வரலாற்றில் இன்று - நவம்பர் 26 (November 26) கிரிகோரியன் ஆண்டின்
330 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில்
331 ஆம்
நாள்.
நிகழ்வுகள்
·
1789 – சியார்ச் வாசிங்டனால்
அறிவிக்கப்பட்ட தேசிய நன்றியறிதல் நாள் முதற்தடவையாக அமெரிக்காவில் நினைவுகூரப்பட்டது.
·
1863 – அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன்
நவம்பர் 26 ஐ தேசிய நன்றியறிதல் நாளாக
அறிவித்து, ஆண்டுதோறும் நவம்பர் மாத கடைசி வியாழக்கிழமை கொண்டாடுமாறு பணித்தார். 1941 முதல் இது நவம்பர் மாதத்தில் நான்காவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
·
1922 – எகிப்திய
பார்வோன்
துட்டன்காமுன்
என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர்
மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.
பிறப்புகள்
இறப்புகள்
சிறப்பு நாள்
- குடியரசு நாள் (மங்கோலியா)
- அரசியல் சாசன தினம் (இந்தியா)
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
அன்றே யொழிய விடல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக்
கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.
மு.வரதராசனார் உரை:
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி
உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
Translation:
Though only good it seem
to give, yet gain
By wrong acquired, not e'en one day retain! .
By wrong acquired, not e'en one day retain! .
Explanation:
Forsake in the very moment
(of acquisition) that gain which, though it should bring advantage, is without
equity.
சிந்தனைக்கு ஒரு அறிவாளி என்பவன் என்றுமே முட்டாள்களுக்கு மத்தியில் தான்
சொல்வது சரியே
என்று
தர்க்கம் செய்து
கொண்டிருக்க மாட்டான்… வீண்
வாதங்கள் என்றுமே வாழ்க்கைக்கு நன்மை
பயப்பது இல்லை.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
வை
-----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
|
|
வௌ
-----> கௌவுதல், கொள்ளை அடித்தல்
|
|
விடுகதை
விடையுடன்
ஒரு கிணற்றில்
ஒரே தவளை அது என்ன ?
நாக்கு
பழமொழி- நனைத்து சுமக்கிறதா?
பொருள்/Tamil Meaning பாரம் உலர்ந்திருக்கும்போது அதை
சுமந்து செல்லாதவன் அது
நனைந்து மேலும்
சுமையானபோது வருந்தினானாம்.
Transliteration Nanaittu sumakkiratha?
தமிழ் விளக்கம்/Tamil Explanationஇப்போதைக்குப் பெரிய
கெடுதல் ஒன்றும் இல்லை
என்பதற்காகத் தன்
தவறுகளைக் களைவதை
ஒத்திப்போட்டவனைக்குறித்துச் சொன்னது. வீட்டின் மராமத்து வேலகளை
இப்போதைக்கு அவ்வளவு மோசம்
இல்லை
என்று
ஒத்திப்போடுபவனுக்கும் இது
பொருந்தும். முன்னவனுக்கு அவன்
தவறும்
பின்னவனுக்கு அவன்
செலவும் நாளை
பெரிய
சுமையாகிவிடும் என்பது
செய்தி.
Enrich your vocabulary
Proverb A cat has nine lives.
Cat can survive seemingly fatal
events.
Example:
I haven’t seen him for several weeks, but I wouldn’t really worry about him.
Everyone knows a cat has nine lives.
Opposite Words
He X
She
Opposite
words examples:
- It was he who first suggested the idea.
- I saw you talking to that girl. Who is she?
Healthy
X Sick
- I’ve always been perfectly healthy until now.
- Maria can’t come in today because she’s sick.
