அறிவுக்கு விருந்து – 18.11.2019 (திங்கள் )



அறிவுக்கு விருந்து –18.11.2019 (திங்கள்)

லாற்றில் இன்று - நவம்பர் 18 (November 18) கிரிகோரியன் ஆண்டின் 322 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 323 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·  326பழைய புனித பேதுரு பேராலயம் திறந்து வைக்கப்பட்டது.
·  401விசிகோத்துகள் முதலாம் அலாரிக் மன்னரின் தலைமையில் ஆல்ப்சு மலைகளைத் தாண்டி வடக்கு இத்தாலியை முற்றுகையிட்டனர்.
·  1105மேகினுல்ஃபோ எதிர்-திருத்தந்தையாக நான்காம் சில்வெசுட்டர் என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
·  1180இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
·  1210புனித உரோமைப் பேரரசர் நான்காம் ஒட்டோ திருத்தந்தை மூன்றாம் இன்னொசென்டினால் நீக்கப்பட்டார்.
·  1421நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்,
·  1493கிறித்தோபர் கொலம்பசு புவேர்ட்டோ ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை முதன்முறையாகக் கண்ணுற்றார்.
·  1494பிரெஞ்சு மன்னர் எட்டாம் சார்ல்சு இத்தாலி]]யின் புளோரன்சு நகரைக் கைப்பற்றினார்.
·  1626புதிய புனித பேதுரு பேராலயம் ரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டது.

பிறப்புகள்

·  1787லூயி தாகர், பிரான்சிய இயற்பியலாளர், படப்பிடிப்பாளர் (. 1851)
·  1836டபிள்யூ. எஸ். கில்பர்ட், ஆங்கிலேயக் கவிஞர் (. 1911)
·  1882ஜாக் மாரித்தேன், பிரான்சிய மெய்யியலாளர் (. 1973)
·  1888திருமலை கிருஷ்ணமாச்சாரி, இந்திய யோகா ஆசிரியர் (. 1989)
·  1888பிரான்சஸ் மரியன், அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர் (. 1973)
·  1901வி. சாந்தாராம், இந்திய நடிகர், இயக்குநர் (. 1990)
·  1910பதுகேஷ்வர் தத், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (. 1965)
·  1923அலன் ஷெப்பர்ட், அமெரிக்க விண்வெளி வீரர் (. 1998)
·  1929பி. எஸ். சரோஜா, தமிழகத் திரைப்பட நடிகை
·  1939மார்கரெட் அட்வுட், கனடிய எழுத்தாளர், கவிஞர்

இறப்புகள்

·  1772மாதவராவ், மராட்டியப் பேரரசின் நான்காம் தலைமை அமைச்சர் (பி. 1745)
·  1887குஸ்டாவ் பெச்னர், செருமானியக் கவிஞர், மெய்யியலாளர் (பி. 1801)
·  1908வி. பாஷ்யம் ஐய்யங்கார், இந்திய வழக்கறிஞர், நீதியாளர் (பி. 1844)
·  1922மார்செல் புரூஸ்ட், பிரான்சிய எழுத்தாளர் (பி. 1871)
·  1936. . சிதம்பரம்பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1872)
·  1952போல் எல்யூவார், பிரான்சியக் கவிஞர் (பி. 1895)
·  1962நீல்சு போர், நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு இயற்பியலாளர் (பி. 1885)
·  1982தி. ஜானகிராமன், தமிழக எழுத்தாளர் (பி. 1921)

சிறப்பு நாள்

  • விடுதலை நாள் (லாத்வியா, உருசியாவிடம் இருந்து 1918)
  • விடுதலை நாள் (மொரோக்கோ, பிரான்சு, மற்றும் எசுப்பானியாவிடம் ருந்து 1956)
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
மு.வரதராசனார் உரை: ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.
Translation: Tis never good to let the thought of good things done thee pass away;
Of things not good, 'tis good to rid thy memory that very day.
Explanation:
It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted).
சிந்தனைக்கு    உன் முயற்சி மீது நீ கொண்ட நம்பிகை மட்டுமே பின்னாளில் உன் திறமைகளை அங்கீகரிக்கவும் உன் வெற்றிகளை கௌரவிக்கவும் போகிறது.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு 

