அறிவுக்கு விருந்து – 09.09.2019 (திங்கள்)
வரலாற்றில் இன்று
செப்டம்பர் 9 (September
9) கிரிகோரியன் ஆண்டின் 252 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 253 ஆம் நாள்
நிகழ்வுகள்
·
337–முதலாம் கான்ஸ்டன்டைனுக்குப்
பின்னர் அவரது மூன்று மகன்கள் இணைப் பேரரசர்களாக நியமிக்கப்பட்டார்கள். உரோமைப் பேரரசு மூன்றாகப் பிரிந்தது.
·
533 – 15,000 பைசாந்தியப் படை வீரர்கள் செப்பாவில்
(இன்றைய தூனிசியா) தரையிறங்கி கார்த்திஜ் நோக்கிச் சென்றனர்.
·
1087 – வில்லியம் ரூபுசு
இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம்
வில்லியம் என்ற பெயரில் முடிசூடினார்.
பிறப்புகள்
1789 – வில்லியம் கிரேஞ்சு பாண்டு,
அமெரிக்க வானியலாளர் (இ. 1859)
1828 – லியோ டால்ஸ்டாய், உருசிய எழுத்தாளர்
(இ. 1910)
1899 – கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி,
தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1954)
1916 – ஏ. சேனாபதி கவுண்டர், தமிழக
அரசியல்வாதி (இ. 1992)
இறப்புகள்
1087 – இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்
(பி. 1028)
1569 – பீட்டர் புரூகல், டச்சு ஓவியர்
(பி. 1525)
1947 – ஆனந்த குமாரசுவாமி, கலாயோகி
(பி. 1877)
1976 – மா சே துங், சீனப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்,
மெய்யியலாளர் சிறப்பு
நாள்
·
விடுதலை நாள்
(வட கொரியா, 1948)
குறளறிவோம்-
64 - மக்கட்பேறு
அமிழ்தினும்
ஆற்ற
இனிதேதம்
மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
சிறுகை அளாவிய கூழ்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.
மு.வரதராசனார் உரை: தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
Translation: Than God's ambrosia sweeter far the food
before men laid,
In which the little hands of children of their own have play'd.
In which the little hands of children of their own have play'd.
Explanation: The rice in which the little hand of
their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.
சிந்தனைக்கு
உலகம் ஒரு நாடக மேடை; ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.
தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்
கா
-----> சோலை,
காத்தல்
கூ
-----> பூமி,
கூவுதல்
கு
-----> இருள்
விடுகதை விடையுடன்
ஆலமரம்
தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல்
தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
– மூச்சு
பழமொழி இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான்.
பொருள்: அவன் இருந்தபோதும் துன்பந்தான், இறந்தபோதும் துன்பந்தான்.
விளக்கம்: இது குறித்த தெனாலிராமன் கதையில், தெனாலிராமன் தான் சாகும்போது தன்னை ஒரு கல்லறையில் புதைக்கவேண்டுமென்றும், அந்தக் கல்லறை தன் ஊர் எல்லையில் பக்கத்து ஊர் நிலத்தில் நீட்டிக்கொண்டு இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். அவன் செத்ததும் ஊரார் அவ்வாறு புதைக்க முற்பட்டபோது, பக்கத்து ஊர்க்காரர்கள் எதிர்த்ததால் சச்சரவு மூண்டது. இதனால் தெனாலிராமன் இருந்தபோதும், மறைந்தபின்னும் கெடுத்தான் என்று ஆகியது.
Enrich your vocabulary
Enrich your vocabulary
Jungle....காடு
Provisions.....மாளிகைப்பொருட்கள்
Virtue.....தூய்மை
Opposite Words
Capture
—— Release
- The robbery was captured on police video cameras.
- Police arrested several men, who were later released.
Careful
—— Careless
- He was being very careful with the coffee so as not to spill it.
- He’s careless with his glasses and has lost three pairs.
மொழிபெயர்ப்பு
Proverb
Self help is the best help
தன் கையே தனக்கு உதவி
கணினி
ஷார்ட்கட் கீ
Ctrl
+ M
|
இன்டென்ட் பேரகிராப்
|
Ctrl
+ N
|
புதிய பேஜ் ஓபன் செய்ய.
|
இனிக்கும் கணிதம்
நீட்டலளவு..
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
அறிவியல் அறிவோம் – மூலிகைப் பொடிகள்
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
அறிவியல் அறிவோம் – மூலிகைப் பொடிகள்
*நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு
சிறந்தது.
*வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு
தளர்ச்சிக்கும் சிறந்தது.