மொழிபெயர்ப்பு
ஒரு
வகை
முள்ளங்கி
|
|
ஒரு
வகை
சிறியக்காய்
|
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl
+ End
|
ஒரு டாக்குமெண்டில் இறுதிக்கு செல்ல
|
Ctrl
+ 1
|
சிங்கிள் ஸ்பெஸ் லைன் கொடுக்க
|
இனிக்கும் கணிதம் .. நீட்டல் அளவை
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை
அறிவியல் அறிவோம்
சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் - பெக்மென் சாதனம்
கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல்
தினம் ஒரு மூலிகை கோபுரம் தாங்கி
கோபுரம் தாங்கி (False
Waterwillow, உயிரியல் பெயர்: Andrographis
echioides)[1] என்பது தமிழக மூலிகைச் செடிகளில் ஒன்றாகும். இது தமிழகத்தில் அழிந்து
வரும் இனமாகக் கருதப்படுகிறது. பாறை இடுக்குகளிலும், இடிந்த
சுவர்களிலும், பரவலாக அனைத்து தமிழகக் கிராமங்களிலும்
காணப்படுகிறது. இதன் விதைப்பை நீர் பட்டவுடன் வெடித்து பரவும் தன்மைக் கொண்டதாக
இருக்கிறது. இதன் இலை, வேர் என்பன பயன் தரும்
பாகங்களாகும். சித்த மருத்துவத்தில் தலைப்பொடுகு, முடி உதிர்தல்,
தலைச்சூடு தணிப்புக்கும், தலைப்
புழுவெட்டுக்கும், முடிவளர்ச்சிக்கும் பயனாகுமென
குறிப்புகள் உள்ளன. சம அளவு நல்லெண்ணெயுடன் கலந்து
தைலம் காய்ச்சி பயன்படுத்துவது சிறப்பாகக் கூறப்படுகிறது.
உணவு – மனிதனின் ஆற்றல் சிதைவுறுதலைப் பாதிக்கும் காரணிகள்
அ. வேலையின் அளவு
: ஒருவர் அதிக உற்சாகத்தோடு வேலையிலோ,
விளையாட்டிலோ ஈடுபட்டிருந்தால், அதிக வெப்பம் உருவாக்கப்படுகிறது.
இது உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது.
ஆ. வெளிப்புறவெப்பநிலை : உடலின் வெப்பநிலைக்கும்
சுற்றுப்புற வெப்பநிலைக்கும் அதிக வேறுபாடு காணப்படும்போது,
வெப்ப இழப்பும் அதிகமாக இருக்கும்.
கர்ப்பகாலம் : கர்ப்பகாலத்தின் போது கருவின் வளர்ச்சி,
நச்சுக்கொடியின் வளர்ச்சி, அதிக அளவு இரத்தத்தின்
காரணமாக அதிக ஆற்றல் தேவைப்படும்.
வரலாற்றுச்
சிந்தனை வரலாற்று அறிஞர்கள் அறிவோம்: ஜவஹர்லால் நேரு
விடுதலை போராட்டத்தில்
நேரு:
1917 - நவம்பர் 19 அன்று
இந்திரா பிரியதர்சினி பிறந்தார்.
1919 - 1932 வரை The Independent என்ற செய்தித்தாளை
நடத்தினார்.
1929 - இல் காந்தியின்
வழிகாட்டுதலின் படி லாகூர் காங்கிரஸ்
மாநாட்டிற்கு தலைமைத் தாங்கி நடத்தினார். பூரண சுயராஜ்ஜியம் தீர்மானத்தை
நிறைவேற்றினார்.
1937 - பெய்ஸ்பூர் - காங்கிரஸ்
மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். (கிராமத்தில் நடந்த முதல் மாநாடு).
தன்னம்பிக்கை
கதை- நாட்டரசன்புரம்
என்ற நாட்டை மார்த்தாண்டன் என்ற மன்னன் ஆண்டார்.
அவர் தனது நாட்டில் பல
சிரமங்களுக்கிடையில் மிகப் பெரிய பூந்தோட்டம் ஒன்றை அமைத்தார். அதில் எல்லாவகையான பூச்செடிகளையும் வளர்த்தார். பல நிறத்தில் பூமரங்களையும்
அமைத்தார். பூமரங்களை ஒட்டி நல்ல காய், கனிகளைத்
தரும் மரங்களையும் அமைத்தார். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்ற புற்களையும், புல்லின்
நடுவே தரையில் படரும் சிறிய பூச்செடி வகையும் வளர்த்தார்.
