அறிவுக்கு விருந்து – 04.09.2019 (புதன்)


அறிவுக்கு விருந்து – 04.09.2019 (புதன்)

வரலாற்றில் இன்று
 செப்டம்பர் 4 (September 4) கிரிகோரியன் ஆண்டின் 247 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 248 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·  476கடைசி மேற்கு உரோமைப் பேரரசர் ரொமூலசு ஆகுசுதுலசு முடிதுறந்தான். ஓடாசெர் இத்தாலியின் மன்னனாகத் தன்னை அறிவித்தான். மேற்கு உரோமைப் பேரரசு முடிவுக்கு வந்தது.
·  626சீனாவின் தாங் மன்னராக தாய்சொங் முடிசூடினார்.
·  929சிலாவிக் படையினர் சாக்சனி இராணுவத்தினரால் பிரண்டென்பேர்க்கில் தோற்கடிக்கப்பட்டனர்.
·  1282அரகொனின் மூன்றாம் பீட்டர் சிசிலியின் மன்னராக முடி சூடினார்.
பிறப்புகள்
·  973அல்-பிருனி, பாரசீக மருத்துவர், பல்துறையறிஞர் (. 1048)
·  1824ஆன்டன் புரூக்னர், ஆத்திரிய இசையமைப்பாளர் (. 1896)
·  1825தாதாபாய் நௌரோஜி, இந்திய அரசியல்வாதி (. 1917)
·  1880பூபேந்திரநாத் தத்தர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (. 1961)
·  1902தி. சதாசிவம், தமிழக இதழாசிரியர், பாடகர் (. 1997]])
இறப்புகள்
·  1323ஜெஜீன் கான், சீனப் பேரரசர் (பி. 1303)
·  1809யாக்கூப் ஆஃப்னர், செருமானிய-டச்சு பயண எழுத்தாளர் (பி. 1754)
·  1907எட்வர்டு கிரெய்கு, நோர்வே இசையமைப்பாளர் (பி. 1843)
·  1942கே. பாலசிங்கம், இலங்கை அரசியல்வாதி (பி. 1876)
சிறப்பு நாள்
·         குடியேறிகள் நாள் (அர்கெந்தீனா)
 குறளறிவோம்-  60 - வாழ்க்கைத் துணைநலம்
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.
மு.வரதராசனார் உரை: மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.
Translation: The house's 'blessing', men pronounce the house-wife excellent; The gain of blessed children is its goodly ornament.
Explanation: The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness.
சிந்தனைக்கு
வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்றவனாவான்.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்                                                       
 சுட்டெழுத்துஇரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
 பறக்கும் ஈதாகுகைதேனீ
விடுகதை விடையுடன்
முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை? ஆபத்து
பழமொழி கொள்ளை அடித்துத் தின்றவனுக்குக் கொண்டுதின்னத் தாங்குமா?
பொருள்: திருடியே உண்பவன் உணவை வாங்கி உண்பானா?
விளக்கம்: கொள்வது என்றால் வாங்குவது; கொடுப்பது என்பது வாங்கியதற்குரிய பணமோ பொருளோ கொடுத்தல். ’கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூம் குறைகொடாதுஎன்று பட்டினப்பாலை வணிகர் வாழ்வுமுறையைப் பற்றிப்பேசுகிறது. எனவே கோண்டு தின்னல் என்பது ஒரு உணவுப்பொருளை வாங்கித்தின்னுதலாகும். இன்றைய அரசியல்வாதிகள் இப்பழமொழியை நினைவூட்டுகின்றனர்.
Enrich your   vocabulary
·         Foreign....   அயல்நாடு 
·         Pleasant.....இனிமையான 
·         Merchant......வியாபாரி 
Opposite Words 
Brighten X  Fade
  • The morning sunshine brightened up the room.
  • The sun had faded the curtains.
Bring X  Remove
  • Robert asked the waiter to bring him the check.
  • Reference books may not be removed from the library.
மொழிபெயர்ப்பு
மஞ்சல் அவரை/ மஞ்சல் போஞ்சி)
ஒரு வகை மேற்கிந்தியக் காய்

