அறிவுக்கு விருந்து – 05.09.2019 (வியாழன்)


அறிவுக்கு விருந்து – 05.09.2019 (வியாழன்)

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

வரலாற்றில் இன்று
செப்டம்பர் 5 (September- 5) கிரிகோரியன் ஆண்டின் 248 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 249 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·917லியூ யான் தன்னை பேரரசராக அறிவித்து தெற்கு ஹான் பேரரசை தெற்கு சீனாவில் உருவாக்கினார்.
·1661பதினான்காம் லூயி நாந்து நகரில் மசுகெத்தியர்களினால் கைது செய்யப்பட்டார்.
·1697பிரெஞ்சுப் போர்க்கப்பல் அட்சன் குடாவில் (இன்றைய கனடாவில்) ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தது.
பிறப்புகள்
·         1774காஸ்பர் டேவிட் பிரடெரிக், செருமானிய ஓவியர் (பி. 1840)
·         1872. . சிதம்பரம்பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (. 1936)
இறப்புகள்
·  1857ஆகஸ்ட் கோம்ட், பிரெஞ்சு மெய்யியாலாளர் (பி. 1798)
·  1906லுட்விக் போல்ட்ஸ்மான், ஆத்திரிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. 1844)
·  1982டக்ளஸ் பேடர், ஆங்கிலேய விமானி (பி. 1910)
சிறப்பு நாள்
  • பன்னாட்டு ஈகை நாள்
  • ஆசிரியர் தினம் (இந்தியா)
குறளறிவோம்-  61 - மக்கட்பேறு
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.
மு.வரதராசனார் உரை: பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.
Translation:   Of all that men acquire, we know not any greater gain, Than that which by the birth of learned children men obtain.
Explanation:  Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.
சிந்தனைக்கு
வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்                                                       
-----> சிவன் 
-----> தசை, இறைச்சி 
விடுகதை விடையுடன்
முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்? இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண். மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்? கண்மணி
பழமொழிகண்ணால் கண்டதை எள்ளுக்காய் பிளந்ததுபோலச் சொல்லவேண்டும்.
பொருள்: எள்ளுக்காய் முற்றிப் பிளக்கும்போது நெடுவாட்டில் சரிபாதியாகப் பிளவுபடும். அதுபோல கண்ணால் கண்டதை நடுநிலையுடன் விவரிக்கவேண்டும்.
விளக்கம்: இது ஒரு வழக்கில் சாட்சிக்குச் சொன்ன ஆலோசனை.
Enrich your   vocabulary
·         Sailed......நீர்வழிப்பயணம்செய்தல் 
·         Adventurous......தைரியமான 
·         Popular.... புகழ்பெற்ற 
·         Stabby......தடித்த 
Opposite Words 
Brother X Sister
  • My younger brother is a doctor.
  • My older sister is a nurse.
Busy X Idle
  • Mr. Haynes is busy with a customer at the moment.
  • The workers have been idle for the last six months.
மொழிபெயர்ப்பு
அல்பல்பா முளைக்கீரை
ஆர்றிச்சோக்

Proverb
Count not your chicken before they are hatched
பிள்ளை பெரும் முன் பெயர் வைக்காதே
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + E
செலெக்ட் செய்த லைன்- அலைன் செய்ய மற்றும் சென்டர் செய்வதற்கு  .
Ctrl + F
பைண்டு பாக்ஸ் ஓபன் செய்ய 
இனிக்கும் கணிதம்     ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்.
1/23654400 - மும்மி
1/165580800 -
அணு
1/1490227200 -
குணம்
1/7451136000 -
பந்தம்

