அறிவுக்கு விருந்து – 12.09.2019 (வியாழன்)

அறிவுக்கு விருந்து – 12.09.2019 (வியாழன்)

வரலாற்றில் இன்று
 செப்டம்பர் 12 (September 12) கிரிகோரியன் ஆண்டின் 255 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 256 ஆம் நாள்
நிகழ்வுகள்
·  கிமு 490மாரத்தான் போர்: கிரேக்கத்தில், மாரத்தான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க பிடிப்பிட்சு என்ற கிரேக்க வீரன் நெடுந்தூரம் ஓடினான். மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது.
·  1185பைசாந்தியப் பேரரசர் முதலாம் அந்திரோனிக்கசு கான்ஸ்டண்டினோபிலில் படுகொலை செய்யப்பட்டார்.
·  1609என்றி அட்சன் அட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார்.
· 1634மால்ட்டாவில் வல்லெட்டா நகரில் வெடிமருந்துத் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர், பல கட்டடங்கள் சேதமடைந்தன.
பிறப்புகள்
·         1832சி. வை. தாமோதரம்பிள்ளை, தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி
·         1866வெல்லிங்டன் பிரபு, ஆங்கிலேயத் துடுப்பாளர், அரசியல்வாதி, கனடாவின் 13வது ஆளுநர் (. 1941)
·         1897ஐரீன் ஜோலியோ கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர்
·         1912பெரோஸ் காந்தி, இந்திய அரசியல்வாதி, பத்திரிகையாளர் (. 1960)
·         1913ஜெசி ஓவென்ஸ், அமெரிக்கத் தடகள விளையாட்டு வீரர் (. 1980)
இறப்புகள்
·  1885ரண்பீர் சிங், சம்மு காசுமீர் மன்னர் (பி. 1830)
·  1927சாரா பிரான்சிசு வைட்டிங், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர்
·  1977ஸ்டீவ் பைக்கோ, தென்னாபிரிக்க செயற்பாட்டாளர் (பி. 1946)
·  1981எயுஜேனியோ மொண்டாலே, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர்
·  1983ரஞ்சன், இந்திய நடிகர், நாட்டிய, இசைக் கலைஞர், எழுத்தாளர் (பி. 191
சிறப்பு நாள்
தேசிய நாள் (கேப் வர்டி)
குறளறிவோம்-  65 - மக்கட்பேறு
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.
மு.வரதராசனார் உரை: தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
Translation:  'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred,
Who music of their infants' lisping lips have never heard.
Explanation:  "The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children.

சிந்தனைக்கு
செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும்; அப்போதுதான் முன்னேற முடியும்.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்
சீ -----> இகழ்ச்சி, திருமகள் 
சே -----> எருது, அழிஞ்சில் மரம் 
சோ -----> மதில் 
விடுகதை விடையுடன்
கடையெழுத்து மாறிடில் தின்னலாம், முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும், மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள் இங்கே? பழனி
பழமொழி பாட்டி பைத்தியக்காரி, பதக்கைபோட்டு முக்குறுணி என்பாள்.
பொருள்: கொடுத்தது கொஞ்சமேயானாலும் அதிக அளவு என்று கூறுவது.
விளக்கம்: பைத்தியம் என்ற சொல்லை இன்று நாம் பெரும்பாலும் கிறுக்குத்தனம் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். அந்த வார்த்தைக்கு மூடத்தனம் என்றும் பொருளுண்டு. பதக்கு என்பது இரண்டு குறுணிகொண்ட ஓர் அளவு. குறுணி என்பது ஒரு மரக்கால் அளவு.
Enrich your   vocabulary
Mysterious....விந்தை 
Fascinating.... கவர்ந்திழுத்தல் 
Decade.....பத்து ஆண்டுகள்
Opposite Words 
Change X  Remain
  • Susan has changed a lot since I last saw her.
  • Despite the job losses, Parker remained as manager.
Cheap X  Expensive
  • Property is cheaper in Spain than here.
  • Petrol is becoming more and more expensive.
மொழிபெயர்ப்பு
குடைமிளகாய்
பாகற்காய்/ பாவக்காய்

Proverb
If you can not bite,never show your teeth
போகாத ஊருக்கு வழி தேடாதே

கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + R
பேஜ்ஐ ரைட் சைட் அலைன் செய்ய.
Ctrl + S
ஒரு பைலை சேவ் செய்ய.
இனிக்கும் கணிதம்     நீட்டலளவு..
8
நுண்மணல் - 1 சிறுகடுகு
8
சிறுகடுகு - 1 எள்
8
எள் - 1 நெல்
8
நெல் - 1 விரல்
அறிவியல் அறிவோம்  மூலிகைப் பொடிகள்
*ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

அறிவியல் துளிகள்    - ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்
தினம் ஒரு மூலிகை -  மந்தாரை
மலையாத்தி அல்லது மந்தாரை (Bauhinia variegata) பேபியேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது தென்கிழக்காசியா, தென் சீனாவிலிருந்து மேற்கே இந்தியா வரையான பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இதன் பூஆர்க்கிட் பூவை ஒத்திருப்பதால் ஆங்கிலத்தில் இதனை ஆர்க்கிட்மரம் (Orchidtree) என்றும் அழைப்பதுண்டு.
சிறியது முதல் நடுத்தரம் வரை உயரமான இம் மரம் 10-12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. கோடையில் இலைகளை உதிர்த்து விடுகின்றது. இதன் இலை 10-20 சதமமீட்டர் வரை நீள, அகலங்களைக் கொண்டது. இவ்விலையின் அடியும், நுனியும் இரண்டாகப் பிளவுபட்டு வளைந்த வடிவை உடையதாகக் காணப்படும். வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் ஐந்து இதழ்களைக் கொண்ட கவர்ச்சியான இதன் பூக்கள், 8-12 சமீ விட்டம் கொண்டவை. 15-30 சமீ வரை நீளம் கொண்ட இதன் பழங்கள் பல விதைகளை உள்ளடக்கியவை.

