அறிவுக்கு விருந்து – 17.09.2019 (செவ்வாய்)

அறிவுக்கு விருந்து – 17.09.2019 (செவ்வாய்)

வரலாற்றில் இன்று
 செப்டம்பர் 17 (September 17) கிரிகோரியன் ஆண்டின் 260 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 261 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  456உரோமைத் தளபதி ரெமிசுடசு, கோத்திக்கு படைகளினால் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டான்.
·  1382அங்கேரியின் அரசியாக மேரி முடிசூடினார்.
·  1630மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது.
·  1631முப்பதாண்டுப் போர்: சுவீடன் பிரைட்டன்பெல்டு என்ற இடத்தில் நடந்த போரில் புனித உரோமைப் பேரரசை வென்றது.
பிறப்புகள்
·  1764ஜான் குட்ரிக், ஆங்கிலேய வானியலாளர் (. 1786)
·  1826பேர்னாட் ரீமன், செருமானிய-இத்தாலியக் கணிதவியலாளர் (. 1866)
·  1857கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி, உருசிய அறிவியலாளர் (. 1935)
·  1864அனகாரிக தர்மபால, 1933), இலங்கை பௌத்த அறிஞர் (. 1933)
·  1879. வெ. இராமசாமி, இந்திய அரசியல்வாதி, திராவிடர் கழக நிறுவனர் (. 1973)
·  1889. ரா., தமிழக எழுத்தாளர்
இறப்புகள்
·  1179பிங்கெனின் ஹில்டெகார்ட், செருமானியப் புனிதர் (பி. 1098)
·  1621ராபர்ட் பெல்லார்மின், இத்தாலியப் புனிதர் (பி. 1542)
·  1911எட்மோனியா லூவிசு, அமெரிக்க சிற்பி (பி. 1844)
·  1933ஜூல்ஸ் கூலட், பிரான்சிய பூச்சியியல் வல்லுனர் (பி. 1861)

·  1959கு. வன்னியசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1911)

