அறிவுக்கு விருந்து – 03.12.2019 (செவ்வாய்)


அறிவுக்கு விருந்து – 03.12.2019 (செவ்வாய்)
வரலாற்றில் இன்று -டிசம்பர் 3 (December 3) கிரிகோரியன் ஆண்டின் 337 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 338 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·  1592முதலாவது ஆங்கிலக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.[1]
·  1795ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.[1]
·  1799வீசுலொக் சமரில் ஆஸ்திரியப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது.
·  1800மியூனிக்கு அருகில் ஓகன்லிண்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தன.
·  1818இலினொய் அமெரிக்காவின் 21-வது மாநிலமாக இணைந்தது.
·  1903சேர் என்றி பிளேக் பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக நியமனம் பெற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.[1]
·  1904வியாழனின் நிலா இமாலியா கலிபோர்னியாவின் லிக் வான்காணகத்தில் சார்ல்சு பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
·  1910நவீனகால நியான் ஒளி முதற்தடவையாக பாரிசில் காட்சிப்படுத்தப்பட்டது.

பிறப்புகள்

·  1795ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (. 1879)
·  1833கார்லோஸ் பின்லே, கியூபா மருத்துவர் (. 1915)
·  1857ஜோசப் கொன்ராட், போலந்து-ஆங்கிலேய எழுத்தாளர், போர்வீரர் (. 1924)
·  1871நா. கதிரைவேற்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (. 1907)
·  1886மன்னே சீகுபான், நோபல் பரிசு பெற்ற சுவீடிய இயற்பியலாளர் (. 1978)
·  1889குதிராம் போஸ், வங்காளப் புரட்சியாளர் (. 1908)
·  1900ரிச்சர்ட் குன், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமன் வேதியியலாளர் (. 1967)
·  1925கிம் டாய் ஜுங், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்கொரிய அரசுத்தலைவர்
·  1928மகாராஜபுரம் சந்தானம், கருநாடக இசைப் பாடகர் (. 1992)
·  1931விஜய்குமார் மல்கோத்திரா, இந்திய அரசியல்வாதி

இறப்புகள்

·  1552பிரான்சிஸ் சவேரியார், எசுப்பானிய மதப்பரப்புனர் , புனிதர் (பி. 1506)
·  1882ஜேம்ஸ் சால்லிஸ், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1803)
·  1894ஆர். எல். இசுட்டீவன்சன், இசுக்கொட்டிய எழுத்தாளர் (பி. 1850)
·  1969கோவைக்கிழார், தமிழகத் தமிழறிஞர், வழக்கறிஞர் (பி. 1888)
·  1979தியான் சந்த், இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் (பி. 1905)

சிறப்பு நாள்

 குறளறிவோம்-  118. நடுவு நிலைமை / Impartiality
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.
மு.வரதராசனார் உரை:முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
Translation: To stand, like balance-rod that level hangs and rightly weighs,
With calm unbiassed equity of soul, is sages' praise.
Explanation:  To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise.
சிந்தனைக்கு    நாளை எல்லாம் மாறும் என்று உனக்குள்ளே ஆறுதல் சொல்வதையும் வீண் கனவு காண்பதையும் விடுத்து இன்று என்ற இந்த நிஜ உலகினில் உன் முயற்சியை கையாள பழகிக்கொள்.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
நாண்: வெட்கப்படு, கயிறு                                            மெய்: உடல், மெய்யெழுத்து
விடுகதை விடையுடன்
முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன? நட்சத்திரங்கள்
பழமொழி- எள்ளு என்கிறதுக்குமுன்னே, எண்ணெய் எங்கே என்கிறான்?
பொருள்/Tamil Meaning எள்ளைக் கொடுத்தால் உடனே அதில் எண்ணையை எதிர்பார்க்கிறான்.
Transliteration Ellu enkirathukkumunne, yennai enke enkiran?
தமிழ் விளக்கம்/Tamil Explanation தேவையில்லாமல் அவசரப்படுபவர்களைக் குறித்துச் சொன்னது. இதே பழமொழி கொஞ்சம் மாறுபட்ட வடிவில், "எள் என்பதற்கு முன்னே எண்ணெயாய் நிற்கிறான்" என்று, குருவை மிஞ்சிய சீடனாக நிற்கும் ஒருவனைக் குறித்து வழங்குகிறது. இத்தகையவன் வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருவான்.
Enrich your   vocabulary
wing பறக்கச் செய்
wink இமை கொட்டு , கண் மூடித்திற
winnow  தூற்று

