத்தி நின்று தேம்பி அழுதாள்.
சற்று நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. இருவரும் பயந்து நடுங்கினர். மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவன் எதுவும் பேசவில்லை. மீண்டும் மீண்டும் கதவு தட்டப்பட்டது. “”என்னங்க உள்ளே யாரும் இல்லையா?” என்றது ஒரு குரல். மீண்டும் மீண்டும் அதே கேள்வி எழுந்தது. வருவது வரட்டும் என்று, “”யாருங்க அது?” என்று நடுக்கத்துடன் கேட்டான் ஆண்டியப்பன். “”நான் ஒரு வியாபாரி, இந்தப் பக்கம் வந்த போது இரவு ஆயிடுச்சு. அதனால இரவு இங்கே தங்கிவிடலாம்னு தான் வந்திருக்கிறேன்,” என்றது அந்த குரல். சற்று நேரத்தில் கதவு திறந்து, உடல் நடுங்கியபடி வெளியே எட்டிப் பார்த்தான் ஆண்டியப்பன்.
“”நீங்க ஏங்க இப்படி பயப்படுறீங்க?” என்று கேட்டான் வியாபாரி.
“”ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல,” என்றான் ஆண்டியப்பன். இருவருக்கும் உணவு வழங்கினாள் ராசாத்தி. இருவரும் ஊர் கதை பேசிக் கொண்டே உணவு சாப்பிட்டனர். “”நீங்கள் பயப்படுறாப்ல இருக்கேஎன்ன காரணம்?” என்றான் வியாபாரி.
இனிமேல் இவரிடம் எதையும் மறைக்கத் தேவையில்லை என்று முடிவு செய்த ஆண்டியப்பன், “”அய்யா, ஊரெல்லாம் ஒரே திருட்டு பயம். பக்கத்து கிராமத்தைக் கூட கொள்ளையர்கள் கொள்ளை அடிச்சுட்டாங்க. என் மகளோட கல்யாணத்துக்காக கொஞ்சம் பணம் வைத்திருக்கிறேன். அதை கொள்ளைக்காரங்க கொள்ளை அடிச்சுக்கிட்டு போயிடுவாங்களோன்னு பயமாயிருக்குங்க,” என்றான். அதைக் கேட்ட வியாபாரியும் பயந்து நடுங்கினான். “”அப்படியா! அய்யய்யோ! அவனுங்க இங்கே வந்துட்டா என்ன பண்றது? ஆமா, நீங்க எவ்வளவு பணம் வைத்து இருக்கிறீர்கள்?” என்றான் வியாபாரி.
“”ஆயிரம் பணம்,” என்றான் ஆண்டியப்பன். வியாபாரி சற்று நேரம் யோசித்த பிறகு, “”நான் ஒரு யோசனை சொல்கிறேன்,” என்றான் வியாபாரி. “”சீக்கிரம் சொல்லுங்க,” என்று ஆவலுடன் கேட்டான் ஆண்டியப்பன். “”முற்றத்தில் ஒரு குழி தோண்டி பணத்தை அதில் புதைத்து விடுவோம். பிறகு கொள்ளைக்காரர்களால் கண்டுபிடிக்க முடியாது,” என்றான் வியாபாரி. “”நல்ல யோசனை, அப்படியே அந்த பணத்தை எடுத்துகிட்டு வா,” என்று மனைவியை பார்த்து கூறினான் ஆண்டியப்பன். பணப் பானையுடன் வந்தாள் ராசாத்தி.
ஆண்டியப்பன் வீட்டு முற்றத்தில் ஒரு குழி தோண்டி பானையை அதற்குள் வைத்து மண் போட்டு மூடினான். ஆண்டியப்பனுக்கு கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது. ராசாத்தியும் மகிழ்ச்சி அடைந்தாள். அனைவரும் படுத்தனர். சற்று நேரத்தில் குதிரைகள் பாய்ந்து வரும் ஓசை அவர்களை நடுங்க வைத்தது.
குதிரைகள் வீட்டு முற்றத்திற்குள் புகுந்தன. வியாபாரியும், ஆண்டியப்பனும், மனைவியும், குழந்தைகளும் பயந்து நடுங்கினர். குதிரை மீது அமர்ந்து இருந்த கொள்ளையர்கள் பலமாக கதவை தட்டினர். உள்ளிருந்த யாரும் பேசவில்லை. ஆத்திரம் கொண்ட கொள்ளையர்கள் கதவை உதைத்து உடைத்தனர். “”வெளியே வாங்கடா கழுதைகளே…” கொள்ளைத் தலைவன் கத்தினான். அவர்கள் கைகளில் வாள்கள் மின்னுவதை கண்டு அனைவரும் நடுங்கினர்.
