அறிவுக்கு விருந்து – 18.09.2019 (புதன்)


அறிவுக்கு விருந்து – 18.09.2019 (புதன்)

வரலாற்றில் இன்று
 செப்டம்பர் 18 (September 18) கிரிகோரியன் ஆண்டின் 261 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 262 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  96உரோமைப் பேரரசர் டொமிசியான் கொல்லப்பட்டதை அடுத்து நேர்வா பேரரசராக முடிசூடினார்.
·  1066நோர்வே மன்னர் எரால்சு ஆர்திராதா இங்கிலாந்து மீதான முற்றுகையை ஆரம்பித்தார்.
·  1180பிலிப்பு ஆகுஸ்தசு பிரான்சின் மன்னராக முடி சூடினார்.
·  1679மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் இருந்து நியூ ஆம்ப்சயர் தனியாகப் பிரிக்கப்பட்டது.
·  1739பெல்கிரேட் நகரம் உதுமானியப் பேரரசிடம் கையளிக்கப்பட்டது.
·  1759ஏழாண்டுப் போர்: கியூபெக் நகரை பிரித்தானியா பிரான்சிடம் இருந்து கைப்பற்றியது.
·  1810சிலியில் முதலாவது அரசு அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
·  53திராயான், உரோமைப் பேரரசர் (. 117)
·  1709சாமுவேல் ஜோன்சன், ஆங்கிலேயக் கவிஞர், அகராதியியலாளர் (. 1784)
·  1908விக்தர் அம்பர்த்சுமியான், சார்ச்சிய-ஆர்மீனிய வானியலாளர் (. 1996)
இறப்புகள்
·  96டொமிசியான், உரோமைப் பேரரசர் (பி. 51)
·  1783லியோனார்டு ஆய்லர், சுவிசு கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1707)
·  1945இரட்டைமலை சீனிவாசன், ஆதி திராவிடர் இயக்கத் தலைவர் (பி. 1859)
·  1958பக்வான் தாஸ், இந்திய இறை மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. 1869)
·  1961டாக் ஹமாஷெல்ட், ஐநாவின் 2வது பொதுச் செயலர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சுவீடியர் (பி. 1905)

·  1966வித்துவான் . வேந்தனார், ஈழத் தமிழறிஞர் (பி. 1918)