மீ -----> ஆகாயம், மேலே, உயரம் 

மு -----> மூப்பு 

விடுகதை விடையுடன்
அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன?  அம்மி குளவி
பழமொழி- அரைத்து மீந்தது அம்மி, சிரைத்து மீந்தது குடுமி.
பொருள்/Tamil Meaning அம்மியில் எவ்வளவு அரைத்து வழித்தாலும் அதன் கல் அப்படியே இருக்கும். அதுபோல நாவிதன் அசிரத்தையாக முடி வெட்டினாலும், குடுமி நிச்சயம் தங்கும் (குடுமியைச் சிரைக்கக்கூடாது என்பது பழைய மரபு).
Transliteration Araittu meenthathu ammi, ciraittu meenthathu kutumi.
தமிழ் விளக்கம்/Tamil Explanationமற்றவர்களின் உடைமைகளை பற்றிக் கவலைப்படாது கர்வத்துடன் இருக்கும் ஒருவனைக் குறித்துச் சொன்னது.
Enrich your   vocabulary
worship வழிபாடு, வந்தனை செய்
wound காயப்படுத்து, புண்படுத்து
wrangle வாதம் செய், சண்டை மூட்டு, சச்சரவு செய்
Proverb
Take time by the fore lock
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
Opposite Words 
Generous X Stingy
  • She’s always very generous to the kids.
  • She’s too stingy to give money to charity.
Gentle X Rough
  • Arthur was a very gentle, caring person.
  • Rugby is a very rough sport.
  • Mark read the message and smiled to himself.
மொழிபெயர்ப்பு
இலைக்கோசு (சிகப்பு)
தாமரைக்கிழங்கு
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + Shift +>
பாண்ட் சைஸ் அதிகமாக்க.
Ctrl +]
பாண்ட் சைஸ் அதிகமாக்க பயன்படுத்தலாம்.
இனிக்கும் கணிதம்      .. கால அளவு..
15 நாள் = 1 பக்கம்                       2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்                   2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
அறிவியல் அறிவோம்   நீரில் கரையும் காரங்கள் -  அல்கலிகள்
அறிவியல் துளிகள்1859–சார்லஸ் டார்வின் எழுதிய நூல்–உயிரனங்களின் தோற்றம்
தினம் ஒரு மூலிகை காட்டுக் காடைக்கண்ணி 
காட்டுக் காடைக்கண்ணி (Animated oat) என்பது புல் வகையைச் சார்ந்த ஒரு தாவரம் ஆகும். இவை பயிர்களின் நடுவில் களை போல் முளைத்து வளரும் தன்மை கொண்டது. இதில் ஒரு வகை காடைக்கண்ணி என்று அழைக்கப்படுகிறது. இதன் விதைகள் உண்ணும் பொருளாகப் பயன்படுகிறது.
உணவு     ஆற்றல் தரும் உணவுகள்
வேலை செய்யும் திறன் ஆற்றல் எனப்படும். ஆற்றல் அளவானது கிலோ கலோரிகள் (kcal) அல்லது மெகா ஜூல் ஆல் (MJ) அளக்கப்படுகிறது.
ஒரு கிலோகிராம் தண்ணீரின் வெப்பநிலையை ஒரு சென்டிகிரேடு உயர்த்த தேவைப்படும் வெப்ப அளவு ஒரு கிலோ கலோரி எனப்படும்.
வரலாற்றுச் சிந்தனை  வரலாற்று அறிஞர்கள் அறிவோம்: ஜவஹர்லால் நேரு
கல்வி: பள்ளிப் படிப்பை முடித்தும் கேம்பிரிட்சு பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார். நேரு, அவருடைய திரைபோசில் இரண்டாவது இடம் பெற்று 1910 இல் பட்டம் பெற்றார். தந்தை வேண்டுகோளுக்காகப் சட்டம் படித்த நேரு, 1912 - இல் வெற்றிபெற்று, இன்னர் டெம்பில் ஆண்டின் இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார்.
அரசியல் குரு: மகாத்மா காந்தியை அரசியல் குருவாக ஏற்றவர்.
தொழில்: வழக்கறிஞராக தொழில் புரிந்தார்.

தன்னம்பிக்கை கதை- மாம்பழம் வேணும் !

