அறிவுக்கு விருந்து – 20.09.2019 (வெள்ளி)


அறிவுக்கு விருந்து – 20.09.2019 (வெள்ளி)

வரலாற்றில் இன்று
செப்டம்பர் 20 (September 20) கிரிகோரியன் ஆண்டின் 263 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 264 ஆம் நாள்.
நிகழ்வுகள்
· 1378கர்தினால் இராபர்ட் ஏழாம் கிளமெண்டு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கு சமயப்பிளவு ஆரம்பமானது.
·  1519பெர்டினென்ட் மகலன் 270 பேருடன் எசுப்பானியாவின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்.
·  1847நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரித்தானியா மொரீசியசில் வெளியிட்டது.
பிறப்புகள்
·  1870இரா. இராகவையங்கார், தமிழக நூலாசிரியர், உரையாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் (. 1946)
·  1908. ராமமூர்த்தி, இந்திய மார்க்சிய அரசியல்வாதி (. 1987)
·  1923நாகேசுவரராவ், தென்னிந்திய நடிகர், தயாரிப்பாளர் (. 2014)
·  1940டாரோ ஆசோ, சப்பானின் 92வது பிரதமர்
·  1946மார்க்கண்டேய கட்சு, இந்திய நீதிபதி, வழக்கறிஞர்
இறப்புகள்
·  1796யுவான் ஒசே எலுயார், எசுப்பானிய வேதியியலாளர், கனிமவியலாளர்
·  1863ஜேக்கப் கிரிம், செருமானிய பண்பாட்டு ஆய்வாளர் (. 1785)
·  1927பர்கதுல்லா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர் (பி. 1854)

·  1928நாராயணகுரு, இந்திய ஆன்மிகவாதி, சமூக சீர்திருத்தவாதி (பி. 1855)

சிறப்பு நாள்

குறளறிவோம்-  73 . அன்புடைமை

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.
மு.வரதராசனார் உரை: அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
Translation: Of precious soul with body's flesh and bone,
The union yields one fruit, the life of love alone.
Explanation:  They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth).
சிந்தனைக்கு
விந்தையான சிலரைப் பார்க்கும்போது இவர்கள் ஏன் இப்படி? என்பதைவிட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளுங்கள்.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்
பூ -----> மலர்                                                                                   பே -----> மேகம், நுரை, அழகு 
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை                            போ -----> செல் 
விடுகதை விடையுடன்
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன? விக்கல்
 பழமொழி குருவுக்கும் நாமம் தடவி/போட்டு, கோபால பெட்டியில் கைபோட்டதுபோல.
பொருள்: ஒருவனை ஏமாற்றியதுமட்டுமின்றி அவனது உடைமைகளையும் பறித்துக்கொண்டது குறித்துச் சொன்னது.
விளக்கம்: கோபாலப் பெட்டி என்பது என்ன? விடை நாமம் என்ற பெயரில் உள்ளது. புரட்டாசியில் சனிக்கிழமைதோறும் பிச்சையெடுக்கும் விரத்துக்கு கோபாலம் என்று பெயர். இன்றும் அதைக் காணலாம். அப்ப்டிப் பிச்சையெடுப்பவர்கள் பயன்படுத்தும் பாத்திரம் கோபாலப் பெட்டி என்று குறிக்கப்பட்டது.
Enrich your   vocabulary
Sack..கோணிப்பை 
Sacred....புனிதமான 
Sacrifice....தியாகம் 
Sad....துன்பமிக்க 
Saddle....குதிரை சேணம் 
Opposite Words 
Compliment —— Insult
  • Being compared to Abba is a great compliment.
  • His comments were seen as an insult to the president.
Conceal —— Reveal
  • She tried to conceal the fact that she was pregnant.
  • He may be prosecuted for revealing secrets about the security agency.
மொழிபெயர்ப்பு
குருக்கிழங்கு
மரவள்ளிக் கிழங்கு
Proverb
It takes two to make quarrel
இரு கை தட்டினால் தான் ஓசை

கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + [
தேர்வு செய்த எழுத்து சைஸ் குறைக்க.
Ctrl + / + c
இன்செர்ட் (¢)செய்ய

இனிக்கும் கணிதம்      முகத்தல் அளவு
5
செவிடு - 1 ஆழாக்கு
2
ஆழாக்கு - 1 உழக்கு
2
உழக்கு - 1 உரி
அறிவியல் அறிவோம்  மூலிகைப் பொடிகள்
*லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

