அறிவுக்கு விருந்து – 14.09.2019 (சனி)


அறிவுக்கு விருந்து – 14.09.2019 (சனி)

வரலாற்றில் இன்று
 செப்டம்பர் 14 (September 14) கிரிகோரியன் ஆண்டின் 257 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 258 ஆம் நாள்.
நிகழ்வுகள்
  81டைட்டசு இறந்ததை அடுத்து அவரது சகோதரன் தொமீசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார்.
  629 – பேரரசர் எராக்கிளியசு பாரசீகப் பேரரசை வென்ற பின்னர் கான்ஸ்டண்டினோபிலை அடைந்தார்.
1752கிரெகொரியின் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும்.
  1808 – பின்லாந்துப் போர்: உருசியப் படைகள் சுவீடன் படைகளை வென்றன.
பிறப்புகள்
  1769அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட், செருமானியப் புவியியலாளர், நாடுகாண் பயணி (இ. 1859)
  1774வில்லியம் பென்டிங்கு பிரபு, பிரித்தானிய இந்தியாவின் 14வது தலைமை ஆளுநர் (இ. 1839)
  1853பொன்னம்பலம் அருணாசலம், இலங்கை அரசியல்வாதி (இ. 1924)
  1879மார்கரெட் சாங்கர், அமெரிக்க செயற்பாட்டாளர், பாலியல் கல்வியாளர்   1914சி. வி. வேலுப்பிள்ளை, இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 1984)
இறப்புகள்
  407யோவான் கிறிசோஸ்தோம், பைசாந்தியப் பேராயர், புனிதர் (பி. 347)
  1321டான்டே அலிகியேரி, இத்தாலியக் கவிஞர் (பி. 1265)
1712ஜியோவன்னி டொமினிகோ காசினி, இத்தாலிய-பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1625)
  1901வில்லியம் மெக்கின்லி, அமெரிக்காவின் 25-வது அரசுத்தலைவர் (பி. 1843)

சிறப்பு நாள்


குறளறிவோம்-  68 - மக்கட்பேறு
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை: பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.
மு.வரதராசனார் உரை:  தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
Translation: Their children's wisdom greater than their own confessed,
Through the wide world is sweet to every human breast.
Explanation:    That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.
சிந்தனைக்கு
அச்சம்தான் நம்மை அச்சுறுத்துகிறது. அச்சத்தை அப்புறப் படுத்துவோம்
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்
தூ -----> வெண்மை, தூய்மை 
தே -----> நாயகன், தெய்வம் 
தை -----> மாதம் 
விடுகதை விடையுடன்
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?  நீர்
பழமொழி சேணியனுக்கு ஏன் குரங்கு?
பொருள்: நெசவு செய்பவன் ஒரு குரங்கை வளர்த்தால் தாங்குமா?
விளக்கம்: சேணியன் என்ற சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம்: ’ஆடை நெய்யுஞ் சாதி வகையான்’. இந்திரனுக்குச் சேணியன் என்றொரு பெயர் உண்டு. "இந்திரன். சேணியனு மன்றே தெரிந்து" (தனிப்பா). பழமொழி நாம் கெட்ட பழக்கங்களை வளர்த்துக்கொள்வது ஆத்மநலனுக்கு எவ்வளவு விரோதமானது என்று சுட்டுகிறது.
Enrich your   vocabulary
Improve....முன்னேறு    
Cheerful.....மகிழ்ச்சியான           
Gently......மென்மையான 
Opposite Words 
Chilly X Warm
  • Despite the chilly autumn afternoon, she was wearing a thin cotton dress.
  • I hope we get some warm weather soon.
Clean X  Dirty
  • As usual, she left her room clean and tidy before going to school.
  • She circled the bedroom, picking up dirty clothes.
மொழிபெயர்ப்பு
சிகப்பு அவரை
சுரைக்காய்
Proverb
Ignorance is bliss
அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + V
பைலை மற்றும் எழுத்தை பேஸ்ட் செய்ய
Ctrl + W
தற்போது ஓபன் செய்துள்ள பைலை- கிளோஸ் செய்யலாம்.
இனிக்கும் கணிதம்     நீட்டலளவு..
6000
பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4
காதம் - 1 யோசனை
அறிவியல் அறிவோம்  மூலிகைப் பொடிகள்
*நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