Proverb A fool and his money are soon parted.

Foolish people do not know how to hold on to their money.
Example: She gave up her entire estate on the basis of a verbal promise. A fool and his money are indeed easily parted.

Opposite Words 

Ignorant X Educated
  • He’s ignorant about modern technology.
  • The boy came from a good home, was well educated and had every advantage.
Important X Unimportant
  • Happiness is more important than money.
  • The exact details are unimportant.
மொழிபெயர்ப்பு
பிசுக்கங்காய்/ பீர்க்கங்காய்
ஒரு வகை பெரிய இலைக்கீரை
கணினி ஷார்ட்கட் கீ
 F1
ஹெல்ப் பாக்ஸ் ஓபன் செய்ய
F7
தேர்வு செய்த எழுத்து ( ) லைன்னில் உள்ள க்ராமர் தவறு கண்டுப்பிடிக்க
இனிக்கும் கணிதம்      .. முகத்தல் அளவு..
5 செவிடு - 1 ஆழாக்கு                           2 ஆழாக்கு - 1 உழக்கு               2 உழக்கு - 1 உரி
அறிவியல் அறிவோம்
·         திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி - கொள்கலன்
·         வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
தினம் ஒரு மூலிகை சீமை மீன்கொல்லி (Cyclamen purpurascens) இது ஒரு பூக்கும் நீர் தாவரம் ஆகும். இவற்றின் குடும்பப் பெயர் பெரிமலெசிஸ் (Primulaceae) என்பதாகும். இத்தாவரத்தின் பூர்வீகம் மத்திய ஐரோப்பா, வடக்கு இத்தாலி, மற்றும் ஸ்லோவேனியா ஆகிய பகுதிகள் ஆகும். இதன் அதிகப்படியான வேர்களில் கிழங்கு தோன்றுகிறது. இக்கிழங்கு மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது. இத்தாவரம் கோடைகாலத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் பூப்பூக்கும்
உணவு     மனிதனின் ஆற்றல் சிதைவுறுதலைப் பாதிக்கும் காரணிகள்
பாலிசாக்கரைடுகள்
இவை அநேக மோனோசாக்கரைடுகள் சேர்ந்து உருவானவை. இவை பெரும்பாலும் நீரில் கரையாதவை அல்லது பகுதியாக கரையும். ஸ்டார்ச், கிளைக்கோஜன், டெக்ட்ரின் மற்றும் நார்ச்சத்து போன்றவை முக்கியமானவை.
ஸ்டார்ச் : இது அதிக அளவிலான குளுக்கோஸ் சேர்ந்து உருவாகிறது.
கிளைக்கோலன் : இது கல்லீரலிலும், தசைகளிலும் காணப்படும் கார்போஹைடிரேட் ஆகும். இது மிருக மாவுச்சத்து (Animal starch) என்றும் அழைக்கப்பெறும்.
வரலாற்றுச் சிந்தனை  நேருவின் முக்கியமான சாதனைகள்:
1953 - இல் UGC அமைக்கப்பட்டது.
1954 - இல் பஞ்ச சீலக் கொள்கையை வெளியிட்டார்.

தன்னம்பிக்கை கதை- கரும்பாயிரத்தின் கவலை!