அறிவியல் துளிகள்    - மக்கள்தொகைகோட்பாடு - மால்தஸ்
தினம் ஒரு மூலிகை -  மஞ்சள் :
மஞ்சள்அரிணம் அல்லது பீதம் (Curcuma longa) உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் குர்க்குமின் (Curcumin) எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப் பல்வேறுபட்ட பயன்களைத் தரும் பொருளாக உள்ளது.
மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.
·         முட்டா மஞ்சள்          கஸ்தூரி மஞ்சள்                         விரலி மஞ்சள்       கரிமஞ்சள்
·         நாக மஞ்சள்               காஞ்சிரத்தின மஞ்சள்             குரங்கு மஞ்சள்    குடமஞ்சள்
·         காட்டு மஞ்சள்           பலா மஞ்சள்                                 மர மஞ்சள் ஆலப்புழை மஞ்சள்

மஞ்சளின் இயல்புகள்

முட்டா மஞ்சள்
இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள்.
கஸ்தூரி மஞ்சள்
இது வில்லை வில்லையாக, தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது.
விரலி மஞ்சள்
இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள்.

மஞ்சளின் பயன்பாடுகள்

·         சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.
·         பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.
·         சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.
·         உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
·         பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.
·         வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.
·         இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.
·         காய்கறிகளை வாங்கியவுடன் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் கலுவி பயன்படுத்துவதால் மரபனு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்டிராகன் பழம்
டிராகன் பழத்தின் நன்மைகள் தெரியுமா.சிவப்பு நிற தோல்களையும், உட்புறத்தில் வெண்மை நிற சதை பற்றையும் கொண்ட இந்த பழத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் ஆரோக்கியம் தெரிந்து கொள்ளுங்கள்.
நன்மைகள் :  புற்று நோய்க்கான செல்கள் உருவாவத தடுத்து நம்மை பராமரிக்கிறது டிராகன் அடிக்கடி இடம் மாற்றம் செய்பவர்களுக்கு உடலில் ஏற்படும் உடல் நல கோளாறுகள், இதர பிரச்சனைகளுக்கும் இந்த பழம் மிகவும் பயன் உள்ளது.
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி நன்மை தரும்.வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3 போன்றவை காண படுவதால் ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த ஊட்டத்தையும் சீராக செயல் பட செய்து மற்றும் மாரடைப்பு வராமல் பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு திறனை கொடுத்து நச்சு தன்மையை அழித்து ரத்தத்தில் இருக்கும்
கிருமிகளினை நீக்கி ஆரோக்கியத்தை கொடுக்கும் வல்லமை கொண்டது.
இதயத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்து இதய நோய்களை தடுக்கும் தன்மை கொண்டது மற்றும் செரிமான உறுப்புகளை வலு பெற செய்து செரிமானத்தை சீராக நடத்தும்.
வரலாற்றுச் சிந்தனை  செங்கிஸ்கான் (கி.பி. 1206 - 1227)
இளம் வயதில் பல ஆண்டு கள் அடிமையாக வாழ்ந்தவர். பிறகு மங்கோலிய மலை ஜாதிக்குழுக்களை இணைத்து அவர்களின் தலைவராகி, சிறிது சிறிதாக மத்திய ஆசியாவின் பல பகுதிகளையும் சீனாவையும் கைப்பற்றி ஆட்சி செய்தவர்! முரட்டுத் தனத்துக்கு மறுபெயர் இவர்தான்! மக்களை கூட்டமாக நிறுத்தி அசால்ட்டாக கொன்று தள்ளுவது இவருடைய பொழுது போக்குகளில் ஒன்று என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

தன்னம்பிக்கை கதை -   உழைப்பே அதிர்ஷ்டம் தரும்

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருன்ட்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா "இரண்டடி" என்று சொல்வதற்கு பதிலாக "ஓரடி" என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை. எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. 'இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும்' என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே!

அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் 'சரி.. தோண்டியது வீணாக வேண்டாம்' என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

நீதி :  உழைப்பால் வரும் பயனைத்தான் மிகப்பெரிய புதையல்.

 செய்துபார்ப்போம் Bird origami pigeon scheme for children origami of paper

https://www.youtube.com/watch?v=slH1FhDKdps

இணையம் அறிவோம் https://www.pbs.org/wgbh/nova/labs/

செயலி Origami Flower Instructions 3D

https://play.google.com/store/apps/details?id=com.mobilicos.origamiflowers&hl=en_US

 

 

 

No comments:

Post a Comment