வெள்ளைப் பாகற்காய்

Proverb
A stitch in time saves nine
ஒரு தையல் போட்டால், ஒன்பது தையலை தவிர்க்கும்
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + C
ஒரு லைன் அல்லது இமேஜ் காப்பி செய்ய.
Ctrl + D
பாண்ட் பிரெபெரென்ஸ் பேஜ் ஓபன் செய்ய.
இனிக்கும் கணிதம்     ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்.
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 -
அரைக்காணி
1/320 -
முந்திரி
1/102400 -
கீழ்முந்திரி
1/2150400 -
இம்மி
அறிவியல் அறிவோம்  அறிவியல் ஆத்திசூடி
ஒருவரின் சிந்தனை தர்க்க முறையில் செயல்பட்டால்தான்
உண்மை எது! பொய் எது! என்பது புலனாகும்
ஓதும் வேதத்திலும் ஜாதி இருக்கும்
ஓடப்பராயிருக்கும் சந்நியாசியிடமும் ஜாதியிருக்கும்
ஔடதத்தால் நோய் தீருமென்றால் ஆண்டவன் எதற்கு?
ஆண்டவனால் நோய் தீருமென்றால் ஔடதம் எதற்கு?         
அறிவியல் துளிகள்
மக்கள்தொகைகோட்பாடு - மால்தஸ்
தினம் ஒரு மூலிகை  -  பாவட்டை
பாவட்டை (Pavetta indica) என்பது தமிழக புதர்காடுகளில் நன்கு பச்சை நிறத்துடன் காணப்படும் புதர்செடி வகையாகும். இதன் மலர் தமிழகத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் இட்டலி பூ போன்று பார்ப்பதற்கு காணப்படும். இம்மலர் கொத்துகள் மிகுந்த வாசனை கொண்டது. இதன் இலை, வேர், காய் மருத்துவப்பயன் கொண்டது.
பாவட்டை எப்பொழுதும் பச்சையாக இருக்கும் ஒரு புதர். தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் புதர் காடுகளிலும், பெருங்காடுகளிலும் தானே வளர்கிறது. மெல்லிய காம்புள்ள இலைகளை எதிரடுக்கில் கொண்ட குறுஞ்செடிப் புதர். கொத்தான வெண்ணிற மலர்களை உச்சியில் கொண்டது. இது ஆவணி ஐப்பசி மாதங்களில் பூக்கும். இது 2 அடி முதல் 4 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலை 6-15 செ.மீ. நீளம் இருக்கும். இதன் வெண்மையான பூக்கள் பூச்சிகளைக் கவரும்.. பச்சையான காய்கள் முதிர்ந்து கருப்பு நிறமாக உருண்டையாக இருக்கும். இது 6 மி.மீ. விட்டத்தைக் கொண்டது. ஆசியா, ஆப்ரிகா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகமாகக் காணப்படும். இது விதை மூலம் இனப்பெருக்கும் செய்கிறது.
மருத்துவ பயன்கள்
·         பாவட்டை வேர் அல்லது இலை, கொன்றை, சிற்றாமுட்டி, வேலிப்பருத்தி இவற்றின் வேர், மிளகு, ஓமம் வகைக்கு 10 கிராம் இடித்து நான்கு லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராகக் காயச்சி வடித்து வேளைக்கு 30 மி.லி யாக தினம் 3 வேளை கொடுத்து வர வாத சுரம் போகும்.
·         பாவட்டை வேர், பூலாப்பூ சமனளவு அரைத்துக் கனமாகப் பூச அரையாப்புக் கட்டிகள் கரையும்.
·         பாவட்டைக் காயை சுண்டைக் காய் போலக் குழம்புகளில் சேர்த்து உண்டு வர வாத, கப நோய்கள் விரைவில் குணமாகும்.
·         பாவட்டை இலையை வதக்கி வாத வீக்கம், வலி ஆகியவற்றிக்கு இளஞ்சூட்டில் வைத்துக் கட்ட அந்நோய்கள் குணமாகும்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்  - நார்த்தம்பழம்
