வரலாற்றில் இன்று
செப்டம்பர் 21 (September 21) கிரிகோரியன்
ஆண்டின் 264 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில்
265 ஆம் நாள்.
நிகழ்வுகள்
1170 – டப்லின் இராச்சியம்
நோர்மன்களின் முற்றுகைக்கு உள்ளானது.
1776 – நியூயார்க்
நகரம் பிரித்தானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து நகரின் ஒரு பகுதி
தீக்கிரையானது.
1792 – பிரெஞ்சுப்
புரட்சி: பிரான்சில்
முடியாட்சி
அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.
1860 – இரண்டாம்
அபினிப் போர்: ஆங்கிலேய-பிரெஞ்சுப் படைகள் சீனப் படைகளைத்
தோற்கடித்தனர்.
1896 – பிரித்தானியப்
படைகள் சூடானின்
டொங்கோலா நகரைக் கைப்பற்றினர்.
பிறப்புகள்
1832 – லூயி பால்
கையேட்டே, பிரான்சிய இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர்
1853 – ஹெய்க்
காமர்லிங் ஆன்ஸ், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர்
1866 – எச். ஜி.
வெல்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர், வரலாற்றாளர் (இ. 1946)
1909 – குவாமே நிக்ரூமா,
கானாவின் அரசுத்தலைவர் (இ. 1972)
இறப்புகள்
1743 – இரண்டாம்
ஜெய் சிங், ஜெய்ப்பூர் அரசர் (பி. 1688)
1950 – ஆர்த்தர்
மில்னே, பிரித்தானிய வானியற்பியலாளர், கணிதவியலாளர்
1958 – பி. எஸ். பாலிகா, இந்திய எழுத்தாளர், பதிப்பாளர் (பி. 1908)
சிறப்பு நாள்
·
விடுதலை நாள் (ஆர்மீனியா,
சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)
·
விடுதலை நாள் (பெலீசு,
ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1981)
·
விடுதலை நாள் (மால்ட்டா,
ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1964)
குறளறிவோம்- 74 . அன்புடைமை
அன்புஈனும்
ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
கலைஞர்
மு.கருணாநிதி உரை:
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும்
அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.

Translation: From love fond
yearning springs for union sweet of minds;
And that the bond of rare excelling friendship binds.
And that the bond of rare excelling friendship binds.
Explanation: Love begets desire: and that (desire) begets
the immeasurable excellence of friendship.
சிந்தனைக்கு
வாழ்க்கையில் நாம் நாள்தோறும் பேசும்
வார்த்தைகளில் நடக்காது, முடியாது, கிடைக்காது, போன்ற எதிர்மறையான வார்த்தைகளை
பயன்படுத்தாதீர்கள்.
நீங்கள் கூறும் சொற்கள் அனைத்தும் சக்தி வாய்ந்தவை, எப்போதும் நேர்மறையான வார்த்தைகளையே பயன்படுத்துங்கள்.
நீங்கள் கூறும் சொற்கள் அனைத்தும் சக்தி வாய்ந்தவை, எப்போதும் நேர்மறையான வார்த்தைகளையே பயன்படுத்துங்கள்.
தமிழ்
அறிவோம் ஒத்தச் சொற்கள்
ம
-----> சந்திரன், எமன்
மா
-----> மாமரம்,
பெரிய,
விலங்கு
மீ
-----> ஆகாயம்,
மேலே,
உயரம்
விடுகதை
விடையுடன்
ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி
ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம் அது என்ன?
- தேன்கூடு
பழமொழி பாட்டி பைத்தியக்காரி, பதக்கைபோட்டு முக்குறுணி என்பாள்.
பொருள்: கொடுத்தது கொஞ்சமேயானாலும் அதிக
அளவு
என்று
கூறுவது.
விளக்கம்: பைத்தியம் என்ற
சொல்லை
இன்று
நாம்
பெரும்பாலும் கிறுக்குத்தனம் என்ற
பொருளில் பயன்படுத்துகிறோம். அந்த
வார்த்தைக்கு மூடத்தனம் என்றும் பொருளுண்டு. பதக்கு
என்பது
இரண்டு
குறுணிகொண்ட ஓர்
அளவு.
குறுணி
என்பது
ஒரு
மரக்கால் அளவு.
Enrich your vocabulary
Opposite Words
Continue —— Interrupt
- Sheila continued to work after she had her baby.
- My studies were interrupted by the war.
Cool —— Warm
- The evening air was cool.
- I hope we get some warm weather soon.
மொழிபெயர்ப்பு
வெண்பூக்கோசு/ கவிப்பூ
|
|
சீவரிக்கீரை
|
Proverb
A bad work man blames his tools
ஆடத்தெரியாதவள் தெரு
கோணல்
என்றாளாம்
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl
+ Shift + *
|
பிரிண்ட் எழுத்துக்களை மறைக்க
|
Ctrl
+
|
ஒரு வார்த்தை இடது பக்கம் நகர்த்த
|
இனிக்கும்
கணிதம் முகத்தல் அளவு
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
அறிவியல் அறிவோம் – மூலிகைப் பொடிகள்
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
அறிவியல் அறிவோம் – மூலிகைப் பொடிகள்
*வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு
மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண்
நீங்கும்.
*சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு
கோளாறுகளுக்கு நல்லது.
அறிவியல் துளிகள் - எலெக்ட்ரான் - ஜெ.ஜெ.தாம்சன்
தினம் ஒரு மூலிகை - மணத்தக்காளி :
மணித்தக்காளி அல்லது மணத்தக்காளி என்பது சொலனேஸி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.