சிறப்பு நாள்

குறளறிவோம்-  70- மக்கட்பேறு
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.
மு.வரதராசனார் உரை: மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
Translation:  To sire, what best requital can by grateful child be done?
To make men say, 'What merit gained the father such a son?'.
Explanation:  (So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father.
சிந்தனைக்கு
கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம்தான் கடினம்.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்
ஞா  -----> பொருத்து, கட்டு                              நா -----> நாக்கு                  நீ -----> நின்னை 
விடுகதை விடையுடன்
ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?
துடைப்பம்/தும்புத்தடி
பழமொழி இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான்.
பொருள்: அவன் இருந்தபோதும் துன்பந்தான், இறந்தபோதும் துன்பந்தான்.
விளக்கம்: இது குறித்த தெனாலிராமன் கதையில், தெனாலிராமன் தான் சாகும்போது தன்னை ஒரு கல்லறையில் புதைக்கவேண்டுமென்றும், அந்தக் கல்லறை தன் ஊர் எல்லையில் பக்கத்து ஊர் நிலத்தில் நீட்டிக்கொண்டு இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். அவன் செத்ததும் ஊரார் அவ்வாறு புதைக்க முற்பட்டபோது, பக்கத்து ஊர்க்காரர்கள் எதிர்த்ததால் சச்சரவு மூண்டது. இதனால் தெனாலிராமன் இருந்தபோதும், மறைந்தபின்னும் கெடுத்தான் என்று ஆகியது.
Enrich your   vocabulary
Sensible.....அறிவுள்ள 
Semester.....அரையாண்டுப்பகுதி 
Senate.....நிர்வாகக்குழு 
Opposite Words 
Close  X Open
  • Would you mind if I closed the window?
  • Mr. Chen opened the car door for his wife.
Cold X  Hot
  • Let’s get in out of this cold wind.
  • In dry gourds, they were served a hot tea made from the ground leaves of something Bordeaux called the lip fern.
மொழிபெயர்ப்பு
(பச்சை) பூக்கோசு
கோசுக்கீரை
Proverb
It is never too late to mend
திருடனும் திருந்தி வாழ வழியுண்டு
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + Z
கடைசி செயலை நீக்க
Ctrl + Shift + L
எளிதில் புல்லட் பாய்ண்ட் கிரேட் செய்ய.
இனிக்கும் கணிதம்    
5
பணவெடை - 1 கழஞ்சு
8
பணவெடை - 1 வராகனெடை
4
கழஞ்சு - 1 கஃசு
4
கஃசு - 1 பலம்
அறிவியல் அறிவோம்  மூலிகைப் பொடிகள்
*செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
அறிவியல் துளிகள்    - குரோமாடின் வலை காணப்படும் இடம் எது? – உட்கரு
தினம் ஒரு மூலிகை -  பெருங்காயம்:
'பெருங்காயம்’   பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்ட  இனம் ஆகும். பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக்கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கின்றது. ஆனால் இது சமைத்த உணவுகளில் மென்மையான சுவையை வழங்குகின்றது. இது வெங்காய இனப் பூண்டுகளின் மணத்தை நினைவூட்டுகின்றது. இந்த கதம்பப் பொருள் உணவில் சுவையூட்டுப் பொருளாகவும் ஊறுகாய்களிலும் செரிமானத்திற்கு உதவும் பொருளாக பயன்படுகின்றது.
·         சளிக்காய்ச்சல் எதிர்ப்பு - 1918 ஆம் ஆண்டில் பெருங்காயம் பானிசு இன்புளுயன்சா தொற்று நோயை எதிர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது
·         செரிமானம் - தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகியவற்றில் இது செரிமான ஊக்கியாகப் பயன்படுகின்றது மற்றும் ஆஸ்த்துமா மற்றும் மூச்சுக் குழாய் அழற்சி - இது ஆசுத்துமா மற்றும் மூச்சுக் குழாய் அழற்சி ஏற்படும் சமயங்களில் உதவிகரமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
·         நுண்ணுயிர்க் கொல்லி - பெருங்காயம் நாள்பட்ட மூச்சுக் குழாய் அழற்சி மற்றும் கக்குவானிருமல் ஆகியவற்றுக்கான சிகிச்சையில் பயன்படுத்துவதற்காக நன்கு ஆவணமாக்கப்பட்டதுடன் பாரம்பரிய மருந்துகளில் நுண்ணுயிர்கொல்லியாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதே போன்று வாயுத் தொல்லையைக் குறைக்கின்றது.

பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்இலந்தை பழம்
நோய்களை தீர்க்க இலந்தை பழம் உதுவுமா. இலந்தை பழத்தை இன்று காணவே முடிவது இல்லை. அதில் இருந்து கிடைக்கும் உடல் ஆரோக்கியத்தை தெரிந்து கொண்டு, அதனை உண்ண ஆரம்பியுங்கள். உடலில் அடிக்கடி ஏற்படும் மூட்டு வலி, கை, கால்களில் ஏற்படும் வலி, தசை பிடிப்புகள், எலும்புகளில் ஏற்படும் வலிகளை போக்க முதலில் இலந்தை பழத்தை சாப்பிடுங்கள்.
ஞாபக திறன்:
மூளையில் ஏற்படும் சோர்வை போக்கவும் மற்றும் சுவாச உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகளை குணப்படுத்தவும் உதவுகிறது. இரவு தூக்கம் இன்றி அவதி படுவோர் இலந்தை பழத்தை சாப்பிட நல்ல ஆழ்ந்த உறக்கத்தை பெறலாம் மற்றும் மன அழுத்தங்களை நீக்கி, நல்ல மன நிலையை தருகின்றன.
அஜீரண கோளாறு பெரிய கோளறுங்க. இதனை சரி செய்ய இலந்தை பழத்தின் விதைகளை நீக்கி, சதை பற்றை மட்டும் எடுத்து, விரும்பினால் தோல்களை நீக்கி கொள்ளலாம். இதனுடன் சுவைக்கு உப்பு, காரத்திற்கு மிளகாய் பொடியை கலந்து உண்ண செரிமான பிரச்சனைகள் தீரும், அதனால் ஏற்படும் வயிற்று கோளாறுகளும் தடுக்கப் பயன்படுகிறது. ஒவ்வாமை தொல்லையால் ஏற்படும் வாந்தி, பித்த கோளாறுகள், தலை சுத்தல் ஏற்படுவதால் மயக்கமான நிலையை உணருவார்கள். இதற்கு உகந்த தீர்வு இலந்தை பழத்தை சாப்பிடலாம்.
கால்சியம்:
எலும்புகளுக்கும் மற்றும் பற்களுக்கும் உறுதியை கொடுக்க உதவும் கால்சியம் சத்துக்களை கொண்டுள்ள இலந்தை பழத்தை சாப்பிட நல்லதே. எலும்புகளில் ஏற்படும் வலிகளையும் போக்க உதவுகிறது. பசியின்மையால் அவதி படுவோர் தினம் ஒரு இலந்தை பழத்தை உண்ண நன்கு பசி எடுக்கும்.

