அறிவுக்கு விருந்து – 19.09.2019 (வியாழன்)

அறிவுக்கு விருந்து – 19.09.2019 (வியாழன்)

வரலாற்றில் இன்று
 செப்டம்பர் 19 (September 19) கிரிகோரியன் ஆண்டின் 262 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 263 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  634ராசிதீன் அரபுகள் காலிது அல்-வாலிது தலைமையில் தமாசுக்கசு நகரை பைசாந்தியரிடம் இருந்து கைப்பற்றினர்.
·  1356இங்கிலாந்து எட்வர்ட் தலைமையில் "போய்ட்டியேர்" என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சை வென்று, இரண்டாம் யோன் மன்னரைக் கைது செய்தது.
·  1658யாழ்ப்பாணத்தில் உரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது.[1]
·  1676வர்ஜீனியா, ஜேம்சுடவுன் நகரம் தீயிடப்பட்டு அழிக்கப்பட்டது.
·  1777அமெரிக்கப் புரட்சிப் போர்: சரட்டோகா சண்டைகள்: பிரித்தானியப் படைகள் அமெரிக்க விடுதலைப் படையினரை பெரும் சேதங்களுடன் வென்றன.
பிறப்புகள்
·  1749சான் பாப்திசுத்து யோசப் டெலாம்பர், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (. 1822)
·  1759வில்லியம் கிர்பி, ஆங்கிலேயப் பூச்சியியலாளர் (. 1850)
·  1886பாசல் அலி, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி (. 1959)
·  1911வில்லியம் கோல்டிங், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (. 1993)
·  1921பாவ்லோ பிரையர், பிரேசில் மெய்யியலாளர் (. 1997)
·  1925எம். பி. ஸ்ரீனிவாசன், தென்னிந்திய இசை அமைப்பாளர் (. 1988)
இறப்புகள்
·  1710ஓலி ரோமர், தென்மார்க்கு வானியலாளர் (பி. 1644)
·  1881சேம்சு கார்ஃபீல்டு, அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் (பி. 1831)

·  1935கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி, உருசிய அறிவியலாளர் (பி. 1857)

சிறப்பு நாள்

விடுதலை நாள், (செயிண்ட் கிட்சும் நெவிசும், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1983)

 

குறளறிவோம்-  72- அன்புடைமை

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.
மு.வரதராசனார் உரை: அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.
Translation: The loveless to themselves belong alone;
The loving men are others' to the very bone.
Explanation: Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.