சத்துக்கள் நார்த்தம்பழம் மிக அதிகமாகப் புளிப்பு சுவை கொண்டது என்பதால், நாம்பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. நார்த்தங்காய் சாதம் செய்யவும், ஊறுகாய் செய்யவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். அதைவிட, சிறிது லேசாக உப்பை தூவி பழத்தை அப்படியே சாப்பிடலாம்இதில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வைட்டமின்களும் கால்சியமும் மிக அதிக அளவில் உள்ளதால், உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.
இதயநோய்கள் நார்த்தம்பழத்தில் ஒரு துளியளவும் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால், இயல்பாகவே இதய நோய்களுக்கான ஆபத்தைத் தவிர்க்கிறது. இதில் முழுக்க முழுக்க நன்மை தரும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமே அடங்கியுள்ளன. அதனால் இதய நோயாளிகளும் மற்றவர்களும் பயப்படாமல் இந்த பழத்தை தாராளமாக தினமும் கூடு எடுத்துக் கொள்ளலாம்.
கால்சியம்உடலுக்குத் தேவையான ஒரு நாளினுடைய கால்சியம் அளவில் 60 சதவீதத்துக்கும் மேலான கால்சியத்தை ஒரு பெரிய சைஸ் நார்த்தம்பழத்தில் இருந்து நம்மால் பெற முடியும். அதனால் தினமும் ஒரு நார்த்தம்பழத்தை ஜூஸ் வடிவில் எடுத்துக் கொள்வது சிறந்துது. உக்குளிப்பழம் இரண்டு வீதமான தினமும் தேவைப்படும் மொத்த கால்சியம் கால்சியம் சேமிப்பு உள்ளது.இது எலும்பு மற்றும் பற்கள் உடம்பில் பெருமளவுக்கு உதவுகிறது.
புரதங்கள் தசை உருவாக்கம் மற்றும் தசை இயக்கங்களை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டதாக நார்த்தம்பழம் இருக்கிறது. இதில் வெறுமனே வைட்டமின் சி மட்டுமல்லாது புரோட்டீன்களும் அதிக அளவில் சிறப்பாகக் கிடைக்கின்றன.
சிறுநீரகக்கல் நார்த்தம்பழம் சிறுநீரக கல் உருவாவதை தடுக்கிறது. பொதுவாக சிறுநீரகக் கல் வந்தபின், வாழைத்தண்டை அரைத்துக் குடித்துக் கொண்டிருப்போம். ஆனால், நார்த்தம்பழமோ எவ்வளவு வேகமாக சிறுநீரகக் கல்லை கரைக்க முடியுமோ அவ்வளவு வேகமாகக் கரைத்துவிடும். சிறுநீரகக் கல் உருவாகாமல் பார்த்துக் கொள்ளும்.
வாய் துர்நாற்றம் வைட்டமின் பி அதிக அளவில் நார்த்தம்பழத்தில் உள்ளதால், இது வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. மேலும் பற்கள் மற்றும் ஈறுகள் குறித்த பிரச்னைகளில் இருந்து, பாதுகாப்பு அளிக்கிறது.
உடல் பருமன் இந்த நார்த்தம்பழத்தில் பொதுவாகவே கலோரிகள் மிகமிகக் குறைவாக இருப்பதால் உடல் பருமனாவதை தடுக்க உதவுகிறது. இந்த பழங்களில் உள்ள நோய் எதிர்ப்பு திறன், உடலில் தேவையற்ற உயிர் அணுக்களை அழித்து, சிறந்த ஆக்சிஜனேற்ற செயல்பாட்டிற்கு துணை புரிகிறது
வரலாற்றுச் சிந்தனை தி. சே. சௌ. ராஜன் 
