அறிவுக்கு விருந்து – 16.09.2019 (திங்கள்)
வரலாற்றில் இன்று
நிகழ்வுகள்
·
1732 – போர்த்துகல்,
காம்போ மையோர் நகரில் சூறாவளி தாக்கியதில் நகரின் மூன்றில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
·
1810 – மிகுவேல் இடால்கோ என்ற மதகுரு எசுப்பானியாவிடம்
இருந்து மெக்சிக்கோவின்
விடுதலைப் போரை ஆரம்பித்தார்.
·
1893 – அமெரிக்காவின் ஓக்லகோமா
மாநிலத்தில் செரோக்கீ என்ற இடத்தில் விற்பனைக்கு விடப்பட்ட நிலப்பரப்புகளை வாங்குவதற்கு குடியேறிகள் பெருமளவில் திரண்டனர்.
பிறப்புகள்
இறப்புகள்
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (பப்புவா நியூ கினி, ஆத்திரேலியாவிடமிருந்து, 1975)
- பன்னாட்டு ஓசோன் படலப் பாதுகாப்பு நாள்
- மலேசியா நாள் (மலேசியா, சிங்கப்பூர்)
குறளறிவோம்- 69 - மக்கட்பேறு
ஈன்ற
பொழுதின்
பெரிதுவக்கும்
தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
சான்றோன் எனக்கேட்ட தாய்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: நல்ல
மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.
மு.வரதராசனார் உரை: தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
Translation: When mother hears him
named 'fulfill'd of wisdom's lore,'
Far greater joy she feels, than when her son she bore.
Far greater joy she feels, than when her son she bore.
Explanation: The mother who hears
her son called "a wise man" will rejoice more than she did at his
birth.
சிந்தனைக்கு
அச்சம்தான் நம்மை அச்சுறுத்துகிறது. அச்சத்தை அப்புறப் படுத்துவோம்
தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்
தூ
-----> வெண்மை,
தூய்மை
தே
-----> நாயகன்,
தெய்வம்
தை
-----> மாதம்
விடுகதை
விடையுடன்
வெட்டிக்கொள்வான் ஆனாலும்
ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
– கத்தரிக்கோல்
பழமொழிஇரண்டு கையும்
போதாது என்று
அகப்பையும் கட்டிக்கொண்டான்.
பொருள்: கொடுத்ததை வாங்குவதற்கு இரு
கைகள்
போதாமல் அவன்
சமையல்
கரண்டியையும் கட்டிக்கொண்டானாம்!
விளக்கம்: ஏன் கைகள்
போதவில்லை? வாங்கியது என்ன?
கையூட்டு (லஞ்சம்).
Enrich your vocabulary
Enrich your vocabulary
Sediment......கசடு
Seedling....முளைத்த பிஞ்சு செடி
Segregate.....பிரித்தல்
Seize.....பிடுங்குதல்
Opposite Words
Clever X Stupid
- Lucy is quite clever and does well at school.
- That was a stupid thing to say.
Clever X Foolish
- She is a clever girl.
- I was young and foolish at the time.
மொழிபெயர்ப்பு
கொட்டைப்பலா/ ஈரப்பலா
|
|
கத்தரிக்காய்/வழுதுணங்காய்
|
Proverb
It is easier to destroy than to create
அழிப்பது சுலபம்,
ஆக்குவது கடினம்
கணினி
ஷார்ட்கட் கீ
Ctrl
+ X
|
லைன் (அ) டெக்ஸ்ட் கட் செய்ய.
|
Ctrl
+ Y
|
கடைசியாக டைப் செய்த லைன் திரும்ப பெற.
|
இனிக்கும்
கணிதம்
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
அறிவியல் அறிவோம் – மூலிகைப் பொடிகள்
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
அறிவியல் அறிவோம் – மூலிகைப் பொடிகள்
*திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை
கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல்
நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு
சிறந்த்து.
அறிவியல் துளிகள் - துணைக்கோலைக் கொண்டு துல்லியமாக அளவிட வெர்னியர் அளவியை கண்டுபிடித்தவர் யார்? – பியரி வெர்னியர் (பிரான்ஸ்)
தினம் ஒரு மூலிகை - முள்ளுக்கீரை
முள்ளுக்கீரை, முட்கீரை (அறிவியல் பெயர் : Amaranthus
spinosus), (ஆங்கில பெயர் : spiny
amaranth)[1]என்பது ஒரு கீரை வகையைச் சேர்ந்த பூக்கும்
தாவரம் ஆகும்.