அறிவியல் துளிகள்    - எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன்
தினம் ஒரு மூலிகை -  மாவிலங்கம்
மாவிலங்கம்கூவிரம்மாவிலிங்கு அல்லது குமரகம் (Crateva religiosa) என்பது ஒருவகை மரமாகும். இது மூன்று விரல் போன்ற கூட்டிலைகளையும் மலர்ந்ததும் மஞ்சளாகும், வெண்ணிற மலர்களையும் செந்நிற உருண்டையான சதைக்கனிகளையும் உடைய வெண்ணிற மரம். இதன் இலை, வேர், பட்டை மருத்துவ பயன் உடையது.திருச்சேறை (உடையார்கோயில்),திருநாட்டியத்தான்குடி முதலிய தலங்களில் தலமரமாக விளங்குவது மாவிலங்க மரமாகும்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்பேரிக்காய்
பேரிக்காயில் நன்மைகள்:
பேரிக்காயிற்கு இன்னொரு பெயரும் உண்டு அது ஏழையின் ஆப்பிள் என்பது தான். இதற்கு காரணம் இதன் விலையோ குறைவு அது மட்டுமில்லாமல் ஒரு ஆப்பிளில் என்னென்ன சத்துகள் அடங்கியுள்ளனவோ அதே அளவு சத்து பேரிக்காயிலும் அடங்கியுள்ளது. வாய் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்ணை சரி செய்யும் ஆற்றல் பேரிக்காயிற்கு உண்டு. தினம் ஒரு பேரிக்காய் சாப்பிட்டால் இந்த புண் வரவே வராது. இதய படபடப்பு மற்றும் இதயம் பலவீனமானவர்கள் தினம் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உடல் சூட்டை குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களையும் சரி செய்யும் தன்மை இதற்கு உண்டு. குழந்தைகளுக்கு இதை தினமும் கொடுத்தால் இதில் உள்ள இரும்புச் சத்து, கால்சியம், சுண்ணாம்பு சத்து போன்றவை குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான எல்லாவற்றையும் கொண்டுள்ளது.
சாப்பிடும் உணவினால் ஏற்படும் அலர்ஜி காரணமாக ஏற்படும் வயிற்றுப் போக்கை குறைக்க கூடிய ஆற்றல் பேரிக்காயிற்கு உண்டு. கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தை நல்ல வளர்ச்சி பெற உதவியாக இருக்கும். மேலும் குழந்தை பேறுக்கு பின்னர் தாய்ப்பால் சுரப்பதற்கு காலை மற்றும் மாலையில் பேரிக்காய் சாப்பிட்டால் அப்பிரச்சனை சரியாகும்.
வரலாற்றுச் சிந்தனை
·         சிந்து சமவெளி கிணறுகள் 65 அடி ஆழத்துடன் இருந்துள்ளன.
·         மஞ்சிட்டி என்ற நீர்ப்பூண்டு வகையைப் பயன்படுத்திச் சிந்து சமவெளி மக்கள் துணிகளுக்குச் சிவப்பு நிறத்தை ஏற்றியிருக்கிறார்கள்.
·         குழந்தைகள் விளையாடச் சக்கரம் கொண்ட பொம்மைகள், குட்டி வண்டியில் பொருத்தப்பட்ட பொம்மைகள் கிடைத்துள்ளன.
 தன்னம்பிக்கை கதை -  தந்திலனும் கோரபனும்
தந்திலன் என்பவன் ஒரு பெரிய வணிகன். பெரிய செல்வந்தன் ஆன போதிலும்மக்களுடன் அன்போடு பழகி வேண்டிய உதவிகளைச் செய்து வந்தான்எனவேமக்களின் அன்பையும் அரசரின் நன் மதிப்பையும் பெற்றான்எனவே அரச கருவூலத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப் பெற்றான்.
