அறிவுக்கு விருந்து – 27.11.2019 (புதன்)


அறிவுக்கு விருந்து – 27.11.2019 (புதன்)


வரலாற்றில் இன்று - நவம்பர் 27 (November 27) கிரிகோரியன் ஆண்டின் 331 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 332 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·  25இலுவோயங் நகரம் ஆன் சீனாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
·602பைசாந்தியப் பேரரசர் மோரிசு அவரது கண் முன்னாலேயே அவரது மகன்கள் தூக்கிலிடப்பட்டதைக் கண்டார். அவரும் பின்னர் தூக்கிலிடப்பட்டார்.
·1703இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள உலகின் முதலாவது கலங்கரை விளக்கம் எடிசுட்டன் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமானது.
· 1830அன்னை மரியா உலக உருண்டை மேல் நின்று கொண்டு கத்தரீன் லபோரேக்குக் காட்சியளித்தார்.
·1895ஊர்ஃபா என்ற இடத்தில் 3,000 ஆர்மேனியர்கள் உதுமானியர்களால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
·1895பாரிசில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
·1912மொரோக்கோவின் வடக்குக் கரையை எசுப்பானியா தனது ஆளுகைக்குள் அறிவித்தது.
·1935கொழும்பு இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது வானூர்தி சென்னையில் இருந்து வந்திறங்கியது.
·1944இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தில் ஆங்கிலேய விமானப்படைத் தளத்தின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

·  1701ஆன்டர்சு செல்சியசு, சுவீடன் வானியலாளர், இயற்பியலாளர் (. 1744)
·  1888கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர், இந்திய அரசியல்வாதி (. 1956)
·  1899. பூவராகம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (. 1973)
·  1903லார்ஸ் ஒன்சாகர், நோபல் பரிசு பெற்ற நோர்வே-அமெரிக்க வேதியியலாளர் (. 1976)
·  1907ஹரிவன்சராய் பச்சன், இந்தியக் கவிஞர், நூலாசிரியர் (. 2003)
·  1911பே டெல் முண்டோ, பிலிப்பீனிய மருத்துவர் (. 2011)
·  1930பி. வி. வனஜா பாய், இந்திய சமூக செயற்பாட்டாளர் (. 2007)

இறப்புகள்

·  கிமு 8ஓராசு, உரோமைக் கவிஞர் (பி. கிமு 65)
·  1852அடா லவ்லேஸ், ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1815)
·  1875ரிச்சாட் கிறிஸ்தோபர் ஹரிங்டன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1826)
·  1950தி. சதாசிவ ஐயர், ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (பி. 1882)

சிறப்பு நாள்

 குறளறிவோம்-  114. நடுவு நிலைமை / Impartiality
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.
மு.வரதராசனார் உரை:நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
Translation: Who just or unjust lived shall soon appear:
By each one's offspring shall the truth be clear.
Explanation: The worthy and unworthy may be known by the existence or otherwise of good off-springs.
சிந்தனைக்கு    தவறை நீ செய்தால் ஒத்துக்கொள்விரைவில் சரி செய்து கொள்ளலாம்ஆனால் செய்த தவறை தவறே இல்லை என்று நிரூபிப்பவர்களை என்றுமே சரி செய்ய முடியாது
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
 -----> தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம் 

ளு  -----> நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம் 

விடுகதை விடையுடன்
ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் அந்த குகை எது?   வாய்
பழமொழி- கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.
பொருள்/Tamil Meaning கடல் வற்றிவிட்டால் மீன்களைப் பச்சையாகத் தின்னாமல், காயவைத்துத் தின்னலாமே என்று காத்திருந்த கொக்கு உடல் மெலிந்து செத்ததாம்.
Transliteration Katal varrik karuvatu tinnalam enru utal varrich cetthathaam kokku.
தமிழ் விளக்கம்/Tamil Explanationஒரு குளம் வற்றும் தருவாயில் இருந்தபோது அதில் இருந்த மீன்களை ஆசைகாட்டிப் பாறையில் உலர்த்தித் தின்ற கொக்கின் கதை நமக்குத் தெரியும். ’ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடியிருப்பதுகொக்கின் இயல்பே. ஆயினும் கடலில் மீன் பிடிக்கும்போது கொக்கு அவ்வாறு இருந்தால் என்ன ஆகும்? இப்போதுள்ள சிறிய அனுகூலங்களை, நாளை நடக்கும் என்று நாம் நம்பும் நிச்சயமில்லாத பெரிய வாய்ப்பினை எதிர்பார்த்து நழுவவிடுவது கூடாது என்பது செய்தி.
Enrich your   vocabulary
whiten வெண்மை ( ஆக்கு )
whitewash வெள்ளையடி
whittle சிறு துண்டுகளாக நறுக்கு

Proverb A chain is only as strong as its weakest link.