திருவேங்கிமலை சேஷ செளந்தர ராஜன் என்ற தி. சே. சௌ. ராஜன் ராஜாஜியுடன் ஏற்பட்ட நட்பினால் இந்தியத் தேசியக் காங்கிரசில் இணைந்தார். ரௌலட் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றார். 1920-22ல் கிலாபத் ஒருங்கிணைப்பு குழுவில் உறுப்பினராக இருந்தார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றுப் பதினெட்டு மாதங்கள் சிறை தண்டை பெற்றார். இந்தியத் தேசியக் காங்கிரசில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பொதுச் செயலாளர், தலைவர், மாநிலச் செயலாளர் என பல பதவிகளை வகித்தார். மருத்துவருமான இவர் தனது மருத்துவ மேல்படிப்பை இங்கிலாந்தில் முடித்துவந்து, தனியாக மருத்துவமனை நடத்தி வந்தார். வ.வே.சு.ஐயர், காந்தியடிகள் உள்ளிடவர்களைப் பற்றிய நூல்களையும் 'நினைவு அலைகள்' என்ற சுயசரிதையையும் எழுதியுள்ளார். 
தன்னம்பிக்கை கதை -  எல்லா உயிர்களுக்கும் உதவி செய்
ஒரு நாட்டு ராஜாவிடம் முத்தன் வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு மிருகங்கள் பறவைகள் பேசும் பாஷை தெரியும். முத்தனுக்கு ஒரேய ஆச்சரியம், எப்படி ராஜா விலங்குகள் பேசுவதை அறிந்து கொள்கிறார் என்பது அவனுக்கு வியப்பாக இருந்தது, முத்தன் தான் அந்த ராஜாவுக்கு தினமும் உணவு கொண்டு கொடுப்பான். ராஜாவின் உணவில் ஒரு பகுதி மட்டும் தனியாக தனிப் பெட்டியில் ராணியே சமைத்துத் தருவாள். ஒரு நாள் முத்தன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அந்த பெட்டிக்குள் ஏதோ துண்டு தூண்களாக சமைத்து வைக்கப்பட்டிருந்தன. இது என்னவாக இருக்கும் என்று ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுப் பார்க்கிறான். அதைச் சாப்பிட்டதும் முத்தனுக்கு பறவை மிருகங்களின் பேசும் பாஷை புரிய ஆரம்பிக்கிறது. புதிய சக்தி கிடைத்ததும் அவன் அரண்மனையில் இருந்து அப்படியே புறப்பட்டு கிளம்பி விடுகிறான். அவன் குதிரையில் கிளம்பிச் செல்லும் வழியில் எறும்புகள் சாரை சாரையாக போவதை பார்த்தான், எறும்பின் தலைவன் இவனிடம் குதிரையை எறும்புகளை மிதிக்காத வண்ணம் செலுத்தும் படி வேண்டிக் கொண்டது. அவனும் அப்படியே செய்தான். எறும்புகள் நன்றி தெரிவித்து, என்றேனும் உங்களுக்கு உதவுவேன் என்று கூறியது. அடுத்து, அவன் செல்லும் வழியில் குளம் இருந்தது அங்கு மூன்று மீன்கள் அழும் குரல் கேட்டது. அவை புதருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. குளத்தில் தாவிக் குதிக்கும் போது அவை தவறிப் புதரில் விழுந்திருந்தன. அத்தனையும் காப்பாற்றி தண்ணீருக்குள் மீண்டும் எடுத்துவிட்டு கிளம்பினான். மீன்களும் நன்றி தெரிவித்தது. அவன் கொஞ்ச தூரம் ஒரு காட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான்.