வரலாற்றுச் சிந்தனை
1757  பிளாசிப்போர்
1764 
பக்சார் போர்
1767,1799 
மைசூர்போர்
1806 
வேலூர் சிப்பாய் கலக்கம்
1826,1835 
வில்லியம் பெண்டிங் நிர்வாகம்


நபிகள் நாயகம் (அவர்மேல் சாந்தமும் அமைதியும் நிலவுவதாக) அவர்களின் சீடர் ஒருவருக்கு மேலே உள்ள குரான் வரிகளின் பேரில் மிகுந்த நம்பிக்கையுண்டு. அவர் செல்லுமிடங்களில் எல்லாம் இந்த வரிகளை உரத்து உச்சரிப்பார்.
அந்தச் சீடர்மீது ஒரு யூதப் பெண்மணி அழுக்காறு கொண்டிருந்தாள். ஏதாவது சதி செய்து சீடருக்கு அவப்பெயர் வாங்கித்தர முனைந்தாள். ஒருநாள் நிறைய பலகாரங்கள் செய்து அவற்றில் நஞ்சு கலந்து சீடருக்கு அனுப்பினாள். அவளுக்குத் தெரியும்; சீடர் தான் மட்டும் உண்ணாமல் மற்றவருக்கும் பகிர்ந்து தருவாரென்று.
சீடர் அவசர பணி நிமித்தம் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்ததால், பலகாரங்களையும் தன்னுடனே எடுத்துச் சென்றார். போகும்வழியில் இரு பயணிகள் எதிர்ப்பட்டனர். பசியால் மிகவும் களைத்திருந்தனர். சீடர் அவ்வளவு பலகாரங்களையும் அவர்களிடமே கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.
நஞ்சு கலந்த பலகாரத்தை உண்ட இருவரும் இறந்துவிட்டனர். சீடர் கைது செய்யப்பட்டார். வழக்கு மதினாவில் வாழ்ந்துகொண்டிருந்த நபிகள் (ஸல்) அவர்கள் திருமுன்னருக்கு வந்தது. சதிகார யூதப் பெண்மணியும் விவரம் அறிந்துகொள்ள வந்திருந்தாள்.
அங்கே அவளுக்கு கடும் அதிர்ச்சி.. இறந்து கிடந்த இருவரும் அவளுடைய மகன்கள்..! வெளியூர் சென்று திரும்பும் வழியில் தன் தாயின் சதிக்கு தனயர்கள் இருவரும் பலியாகிவிட்டனர். யூதப் பெண்மணி அழுதாள், அரற்றினாள்.. தன் தவறை ஒப்புக்கொண்டாள்.
நீதி : தினை விதைத்தால் தினை கிடைக்கும். வினை விதைத்தால் வினை கிடைக்கும்.

செய்துபார்ப்போம் Easy Origami Rabbit - How to Make Rabbit Step by Step

https://www.youtube.com/watch?v=6QqBvy_yO_M

 

இணையம் அறிவோம் https://www.biologyjunction.com/

 

செயலி How to Make Origami - 3D Pro

https://play.google.com/store/apps/details?id=com.mobilicos.howtomakeorigamipro&hl=en_US


No comments:

Post a Comment