One weak part will render the whole weak.
Example: No matter how confident the team is, it is as strong as its weakest link – its defence.

Opposite Words 

Heaven X Hell
  • He believed that he and his wife would one day be together again in heaven.
  • She must have gone through hell every day, the way we teased her about her weight.
Here X There
  • What are you doing here?
  • We could go back to my cottage and have lunch there.
மொழிபெயர்ப்பு
கறி வாழை
உருளைக்கிழங்கு
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + 2
டபுள் லைன் கொடுக்க.
Ctrl + Alt + 1
ஹெட்டிங்1 டெக்ஸ்ட் மாற்ற 
இனிக்கும் கணிதம்      .. நீ பொன்நிறுத்தல்..
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
அறிவியல் அறிவோம்
*நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து இறுத்தல்
ஹைட்ரோகுளோரிக் அம்லம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது - சோடியம் ஹைட்ராக்சைடு
தினம் ஒரு மூலிகை சங்கம் குப்பி சங்கம் குப்பி (CLERODENDRON INERME) இது லேமேசிஸ் (Lamiaceae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவர இனம் ஆகும். இவை ஆஸ்திரேலியாமலேசியாஆசியாபசிபிக் தீவுகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.இது மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது.
உணவு     மனிதனின் ஆற்றல் சிதைவுறுதலைப் பாதிக்கும் காரணிகள்

கார்போஹைடிரேட்டுகள்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எளிய சர்க்கரைகள் ஒன்றுசேர்ந்து உண்டாகிறது
வகைகள்
மோனோசாக்கரைடுகள் (monosaccharides)
டை சாக்கரைடுகள் (Disaccharides)
பாலிசாக்கரைடுகள் (Polysaccharides)
வரலாற்றுச் சிந்தனை  வரலாற்று அறிஞர்கள் அறிவோம்: ஜவஹர்லால் நேரு
விடுதலை போராட்டத்தில் நேரு:
1940 -இல் தனிநபர் சத்யாகிரகத்தின் பொது ஆச்சார்ய வினோபாபாவேவிற்கு அடுத்து இரண்டாவதாக கைது செய்யப்பட்டார்.
தனது சயசரிதையை "AN Autobiography" என்ற தலைப்பில் எழுதினார். (Toward Freedom என்ற பெயராலும் இந்நூல் அறியப்படுகிறது).
1945 - ஜூன் 15 ஆம் தேதி நேரு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக கைது செய்யப்பட்டார்.