சின்னஞ்சிறு காகங்களின் குரல் கேட்டது. தாய் காக்கை அவைகளிடம்நீங்களே உங்கள் உணவைத் தேடிக் கொள்ளுங்கள்என்று கூறி மரத்தில் இருந்து கீழே தள்ளி விட்டிருந்தது. அவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுத்துவிட்டு கிளம்பினான். அவை மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி கூறின. அதன் பின் காட்டைக் கடந்து அவன் வேறு ஒரு நாட்டுக்குள் நுழைந்தான். ஊரே கோலாகலமாக இருந்தது. அந்த நாட்டு இளவரசி தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தாள். வேலைக்காரனுக்கு ஆசை, எப்படியும் இந்தப்போட்டியில் கலந்துகொண்டு நாம் இந்த நாட்டின் அரசனாக வேண்டும் என ஆசைப்பட்டான். போட்டியில் கலந்து கொண்டான். போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் சிறையில் தள்ளிவிடுவார்கள். போட்டி ஆரம்பம் ஆனது, அவனை ஒரு குளத்திற்குக் கூட்டிப் போனார்கள். குளத்திற்குள் ஒரு மோதிரத்தை போட்டு அதனை எடுக்க வேண்டும் என கட்டளையிட்டார்கள் . அவன் பயந்து மலைத்து நின்றான். குளத்திற்குள் நீந்த ஆரம்பித்த அவனுக்கு ஆச்சரியம்....! “இதோ உங்கள் மோதிரம்என்று ஒரு குரல் கேட்டது. ஒரு மீன் தன் வாயில் மோதிரத்தைக் கவ்விக்கொண்டு வந்திருந்தது. அது அவன் புதலிருந்து காப்பாற்றிய மீன். இளவரசி அடுத்த போட்டி வைத்தாள். ஒரு மூட்டை அரிசி முழுவதும் தோட்டத்தில் கொட்டப்பட்டு விடிவதற்குள் ஒரு அரிசி விடாமல் சேகரிக்க வேண்டும். ஆகா இது நடக்கவே நடக்காது நமக்கு சிறை தான் என்று முடிவு செய்து அவன் தூங்கி விட்டான். அவன் உதவி இருந்த எறும்புகள் ஒவொன்றாக பொருக்கி ஒரு மூட்டையில் வைத்திருந்தது. அதனால் அதிலும் ஜெயித்து விட்டான். இறுதியான போட்டி ஒரு தங்க ஆப்பிள் காய்க்கும் மரம் காட்டில் இருக்கிறது- அதைக் கண்டுபிடித்து ஆப்பிளை எடுத்து வர வேண்டும். அவன் இருட்டும் வரை தேடினான் பசுமை மரங்கள் மட்டுமே இருந்தன. தங்க மரத்தைக் காணவே இல்லை. கவலையுடன் இருட்டியபிறகு தூங்கிவிட்டான்.
காலையில் எழுந்து பார்க்கிறான் அவன் அருகில் தங்க ஆப்பிள் இருந்தது. அவனிடம் உதவி பெற்ற காகங்கள் அந்த ஆப்பிளைத் தேடிக் கொண்டு வந்து அவனிடம் போட்டிருந்தன. அவன் அவைகளுக்கு நன்றி தெரிவித்தான். எல்லா போட்டியிலும் ஜெயித்ததால் அவனை இளவரசி மணந்து கொண்டாள். அவன் ராஜாவாக அவளுடன் அந்த நாட்டை மகிழ்ச்சியுடன் வெகு நாள் ஆட்சி செய்தான். நாம் செய்த உதவி வீணாகாது. அது நமக்கு ஏதாவதொரு வகையில் எப்போதாவது பயன்தரும். நாம் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு மறந்து விட்டாலும்கூட அது பின்னொருநாளில் நமக்கு யார் வாயிலாகவாவது கிடைக்கும். ‘‘செஞ்ச உதவியும் இட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது’’ மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப் படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது.
ஓவியம் வரைவோம் Indian Flag overThe Sky with rising sun(Especially for Independence Day )

https://www.youtube.com/watch?v=5h3Kv8TeGa4

இணையம் அறிவோம்  https://www.learner.org/interactives/dynamicearth/structure/

செயலி NMMS Study Materials

 

No comments:

Post a Comment