அறிவியல் அறிவோம்  மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

அருகம்புல் பொடி           :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
நெல்லிக்காய் பொடி     :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது.
அறிவியல் துளிகள்
பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங்
தினம் ஒரு மூலிகை  -  பாரிஜாதம்
பவழமல்லி அல்லது பவளமல்லி அல்லது பாரிஜாதம் என்னும் இம்மரம் தென் - தென்கீழ் ஆசிய நாடுகளில் வளரும். பவழமல்லியின் அறிவியல் பெயர் Nyctanthes arbor-tristis ஆகும். இதன் மலர் தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலராக சிறப்பிடம் பெறுகின்றது். பவழ (பவள) நிறக் காம்பும் வெண்ணிறமான இதழ்களும் உடைய பூக்களைக் கொண்டது. இதற்குத் தனிச் சிறப்பான நறுமணம் உண்டு. குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும். இம்மரம் இருக்கும் இடமே நறுமணம் வீசும். இந்த மலரைச் சேடல் என்றும் குறிப்பிடுவர்.
சேடல் என்னும் மலர் மகளிர் தொகுத்து விளையாடிய மலர்களில் ஒன்று. வைகையாற்றுப் படுகையில் இது பூத்துக் கிடந்தது என்றும், மதுரையைக் காவல் புரிந்துவந்த நாற்பெரும் பூதங்களில் ஒன்று சேடல் மலரை அணிந்திருந்தது என்றும் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.இதற்குப் பாரிஜாத மலர் என்ற பெயர் உண்டு. சேடல் மலரை அறிஞர்கள் இக்காலப் பவள-மல்லி எனக் குறிப்பிடுகின்றனர். சேடல் என்னும் சொல்லில் செந்நிறத்தைக் குறிக்கும் வேர்ச்சொல் உள்ளது. பவள நிறம் என்பது செந்நிறம். பவளமல்லிப் பூவின் புறவிதழில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூவின் காம்பு சிவப்பாக இருக்கும். எனவே இதனைச் சேடல் எனல் பொருத்தமானதே.
இப்பூக்கள் இரவிற் பூத்து காலையில் உதிர்ந்து விடும். இதன் பழங்கள் தட்டையாக, வட்ட வடிவில் காணப்படும். இரு விதைகளைக் கொண்டிருக்கும். இம்மரத்தின் பூவின் வாசம் 100 அடி சுற்றளவுக்கு வீசும் தன்மை கொண்டது. இதன் பூ முன்னிரவில், அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் பூப்பதால் வடமொழியில் பிரம்மதர்ஷன் புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் கோடைகாலத்தில் உதிர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாட்டை வடிகட்டும் தன்மை கொண்டது.
பயன் : இலைகள் தளவாடங்களை மெருகேற்றத் தேய்ப்பதற்காகப் பயன்படும். பூவின் காம்பிலிருந்து பெறப்படும் பவளநிறச் சாயம் டுசார்(Tussar/Tussore Silk) பட்டு எனப்படும் பட்டுத்துணிகளுக்கு நிறமேற்றப் பயன்படும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் பவளமல்லி விதைகளும் இலைகளும் பூக்களும் வயிற்றுத் தொந்தரவு, மூட்டு/என்பு வலி, காய்ச்சல், தலைவலி என்பவற்றிற்கும் இன்னும் பல விதங்களிலும் மருந்தாகப் பயன்படுகின்றன.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் - பச்சை வாழைப்பழம்
பச்சை வாழைப்பழம், உண்பதால்  வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இதைச் சாப்பிடலாம்.
மஞ்சள் வாழைப்பழத்துடன் ஒப்பிடும்போது பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது. இதயநோயாளிகள் இதைச் சாப்பிடலாம். ஆனால் அதிக அளவு பொட்டாசியம் சத்து சிலரின் உடலுக்குப் பயனளிக்காது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
இரவில் படுக்கும் போது வாழைப்பழம் சாப்பிடுவதால் கை, கால்களில் உள்ள தசைப் பிடிப்பு குணமாகும். வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது செரிமான மண்டலத்திற்கு நல்லது. இதனால் மலச்சிக்கலை தவிர்க்கலாம். பச்சை வாழைப்பழம் நல்லகுளிர்ச்சியை தரும் கோடைக்காலத்தில் தாரளமாக உண்ணலாம். வாதம் நோயாளிகள் குரைத்து கொள்வது நல்லது.
வரலாற்றுச் சிந்தனை கோவை சுப்ரமணியம் என்கிற சுப்ரி 
