வரலாற்றில் இன்று - நவம்பர் 13 (November 13) கிரிகோரியன் ஆண்டின்
317 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில்
318 ஆம்
நாள்.
நிகழ்வுகள்
·
1002 – இங்கிலாந்தில்
வசிக்கும் அனைத்து டேன்
பழங்குடிகளையும்
கொல்லும்படி ஆங்கிலேய
மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது புனித பிறைசு நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).
·
1093 – ஆல்ன்விக் என்ற இடத்தில் நடந்த ஆங்கிலேயருடனான போரில் இசுக்காட்லாந்து
மன்னர் மூன்றாம் மால்க்கம், அவரது மகன் எட்வர்டு ஆகியோர் கொல்லப்பட்டனர்.
·
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்:
ரிச்சார்ட் மொன்ட்கோமெரி தலைமையிலான புரட்சிப் படையினர் மொண்ட்ரியாலைக்
கைப்பற்றினர்.
·
1795 – கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப்
படையினர் இலங்கையின்
கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம்
இருந்து கைப்பற்றினர்.
·
1851 – வாசிங்டனின்
சியாட்டில்
நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது
குழுவினரும் வந்திறங்கினர்.
·
1887 – மத்திய லண்டன்
பகுதியில் அயர்லாந்து
விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.
·
1887 – நவம்பர் 11 இல் சிக்காகோவில்
தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.
·
1914 – பர்பர்
இனத்தவர்கள் மொரோக்கோவில்
எல் எரி என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளுடன் மோதி அவர்களுக்கு பெரும் சேதத்தை உண்டுபண்ணினர்.
·
1916 – முதலாம் உலகப் போர்:
இராணுவத்துக்குக் கட்டாய ஆள் சேர்ப்பை ஆதரித்தமைக்காக ஆத்திரேலியப்
பிரதமர் பில்லி இயூசு தொழிற் கட்சியில்
இருந்து நீக்கப்பட்டார்.
பிறப்புகள்
இறப்புகள்
- 1916 – சாகி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1870)
- 1922 – சங்கரதாஸ் சுவாமிகள், தமிழக நாடகக் கலைஞர், நாடகாசிரியர் (பி. 1867)
- 1987 – ஏ. எல். அப்துல் மஜீத், கிழக்கிலங்கை அரசியல்வாதி (பி. 1933)
- 1989 – ரோகண விஜேவீர, இலங்கை கிளர்ச்சித் தலைவர், அரசியல்வாதி (பி. 1943)
- 1996 – உரோபெர்த்தா வைல், ஆத்திரேலிய வானியற்பியலாளர் (பி. 1959)
- 2002 – கணபதி கணேசன், மலேசிய இதழாசிரியர் (பி. 1955)
- 2010 – ஆலன் சாந்தேகு, அமெரிக்க வானியலாளர் (பி. 1926)
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
கலைஞர்
மு.கருணாநிதி உரை: உதவி
என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின்
பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.
மு.வரதராசனார் உரை: கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த
உதவியின் அளவை உடையது அன்று,
உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
Translation:
The
kindly aid's extent is of its worth no measure true;
Its worth is as the worth of him to whom the act you do.
Its worth is as the worth of him to whom the act you do.
Explanation:
The
benefit itself is not the measure of the benefit; the worth of those who have
received it is its measure.
சிந்தனைக்கு
எதை
இழக்கும் நிலைக்கு நீ
தள்ளப்பட்டாலும் உன்
பொறுமையை இழக்கும் நிலைக்கு மட்டும் வந்து
விடாதே.
நீ
இழந்தது எல்லாம் நிற்சயம் கிடைக்கும் பொறுமையின் வழியே
நீ
முயற்சி செய்தால்….!
தமிழ்
அறிவோம்ஒத்தச் சொற்கள்
நோ
|
துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்
|
நௌ
|
மரக்கலம்
|
ப
|
நூறு
|
விடுகதை
விடையுடன்
வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?
வழுக்கை
பழமொழி- அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை.
பொருள்/Tamil Meaning அண்ணாமலையாருக்குச் செய்யும் விரிவான பூசையின் 64 உபசாரங்களைத் தரிசனம் செய்வதற்கு பூசாரிக்கு 74 உபசாரங்கள் செய்து
அவர்
தயவைப்
பெற
வேண்டும்.
Transliteration Annamalaiyarukku
arupatthunalu poocai, aantikalukku elupatthunalu poocai.
தமிழ் விளக்கம்/Tamil Explanation
சாமி
வரம்
கொடுத்தாலும் பூசாரி
இடம்
கொடுக்கவேண்டும் என்று
இதுபோன்று இன்னொரு பழமொழி
வழக்கில் உள்ளது
Enrich your vocabulary
Proverb
Cowards die many times before their
death
வீரனுக்கு ஒரு
முறை
சாவு;
கோழைக்கு தினந்தோறும் சாவு
Opposite Words
Forward
X Backward
- He leaned forward, his elbows resting on the table.
- She went without a backward glance.
Free X
Restricted
- The animals are allowed to run free in the park.
