அறிவுக்கு விருந்து – 21.11.2019 (வியாழன்)


அறிவுக்கு விருந்து – 21.11.2019 (வியாழன்)

வரலாற்றில் இன்று - நவம்பர் 21 (November 21) கிரிகோரியன் ஆண்டின் 325 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 326 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·  கிமு 164மக்கபேயர் மன்னர் யூதாசு மக்கபெயசு எருசலேம் கோவிலைப் புதுப்பித்துக் கட்டினார். இந்நிகழ்வு ஆண்டுதோறும் அனுக்கா திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
·  1386சமர்கந்துவின் தைமூர் ஜார்ஜியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றி, ஜோர்ஜிய மன்னர் ஐந்தாம் பக்ராத்தைக் கைது செய்தான்.
·  1676தென்மார்க்கு வானியலாளர் ஓலி ரோமர் ஒளியின் வேகத்தின் முதலாவது அளவீட்டைக் கண்டுபிடித்தார்.
·  1877ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தாமசு ஆல்வா எடிசன் அறிவித்தார்.
·  1894முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை சப்பான் கைப்பற்றியது.
·  1905ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.
·  1916முதலாம் உலகப் போர்: பிரித்தானியாவின் பிரித்தானிக் கப்பல் கிரேக்கத்தில் ஏஜியன் கடலில் வெடித்து மூழ்கியதில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
·  1920டப்ளினில் காற்பந்துப் போட்டி நிகழ்வொன்றில் பிரித்தானியப் படையினர் சுட்டதில் 14 அயர்லாந்துப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

·  1694வோல்ட்டயர், பிரான்சிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (. 1778)
·  1933. இராசலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
·  1938ஹெலன், ஆங்கிலோ-பர்மிய இந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

·  1555அகிரிகோலா சார்சியஸ், செருமானிய கனிமவியலாளர், கல்வியாளர்
·  1912வலையட்டூர் வெங்கையா, இந்தியக் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாளர்
·  1970. வெ. இராமன், நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் (பி. 1888)
·  1991தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார், இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1903)
·  1994மால்கம் ஆதிசேசையா, இந்தியக் கல்வியாளர், பொருளியலாளர் (பி. 1910)

சிறப்பு நாள்

 குறளறிவோம்-  111. நடுவு நிலைமை / Impartiality
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
மு.வரதராசன் விளக்கம்: அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
If justice, failing not, its quality maintain, Giving to each his due, -'tis man's one highest gain
Couplet Explanation:  That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue
Transliteration(Tamil to English): thakudhi enavondru nandrae pakudhiyaal
paaRpattu ozhukap peRin
சிந்தனைக்கு    அனைவர்க்கும் இனிமையாக இருக்க அந்த இறைவனானாலும் கூட முடியாது மாறாக அனைவரிடமும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க முயற்சி செய்.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
வா -----> அழைத்தல் 

