அறிவுக்கு விருந்து – 11.11.2019 (திங்கள்)


அறிவுக்கு விருந்து – 11.11.2019 (திங்கள்)

வரலாற்றில் இன்று - நவம்பர் 11 (November 11) கிரிகோரியன் ஆண்டின் 315 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 316 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·  1100இங்கிலாந்து மன்னர் முதலாம் என்றி இசுக்காட்லாந்தின் மன்னர் மூன்றாம் மால்க்கத்தின் மகள் மெட்டில்டாவை திருமணம் செய்தார்.
·  1028பைசாந்தியப் பேரரசர் எட்டாம் கான்ஸ்டன்டைன் 66 கால ஆட்சியின் பின்னர் இறந்தார்.
·  1500பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் அராகனின் இரண்டாம் பேர்டினண்ட் மன்னனுக்கும் இடையில் நாபொலி பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது.
·  1572டைக்கோ பிராகி எசுஎன் 1572 என்ற மீயொளிர் விண்மீன் வெடிப்பை அவதானித்தார்.
·  1673உக்ரைனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து-இலித்துவேனியப் படைகள் உதுமானிய இராணுவத்தைத் தோற்கடித்தன.
·  1675குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் 10வது குருவாகப் பொறுப்பேற்றார்.
· 1778அமெரிக்கப் புரட்சிப் போர்: மத்திய நியூயார்க்கில் செனெக்கா இந்தியர்கள் குடியேறிகள், படையினர் உட்பட 40 பேரைக் கொன்றனர்.
·  1813பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: கிறிசுலர் பண்ணையில் இடம்பெற்ற போரில், பிரித்தானிய, கனடியப் படைகள் அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.

பிறப்புகள்

·  1821பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, உருசிய எழுத்தாளர் (. 1881)
·  1847பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ், பிரித்தானியக் கட்டிடக் கலைஞர் (. 1900)
·  1875வெசுட்டோ மெல்வின் சுலிப்பர், அமெரிக்க வானியலாளர் (. 1969)
·1885அனுசுயா சாராபாய், இந்தியாவின் பெண்கள் தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடி (. 1972)
·  1888அபுல் கலாம் ஆசாத், இந்திய அரசியல்வாதி (. 1958)
·  1888ஆச்சார்ய கிருபளானி, இந்திய அரசியல்வாதி (. 1982)
·  1899கி. . பெ. விசுவநாதம், தமிழறிஞர் (. 1994)
·  1908பி. எஸ். பாலிகா, இந்திய எழுத்தாளர், பதிப்பாளர் (. 1958)

இறப்புகள்

·  1831நாட் டர்னர், அமெரிக்கக் கிளர்ச்சித் தலைவர் (பி. 1800)
·  1880லுக்ரிடியா மோட், அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1793)
·  1917லில்லியுகலானி, அவாய் அரசி (பி. 1838)