கரும்பாயிரத்துக்கு ஜோசியத்தில் தீவிர நம்பிக்கை உண்டு. அதனால் தன் ஜாதகத்தை ஜோசியம் தெரிந்தவர்களிடம் தவறாமல் காட்டுவான்; தன்னுடைய எதிர்காலத்தை பற்றி அவர்கள் சொல்வதை கவனமாக கேட்டு குறித்துக் கொள்வான். அவர்கள் சொல்லியபடி தான் நடக்கும் என்ற அசைக்க முடியாத எண்ணம் அவன் மனதில் வந்துவிட்டது.பிரபல ஜோசியர் ஒருவர் அவன் ஊருக்கு ஒரு முறை வந்திருந்தார். அந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் தன் ஜாதகத்தை எடுத் துக் கொண்டு அவரிடம் ஓடினான் கரும்பா யிரம். அவனிடமிருந்து இருநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு அவன் எதிர்காலத்தை பற்றிய சில முக்கியமான தகவல்களை கூறினார் அந்த ஜோசியர்.
எதிர்கால பலன்களை ஜோசியர் சொல்ல கேட்ட கரும்பாயிரம் இடிந்து போய் உட்கார்ந்து விட்டான். அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவனுக்கு பயங்கரமான கஷ்ட காலம் தான். அதற்கு பரிகாரம் ஏதாவது உண்டா என்று அவரிடம் கந்தசாமி கேட்ட போது, “”நீ கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை,” என்று கைவிரித்து விட்டார் ஜோசியர். அதற்கு பின் எதுவும் செய்ய தோன்றாமல் சோர்ந்து போனான். வாடிப்போன முகத்துடன் நீண்ட நேரம் சென்று வந்த கரும்பாயிரத்தை, அவன் மனைவி கண்ணம்மா சிரித்த முகத்துடன் வரவேற்றாள். “”கண்ணம்மா! இனிமேல் நமக்கு கஷ்டகாலம் தான். உன் முகத்தில் இந்த சிரிப்பு இனிமேல் இருக்குமா என்பது சந்தேகம்தான்!” என்று விரக்தியுடன் சொல்லிவிட்டு, வீட்டின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.
என்னங்க! அந்த ஜோசியர் ஏதாவது சொல்லிவிட்டாரா? உங்களை பிடிச்சிருக்கும் இந்த ஜோசிய பைத்தியம் என்னிக்குத்தான் போகுமோ? அப்படியே கப்பல் கவுந்த மாதிரி கன்னத்தில் கை வைச்சுட்டு உட்காராதீங்க. நாளைக்கு வேலைக்கு போகணும். படுத்து உறங்கினா கவலையெல்லாம் தன்னால பறந்து போய்விடும்,” என்று கணவனுக்கு ஆறுதல் சொன்னாள்.
கண்ணம்மா! ஒருத்தனுடைய ஜாதகப்படி தான் எல்லாம் நடக்கும். அதுல ஒருத்தன் கஷ்டப்படணும்னு எழுதியிருந்தா அவன் கஷ்டப்பட்டுதான் ஆக வேண்டும். தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது,” என்று ஆணித்தரமாக கூறினான் கரும்பாயிரம்.
கணவனின் மனதை என்ன சொன்னாலும் மாற்ற முடியாது என்று கண்ணம்மாவுக்கு தெரியும்.