அறிவியல் துளிகள் - பாக்டீரியா - லீவன் ஹூக்
தினம் ஒரு மூலிகை - முசுட்டைக்கொடி
முசுட்டைக்கொடி
(அறிவியல் பெயர் : Rivea hypocrateriformis) இது ஒரு பூக்கும் தாவர
வகையைச்சார்ந்த கொடியாகும். இவற்றில் 47 வகை உள்ளது. இவை ஆசியக்கண்டத்தில்
அமைந்துள்ள நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில்
காணப்படுகிறது. இதன் இலைப்பகுதி மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. இதன் பூக்கள்
வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது..
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் - கிவி
பழம்
கிவி பழத்தில் நிறைய
ஆரோக்கியமா உள்ளது
கிவி பழம்
பார்ப்பதற்கு சிறிய
பழமாக
தெரிந்த கிவி
பழம்
கொடுக்கும் ஆரோக்கியம் பல. இதில் அதிக
அளவில்
இருக்கும் நீர்
சத்துக்களை உடலில்
இருக்கும் கெட்ட
கொலஸ்ட்ரால்களை குறைத்து உடல்
பருமனால் ஏற்படும் கோளாறுகளை கட்டுபடுத்தும்பயன்படுகிறது.
பின்பு இதய
பட
படப்பு,
வேகமான
துடிப்புகள் இவற்றை
கட்டு
படுத்த
தினம்
ஒரு
கிவி
பழத்தை
உட்கொள்ளுங்கள். இதில்
அதிகம்
இருக்கும் பொட்டாசியம் புற்று
நோய்
மற்றும் மாரடைப்பு வராமல்
தற்காத்து கொள்கிறது கிவி.
நோய்
எதிர்ப்பு தன்மையை கொடுத்து நல்ல
ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
கண்களில் ஏற்படும் புரை,
வலிகள்
மற்றும் கண்களின் உட்புறத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கும் கிவி
நல்ல
அருமருந்தே. நல்ல
செல்களை அழிப்பது, தொற்று
நோய்களை ஏற்படுத்துவது ஆகியவற்றிக்கு காரணமான ராடிக்கிள்களில் இருந்து நம்மை
காத்து
பராமரிக்கும் ஆற்றல்
கொண்டதே கிவி
பழம்.
முதுமையால் உடலில்
ஏற்படும் அனைத்து பிரச்சனைக்கும் கிவி
நல்ல
பலனை
கொடுக்கும். தோல்
சுருக்கம், சோர்வு
தன்மை
அனைத்தையும் போக்கி
நல்ல
புத்துணர்ச்சியை கொடுக்கும்.
வரலாற்றுச்
சிந்தனை சர்தார் வல்லப்பாய் படேல்
வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவவர்களுள் ஒருவராக, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முக்கிய அங்கம் வகித்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பி என்று புகழப்படுகிறார். ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தாங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியதால் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல்.
ஒரு ஊருல ஒரு பெரிய்ய காடு இருந்தது. பக்கத்துக் கிராமத்திலிருந்து அந்தக் காட்டுக்குள்ள ஒரு கழுதை வழி மாறி வந்திருச்சாம். காட்டுக்குள்ள ஒருத்தர் மட்டுமே நடக்கக் கூடிய ஒரு மண் சாலை வழியா நடந்து நடந்து களைச்சுப் போச்சு. தண்ணீர் குடிக்கலாம்முன்னு ஒரு ஓடைப் பக்கம் போனது. அந்த ஓடைக்கு பக்கத்துல சில வேட்டைக்காரர்கள் வசித்து வந்தாங்க. அவங்க தான் வேட்டையாடிய சிங்கம், புலி, மான் போன்ற சில மிருகங்களின் தோலை எல்லாம் அங்கிருந்தப் பாறைகள் மேலக் காய வைத்திருந்தாங்க.
இதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தோட தோலை
எடுத்துத் தன் உடம்பு மேல போத்திக்கிச்சாம். பார்க்க சிங்கம் போலவே இருந்ததுனால, மற்ற மிருகங்கள் எல்லாம் இதைப் பார்த்துப்
பயந்து ஒதுங்கிப் போனதாம். மிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து
மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்துக் கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது. மனிசங்களையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து
கிராமத்துக்குள்ள போயி சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு "ங்கெ
ங்கெ"ன்னு கத்திச்சாம். அதோட குரல் அது கழுதைன்னு காட்டிக் கொடுத்திருச்சு.
அதுக்குப் பிறகு கழுதைய யாருமே மதிக்கவேயில்லை. யாரும் அதைப் பார்த்துப்
பயப்படவேயில்லை.
நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் பல வேடம்போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும்.
No comments:
Post a Comment