சிறப்பு நாள்

  • எயிட்சு விழிப்புணர்வு நாள் (அமெரிக்கா)
  • உலக நீர் கண்காணிப்பு நாள்

குறளறிவோம்-  71- அன்புடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.
மு.வரதராசனார் உரை: அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
Translation:  And is there bar that can even love restrain?
The tiny tear shall make the lover's secret plain.
Explanation:  Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within.
சிந்தனைக்கு
சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்
நே -----> அன்பு, நேயம் 
நை -----> வருந்து, நைதல் 
நொ -----> நொண்டி, துன்பம் 
விடுகதை விடையுடன்
ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன? ஊதுபத்தி பழமொழி எண்பது வேண்டாம், ஐம்பதும் முப்பதும் கொடு.
பொருள்: கடன் வாங்குபவன் தான் கேட்ட ஐம்பது ரூபாய் கடனுக்கு வட்டியும் சேர்த்துத் தரவேண்டிய தொகை "எண்பதா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டபோது கடன் கொடுப்பவன் இவ்வாறு கூறினான்.
விளக்கம்: என் நண்பனுக்கு ஹிந்தி மொழியில் சரியாக எண்ணத் தெரியாது. ஒருமுறை அவன் ஹைதராபாத் நகரில் ரிக்*ஷாவில் சென்று சேரவேண்டிய இடத்தில் இறங்கியபோது ரிக்*ஷாக்காரன் "நான் மீதி தர வேண்டியதுசாலீஸ்’ (நாற்பது) பைசாவா?" என்று கேட்டான். நண்பனுக்கோ ஹிந்தியில் பத்து வரைதான் ஒழுங்காக எண்ணத் தெரியும். எனவே அவன், "சாலீஸ் நஹி, சார் தஸ் பைசா தேதோ (சாலீஸ் அல்ல, நான்கு பத்து பைசாக்கள் கொடு)!" என்று பதில் சொன்னான்!
Enrich your   vocabulary
Segment..பகுதி 
Senior....மூத்தவர் 
Selfish....சுயநலமான
Opposite Words 
Combine X Separate
  • A number of factors have combined to create this difficult situation.
  • Those suffering from infectious diseases were separated from the other patients.
Comfort X  Discomfort
  • All our sports shoes are designed for comfort and performance.
  • There can be no question of her discomfort.
மொழிபெயர்ப்பு
களைக்கோசு
ஒரு விதக் கோசுக்கீரை
Proverb
It is no use crying over spilt milk
கறந்த பால் மடியேறாது
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + Shift + F
பாண்ட் சைஸ் மாற்ற
Ctrl + Shift +>
பாண்ட் சைஸ் அதிகமாக்க.
இனிக்கும் கணிதம்      பண்டங்கள் நிறுத்தல்..
32
குன்றிமணி - 1 வராகனெடை
10
வராகனெடை - 1 பலம்
40
பலம் - 1 வீசை
அறிவியல் அறிவோம்  மூலிகைப் பொடிகள்
*கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
அறிவியல் துளிகள்    - செல் பற்றிய படிப்பிற்க்கு_______என்று பெயர்செல் அமைப்பியல் (Cytology) அல்லது செல் உயிரியல்.
தினம் ஒரு மூலிகை -  பொடுதலை :
பொடுதலைபொடுதினை பூஞ்சாதம் பூற்சாதம் (Phyla nodiflora) என்பது ஒரு மூலிகைச் செடியாகும். இது ஈரப்பாங்கான தரையுடன் ஒட்டிப் படர்ந்து வளர்கிறது. இது மருத்துவக் குணங்களுடைய ஒரு மூலிகைச் செடியாகும்.[1]
இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணையானது பொடுகுத் தொந்தரவைத் தீர்க்கப் பயன்படுவதால் பொடுதலை எனும் பெயரால் அழைக்கப்படுகிறது.
பொடுதலையின் தண்டானது சிறிய ரோம வளரிகள் கொண்டதாக இருக்கும். இது சிறிய இலைகளைக் கொண்டது. இலைகளின் விளிம்புகளில் வெட்டுகள் கொண்டதுபோன்ற தோற்றம் கொண்டது. பொடுதலையின் காயானது சிறியதாகவும் திப்பிலிபோன்றும் இருக்கும். தண்டில் உள்ள கணுப்பகுதிகளில்யில் வேர்கள் உருவாகி தரையைப் பற்றிக்கொள்ளும். இதன் மலர்கள் அழகியதாகவும் கருஞ்சிவப்புடன் வெண்ணிறம் கலந்த நிறத்தோடு இருக்கும். இது பலவகையில் சித்த மருத்துவத்திலும், வீட்டுவைத்தியத்திலும் பயன்படுகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்செவ்வாழை
செவ்வாழை பழத்தின் அற்புத மருத்துவம் பார்ப்பதற்கு  அழகான தோற்றம் கொண்ட செவ்வாழையில் மருத்துவ  ஆரோக்கியம் அதிகம் உள்ளது. செவ்வாழையை தொடர்ந்து சாப்பிட்டு வர மாலை கண்  நோய் இருபவர்கள் நல்ல பலனை பெறலாம்.
அதன் பிறகு ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும், சீரான ரத்த ஓட்டத்தை கொடுக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கும், தோல்களில் ஏற்படும் வெடிப்புகள், தழும்புகள் , சொறி, சிரங்கு போன்றவைகளுக்கு சிறந்த மருந்து செவ்வாழை பழம் ஆகும்.
உணவு சாப்பிட்ட பின் ஒரு செவ்வாழை சாப்பிட ஜீரண அடையும். தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு.
வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும். தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.
செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம்,
சிறுநீர் கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது. எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சமாக தெளிவடையும்.
வரலாற்றுச் சிந்தனை
1828 பிரம்ம சமாஜம் தொடக்கம்
1829
சதி தடை சட்டம்
1848,1850 
டல்ஹௌசி தலைமை ஆளுநர் ஆதல்
1852
சென்னை சுதேசி சங்கம் தொடக்கம்
சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.
ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது. பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.
வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது. பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் 'நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்' என்று சொன்னான்.

மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள். இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று. அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர். பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது.

மற்ற ஒன்பது விவசாயிகளும் "இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு" என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர்.
அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர்.

அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான். அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான். மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர்.

நீதி : கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய்.
தீர விசாரித்துத் தெளிவதே மெய்.

 

செய்துபார்ப்போம் How to Make Paper Fish | Creating Paper Fish, Paper Art and Craft for Kids

 

இணையம் அறிவோம் https://www.biologycorner.com/

https://www.biologyjunction.com/

 

செயலி How to Make Origami Animals

https://play.google.com/store/apps/details?id=com.mobilicos.howtomakeorigamianimals&hl=en_US

No comments:

Post a Comment