வீ -----> பறவை, பூ, அழகு 

விடுகதை விடையுடன்
காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன?  நாவல் பழம்
பழமொழி-எண்ணிச் செய்கிறவன் செட்டி,எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
பொருள்/Tamil Meaning வணிகன் தீர ஆலோசனை செய்தே ஒரு காரியத்தில் இறந்குவான். மூடனோ முன்யோசனையின்றிக் காரியத்தில் இறங்கிவிட்டுப் பின் விழிப்பான்.
Transliteration Ennich ceykiravan cetti, ennamal ceykiravan mtti.
தமிழ் விளக்கம்/Tamil Explanationஎண்ணுதல்என்ற சொல்லில் சிலேடை நோக்குக. செட்டியானவன் பணத்தை எண்ணி மட்டும் கொடுப்பதில்லை; கொடுத்தால் திரும்ப வருமா என்பதையெல்லாம் தீர ஆலோசித்தே கொடுப்பான். மட்டி என்கிற மூடனானவன் பணத்தையும் விளைவுகளையும் எண்ணாமல் செயலில் இறங்குவதால் அவதிக்குள்ளாகிறான்.
Enrich your   vocabulary
whet கூர்மையாக்கு
whiff புகை உள் இழு
whiffle இங்குமங்கும் அலைக்கழி
ProverbA bird in hand is worth two in the bush.
Things we already have are more valuable than what we hope to get.
Example: X: Why did you turn down that job offer when you don’t have anything concrete in hand at the moment? Y: Well, I’m confident I’ll land one of the two jobs I interviewed for last week. And they’re better than this one. X: In my opinion, you should’ve taken it. A bird in hand is worth two in the bush.
Opposite Words 
Grow X Shrink
  • Sales of new cars grew by 10% last year.
  • We want to expand the business, not shrink it.
Guilty X Innocent
  • I feel really guilty about forgetting her birthday again.
  • Nobody would believe that I was innocent.
மொழிபெயர்ப்பு
Mint
புதினா
மிதுனாக்கீரை
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + <அம்புக்குறி>
வரி அல்லது பத்தி தொடக்கத்தில் நகரும்
Ctrl<அம்புக்குறியை>
முடிவில் நகரும்.
இனிக்கும் கணிதம்      .. நீட்டல் அளவை
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
அறிவியல் அறிவோம் அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு
அறிவியல் துளிகள் மின் கலம் – லூயி கால்வானி
தினம் ஒரு மூலிகை குதிரை மசால்
குதிரை மசால்தாவர வகைப்பாடு : Medicago sativaபபேசியே குடும்பத்தைச் சார்ந்த ஒரு தாவரம். இதன் தாவரவியல் பெயர் மெடிகேகா சட்டைவா (Medicago sativa) என்பதாகும். இது பசுந்தழைத் தீவனத்திற்காக உலகெங்கும் அதிகமாக வளர்க்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில் கோயமுத்தூர் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.
சோயா பீன்சு போன்ற மற்ற லெகூம் தாவரங்களில் இருப்பது போல குதிரை மசாலிலும் தாவர ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இது கர்ப்பத் தடை போல செயல்படுகிறது.
உணவு     மனிதனின் ஆற்றல் சிதைவுறுதலைப் பாதிக்கும் காரணிகள்
எடை : மொத்தம் சிதைவுறுதல் என்பது ஒருவரது எடையை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்துவதற்கு செய்யப்படும் வேலையாகும். எனவே உடல் எடை அதிகமாகும்போது ஆற்றல் தேவையும் அதிகமாகிறது.
வரலாற்றுச் சிந்தனை  வரலாற்று அறிஞர்கள் அறிவோம்: ஜவஹர்லால் நேரு
பத்திரிக்கை: நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிக்கையை 1938 ஆண் ஆண்டு துவக்கினார். அப்பத்திரிக்கை 2008 ஆம் ஆண்டு மூடப்பட்டது.
சிறப்பு பெயர்: இந்தியாவின் ஆபரணம், ரோஜாவின் ராஜா, ஆசிய ஜோதி என அழைக்கப்படுபவர்.