1925இல் அகில இந்திய நூற்போர் சங்கம் திருப்பூரில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்க கதர் இயக்கத்தின் நாயகரான கோவை அய்யாமுத்து அவர்களோடு சேர்ந்து சுப்ரியின் பங்களிப்பு முக்கியமானது. இந்த சங்கம் திருப்பூரில் தொடங்கப்பட்ட காலத்துக்குப்பின் கதர் உற்பத்தில் பல கிராமங்களிலும் அதிகரித்தது. 1930இல் மகாத்மா காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட போது அந்த போராட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களும் சுப்ரி கோவையில் ஊர்வலங்களை நடத்தினார்
அன்னிய துணி எதிர்ப்பு மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டங்களில் பங்குபெற்று சிறை சென்றவர். 1941ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் நினைவு தினம் அனுசரித்த காரணத்திற்காகவும் சிறைவாசம் அனுபவித்தார். காந்தியடிகளின் பல சொற்பொழிவுகளை தமிழில் மொழிபெயர்த்ததால், "மை லெளட் ஸ்பீக்கர்" என்று காந்தியடிகளாலேயே புகழ்ப்பட்டுள்ளார். முருகப் பெருமான் மீது பற்றுள்ள சுப்ரி முருக கானம் என்ற பெயரில் ஆன்மீக நூலையும் எழுதியுள்ளார்
தன்னம்பிக்கை கதை -  கூட்டு முயற்சி...!
கோடைக்காலத்தில் ஒருநாள் அச்சிறு நகரத்தின் மேயர் ஒரு சிறுவன் மிகப்பெரிய, மிகவும் அழகான காற்றாடி ஒன்றை பறக்கவிடுவதைக் கண்டார். அவர் பார்த்ததிலேயே மிகவும் அழகான காற்றாடி அது, மிகவும் உயரத்தில், சீராக பறந்தது. அது பக்கத்து நகரத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரிந்திருக்கும் வகையில் உயரமாக பறந்தது. பெரும் சிறப்புகள் இல்லாத அச்சிறு நகரத்தில், அந்த அழகான காற்றாடிக்குநகரத்தின் சாவிஎனும் பட்டத்தை வழங்க விரும்பினார் மேயர்.
இந்த காற்றாடி பறந்ததற்கு யார் பொறுப்பு?” எனக் கேட்டார் மேயர்.“நான் தான்என்றான் சிறுவன். “நான் என் கைகளாலேயே காற்றாடியை உருவாக்கினேன். நானே அதில் அழகான படங்களை வரைந்து அழகான காகிதத் துண்டுகளால் அதை உருவாக்கினேன். நானே அதை பறக்க வைத்தேன்என்றான் அவன்.
நான் தான் காற்றாடி பறந்ததற்கு பொறுப்புஎன்றது காற்றுஎன்னுடைய ஓட்டமே காற்றாடியை சீராகவும் சரியான திசையிலும் பறக்கச் செய்தது. நான் மட்டும் அதை நகர்த்தாவிட்டால் அது பறந்திருக்கவே முடியாது. எனவே நானே அதை பறக்க வைத்தேன்என்றது அது.
இல்லை நான் தான் காற்றாடி பறந்ததற்கு பொறுப்புஎன்றது காற்றாடியின் வால். “நான்தான் காற்றாடியை நகர்த்தவும் காற்றில் அது நிலையாக பறக்கவும் காரணம். நானில்லாவிட்டால் காற்றாடி கட்டுப்பாடில்லாமல் சுற்றி தரையில் விழுந்திருக்கும் அதை அந்த பையனால் கூட காப்பாற்றியிருக்க முடியாது. எனவே நானே அதை பறக்க வைத்தேன்என்றது அது.
இப்போது, உங்களைப் பொறுத்தவரை யார் உண்மையில் காற்றாடியை பறக்க வைத்தார்? பல சமயங்களில் மக்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் மற்றவர்களின் பங்கு இருப்பதை மறந்து விடுகின்றனர். எல்லாம் தங்களால் மட்டுமே நடந்ததாக நினைக்கின்றனர். மற்றவர்கள் இல்லாமல் அவ்வேலை முடிந்திருக்காது. ஒவ்வொருவருமே அவ்வேலைக்கு முக்கியம் என உணருவதில்லை. உண்மையில் தனியாக செய்யப்படும் வேலையை விட குழுவாக செய்யப்படும் வேலையே சிறப்பானது. ஏனெனில் கூட்டு முயற்சியின் பலன் அளப்பறியது குழுவிலிருப்பவர்களுடன் வேலை செய்யும்போது நமக்கு சகிப்புத் தன்மை, பல விதமான சூழ்நிலைகளை கையாள்வது போன்ற சிறப்பு பண்புகள் வந்து சேரும்.  இங்கு யாரும் தனியானவர்கள் இல்லை. எனவே மற்றவர்களையும் எப்போதும் நினைவில் வையுங்கள்!
ஓவியம் வரைவோம் How to draw Indian Flag

https://www.youtube.com/watch?v=NNjNYQ8tl4w

இணையம் அறிவோம்  https://www.biointeractive.org/

செயலி Competitive Exam Preparation

https://play.google.com/store/apps/details?id=com.experttraining.competitive_exams_preparation&hl=en

No comments:

Post a Comment