கொள்ளைத் தலைவன் ஒவ்வொருவராக வெளியே இழுத்துப் போட்டான், “”எடுடா பணத்தை,” என்று அலறினான். “”எங்கிட்ட என்று அழுது கொண்டே சொன்னான் ஆண்டியப்பன், கொள்ளையன் தன்னிடம் இருந்த சவுக்கால் ஆண்டியப்பனை ஓங்கி அடித்தான். “”உம்சொல்லுடா எங்க வச்சிருக்கே பணத்தை?” அடிபட்ட ஆண்டியப்பன் கொள்ளையனின் கால்களை பற்றி அழுதான். அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த அவன் தன் கால்களால் ஆண்டியப்பனை உதைத்தான். அப்போது வியாபாரி முன் வந்து, “”அடிக்காதீங்க, நான் சொல்றேன்,” என்றான். கொள்ளையன் வியாபாரியை முறைத்துப் பார்த்தான். “”இந்த முற்றத்தில் குழி தோண்டி புதைத்து இருக்கிறான்,” என்றான் வியாபாரி ஆண்டியப்பனும், மனைவியும் பரிதாபத்துடன் வியாபாரியை பார்த்தனர். கொள்ளையர்கள் குழிக்குள் மறைத்து வைத்திருந்த பானையை தோண்டி எடுத்தனர்.
பிறகு பணத்துடன் அங்கிருந்து பாய்ந்து சென்றனர். இந்த வியாபாரியும் கொள்ளையர்களின் ஆள் என்று முடிவு செய்தான் ஆண்டியப்பன். “”இவன் பேச்சைக் கேட்டு ஏமாந்து விட்டேனே. மகள் திருமணத்திற்கு வைத்திருந்த பணத்தை பறிகொடுத்து விட்டேனே,” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதான் ஆண்டியப்பன். ஆண்டியப்பன் வியாபாரி முன் நின்ற அழுதபடி கத்தினான். “”அடே பாவிஉம் பேச்சைக் கேட்டு பணத்தை பறி கொடுத்துட்டேனேநீ நல்லா இருப்பியா?” என ஆண்டியப்பன் போட்ட கூச்சல் கிராமத்தை உலுக்கியது. மக்கள் அனைவரும் ஆண்டியப்பன் வீட்டுக்கு விரைந்தனர்.
கிராம மக்களை கண்ட ஆண்டியப்பன் நடந்ததை சொன்னான். “”ஏம்பா, உனக்கு இரவில் உணவு தந்து, தங்க இடம் தந்த ஒரு வரை இப்படியா காட்டிக் கொடுப்பது?” என்று ஒருவர் ஆத்திரத்துடன் கேட்டார். மக்கள் அனைவரும் வியாபாரி மீது கடும் கோபத்தில் இருந்தனர். கொள்ளையர்கள் மீது இருந்த கோபத்தை வியாபாரி மீது காட்டுவதற்காக மக்கள் துடித்தனர். இன்னும் சிறிது நேரத்தில் கிராம மக்கள் தன் மீது பாய்ந்து தாக்கிவிடக் கூடும் என்று உணர்ந்த வியாபாரி, “”அய்யா, நான் சொல்றதை கேட்டு விட்டு தீர்ப்பு கூறுங்கள்,” என்றான்.
அனைவரும் அவனை உற்றுப் பார்த்தனர். அவன் தன்னிடம் இருந்த கோணிப் பையை அவிழ்த்தான். அதற்குள் ஏகப்பட்ட பணம்! “”இதுக்குள் பத்தாயிரம் பணம் உண்டு. கொள்ளையர்கள் கேவலம் ஆயிரம் பணம் தான் எடுத்துச் சென்றனர். அந்த ஆயிரத்தை காட்டிக் கொடுத்து பத்தாயிரத்தை பாதுகாத்தேன்,” என்றான் வியாபாரி. அதைக் கேட்ட ஆண்டியப்பன், “”அய்யா, உன் பணத்தை காப்பாத்திட்டிங்கஆனா என் மக கல்யாணத்துக்கு வச்சிருந்த பணம் போயிடுச்சே,” என்று அழுதான். “”அய்யா, நான் நன்றி கெட்டவன் அல்ல. என் பத்தாயிரத்தை காப்பாற்றிய உங்களை நான் காப்பாற்ற மாட்டேனா,” என்று கூறியபடி ஆயிரத்து ஐநூறு பணத்தை ஆண்டியப்பனிடம் கொடுத்தான் வியாபாரி. அங்கு கூடியிருந்தவர்கள் வியாபாரியின் புத்திசாலிதனத்தை பாராட்டினர்.
குட்டீஸ்களேஎதிர்பாராமல் நடைபெறும் ஆபத்தை புத்திசாலித்தனமாக சமாளிக்கலாம். அப்படி புத்தியால் எந்த ஆபத்தையும் வெல்ல முடியும் என்பதை பார்த்தீர்களா? எனவே, நீங்களும் புத்திசாலித்தனமாக இருங்கள்
 பார்ப்போம் பாடுவோம்/ பேசுவோம் -  ஔவையார்  பாடல்கள் 
இணையம் அறிவோம் 
செயலி Avvai Noolgal

https://play.google.com/store/apps/details?id=nithra.tamil.aavaiyar.aathichudi

தொகுப்பு

No comments:

Post a Comment