சரி அதுக்கு என்ன இப்போ? கஷ்டம் வந்தா கஷ்டப்பட்டுட்டு போறோம். அதுக்காக இப்பவே கண்ணீர் சிந்தணுமா? அடுத்தாப்புல செய்ய வேண்டிய வேலையை பாருங்கே,” என்று விஷயத்தை அதோடு முடித்து வைத்தாள். இருந்தாலும் கண்ணம்மாவின் மனதில் கவலை வந்துவிட்டது. பொழுது விடிந்தது. கந்தசாமிக்கு ஜோசியர் சொன்னதே மனதில் ஒலித்துக் கொண்டிருந்தது. “எப்படி கஷ்டப்பட போகிறோமோ தெரியலையோ!’ என்று நினைத்தபடி சோர்வுடன் படுக்கையை விட்டு எழுந்தான்.
என்னங்க! அந்த ஜோசியர் எங்க இருக்காரு? அவருடைய விலாசத்தை சொல்லுங்க. என்னோட ஜாதகத்தை அவரிடம் சென்று காட்டி, பலன் கேட்டு வருகிறேன்,” என்று கேட்டாள் கண்ணம்மா. “வேண்டாம் கண்ணம்மா! எனக்கு கஷ்டம்னா உனக்கு மட்டும் நல்லது நடக்குமா? ஜோசியருக்கு வேறு செலவு செய்ய வேண்டாம்,” என்று அலுத்துக் கொண்டான் கரும்பாயிரம். “சரி வேண்டாம் விடுங்க. எனக்கு தெரிந்த இன்னொரு ஜோசியரிடம் காசு இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க குளித்து, சாப்பிட்டு விட்டு வேலைக்கு கிளம்புங்க,” என்று வேலையை கவனிக்க சென்றாள் கண்ணம்மா?
வேலை முடித்து மாலை ஆறு மணிக்கு வந்தான் கரும்பாயிரம். அவன் களைப்பு தீர, சூடாக டீ கொடுத்தாள் கண்ணம்மா. கரும்பாயிரம் முகத்தில் வருத்தம் நிறைந்து இருந்தது.
நான் இன்னிக்கு அந்த ஜோசியரிடம் போயிட்டு வந்துட்டேன். என் ஜாதகத்திலே என்ன இருக்கு தெரியுமா? நான் இன்னும் இரண்டு வருஷத்தில் புது வீடு கட்டி, அதில் குடியேற வேண்டுமாம்,” என்றாள் கண்ணம்மா.
உளராதே கண்ணம்மா! ஏற்கனவே எனக்கு கஷ்டகாலம் ஆரம்பித்துவிட்டது. கையில் வீடு கட்டும் அளவுக்கு பணம் இல்லை. வசதி படைச்சவங்க மட்டும்தான் வீடு கட்ட முடியும். அதெல்லாம் நமக்கு கனவுதான்,” என்று அக்கறை இல்லாமல் சொன்னான் கந்தசாமி. “இத பாருங்க! எல்லாம் விதிப்படி நடந்துதான் தீரும். நமக்கு சொந்தமாக அரை கிரவுண்டு நிலம் இருக்கு இல்லையா? நல்ல நாளாக பார்த்து வீடு கட்டற வேலையை ஆரம்பிக்க வேண்டும். இல்லேன்னா எனக்கு கெட்ட கோபம் வரும்,” என்று அழ ஆரம்பித்தாள் கண்ணம்மா. “ஜோசியர் சொன்னது சரியாகத் தான் இருக்கு. நீ பிடிவாதக்காரி ஆச்சே! நீ நினைத்ததை செய்து முடிக்கலைன்னா என்னை நிம்மதியா இருக்க விடமாட்டயே! எனக்கு கஷ்டகாலம் ஆரம்பித்துவிட்டது. வீடு கட்டறதுன்னா லேசான விஷயமா? சரி பார்க்கலாம்,” என்று மனைவியை சமாதானப்படுத்தினான்.
கண்ணம்மா அதோடு விட்டு விடவில்லை. கரும்பாயிரத்தை சும்மா இருக்க விடாமல் அடுத்தடுத்து செய்ய வேண்டியதை செய்ய வைத்தாள். வீடு கட்டும் வேலை ஆரம்பமாகியது. கரும்பாயிரம் வேலை செய்யும் இடத்திலும், வங்கியிலும் கடன் வாங்கி கட்டட வேலைகளை பாதியில் நின்று விடாமல் பார்த்து கொண்டான். அதனால், அவனுக்கு ஏகப்பட்ட அலைச்சல், கவலை எல்லாம் ஏற்பட்டன. எப்படியாவது வீடு கட்டி முடித்துவிட வேண்டும் என்று இரவு , பகல் பாராமல் கடுமையாக உழைத்தான் கரும்பாயிரம்.