- It’s difficult trying to work in such a restricted space.
மொழிபெயர்ப்பு
நோக்கோல்
|
|
நோக்கோல் (ஊதா)
|
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl
+ W
|
தற்போது திறந்த ஆவணத்தை மூடுக.
|
Ctrl
+ X
|
தேர்ந்தெடுக்கப்பட்ட உரையை வெட்ட பயன்படும் .
|
இனிக்கும் கணிதம் .. கால அளவு..
2 குரு = 1 உயிர் 2 உயிர் = 1 சணிகம் 12
சணிகம் = 1 விநாடி
அறிவியல் அறிவோம் ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை
அறிவியல் துளிகள் –
அறிவியல் துளிகள் –
செல்லின் உட்பொருட்களை கண்டுபிடித்தவர் – ராபர்ட் பிரவுன்
தினம் ஒரு மூலிகை கவா
கவா (Kava) மேற்கு பசிபிக் பகுதியில் விளையும் செடியாகும். இப்பெயர் தோங்க மொழியில் இருந்து பெறப்பட்டது ஆகும். இச்செடியின் வேரில்
இருந்து பெறப்படும் சாறு உடலுக்கு உகந்தது எனக் கருதப்படுகிறது. இச்செடி பசிபிக் மாக்கடல் பகுதியைச் சுற்றிய
பாலினேசியத் தீவுகளான ஹவாய், வானுவாட்டு, மைக்ரோனேசியா ஆகிய நாடுகளின் பண்பாட்டில், உணவுப் பழக்கத்தில் முக்கியத்துவம் பெற்றது. தொண்டை வலியைப் போக்கக்
கூடியது எனவும் நல்ல மனநிலையைத் தரக் கூடியது எனவும் கூறப்படுகிறது.
உணவு – ஊட்டச்சத்தும் உடல்நலமும்
சிறந்த உடல்நலம், நல்ல ஊட்டச்சத்தினைப் பொறுத்தது.
சரியான உணவினை, சரியான அளவில் சிறந்த உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் நல்ல ஆரோக்கியத்துடனும், மனநலத்தோடும், நல்ல
உற்சாகம் மற்றும் வலிமையுடனும், நோய் எதிர்ப்புத் தன்மையுடனும்
வாழ்நாள் முழுவதும் வாழலாம்.
வரலாற்றுச் சிந்தனை ஆண்டுகள் முக்கிய நிகழ்வுகள்
1995 ஐ. நா. சபை பொன்விழா
1997 பாலிகா சம்ரிதி யோஜனா
1998 சுவ சக்தி திட்டம்
1997 பாலிகா சம்ரிதி யோஜனா
1998 சுவ சக்தி திட்டம்
தன்னம்பிக்கை கதை- வாழ்க்கை
பற்றிய
இயற்கையின்
உண்மை!!!
‘
ஒரு
பெரிய பணக்காரன் ஒருவன் ஜென் துறவியை சந்தித்து,
"நான் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக
இருப்பதை நினைவூட்டும் வகையில் ஏதாவது எழுதிக் கொடுங்கள்" என்று கேட்டான். அதற்கு அந்த மாஸ்டர் ஒரு
காகிதத் துண்டை எடுத்து, அதில் "தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன்
இறக்கிறான்" என்று எழுதிக் கொடுத்தார். அதைப் படித்த அவனுக்கு ஒரே கோபம் மூண்டது.
"என்ன? நான் உங்களிடம் என்னை
ஊக்குவிக்கும் வகையிலும், என் வருங்கால சந்ததியினர்
அதைப் படித்து வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கேட்டால், நீங்கள் என் மனம் புண்படும்
வகையில் எழுதித் தருகிறீர்களே!" என்று ஆத்திரத்துடன் கேட்டான். அதற்கு துறவி "ஆமாம். நானும் நீ கேட்டது போல்
உன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு மகிழ்ச்சியான ஒன்றைத்
தான் எழுதியுள்ளேன். எப்படியெனில், ஒரு வேளை உன்
மகன் முதலில் இறந்துவிட்டால், அது ஒவ்வொருவரின் மனதிலும்
பெரும் வலியை உண்டாக்கும். அதுவே உன் பேரன் முதலில்
இறந்தால், அது தாங்க முடியாத
அனுபவமாக இருக்கும். எப்படியிருந்தாலும் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் வரிசையாக இறக்கப் போகிறார்கள். அது தான் வாழ்க்கைப்
பற்றிய இயற்கையின் உண்மை. ஆகவே நானும் அதை,
அந்த காகிதத்தில் எழுதியுள்ளேன். எப்படியிருப்பினும் இந்த உலகில் பிறக்கும்
அனைவருக்குமே வலி நிச்சயம் இருக்கும்.
அதையே சந்ததியினரும் பின்பற்றுவர். ஆகவே இந்த காகிதத்தில்
இருப்பது எப்போதும் அழியாததாய் இருக்கும்" என்று விளக்கினார்.
பார்ப்போம் பாடுவோம்/
பேசுவோம் - ஔவையார்
பாடல்கள்
No comments:
Post a Comment