இது மணித்தக்காளி, கறுப்பு மணித்தக்காளி, மிளகு
தக்காளி மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக்
கொண்டும் குறிப்பிடப்படுகிறது. மணத்தக்காளி
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சுக்குட்டி கீரை எனவும் கூறப்படுகிறது. இதன்
தாவரவியல் பெயர் சொலனம் நைக்ரம். இது ஓராண்டுத்
தாவரம் ஆகும். இதிலுள்ள சத்துக்கள் மற்றும்
மருத்துவப் பண்புகள் காரணமாக இது உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்றதாது
உப்புக்கள் ஆகியன. இதை உட்கொள்வதன் மூலம் இதயம்,
நுரையீரல், கல்லீரல், மண்ணீரல்,
கணையம், வயிறு மற்றும் குடல்தொடர்பான பல நோய்களுக்கு உகந்தது என்பது மரபாக அறியப்படுவது. வாய்ப்புண்
மற்றும் வயிற்றுப்புண் குணமடைய இது ஒரு சிறப்பான மருந்தாகும், கீரையாக சமைத்தும் அல்லது அரைத்து சாறு எடுத்து பருகலாம்.
பழங்களும்
அவற்றின் பயன்பாடுகளும் – தக்காளி
லைக்கோபெர்சின் எஸ்குலன்டம் என்ற தாவரவியல் பெயர்
கொண்ட சோலனேசியே குடும்பத்தைச் சார்ந்த நன்கு பழுத்த சீமைத் தக்காளிப்பழத்தில் லைக்கோபீன் வகை கரோட்டினாய்டுகள் உள்ளன.
இவை வயிறு மற்றும் சிறுநீர்ப் பாதையில் தோன்றும் புற்றுநோய் செல்களை தடுக்கின்றன. தக்காளிப்பழச் சாற்றிலுள்ள அஸ்கார்பிக் அமிலம் செல் அழிவை தடுப்பதுடன்
சுண்ணாம்பு சத்தை நிலைநிறுத்துகின்றன. தக்காளிப்பழச்சாற்றிலுள்ள வலி நிவாரணத் தன்மை
உடல் வலியையும் குறைக்கிறது.
குறைந்தளவில் நன்கு நீரில் கலக்கப்பட்ட, இனிப்பூட்டப்பட்ட தக்காளிச்சாற்றை தொடர்ந்து குடித்துவர கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பாதையில் தோன்றும் கிருமித்தொற்று மற்றும் நச்சுக்கிருமிகள் நீங்கும்.
தக்காளியைப் பிழிந்து, விதை
மற்றும் தோலை
நீக்கி,
வடிகட்டி, வெறும்
சாற்றுடன் கற்கண்டு அல்லது
சீனி
கலந்து
சாப்பிடுவதாலும், நன்கு
பழுத்த
தக்காளிப்பழத்தை சிறு
சிறு
துண்டுகளாக நறுக்கி, சீனி
கலந்து
குழந்தைகளுக்கு கொடுப்பதாலும் உடல்
உஷ்ணம்
தணியும். தக்காளியை சூடு
செய்யாமல் வடிகட்டி அப்படியே சாப்பிடுவதால் சிறுநீர் கிருமித்தொற்று நீங்குகிறது.
ஆனால் தக்காளியை தோல்
மற்றும் விதையுடன் சேர்த்து உட்கொள்வதால் சிறுநீர்ப் பாதையில் சுண்ணாம்பு, யூரிக்
அமிலம்
மற்றும் பாஸ்பரஸ் சத்து
சேகரிக்கப்பட்டு, கற்கள்
உண்டாகிவிடுகின்றன. ஆகவே
பச்சை
தக்காளிச்சாறு உடல்
குளிர்ச்சிக்கு ஏற்றது.
சர்க்கரை நோயாளிகளுக்கு தொடர்ந்து வெப்பத்தாக்குதலை நீக்க
தக்காளியை அடிக்கடி உட்கொள்ளலாம். தக்காளியை தொடர்ந்து உட்கொள்வதால் உணவுப்பாதை, சிறுநீர்ப்பாதை மற்றும் புராஸ்டேட் கிளான்டில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோடைகாலத்தில் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் மறைய
தக்காளிச்சாற்றை முகத்தில் பூசி
வருவதால் தோல்
மென்மையடைவதுடன் குளிர்ச்சியும் உண்டாகும். ஆண்கள்
புற்றுநோயை தடுக்கும் தாக்காளி
வரலாற்றுச் சிந்தனை தைமூர் (கி.பி. 1370 - 1405)
மேற்கு ஆசியாவில் தனது ராணுவ வலிமையால் இன்றைய ஈரான், சிரியா முதல் ஆப்கானிஸ்தான் வரை பல பகுதிகளை ஆட்டி வைத்த மனிதர். மனிதர்களை ஒருவர் மீது ஒருவர் நிற்க வைத்து, சிமென்ட் பூசி கோபுரம் எழுப்பி டெர்ரர் காட்டியவர். அது மட்டுமா? தனக்கு எதிரான புரட்சியாளர்களை படுகொலை செய்து 70 ஆயிரம் மனிதத் தலைகளை வைத்து ஒரு கோபுரம் அமைத்து தான் வேற ரேஞ்ச் என நிரூபித்தார்.
ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.
இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.
இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது. "ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்" அதன் எஜமானன் கூறினான்.
"பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"
இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது
நீதி : அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.
No comments:
Post a Comment