மரங்களிலும் புதர்களிலும் உயர்ந்த சாதிப்
பறவைகளையும், முயல்,
அணில்
போன்றவைகளையும் வளர்த்தார். வைரத்தை தங்கத்தில் பதித்தது போல
பொன்னிற புள்ளி
மான்கள் அந்தத்
தோட்டத்தில் அங்குமிங்கும் துள்ளியோடின.
அந்தத்
தோட்டத்தைக் கண்டால் மனம்
அமைதியடையும். கவலைகள் மறந்து
போகும்.
அப்படி
ஒரு
அற்புதமாக அந்த
தோட்டம் அமைந்து இருந்தது. அந்தத்
தோட்டத்தைக் காணவும், ரசிக்கவும் பல
தேசத்து ராஜாக்களும் சிற்றரசர்களும் வருவர்.
அவர்களை மன்னர்
வரவேற்று உபசரிப்பார். அவர்கள் தோட்டத்தைச் சென்று
காண்பர்; பிரமிப்பர். இத்தனை
பெரிய
இடத்தை
வளைத்து இத்தனை
எழிலான
ஒரு
தோட்டத்தை அமைக்க
முடியுமா? என்று
வியப்பர். எனினும் அந்தத்
தோட்டத்தைச் சுற்றி
பார்த்துக் கொண்டே
வரும்
போது
ஒரு
குறிப்பிட்ட இடத்திற்கு வரும்போது முகம்
சுளிப்பர்.
ஏனென்றால் அந்த
இடத்தில் ஒரு
பிரிந்தும் பிரியாததுமாக கிழிந்த காய்ந்த, ஓலைகளுடன் கூடிய
ஒரு
சிறு
குடிசை
இருந்தது. அந்தக்
குடிசையின் சுற்றுச் சுவர்கள் வெறும்
களிமண்ணால் பிசைந்து கட்டப்பட்டு இருந்தது. அந்த
ஓலைக்
குடிசையை சுற்றி
துவைக்கும் கல்லும், முக்கூட்டுக் கற்களால் அடுக்கப்பட்ட ஒரு
சிறு
அடுப்பும், ஏழெட்டு நைந்து
போன
துணிமணிகளும், அலுமினியக் குவளைகளும் கிடக்கும். குடிசையை சுற்றி
நாகவாளி செடி
நிறைந்து இருக்கும்.
இத்தனை
அற்புதமான ஒரு
தோட்டத்தின் நடுவே
இத்தனை
கோரமான
பஞ்சக்குடிசை ஒன்று
ஏன்
உள்ளது
என்ற
யாருக்குமே புரியவில்லை. எனினும் அந்தக்
காரணத்தை பேரரசரிடம் கேட்கும் தைரியமோ அல்லது
அந்தக்
குடிசை
இருப்பது தோட்டத்தின் எழிலைக் கெடுப்பதாக உள்ளது
என்று
கூறவோ
யாருக்கும் துணிவே
வரவில்லை. நாட்கள் சென்றன.
மகிபாலன் என்றொரு சிற்றரசன் அந்த
தோட்டத்தைக் காண
வந்தான். வழக்கம் போல
மன்னருடன் சேர்ந்து தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தபடி அரசனைப் பலவிதமாகப் புகழ்ந்தபடி வந்தான்.
திடீரென அவன்
கண்கள்
குடிசையைக் கண்டது.
உடனே
முகம்
வாடினான். அத்தனை
எழிலான
தோட்டத்தில் இப்படி
ஒரு
ஏழ்மை
தோற்றமுடன் கூடிய
குடிசை
ஒன்று
இருப்பதற்கு ஏதோ
ஒரு
காரணம்
இருக்க
வேண்டும் என்று
நினைத்தான்.
உடனே
அரசரிடம், “”மன்னா
இந்த
எழிலான
தோட்டத்தில் இப்படியொரு எளிய
குடிசை
இருப்பதன் காரணம்
என்ன?”
என்று
கேட்டான்.