சிறப்பு நாள்

·  விடுதலை நாள் (அங்கோலா, போர்த்துகலிடம் இருந்து 1975)
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை: என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.
மு.வரதராசனார் உரை:இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.
Translation: Kindness shown by those who weigh not what the return may be:
When you ponder right its merit, 'Tis vaster than the sea.
Explanation: If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.
சிந்தனைக்கு     
பிரச்னை என்பது நீயே உனக்கான வலையை விரித்து மாட்டி கொள்ளும் செயல் போலவே அனுமதியில்லாமல் வருவது இல்லை. உனக்கான ஆபத்தை நீயே தேடி கொள்கிறாய்
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
பைபசுமை
போசெல்
நாநாக்கு
விடுகதை விடையுடன்
தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்?  பனம்பழம்
பழமொழி- எந்தக் குழந்தையும் தன் ஆசிரியரை எப்போதும் புகழ்ந்து பேசுவதில்லை.
Transliteration Vaatthiyaarai mecchina pillai illai.
தமிழ் விளக்கம்/Tamil Explanation வாத்தியார் பிள்ளையை மெச்சுவது உண்டு. ஆனால் பிள்ளைக்கு வாத்தியார்மேல் எதாவது குறை இருக்கும். அதுபோல எந்த வேலைக்காரனுக்கும் தன் யஜமானர்மேல் குறை இருக்கும்.
Enrich your   vocabulary
wish  விரும்பு , வாழ்த்துக் கூறு
wistle  சீழ்க்கை அடி
withdraw  பின்வாங்கு, திரும்ப எடு
Proverb
A sound mind in a sound body
உடல் வலுவுற்றால், உள்ளம் வலுவுறும்
Opposite Words 
Forget X Remember
  • What happened that day will never be forgotten.
  • I remember meeting her at a party once.
Forgivable X Unforgivable
  • It was an easily forgivable mistake.
  • Patrick had deceived her, and that was unforgivable.
மொழிபெயர்ப்பு
மெல்லிய அவரை
முருக்கங்காய்/ முருங்கைக்காய்
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + S
திறந்த ஆவணத்தை சேமிக்கவும். Shift + F12 போன்றது
Ctrl + T
ஒரு தொங்கும் இடைவெளியை உருவாக்கவும் பயன்படுகிறது .
இனிக்கும் கணிதம்      ..பெய்தல் அளவு..
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
அறிவியல் அறிவோம்   சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி  -   -SO3- Na+
அறிவியல் துளிகள்
பாக்டீரியாவை கண்டு பிடித்தவர் - ஆண்டன் வான் லூவன்ஹாக்
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/be/Aesthetic_bunch_of_fenugreek_greens.jpg/220px-Aesthetic_bunch_of_fenugreek_greens.jpgதினம் ஒரு மூலிகை வெந்தயக் கீரை
வெந்தயம் (தாவர வகைப்பாடு :Trigonella foenum-graecumஆங்கிலம்: Fenugreek; இந்தி: மேதி) என்பது Fabaceae குடும்ப மூலிகை. இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி கீரையாகவும் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.  வெந்தயக் கீரை என்பது கீரைகளில் ஒன்றாகும். வெந்தயக் கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம், விட்டமின்கள் போன்றவை மிகுதியாக உள்ளன. உடலை வல்லமையாக்கி, தோல் நோய்களைப் போக்கி, சூட்டைத் தணித்து, ரத்தத்தைப் பெருக்கி ஆரோக்கிய ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளமாகத் திகழ்வது வெந்தயக் கீரை என கூறப்படுகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் –   உள்நாட்டு/வெளிநாட்டு பழங்கள்
பருவத்திற்கு ஏற்ப உள்நாட்டு பழங்கள் (fruits benefits) வந்தாலும், வெளிநாட்டு பழங்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கின்றது என்று பழ வியாபாரிகள் பலர் கூறுகின்றனர். இருப்பினும் நாம் நாட்டில் விளையும் பழங்களில் அதிக சத்துக்கள் உள்ளதா அல்லது வெளிநாடுகளில் (foreign fruits) விளையும் பழங்களில் சத்துக்கள் அதிகம் உள்ளதா என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.
சிம்லா, காஷ்மீர் என உள்நாட்டு ஆப்பிள் பழங்கள் (fruits benefits) இருந்தாலும், வாஷிங்டன் ஆப்பிளுக்கு கிராக்கி அதிகம். ஆஸ்திரேலியா மற்றும் கலிஃபோர்னியாவில் இருந்து வரும் திராட்சைப் பழம் சில்லறை வியாபாரிகளிடம் சுமார் ரூ.300க்கு கிடைக்கும்.
