அறிவுக்கு விருந்து – 10.09.2019 (செவ்வாய்)


அறிவுக்கு விருந்து – 10.09.2019 (செவ்வாய்)

வரலாற்றில் இன்று
 செப்டம்பர் 10 (September 10) கிரிகோரியன் ஆண்டின் 253 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 254 ஆம் நாள்
நிகழ்வுகள்
·  1419பர்கண்டி கோமகன் ஜான் பின்னாளில் பிரான்சின் மன்னராகப் பதவியேற்ற ஏழாம் சார்லசினால் கொல்லப்பட்டார்.
·  1509கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், 109 பள்ளிவாசல்கள் அழிந்தன. 10,000 பேர் வரை இறந்தனர்.
·  1515தாமஸ் வோல்சி கருதினாலாக நியமிக்கப்பட்டார்.
·  1570எசுப்பானிய இயேசு சபை மதகுருக்கள் அமெரிக்காவின் இன்றைய வர்ஜீனியாவில் தரையிறங்கினர்.
பிறப்புகள்
·  1857ஜேம்சு எட்வார்டு கீலர், அமெரிக்க வானியலாளர் (. 1900)
·  1862பின்னத்தூர் . நாராயணசாமி ஐயர், தமிழறிஞர், உரையாசிரியர், கவிஞர் (. 1914)
·  1887கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சர் (. 1961)
·  1892ஆர்தர் காம்ப்டன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (. 1962)
·  1909. நல்லையா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (. 1976)
இறப்புகள்
·  கிமு 210சின் சி ஹுவாங், சீனாவின் 1வது பேரரசர் (பி. கிமு 260)
·  1797மேரி உல்சுடன்கிராஃப்ட், ஆங்கிலேய மெய்யியலாளர், எழுத்தாளர் (பி. 1759)
·  1915பாகாஜதீன், இந்திய மெய்யியலாளர், எழுத்தாளர் (பி. 1879)
சிறப்பு நாள்
குறளறிவோம்-  65 - மக்கட்பேறு
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.
மு.வரதராசனார் உரை:மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
Translation: To patent sweet the touch of children dear;
Their voice is sweetest music to his ear.
Explanation: The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.
சிந்தனைக்கு
·         வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்
கை -----> கரம், உறுப்பு 
கோ -----> அரசன், தலைவன், இறைவன் 
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
விடுகதை விடையுடன்
நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன?  பட்டு
பழமொழிஎண்பது வேண்டாம், ஐம்பதும் முப்பதும் கொடு.
பொருள்: கடன் வாங்குபவன் தான் கேட்ட ஐம்பது ரூபாய் கடனுக்கு வட்டியும் சேர்த்துத் தரவேண்டிய தொகை "எண்பதா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டபோது கடன் கொடுப்பவன் இவ்வாறு கூறினான்.
விளக்கம்: என் நண்பனுக்கு ஹிந்தி மொழியில் சரியாக எண்ணத் தெரியாது. ஒருமுறை அவன் ஹைதராபாத் நகரில் ரிக்*ஷாவில் சென்று சேரவேண்டிய இடத்தில் இறங்கியபோது ரிக்*ஷாக்காரன் "நான் மீதி தர வேண்டியதுசாலீஸ்’ (நாற்பது) பைசாவா?" என்று கேட்டான். நண்பனுக்கோ ஹிந்தியில் பத்து வரைதான் ஒழுங்காக எண்ணத் தெரியும். எனவே அவன், "சாலீஸ் நஹி, சார் தஸ் பைசா தேதோ (சாலீஸ் அல்ல, நான்கு பத்து பைசாக்கள் கொடு)!" என்று பதில் சொன்னான்!
Enrich your   vocabulary
Camouflage.....மறைத்துவை 
Incubate.....அடைகாத்தல்      
Survive.....வாழுதல் 
Opposite Words 
Cautious —— Careless
Antonyms examples:
  • Keller is cautious about making predictions for the success of the program.
  • It was careless of him to leave the door unlocked.
Center —— Edge
  • His goal is to turn Stanford into a center for environmental policy.
  • Billy sat on the edge of the bed.
மொழிபெயர்ப்பு
அக்காரக்கீரை
அக்காரக்கிழங்கு/ சர்க்கரைக் கிழங்கு
Proverb
Effort Never fail
முயற்சி திருவினனயாக்கும்
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + O
பையில ஓபன் செய்ய.
Ctrl + P
தேர்வு செய்த பேஜ் ப்ரிண்ட் செய்ய
இனிக்கும் கணிதம்     நீட்டலளவு..
8
கதிர்த்துகள் - 1 துசும்பு
8
துசும்பு - 1 மயிர்நுணி
8
மயிர்நுணி - 1 நுண்மணல்
அறிவியல் அறிவோம்  மூலிகைப் பொடிகள்
*துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
அறிவியல் துளிகள்    - ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்

தினம் ஒரு மூலிகை -  பேராமுட்டி

பேராமுட்டி  ஒரு குத்துக்செடி வகையைச் சார்ந்தத் தாவரம். 1 அடி முதல் 2 அடி உயரம் வரையில் வளரக்கூடியது. இதன் வேர்ப் பகுதியே அதிகம் பயன்படுகிறது. பேராமுட்டியின் பெயர் உரைக்கில் பேராதோடும் சுகம் என்பது பழைய மொழி. இதன் வேரில் தயார் செய்யும் குடிநீர் சுரத்தினைப் போக்கும் குணம் பெற்றது. தென்னிந்தியா முழுவதும் பரந்து காணப்படுகின்ற ஒருவகைத் தாவரம்.

பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்விளாம்பழம்
விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின். சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.
விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.
வரலாற்றுச் சிந்தனை கோபால கிருஷ்ண கோகலே 
இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவர் கோகலே. இந்திய தேசிய காங்கிரஸ்சின் மூத்த தலைவரான இவர் இந்திய சேவகர்கள் அமைப்பின் நிறுவனரும் ஆவார். காங்கிரஸ் மட்டுமின்றி இதர அரசியல் அமைப்புகளில் பணியாற்றியுள்ளார். ஆங்கிலேய அரசிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவது மட்டும் போதாது, சமூக மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று விரும்பினார். இந்த இலக்கை அடைய வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் அரசு நிறுவனங்களுக்குள் மாற்றங்கள் செய்தல் ஆகிய கொள்கைகளை வலியுறுத்தினார்
தன்னம்பிக்கை கதை -  உடலினை உறுதிசெய்
ஒரு ஊருல ஒரு பெரிய்ய காடு இருந்தது. அந்தக் காட்டுக்குள்ள ஒரு குகை. குகையின் உள்ளே சுருண்டபடி படுத்திருந்தது அந்த நரி. குகைக்கு வெளியே வந்து நின்ற கரடி "நரியாரேஉமக்கு என்னநேர்ந்ததுஏன் குகையை விட்டு இரண்டு நாளாகவெளியேவரவில்லை" என்று சப்தமாக கேட்டது.
கரடி காட்டுக் கத்தலாக கத்தியும் குகையின் உள்ளே எந்த சப்தமும் இல்லாமல் இருக்கவே கரடி குகையின் உள்ளே சென்றது. சுருண்டு படுத்திருந்த நரியைக கண்டதும் நரியாரே உமக்கு என்னாயிற்று.  இப்போதும் உமக்கு உடல் நிலை சரியில்லையா?அடிக்கடி இப்படி சுருண்டு
படுத்துக் கொள்கிறீரே என்று அன்போடு கேட்டது. "கரடியாரே! நான் என்ன செய்வதுஎனக்கு அடிக்கடி உடல்நிலைசரியில்லாமல் ஆகிவிடுகிறதுஅதன்  காரணமாக உடலும்சோர்வடைகிறதுநாட்பட நாட்பட என் உடலும் மெலிந்து கொண்டேபோகிறது" என கவலையுடன் கூறியது.
அதனைக்கேட்டகரடி நரியாரே நீர் இரை சாப்பிட்டு முடித்ததும்அப்படியே 
டுத்துக் தூங்கி விடுகிறீர் உமது உடலைவலுப்படுத்த நீர்துளியளவு மனதால் 
நினைக்க மாட்டீர் சாப்பிடுவதும் தூங்குவதுமாகவாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றீர்அதனால்தான் உமக்குஅடிக்கடி உடல் நிலை சரியில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது என்றது.
கரடியாரே என் உடல்நிலை இப்படியே இருந்தால் என்னால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டு உடல் பருமன் அதிகாரித்து படுத்த படுக்கையாகி விடுவேன்என் உடல் நிலை சீராக நீஎனக்கு உதவி செய்வாயா என்று கேட்டது நரி.
  நரியாரே மெல்ல எழுந்து என்னோடு வாரும்நாம் இருவரும் சிறிது நேரம் உற்பயிற்சி செய்யலாம். என்றது கரடி.நரியும்கரடியும் ஒரு மரக்கிளையின் அருகே வந்தன. கரடி உடனே மரக்கிளையைப் பிடித்து ஊஞ்சலாடத் தொடங்கியது. அதனைப் பார்த்து நரியும் சிறிது நேரம் ஆடியது. 



கரடி வேகமாக ஓட ஆரம்பித்தது. நரியும் பின்தொடர்ந்து வேகமாக ஓடியது. சிறிது தூரம் சென்றது கரடி. வேகமாக நடக்கத் தொடங்கியது அதனைத் தொடர்ந்து நரியும் வேகமாக நடக்கத் தொடங்கியது. தன் உடலில் மெல்ல மெல்ல சிறுசிறு மாற்றம் ஏற்படுவதை நரிஉணர்ந்தது. அதே நேரம் கரடி நரியாரே உமது உடல்நிலை இப்போது எப்படிஇருக்கிறது
ஏதோ உற்சாகம் நிரம்பியவர் போன்று காணப்படுகின்றீரே என்று கேட்டது. ஆமாம் கரடியாரே எனக்கு உற்சாகமாகத்தான் இருக்கிறதுஇதனைப்போன்று தினமும் உடற்பயிற்சி செய்தால் என் சோம்பல் எல்லாம்மறைந்துவிடும்என் உடலும் உறுதியாகிவிடும் என்றது நரி.

அன்று முதல் நரி தினமும் கரடியோடு சேர்த்து கொண்டு தன் உடலை உறுதியாக்கிக் கொண்டது.

நம் உடல் உறுதியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.
ஓவியம் வரைவோம் How to draw Closed Eyes for beginners.... step by step

https://www.youtube.com/watch?v=VkP7PVXcPkQ

இணையம் அறிவோம் https://www.biointeractive.org/

செயலி RRB Tamil (தமிழ்) Study Material 2018

https://play.google.com/store/apps/details?id=rrbtamil.weare.com.rrbtamilstudymaterial

 

No comments:

Post a Comment