உடனே
மன்னன்,
“”மகிபாலா! இந்த
குடிசை
உன்னைப் போன்ற
ஒரு
தைரியசாலியின் குடிசை.
நான்
எட்டு
ஆண்டுகளுக்கு முன்
இந்தத்
தோட்டத்தை உருவாக்க முயன்றபோது ஒரு
பெரிய
பரப்பளவுடன் கூடிய
இடம்
எனக்கு
மிகவும் அவசியமாகியது. நாடு
முழுக்க அமைச்சர் அந்த
மாதிரி
ஒரு
இடத்தைத் தேடிய
போது
இந்த
இடம்
அகப்பட்டது. ஆனால்,
பெரிய
இடத்திற்கு நடுவே
இந்த
குடிசையும் இருந்தது.
“”இதில் இருந்த ஏழைக்
கிழவியிடம், நீ
இந்தக்
குடிசையை காலி
செய்ய
வேண்டும். இங்கு
மன்னர்
மிகப்
பெரிய
பூந்தோட்டம் அமைக்க
இருக்கிறார்,” என்று
கூறியபோது கிழவி
மறுத்திருக்கிறாள். விபரமறிந்த நான்
நேரில்
வந்து,
“”இடத்தை
காலி
செய்,”
என்று
கூறினேன். ஆனால்
அந்த
பெண்ணோ,
“”மன்னா!
இது
என்பாட்டன் பூட்டன் காலத்து குடிசை.
இதைத்
தாங்கள் அழிப்பதை நான்
விரும்பவில்லை. என்
உயிரே
போனாலும் இதனை
இடிக்கவோ, ஓலைகளைப் பிரித்தெறியவோ நான்
மனதார
ஒப்புக் கொள்ள
மாட்டேன். படைபலம் நிறைந்த நீங்கள் நினைத்தால் என்னை
ஒரே
நிமிடத்தில் கொன்றுவிடலாம்.
“”நான் இறந்த பின்பு
இந்த
இடத்தை
நீங்கள் இடித்து, சிதைத்து உமது
தோட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால்,
நான்
இறந்தாலும் எனது
பூர்வீகக் குடிசையை அழித்து என்
மனதில்
வேதனையை ஏற்படுத்தியதற்காக தங்களுக்கு இறைவன்
நிச்சயம் தண்டனையைத் தந்தே
தீருவார்,” என்று
கூறி
அழுதார்.
“”அவள் கண்ணீரில் இருந்த
நியாயமும் பூர்வீக நினைவுச் சின்னத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் மனோ
தைரியத்தால் என்னை
எதிர்த்து அவள்
பேசிய
வீரமும் என்
மனதை
நெகிழ
வைத்தது. அவள்
மன
உணர்வை
மதித்து, நான்
இந்தக்
குடிசையை அகற்றாமல் இந்தத்
தோட்டம் உருவாக்கிய நான்கு,
ஐந்து
ஆண்டுகளில் அந்தக்
கிழவி
இறந்துவிட்டாள். “”அவளுக்குப் பின்
இந்தக்
குடிசையை ஆள
யாரும்
சந்ததிகள் இல்லை.
என்றாலும் அந்தக்
கிழவியின் உணர்வுக்கும், வீரத்திற்கும் ஒரு
மதிப்பு தர
எண்ணி
இந்தக்
குடிசையை அகற்றவில்லை,” என்றார்.
பேரரசரின் பெருந்தன்மையையும், நல்ல
பண்பையும் மகிபாலன் வியந்து பாராட்டினான்.
குழந்தைகளா!… மனிதர்களாகிய நாம்
மற்றவர்களின் மன
உணர்வுகளை மதிக்க
வேண்டும். யாரையும் மனம்
நோகச்
செய்தல் தவறு.
மன்னரின்பெருந்தன்மையானகுணத்தை நீங்களும் கடைபிடிக்க வேண்டும்.செய்வீர்களா?
விஞ்ஞானம் அறிவோம் /
செய்துபார்த்து அறிவோம்
இணையம் அறிவோம் விஞ்ஞானிகளை அறிவோம்
தொகுப்பு
No comments:
Post a Comment