தந்திலனுக்கு ஒரு மகள் இருந்தாள்அவளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்த தந்திலன் அரசர் மற்றும்  ஊர்  மக்கள் அனைவருக்கும்  ஒரு விருந்து நடத்தினான்அறுசுவை விருந்து அளித்து ஆடை அணிகலன்களும் கொடுத்து அனைவரையும் பெருமைப் படுத்தினான்.
அங்கே அரண்மனை சிப்பந்திகளும் கூட வந்திருந்தனர்அவர்களில்  கோரபன் எனும் சிப்பந்தி வேலைக்காரர்களுக்கு என ஒதுக்கப் பட்டிருந்த 
ஆசனத்தில்அமராமல் அதிகாரிகள் அமரும் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்
அது கண்டதந்திலன் அவனை அவனுக்குரிய ஆசனத்தில் சென்று அமருமாறு கேட்டுக்கொண்டான்அதைக் கேட்காதது போல் அமர்ந்திருந்த கோரபன் மேல் கோபம்கொண்டான் தந்திலன்.தன் வீட்டு வேலைக் காரர்களை அழைத்த அவனை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு பணித்தான்சிப்பந்திகளும் கோரபனை வெளியே அனுப்பினார்கள். 
இந்த அவமானத்தை எண்ணி எண்ணி கோரபனுக்குதூக்கமே வரவில்லைதந்திலனை எப்படியும் பழி வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். அதற்க்கான திட்டத்தையும்  வகுத்துக் கொண்டான்.
காலையில் எழுந்து அரசனின் அறையை பெருக்கி சுத்தம் செய்தான். அப்பொழுது அரசன் எழுந்திருக்க வில்லைஅரைத்  தூக்கத்தில் இருந்தான். அரசன் படுத்திருந்த கட்டிலின் அருகில் வந்து கோரபன் பின் வருமாறு முணுமுணுத்தான். "தந்திலனுக்கு என்ன தைரியம் இருந்தால் இந்த மாதிரி செய்வான். பட்டத்து அரசியையே தழுவி சரசம் செய்கிறானே". இதைக்  அரசன் திடுக்கிட்டு எழுந்து கோரபனை பிடித்துக் கொண்டான். "சொன்னதெல்லாம் உண்மைதானா? "  என்று கோபமாய்க் கேட்கவும் மிகவும் பயந்து போன கோரபன், " இல்லை மன்னா நான் இரவு அதிக நேரம் சூதாடி விட்டு விடியும் போதுதான் திரும்பினேன். தூக்க கலக்கத்தில் ஏதேனும் உளறி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்" என்று கெஞ்சினான்.
அரசன் மிகவும் யோசித்தவாறே அவனை போகச் சொன்னான். அரசனின் சிந்தனை தாறுமாறாக சென்றது. "நம்மைத் தவிர அந்தபுரத்தில் சகஜமாக புழங்குவதுதந்திலன் ஒருவன்தான். தவறு நடந்து இருக்கலாம். அதை கோரபன் பார்த்து விட்டு நம்மிடம் சொல்ல அச்சப்படுகிறானோ" என்று பலவாறான சினதனையால்  மனம் அலை பாய்ந்தது. கடைசியில் ஒருவாறாக தந்திலனை அரண்மனை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து கட்டளையை எல்லா சிப்பந்திகளுக்கும் அனுப்பினான் அரசன். 