தன்னம்பிக்கை கதை- தக தக தங்க குதிரை

இராமநாதன் காந்தார நாட்டில் கற்சிலை அரசரிடம் விடை பெற்று பட்டு தேசத்தை நோக்கி தன் தேரில் விரைந்தார்.  கற்சிலை மன்னரிடம் பேசிய போது அவர், மந்திரவாதி பல முறை தன் முன்னால் தோன்றிய போது தன்னை மதிக்காத பட்டு தேசத்தையும் தான் பழி வாங்கியதாக சொன்னதாக இராமநாதன் தெரிந்து கொண்டார், ஆக பட்டு தேசம் சென்றால் மந்திரவாதி பற்றிய தகவல்கள் கட்டாயம் கிடைக்கும், மந்திரவாதியை வென்று காந்தார நாட்டிற்கு உதவ வேண்டும் என்று நினைத்தார்.
பட்டு தேசத்தை பற்றி ஏற்கனவே இராமநாதன் பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறார், குருகுலத்திலும் ஆசிரியர்கள் சொல்ல கேட்டிருக்கிறார், சின்ன வயதிலேயே பட்டு தேசத்தின் மீது தனி பாசமுண்டு. பட்டு தேசம் உலக வரலாற்றிலும் மக்கள் நாகரிகத்தில் தனியிடம் பெற்று விளங்கியது, மக்கள் அனைவரும் சுறுசுறுப்பானவர்கள், பட்டு, தேயிலை, கண்ணாடி, கந்தகப்பொடி, காகிதம் போன்றவற்றை உலக நாடுகளுக்கு அவர்கள் தான் எப்படி உபயோகிப்பது என்பதை கற்று கொடுத்தவர்கள். வீரத்திலும் தீரத்திலும் சிறந்து விளங்கியவர்கள். அவர்களின் தனிச்சிறப்பு ஏதாவது ஒரு பொருளை பார்த்தாலோ அல்லது கேள்விப்பட்டாலோ உடனே அதை போன்றே உடனே தயாரிக்கும் தன்மை கொண்டவர்கள்.
இராமநாதர் காந்தார நாட்டின் எல்லையை மாலையில் அடைந்த போது வானம் கருமையாக இருண்டு, இடி மின்னலுடன் கடுமையான மழை பெய்தது, அவரும் ஒரு மலையடிவாரத்தில் தங்கிவிட்டார். மறுநாள் காலையில் தன்னுடைய தேரில் ஏறி பட்டு தேசத்தின் எல்லையை அடைந்தார், எங்கே பார்த்தாலும் பச்சை பசேல் என்ற மரங்களும் செடிகளும் புற்களும் நிறைந்திருந்தது, அழகிய பறவைகளும், வனவிலங்குகளையும் ரசித்தார். அங்கே கிடைத்த நல்ல பழங்களையும், காய்கறிகளையும், அம்மா கொடுத்த தனக்கு பிடித்தமான உணவையும் இடையிடையே சாப்பிட்டார்.
அவ்வாறாக இரண்டு நாட்கள் தொடர் பயணத்தின் பின்னர் மாலை நேரத்தில் அவரது பயணம் மொத்தமாக தடைப்பட்டது, காரணம் பட்டு தேசத்தின் மிகப் பெரிய ஆறான மஞ்சள் ஆறு தான். சில நாட்களாக கடுமையாக பெய்த மழையினால் காட்டு வெள்ளத்தால் மஞ்சள் ஆறு கடுமையான வேகத்தில் பாய்ந்து சென்றது. சாதாரண காலத்தில் மஞ்சள் ஆற்றை கடக்க கட்டாயம் வலிமைமிக்க படகு தேவை, இந்நிலையில் படகில் கூட பயணம் செய்யமுடியாது. தன்னுடைய தேரை உபயோகித்து ஆற்றை கடக்க முடியாத இக்கட்டான நிலைக்குள்ளானார்.
சூரியன் மறையும் நேரம் சீக்கிரத்தில் வரும் நிலையில் என்ன செய்வது என்று அறியாமல் விழித்தார், அவர் இருந்த பகுதியில் மக்கள் யாரும் வசிக்கவில்லை, சுற்றும் முற்றும் தன் தேரில் ஏறி பார்த்தார், ஒன்றுமே புலப்படவில்லை.
தன் இஷ்ட தெய்வமான முருகனை மனதில் நினைத்து, “இறைவா! நான் கொண்ட காரியத்தில் வெற்றி கிடைக்க உன்னால் தான் உதவ முடியும், எப்போதும் என்னுடன் இருக்கும் இறைவா! எனக்கு ஒரு நல்ல வழி காட்டு, மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நம்பிக்கையோடு வேண்டினார்
இறைவனை மனதில் கும்பிட்டு கண்களை திறந்து பார்த்தார், என்ன ஆச்சரியம் தூரத்தில் ஒரு மலையடிவாரத்தில் தங்க நிறத்தில் ஏதோ ஒளி தெரிந்தது. சூரியனின் மாலை நேர கதிர்கள் ஏதோ ஒன்றின் மீது பட்டு எதிரொலித்தது. இராமநாதனுக்கு மனதில் உற்சாகம் தொற்றிக் கொண்டது, வேண்டிய இறைவன் வேண்டுதலுக்கு செவி சாய்த்துவிட்டார், இனிமேல் எல்லாம் ஜெயம் தான் என்று தான் ஒளி கண்ட இடத்தை நோக்கி தன் தேரில் விரைந்தார். அந்த ஒளியானது ஒரு மலையடிவாரத்தின் பின்னால் தெரிந்தது, அங்கே விரைந்த இராமநாதன் ஆச்சரியத்தில் வாயை