வரலாற்றுச் சிந்தனை  ஆண்டுகள்  முக்கிய நிகழ்வுகள்
1971  மருத்துவ ரீதியான கருக்கலைப்பு சட்டம்
1976  சம ஊதியச்சட்டம்
1989  தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் சட்டம்
தன்னம்பிக்கை கதை- நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!!
ஒரு பெரிய மடாலயத்தில் சீடர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கையில் ஒரு வாக்குவாதம் எழுந்தது. அது என்னவென்றால், "திருடனாக இருப்பவனுக்கு எப்போதும் கெட்டது தான் நடக்கும்" என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் "இல்லை, நல்லதும் நடக்கும்" என்றும் வாதாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது குரலைக் கேட்டு வந்த ஜென் மாஸ்டர், என்ன பிரச்சனை என்று கேட்டார். அதற்கு அவர்கள் அந்த வாக்குவாதத்தை கூறினர். ஆகவே அதில் உள்ள உண்மையை புரிய வைப்பதற்கு, அவர்களுக்கு ஒரு கதையைக் கூற ஆரம்பித்தார். அது என்னவென்றால், "ஜென்கை என்பவன் ஒரு சாமுராய் மகன். அவன் 'எடோ' என்ற இடத்திற்கு பயணித்தார். அங்கு ஒரு உயர் அதிகாரியிடம் பணியாளாக சேர்ந்து, அவரின் மனைவியை காதலித்து, மேலும் தற்காப்பிற்காக, அந்த அதிகாரியின் பெருந்தொகையை எடுத்துக் கொண்டு, அவருடைய மனைவியுடன் ஓடிவிட்டான். பின்னர், இருவரும் நன்கு சந்தோஷமாக வாழ்வதற்கு திருடர்களாக மாறினர். ஆனால் அந்த பெண், ஜென்கையின் நடவடிக்கைகளை கண்டு வெறுப்படைந்தாள். அதனால் அவள் அவனை விட்டு சென்று விட்டாள். ஆகவே மனமுடைந்த அவன் 'பூசன்' என்ற மாகாணத்தில் பிச்சைக்காரனாக இருந்தான். மேலும் அவனது கடந்த காலத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரமாக, ஜென்கை தனது வாழ்நாளில் சில நல்ல காரியங்களை சாதிக்க எண்ணினான். அப்போது ஒரு குன்றின் மீது ஓர் ஆபத்தான சாலை இருப்பதால், பல பேர் மரணம் மற்றும் காயம் அடைகின்றனர் என்பதை தெரிந்து கொண்டு, அங்கு அந்த மலை வழியாக ஒரு சுரங்கம் வெட்ட எண்ணினான். பகல் நேரங்களில் உணவுக்கு பிச்சை எடுப்பதும், இரவு வேளையில் சுரங்கம் தோண்டுவதை வேலையாகவும் செய்து வந்தான். முப்பது ஆண்டுகள் ஆயிற்று, சுரங்கப்பாதை 2.280 அடி நீளம், 20 அடி உயரம் மற்றும் 30 அடி அகலம் ஆனது. வேலை முடியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவன் பணியாளாக ஒரு அதிகாரியின் கீழ் வேலை செய்தான் அல்லவா, அவருடைய மகன் ஒரு திறமைமிக்க வாள்வீரன். அவன் ஜென்கையை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்று தேடி அலைந்து வந்தான். அப்பொழுது அந்த ஜென்கையும் அவன் கண்ணில் தென்பட்டார். அதனால் ஆத்திரமடைந்த அவன் "நான் உன்னை என் கைகளால் கொல்ல வேண்டும்" என்று கூறினான். அப்போது அந்த ஜென்கை "நீ என்னை தாராளமாக கொள்ளலாம், ஆனால் எனக்கு ஒரு ஆசை உள்ளது, அது என்னவெனில் இந்த சுரங்கத்தை முடித்ததும் நீ என்னை கொல்," என்று கூறினார். எனவே அந்த மகனும் அந்த நாளுக்காக காத்திருந்தான். பல மாதங்கள் கடந்தது. ஜென்கை மட்டும் தோண்டி கொண்டிருந்தான். எதுவும் செய்யாமல் இருந்ததால், அந்த வாள்வீரன் மிகவும் சோர்வடைந்தான். அதனால் அவனும் ஜென்கைக்கு உதவியாக சுரங்கம் தோண்ட ஆரம்பித்தான். ஓர் ஆண்டு காலம் ஆனதும், அந்த மகன் ஜென்கையின் வலிமையும் தன்னம்பிக்கையையும் கண்டு வியந்தான். கடைசியாக சுரங்கப்பாதை முடிந்தது. மக்களும் பாதுக்காப்பாக அந்த சுரங்கத்தில் பயணித்தனர். "இப்போது என் தலையை துண்டி, என் வேலை முடிந்தது" என்று ஜென்கை கூறினார். "எப்படி நான் என் சொந்த ஆசிரியர் தலையை துண்டிக்க முடியும்?" என்று கண்களில் இருந்து கண்ணீர் வழியக் கேட்டான்" என்று சொன்னார். பின் இறுதியில் ஜென் குரு சீடர்களிடம் "திருடனாக இருந்து, திருந்தியப் பின் நல்லதை நினைத்தால், அவனுக்கு நல்லதே நடக்கும்" என்று சொல்லி, உள்ளே சென்று விட்டார்.
பார்ப்போம் பாடுவோம் ஔவையார் பாடல்கள்

https://www.youtube.com/watch?v=vWOV6cI9IaE

இணையம் அறிவோம்  * கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி    http://www.rtiindia.org/forum/content/

செயலி Avvai Noolgal  https://play.google.com/store/apps/details?id=com.idl.avvai.noolgal

No comments:

Post a Comment