எப்போதும் போல அரண்மனைக்கு வந்த தந்திலனை அரண்மனைக் காவலன் உள்ளே அனுமதிக்க வில்லை. தான் ஒரு அரண்மனை உயர் அதிகாரியாய் இருந்தும் தன்னை உள்ளே அனுமதிக்காதது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியது.  காரணம் கேட்ட போதும் ஒன்றும் சொவில்லை. காவல் காரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கோரபன்  ஏளனமாக சிரித்தபடி, " இவனை உள்ளே அனுமதித்தால் அரசனின் மனதை மாற்றி உன்னை பழி வாங்கி விடுவான். என்னை இப்படித்தான் ஒரு முறை கழுத்தை பிடித்து வெளியே அனுப்பி விட்டான். எனவே எந்தக் காரணம் கொண்டும் இவனை உள்ளே அனுமதிக்காதே! "என்றான். அப்போதுதான் தந்திலனுக்கு உரைத்தது. " முட்டாளாய் இருந்தாலும், பேடியாய் இருந்தாலும் அரண்மனையில் சேவகம் செய்பவனை மதிக்க வேண்டும். இது தெரியாமல் நான் தவறு செய்து விட்டேனே" என்று மனம் நொந்தவாறு  வீடு திரும்பினான்.
இந்த பிரச்சினையில் இருந்து  மீள வேண்டுமானால் அது மீண்டும் கோரபன் உதவியால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்துக் கொண்டான்.அன்று இரவே கோரபனை அழைத்து  வீட்டில் நன்கு உபசரித்து வேண்டிய மட்டும் பொருட்களை அளித்து அவனை பலவாறாக சமாதானப்படுத்தினான். இதனால் மகிழ்ச்சி அடைந்த கோரபன் நிலைமையை மாற்றுவதாக உறுதி அளித்தான். 
அடுத்த நாள் மீண்டும் அதிகாலையில் அரசன் தூக்கக் கலக்கத்தில் இருக்கும் போது " இப்படி எல்லாம் நாட்டில் நடக்குமா? நம் அரசர் மலம் கழித்துக் கொண்டே மாம்பழம் தின்கிறாரே. அவரது தகுதிக்கு இது அடுக்குமா?"  என்று உரக்க முணுமுணுத்தான். கோபத்துடன் எழுந்த அரசன் "என்ன சொன்னாய்? " என்று விரட்டவும், மிகவும் பயந்து போனவனாக நடித்துக் கொண்டே, "அரசே! என்னை மன்னித்து விடுங்கள். நேற்றும் இரவு தாமதமாகத்தான் வீடு திரும்பினேன். தூக்க கலக்கத்தில் ஏதுனும் உளறி இருப்பேன்" என்றான். அரசன் கோரபனை எச்சரித்து அனுப்பிவிட்டு ஆழ்ந்து யோசித்தான். "சே! இவன் அன்றும் இப்படித்தான் உளறி இருக்க வேண்டும். அதைக் கேட்டு வீணாக தந்திலன் மேல் சந்தேகம் கொண்டு அவனை அனுப்பி விட்டோமே" என்று வருத்தப்பட்டான்.
தந்திலனை வரச்செய்து, " சும்மா உன்னை சோதிப்பதற்காக அவ்வாறு செய்தேன். இனி நீ எப்போதும் போல இந்த அரண்மனைக்கு வந்து போகலாம்" என்றான். தந்திலனுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. 
நீதி- நமக்கு கீழ் வேலை செய்யும் ஆட்களை பகைத்துக் கொண்டால் விபரீதமே விளையும்.

செய்துபார்ப்போம் ORIGAMI T-REX (Jo Nakashima) - Dinosaur #5

https://www.youtube.com/watch?v=_fVT75SDoq0

 

இணையம் அறிவோம் https://njctl.org/courses/science/

 

செயலி How to Make Origami

https://play.google.com/store/apps/details?id=com.mobilicos.howtomakeorigami&hl=en_US

 

 

 

 

 

 

No comments:

Post a Comment