பிளந்து நின்றார், அங்கே அவர் கண்ட காட்சி அவர் மனதை சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மலையடிவாரத்தில் அடைந்த இராமநாதன் கண்டது தக தக தங்க நிறத்தில் இறக்கைகள் கொண்ட ஒரு குதிரை தான். அருகே சென்ற அவர் தேரிலிருந்து இறங்கி ஓடி போய் குதிரையை பார்த்தார், பார்த்த மாத்திரத்தில் அவரது உற்சாகம் சுதி இறங்கிவிட்டது. அங்கே இருந்த குதிரையானது உயிரற்ற தங்க குதிரை, குதிரையின் உடல் முழுவதும் தங்கத்தாலும் அதன் கண்கள் சிவப்பு நிற இரத்தின கல்லாலும், அதன் பற்கள் வைரத்தாலும் செய்யப்பட்டிருந்தது. ஒளி காட்டிய இறைவன் சரியான வழி காட்டவில்லையோ என்று நினைத்த இராமநாதன், குதிரையை சுற்றி வந்தார், ஒன்றுமே புலப்படவில்லை, அதன் கண்களை உற்று நோக்கினார், என்ன ஆச்சரியம், அதன் கண்களில் சில எழுத்துகள் தெரிந்தன.
பட்டு தேச மொழியில் இருந்தாலும் அதை இராமநாதன் சரியாக படித்து அர்த்தம் புரிந்துக் கொண்டார்.
நினைத்த இடத்திற்கு பறந்து செல்லும் வல்லமை மிக்க இந்த தக தக தங்க குதிரை தங்கள் குதிரையாக வேண்டும் என்றால், மலை உச்சியில் வசிக்கும் மூன்று மந்திர, தந்திர, இந்திர சித்திரக்குள்ளர்களின் மந்திர குடுவையில் இருக்கும் மந்திர நீரை இதன் மேல் ஊற்ற வேண்டும். குதிரையின் கண்களில் தெரிந்ததை படித்த பின்னர் இராமநாதனுக்கு தன்னால் தங்க குதிரைக்கு உயிர் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது, அதே நேரம் சித்திரக்குள்ளர்களைப் பற்றிய பயமும் ஏற்ப்பட்டது, தனக்கு முன்னர் பலர் இக்குதிரையை பார்த்திருப்பாங்க, அப்போ பலர் முயற்சி செய்தும், இது இன்னமும் தங்க குதிரையாகவே இருக்கிறது என்றால் சித்திரக்குள்ளர்களை தேடி போனவர்கள் கதி அதோ கதியாகி இருக்கும், தனக்கு அது நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து தேரிலிருந்த தன்னுடைய வாளை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டார். தான் கொண்டு வந்த உணவு மூட்டைகளையும், அத்துடன் எதுக்காவது உதவும் என்று கொண்டு வந்த காக்கா முத்துக்களில் சில எடுத்து பையில் போட்டுக் கொண்டார்.
மிகவும் கஷ்டப்பட்டு மலையின் மேல் ஏறினார், மலை உச்சியை அடையும் போது சூரியன் மறையும் நேரமாகிவிட்டது, ஒரு வழியாக உச்சியில் ஏறிய பார்த்தால் அங்கே பளிங்கு நிறத்தில் பெரிய மாளிகையே இருந்தது, இராமநாதன் தான் நினைத்தப்படியே எல்லாம் நடக்குது, எப்படியும் சித்திர குள்ளர்களுக்கு தெரியாமல் மந்திர நீர் இருக்கும் குடுவையை மட்டும் எடுத்துக் கொண்டு ஒடி விட வேண்டும் என்று நினைத்தார்.
அதனால் வேகவேகமாக பளிங்கு மாளிகையை நோக்கி விரைந்தார், மாளிகையின் கதவை அடைய இன்னும் 3 அடி தூரம் தான் இருக்கும், திடிரென்று எங்கிருந்தோ வந்து விழுந்த வலையில் மாட்டிக் கொண்டார் இராமநாதன். எவ்வளவோ முயற்சித்தும் தன்னை விடுவிக்க முடியவில்லை, வசமாக மாட்டிக் கொண்டார். என்ன செய்வது என்றே தெரியவில்லை, சித்திரக்குள்ளர்களிடம் மாட்டிக் கொண்டோம், இனிமேல் மற்றவர்களுக்கு ஏற்ப்பட்ட கதி தான் தனக்கும் ஏற்ப்படும் என்று நினைத்த இராமநாதன் மயங்கி விழுந்து விட்டார், ஏற்கனவே மலையை ஏறி வந்த களைப்பு, மனதில் ஏற்ப்பட்ட பயம் இரண்டும் சேர்ந்து அவரை மயக்க நிலைக்கு கொண்டு சென்றது. கண் விழித்து பார்த்த இராமநாதன் எதிரே கண்ட காட்சியை கண்டு மிரண்டு போய் மீண்டும் மயக்க நிலைக்கு ஆளானார்.
இராமநாதன் கண்ட காட்சி என்ன? சித்திரக்குள்ளர்களிடமிருந்து தப்பினாரா?
விஞ்ஞானம் அறிவோம் / செய்துபார்த்து அறிவோம்
இணையம் அறிவோம்  விஞ்ஞானிகளை அறிவோம்

No comments:

Post a Comment