ஒரு ஊரில் சுந்தரம் என்ற உழவன் இருந்தான். தன் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தான். மனைவி அவனிடம், “”எனக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும். ஆசையாக உள்ளது!” என்றாள். மனைவியின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற நினைத்தான் அவன்.“இது மாம்பழம் பழுக்கும் பருவம் அல்ல. அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மாமரத்தில்தான் எப்போதும் மாம்பழம் கிடைக்கும். என்ன செய்வது?’ என்று சிந்தித்தான் அவன்.
நள்ளிரவில் யாரும் அறியாமல் அரண்மனைத் தோட்டத்திற்குள் நுழைந்தான். நீண்ட நேரம் தேடி மாம்பழம் இருந்த மரத்தை கண்டுபிடித்தான். உயரமாக இருந்த மரத்தில் முயற்சி செய்து ஏறினான்; மாம்பழத்தை பறித்தான்.
பொழுது புலரத் தொடங்கியது. மரத்தைவிட்டு இறங்கினால் காவலர்களிடம் சிக்கிக் கொள்வோம். இருட்டும் வரை மரத்திலேயே ஒளிந்து இருப்போம் என்று நினைத்தான். மரத்தின் கிளைகளுக்கு இடையே ஒளிந்து கொண்டான். அவனுடைய கெட்ட நேரம், அரசர் தம் ஆசிரியருடன் அங்கே வந்தார். அவன் ஒளிந்திருந்த மரத்தின் நிழலில் அவர்கள் இருவரும் நின்றனர். அங்கிருந்த காவலர்கள் அரசர் அமர்வதற்காக நாற்காலி ஒன்றைக் கொண்டு வந்தனர். அதில் அமர்ந்தார் அவர். ஆசிரியரைப் பார்த்து, “”இப்போது நான் ஓய்வாகத்தான் இருக்கிறேன். நீங்கள் பாடம் நடத்தலாம்!” என்றார்.
“”அரசே! அப்படியே செய்கிறேன்!” என்ற ஆசிரியர் தரையில் அமர்ந்தார். அவருக்குப் பாடம் சொல்லத் தொடங்கினார். மரத்தில் ஒளிந்து இருந்த அவன் இதைப் பார்த்தான். “இவர்கள் இருவரும் என்னைவிட முட்டாள்களாக இருக்கிறார்களேஎன்று நினைத்தான்.
“”இங்கே மூன்று முட்டாள்கள்!” என்றபடி கீழே குதித்தான். இதைக் கேட்ட அரசன், “இங்கே மூன்று பேர்தாம் இருக்கிறோம். இவன் என்னையும் முட்டாள் என்கிறானே…’ என்று கோபம் கொண்டார்.
அவனைப் பார்தது, “”எங்கள் இருவரையும் உன்னுடன் சேர்த்து முட்டாள்கள் என்று சொல்கிறாயா? நாங்கள் முட்டாள்களா? எங்களை முட்டாள்கள் என்று நிரூபிக்காவிட்டால் உன் உடலில் உயிர் இருக்காது!” என்று கத்தினார் மன்னர்.
நடுக்கத்துடன் அவன், “”அரசே! நான் ஏன் சொன்னேன் என்பதற்கு விளக்கம் சொல்கிறேன். மாம்பழப் பருவம் அல்லாத காலத்தில் என் மனைவி மாம்பழத்திற்கு ஆசைப்பட்டாள். அரண்மனைத் தோட்டத்தில்தான் மாம்பழம் கிடைக்கும். அங்கே சென்றால் உயிருக்கு ஆபத்து என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் மனைவியின் மீது கொண்ட ஆசையால் இங்கே வந்து ஆபத்தில் சிக்கிக் கொண்டேன். என்னை நீங்கள் முட்டாள் என்று ஒப்புக் கொள்வீர்கள்.
“”மதிப்பிற்கு உரியவர் ஆசிரியர். எப்போதும் அவர் உயர்ந்த இருக்கையில் அமர வேண்டும். மாணவர்கள் கீழே அமர்ந்து பணிவாகப் பாடம் கேட்க வேண்டும். ஆனால், நீங்களோ அரசர் என்பதால் ஆசிரியரை மதிக்கவில்லை. நாற்காலியில் அமர்ந்து உள்ளீர். ஆசிரியரை மதிக்காத நீங்கள் இரண்டாவது முட்டாள்.
“”எந்த நிலையிலும் ஆசிரியர் தன் பெருமையை விட்டுத் தரக்கூடாது. பொருளாசை காரணமாக இவர் தன் நிலையைவிட்டுக் கீழே அமர்ந்து உங்களுக்கு பாடம் சொல்லித் தந்தார். இவர் மூன்றாவது முட்டாள்!” என்றான் அவன்.இதைக் கேட்ட அரசர், “”ஆசிரியருக்கு மதிப்பு அளிக்காதவன் முட்டாள் என்பதை உன்னால் அறிந்து கொண்டேன். இனி இப்படிப்பட்ட தவறு செய்ய மாட்டேன்!” என்றார்.அவனுக்கு ஒரு கூடை மாம்பழமும், பரிசும் தந்து அனுப்பி வைத்தார்.
 பார்ப்போம் பாடுவோம்/ பேசுவோம் -  ஔவையார்  பாடல்கள் 
இணையம் அறிவோம் 
செயலி Avvai Noolgal

https://play.google.com/store/apps/details?id=com.mayuonline.aathichoodi

No comments:

Post a Comment