தன்னம்பிக்கை கதை- ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும் அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.
அதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான். ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான்.
பொன்னுக்கு ஆசைப்பட்ட அந்த வஞ்சக ஜோதிடன் நேராக விஜயநகர அரண்மனைக்கு வந்தான்.கிருஷ்ணதேவ ராயர் படையெடுக்கத் தயாராக உள்ளதை அறிந்துகொண்டான். அவன் உள்ளம் வேகமாக வேலை செய்தது. மன்னர் முன் சென்று நின்றான்.மிகவும் தயங்குவது போல் பாசாங்கு செய்தவன்அரசே! தற்போது தாங்கள் படையெடுப்பது சரியல்ல.ஏனெனில் தங்களின் கிரகநிலை தற்போது சரியில்லை.எனவே படையெடுப்பில் தற்போது இறங்க வேண்டாம்.” என்று கூறினான். மந்திரி பிரதானிகளும் அதையே கூறினர். அவர்களும் மன்னரின் உயிரைப் பெரிதென மதித்தனர்.அரசியரும் மன்னரையுத்தத்திற்குப் போகவேண்டாம் எனத் தடுத்தனர். அரசரும் யோசித்தார்.தெனாலிராமன் இவற்றையெல்லாம் கவனித்தவண்ணம் இருந்தான்.அவனுக்கு ஜோதிடன் மேல் சந்தேகம் ஏற்பட்டது.எனவே மன்னனிடம்அரசே! நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? சோதிடன் சொன்ன பலன்கள் எல்லாம் நடந்து விடுகின்றனவா என்ன?” என்று தைரியம் சொன்னான்.
ராயரும் அதை ஆமோதித்தார்.”ராமா! நீ சொல்வதும் சரிதான். ஆனால் இதை எப்படி மற்றவர்களுக்கு நிரூபிப்பது?சோதிடம் பொய் என்று நிரூபிப்பவருக்குபத்தாயிரம் பொன் பரிசு என்று அறிவியுங்கள்என்றும் ஆணையிட்டார்.
தெனாலிராமனுக்கு மிக்க மகிழ்ச்சி.
அரசே! நானே இதை நிரூபிக்கிறேன். ஆனால் அந்த சோதிடனுக்குத் தண்டனை தருகின்ற உரிமையையும் எனக்குத் தரவேண்டும்என்று கேட்டுக்கொண்டான். மன்னரும் இதை ஒப்புக்கொண்டார்.
மறுநாள் சபா மண்டபத்தில் சோதிடனும் தெனாலிராமனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ராமன் சோதிடரைக் கூர்ந்து கவனித்தான்.அவர் மேல் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அவன், “சோதிடரே! நீர் கூறும் சோதிடம் தவறாமல் பலிக்குமல்லவா?” என்றான் மெதுவாக.
அதிலென்ன சந்தேகம்? நான் சொன்னால் அது கண்டிப்பாக நடந்தேறும்.”
தன் கரங்களைக் குவித்தபடியேநீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பலன்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்என்றான் ராமன் பணிவாக.
சோதிடனும் கர்வத்துடன் தலையை அசைத்துக் கொண்டான்.
அப்படியானால் தங்களின் ஆயுள் காலத்தையும் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?”
! நான் இன்னும் நாற்பது ஆண்டுகள் உயிர் வாழ்வேன். இது சத்தியம்.” சோதிடன் பெருமையுடன் கூறினான்.
உமது வாக்கு இப்போதே பொய்த்து விட்டதே! ” என்றவாறே அருகே நின்ற சேனாதிபதியின் வாளை உருவி அந்த வஞ்சக சோதிடனின் தலையை வெட்டினான் ராமன்.
அனைவரின் திகைப்பையும் நீக்கிய ராமன் அந்த சோதிடனின் சுவடிக்கட்டை பிரித்துக் காட்டினான். அதனுள் பிஜாபூர் சுல்தான் சோதிடனுக்கு அனுப்பிய கடிதங்கள் இருக்கக் கண்டான். அந்த சோதிடன் பீஜப்பூர் சுல்தானின் கைக்கூலி என்று அறிந்து அவனுக்குத் தண்டனை அளித்ததற்காக ராமனைப் பாராட்டினார்.தன் வாக்குப் படியே பத்தாயிரம் பொற்காசுகளையும் அளித்து மகிழ்ந்தார். அதன்பின் தன் எண்ணப்படியே பீஜபூரையும் குர்ப்பாகானையும் வெற்றி கொண்டார் கிருஷ்ணதேவராயர்
பார்ப்போம் பாடுவோம்/ பேசுவோம் -  தமிழ் பாடநூல் வாழ்த்துப் பாடல்கள் https://www.youtube.com/watch?v=LLFPC4a5V00
இணையம் அறிவோம் 
செயலி தமிழ் நூலகம்

https://play.google.com/store/apps/details?id=air.com.skyosis.tamil.library

No comments:

Post a Comment