இதன் பூர்வீகம் அமெரிக்காவின் வெப்ப மண்டல் பகுதியாக இருந்தாலும் பல நாடுகளில் அறிமுக படுத்தப்பட்ட இனமாகவும் அதோடு பயிர்களின்
ஊடே முளைக்கும்போது களையாக இதனை பிடுங்கி
எடுத்துவிடுகின்றனர். ஆசியப்பகுதிகளில் நெல் பயிரின் ஊடே
முளைப்பதை பிடுங்கி எடுக்கும் பழக்கம் உள்ளது. வியட்நாம் நாட்டில் துணிக்கு சாயம் ஏற்றுவதற்கு இந்த
தாவரம் உபயோகப்படுகிறது. ஆப்பிரிக்கா உட்பட பல நாடுகளில் இத்தாவரம் உணவுப்
பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது..
பழங்களும் அவற்றின்
பயன்பாடுகளும் – அவோகேடோ பழம்
அவகோடா பழத்தில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி,
வைட்டமின் கே1,
வைட்டமின் பி6
மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன. இதில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம்
இருப்பதால், இரத்த
அழுத்த
பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச்
சிறந்ததாகும்.
இதிலுள்ள ஆன்டி
ஆக்சிடன்டுகள் நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல்
எடையை
குறைப்பதில் முக்கிய பங்கு
வகிக்கிறது. புற்றுநோய்ப் போன்ற கொடிய நோய்
தாக்கியவர்களுக்கு அவகோடா
பழம்
அதிகமாக கொடுத்தால் அது
நோய்
எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கும்.
இரத்த அழுத்தம் போன்ற
பிரச்சினைகளை கட்டுப்படுத்தும். அவகோடா
பழத்திலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி
மற்றும் இதர
எலும்பு பிரச்னைகளை சரிசெய்வதாக ஆய்வின் மூலம்
நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே
எலும்புகள் வலிமையடைகின்றன. அவகேடோவில் லுடீன்
மற்றும் ஸீக்ஸாக்தைன் பண்புகள் அடங்கியுள்ளது. இந்த
கரோட்டினாய்டுகள் கண்
புரை
மற்றும் மாகுலர் திசு
செயலிழப்பு ஏற்படுவதைக் குறைக்க உதவும்.
மேலும்
வேறு
சில
கண்
பார்வை
பிரச்சனைகளையும் சரிசெய்து, ஆரோக்கியமான பார்வைக்கு உதவும்.
சிறுநீரக பிரச்னையால் அவதிப்படாமல் இருக்கவும், தெளிவான கண்பார்வைக்கும் அவகோடா
பழத்தை
தொடர்ந்து உட்கொண்டு வருவது
அவசியமாகும். அவகேடோ
பழத்தில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்,
பாலி
நியூட்ரியன்ட்டுகள் உள்ளது.
இவை
நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தி, ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, அதனால் செல்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரும்
வாய்ப்பைத் தடுக்கும்.கர்ப்பிணிகள் இதைச்
சாப்பிட்டு வந்தால், பிறக்க
போகும்
குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். வயதானவர்களுக்குப் பக்கவாதம் வராமல்
தடுக்கும். குடலை
சுத்தம் செய்யும் அதோடு
நாக்கின் மேல்
உள்ள
கிருமிகளை நீக்கி,
வாய்
துர்நாற்றத்தைப் போக்கும்.
வரலாற்றுச் சிந்தனை
· 1707 அவுரங்கசீப் இறப்பு
· 1724 ஐதராபாத்தில் சுதந்திர நிசாம் உருவாதல்
· 1740 வங்காள நவாப் சுதந்திரத்தை அறிவித்தல்
· 1746 முதல் கர்நாடகப்போர்
· 1748 இரண்டாம் கர்நாடகப்போர்
· 1756 மூன்றாம் கர்நாடகப்போர்
தன்னம்பிக்கை கதை - குறை கூறாதீர்கள்
அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர� தனிமை.. தனிமை.. தனிமை..!
சன்னல் படுக்கை நோயாளிக்குப் புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்..
"உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!" கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!
அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்.. " நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!"
எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்.சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார். "ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!" ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார். ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..
மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை� ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது. இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க�. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!
அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்�? மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்.. செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்.. "நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..!"
நீதி : தன் துன்பங்களை மறைத்துக் கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறை கூறாதீர்கள்..!
No comments:
Post a Comment