இது வெப்பவலயப் பகுதிகளில் மிகவும் விரும்பி வளர்க்கப்படுகின்ற அலங்காரத் தாவரங்களில் ஒன்றாகும். சிறப்பாக இதன் வாசனை உள்ள பூக்களுக்காக இவை விரும்பப்படுகின்றது.

பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சில் வைட்டமின் அதிகமாகவும், வைட்டமின்சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.
இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும்.
பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.
ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை சாப்பிட்டால், பல வகையான புற்றுநோய்கள் வருவதை தடுக்கலாம்.
வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சுப் பழமானது, உடலில் உள்ள செல்களின் நோயெதிப்பு சக்தியை அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காதவாறு பாதுகாக்கும்.
கரோட்டினாய்டு என்னும் பொருள் ஆரஞ்சுப் பழத்தில் அதிகம் இருப்பதால், அதனை சாப்பிடும் போது, அது உடலில் வைட்டமின் சத்தானது மாறி, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாதவாறு தடுக்கும்.
வரலாற்றுச் சிந்தனை ஜவகர்லால் நேரு 
இந்தியாவின் முதல் பிரதமாரன நேரு நவீன இந்தியாவின் சிற்பி என்று போற்றப்படுகிறார். இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு இளம் வயதிலேயே காங்கிரஸின் இடதுசாரித் தலைவரானார். 1920ஆம் ஆண்டு காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக முதல் முறையாக சிறை சென்றார். தன் வாழ்நாளில் 9 வருடங்களை சிறையிலேயே கழித்தார். சிறையில் இருந்த நாட்களில் உலக வரலாற்றின் காட்சிகள், சுயசரிதை மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.
 தன்னம்பிக்கை கதை -  பேசும் மாய விளக்கு
ஒரு ஊர்ல ஒரு வயசான பாட்டி தனியா வசித்து வந்தாங்க. அந்த ஊர்ல கொஞ்ச நாளா திருடங்க நடமாட்டம் அதிகமிருந்தது. ஒரு நாள் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு திறந்திருந்தது. உள்ளே போன பாட்டிக்கு வீட்டுக்குள் ஒரு திருடன் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து இருப்பது தெரிந்து விட்டது. அவனை எப்படியும் தப்பிக்க விடாமல் புத்திசாலித் தனமாக பிடிக்கனும்னு நெனச்ச பாட்டி உடனே ஒரு தந்திரம் செய்தாள்.
அங்கிருந்த விளக்கு ஸ்டேண்டின் முன் நின்று கொண்டு ,’மாய விளக்கே என் மீது கோபமா?நான் வெளியே போய் வந்ததும் என்ன நடந்தது என்று கேட்பாயே இன்று ஏன் கேட்கவில்லைஎன்றாள். இதைக் கேட்டதும் திருடனுக்கு ஆச்சரியம்.பேசும் விளக்கா என்று எட்டிப் பார்த்தான். விளக்கு திரைச்சீலையின் அசைவில் லேசாக ஆட பாட்டி,’ கோபமில்லையா?அப்படியானால் என்ன நடந்தது சொல்கிறேன் கேள்.பக்கத்து வீட்டு ஜூலி இன்று கடைத் தெருவுக்குப் போகும் போது ஒரு நாய் அவளைத் துரத்தியது.
அவள் சத்தம் போட்டுக் கத்தினாள்.மீண்டும் விளக்கு காற்றில் அசைய ,’ஓ எப்படிக் கத்தினாள் என்று கேட்கிறாயாஎன பாட்டி கேட்டாள். திருடனுக்கோ ஒன்றும் புரியவில்லை.நமக்கு மட்டும் ஒன்னும் கேட்கலை.விளக்கு ஆடுவது தெரியுது.ஆனால் கிழவி பேசுகிறாளே என்று குழம்பினான். மாய விளக்கே ஜூலி எப்படிக் கத்தினாள் என்று சொல்கிறேன்என்றபடி பாட்டி ஹெல்ப் ஹெல்ப் என்று உரக்கக் கத்த அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் பாட்டிக்கு ஏதோ ஆபத்து என்று ஓடி வந்தவர்கள் திருடனைப் பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர். பாட்டியிடம் உங்களுக்கு துணைக்கு ஆள் வேண்டுமா என்று கேட்டபோது,’வேண்டாம் எனக்குத்தான் மாய விளக்குத் துணை இருக்கே என்று சிரித்தாள். பாட்டியின் சமோயோசித புத்தியைப் பாராட்டிச் சென்றனர்.

நீதி:ஆபத்துக் காலத்தில் சிந்தித்து செயல் பட்டால் அதிலிருந்து நல்லபடியாக நம்மைக் காத்துக் கொள்ளலாம்


ஓவியம் வரைவோம் How to draw Lovely Hands with pencil sketch.

https://www.youtube.com/watch?v=pQFynwnlJwo

இணையம் அறிவோம் http://sciencecases.lib.buffalo.edu/cs/

 

செயலி RRB TNPSC Illakanam

https://play.google.com/store/apps/details?id=com.tnpscexam.guide


No comments:

Post a Comment