சரியாக இரண்டு வருடம் சென்றது. கரும்பாயிரம் புதிய வீட்டை கட்டி முடித்திருந்தான். அந்த வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டான். இன்னொரு பகுதியை வாடகைக்கு விட்டான். இன்னொரு பகுதியில் தன் குடும்பத்துடன் குடியேறினான். பிறகு ஒரு வழியாக நிம்மதி பெருமூச்சுவிட்டான்.
கண்ணம்மா! ஜோசியர் சொன்னது எவ்வளவு சரியாக இருந்தது பார்த்தியா? இந்த ரெண்டு வருஷமும் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் எப்படியோ கஷ்டப்பட்டு இந்த வீடு கட்டிவிட்டேன். இனிமேல் கவலைப்பட வேண்டாம்,” என்று சொன்ன கணவனை பார்த்து சிரித்தாள் கண்ணம்மா. “ஜோசியர் சொன்னது ஒண்ணும் பலிக்கவில்லை எல்லாம் நான் போட்ட திட்டம்தான்! நான் என் ஜாதகத்தை எந்த ஜோசியரிடமும் எடுத்து செல்லவில்லை. என் ஜாதகப்படி இரண்டு வருஷத்தில் வீடு கட்ட வேண்டும் என்று உங்களிடம் பொய் சொன்னேன். உங்கள் கவனத்தை நல்ல வழியில் திருப்ப விரும்பினேன். ஜோசியர் சொன்னதையே நினைத்துக் கொண்டு நீங்கள் சோர்வடைய கூடாது என்பதற்காக அப்படி பொய் சொன் னேன். இப்போது சொல்லுங்கள், நீங்கள் உண்மையிலேயே கஷ்டத்தை அனுபவித்தீகளா?” என்று கேட்டாள் கண்ணம்மா. “ஆமாம்! வீடு கட்டுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என்று விட்டுக் கொடுக்காமல் சொன்னான் கரும்பாயிரம்.
நிச்சயமாக இல்லை. எப்போ வீடு கட்டினாலும் நீங்கள் இதே அளவு சிரமப்பட வேண்டும்தானே? மற்றபடி உங்களுக்கு வேறெந்த கஷ்டமும் இல்லையே? நீங்கள் பட்ட கஷ்டம் இன்று வீடு ஆகிவிட்டது. எந்த நஷ்டமும் வரவில்லையே! உண்மையில் கஷ்டம் என்றால், நாம் இருந்த நிலையை விட மோசமாக போயிருக்க வேண்டும். இன்று நாம் முன்னை விட நன்றாக, வசதியாக இருக்கிறோம். சரிதானே!” என்று கணவனுக்குவிவரமாக விளக்கினாள் கண்ணம்மா. அப்போதுதான் கரும்பாயிரத்துக்கு மனைவியின் புத்திசாலித்தனம் புரிந்தது. “”விதியை மதியால் வென்று விடலாம்என்பதை நிரூபித்துவிட்டாள் என் மனைவி. நான் ஜோசியர் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தால் மனதாலும், உடலாலும் உற்சாகம் இழந்திருப்பேன். நிச்சயம் கஷ்டப்பட்டிருப்பேன். உடலால் உழைப்பிற்கு பலன் நிச்சயம் உண்டு. எனக்கு இப்போது ஒரு சொந்த வீடு கிடைத்துவிட்டது. நன்றி கண்ணம்மா,” என்று பெருமிதம் கொண்டான் கரும்பாயிரம்

விஞ்ஞானம் அறிவோம் / செய்துபார்த்து அறிவோம்

இணையம் அறிவோம்
தொகுப்பு