சிந்தனைக்கு
எல்லோரையும் நேசிப்பது சிரமம்தான்; ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்
நோ -----> நோவு, வருத்தம் 
நௌ -----> மரக்கலம் 
பா -----> பாட்டு, நிழல், அழகு
விடுகதை விடையுடன்
மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன? பஞ்சு
பழமொழி கும்பிட்ட கோவில் தலைமேல் இடிந்து விழுந்ததுபோல.
பொருள்: மிகவும் மதித்து நம்பியிருந்த ஒருவன் கைவிட்டது குறித்துச் சொன்னது.
விளக்கம்: பல பழமொழிகள் அனுபவத்தில் எழுந்தாலும், இந்தப் பழமொழி ஒரு உருவகமாச் சொன்னதாகத் தோன்றுகிறது. அன்றுமுதல் இன்றுவரை நாம் நம் உரையாடலில் உவமை-உருவகங்களை சரளமாகக் கையாள்கிறோம். எடுத்துக்காட்டாக, ’நீ பெரிய ஆளப்பாஎன்று சொல்லும்போது நாம் அவன் உடல் பருமையோ உயரத்தையோ குறிப்பதில்லை.
Enrich your   vocabulary
Saber..sword
Sabotage....அழிவுவேலை 
Sabre...பட்டாக்கத்தி 
Sac...சிறு பை 
Opposite Words 
Complete X Incomplete
  • Work on the new building is nearly complete.
  • Unfortunately, I do not have the information because our records are incomplete.
Complex X Simple
  • It was a very complex relationship between two complex people.
  • I’m sure there’s a perfectly simple explanation.
மொழிபெயர்ப்பு
முட்டைக்கோசு
கைகுவா
Proverb
It is no use crying over spilt milk
சிந்திய பாலை எண்ணி பயனில்லை
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl +]
பாண்ட் சைஸ் அதிகமாக்க பயன்படுத்தலாம்.
Ctrl + Shift + <
லைன் மற்றும் எழுத்து சைஸ் குறைக்க.
இனிக்கும் கணிதம்      பண்டங்கள் நிறுத்தல்..
6
வீசை - 1 தூலாம்
8
வீசை - 1 மணங்கு
20
மணங்கு - 1 பாரம்
அறிவியல் அறிவோம்  மூலிகைப் பொடிகள்
*குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.
அறிவியல் துளிகள்    - ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்
தினம் ஒரு மூலிகை -  மங்குஸ்தான் :
                மங்குசுத்தான் அல்லது மங்குஸ்தீன்மலேசியத் தமிழ் (தாவரவியல் பெயர்:Garcinia mangostana, ஆங்கிலம்:mangosteen), வெப்பவலயத்துக்குரிய என்றும் பசுமையான தாவரம் ஆகும். இது சுண்டாத் தீவு மற்றும் இந்தோனேசியாவின் மொலாக்கா பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இம்மரம் 7 முதல் 25 m (20–80 ft) உயரனானது. மங்குசுத்தான் பழம் (உள்ளோட்டுச் சதயம்) இனிப்பும் இலேசான புளிப்பும் கொண்டதாகவும். சாற்றுத்தன்மையும் சிறிதளவும் நார்த்தன்மையுமுள்ள பழமாகவும் காணப்படும் இது வெள்ளை நிறமுடையது. பழத்தின் சுற்றுக்கனியம் கருங்கபில நிறமானது. இது உண்ணப்படுவதில்லை. பழத்தின் உள்ளாக இருவித்திலை வித்து காணப்படும்.
கருக்கட்டப்படாத பூவிலிருந்தே காயுருவாகும். காய் இளம் பச்சை நிறமாகக் காணப்படும். மரத்தின் அங்குரத்தின் கீழ் காணப்பட்டால் வெள்ளை நிறத்தில் இருக்கும். அடுத்து வரும் இரண்டு மூன்று மாதங்களில் சுற்றுக்கனியம் கடும்கபில நிறத்துக்கு மாறும். உள்ளோட்டுச் சதயம் உண்ணப்படும் பகுதியாகத் திரிபடையும். 6-8 சதம மீட்டர் விட்ட அளவு கொண்டதாக பழம் மாறும் பருவம் பழுப்பதற்குத் தயாராகும் பருவமாகும்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்சீதாப்பழம்
கண் பார்வை சீதா பழங்களின் சுவை மற்ற பழங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. சுவை மட்டுமல்ல அவற்றிலுள்ள சத்துக்களும், அவை அளிக்கும் பலன்களும் அபாரமானவை. சாப்பாடு சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா உடல் எடை கூடி விடும், கொழுப்புச் சத்து, சர்க்கரை ஏறி விடும் என்ற பயம் ஸ்வீட் சாப்பிட விடாமல் உங்களைத் தடுக்கிறதா? ஸ்வீட்டிற்குப் பதில் ஒரு சீதாப்பழம் சாப்பிடுங்கள்.
இனிப்பு சுவையும் கிடைக்கும், நார்ச்சத்து மிகுந்திருப்பதால் சர்க்கரை அளவும் கூடாது, நல்லதைப் பயக்கும் சத்துக்களும் கிடைக்கும்.
சீதாபழங்களில் இருக்கும் சத்துக்கள்:
வைட்டமின் சி’கஸ்டர்ட்’ என்ற ஐஸ்கிரீம் போன்ற சுவை இந்தப் பழத்திற்கு இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. வைட்டமின்கள், புரதம், தாதுப் பொருட்கள், சக்தி தரும் இனிப்பு, கொழுப்புச் சத்து, நார்ச்சத்து என அனைத்தையும் கொண்டது சீதாப்பழம்.
நம் உடலில் உள்ள திசுக்களுக்கு பாதிப்பு தரக்கூடிய நச்சுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்ற ஆன்டிஆக்ஸிடென்ட் தேவை.
இதை உடலுக்குத் தருவது வைட்டமின் சி தான். ஆனால் இந்த வைட்டமின் உடலில் அதிக நேரம் தங்குவதில்லை. அதனால் ஒருவர் தினமும் வைட்டமின் சி அடங்கிய உணவைக் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
சமைத்த உணவில் இந்த வைட்டமின் விரயமாகிவிடுவதால் பழங்களைச் சாப்பிடுவதன் மூலமே நாம் இந்த வைட்டமினை அன்றாடம் பெற முடியும். மன அழுத்தத்தை சரி செய்யும் சீதாப்பழம் இரவில் ஒரு சீதாப்பழம் சாப்பிட்டுப் பாருங்கள், நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும்.
இதற்குக் காரணம் இப்பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் தாதுப் பொருட்கள்தான். இவை இரண்டிற்குமே மன அழுத்தத்தை சரிப்படுத்தும் குணம் உண்டு. அதோடு இந்த தாதுப் பொருட்கள், நம் உடலிலுள்ள எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இருதயத்திற்கும் வலுவளிக்கக் கூடியவை.
சிலர் நிறைய பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவார்கள். சிலருக்கு புகை பிடிக்கும் பழக்கமிருக்கும். அதிக அளவு டீ, காபி சாப்பிடுவர் சிலர். இன்னும் சிலருக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கும். இவர்கள் அனைவருக்குமே, இவற்றின் பாதிப்பு உடலில் ஏற்படாமலிருக்க பொட்டாசியம் சத்து அன்றாடம் தேவைப்படுகிறது. ஏனெனில் இந்த சத்தினையும் உடலில் தேக்கி வைக்க முடியாது.
எனவே தினமும் சாப்பிட வேண்டியுள்ள போது, இந்த சத்தினை நிறைய கொண்டிருக்கும் சீதாப்பழத்தை சாப்பிடலாமே!
வரலாற்றுச் சிந்தனை  அட்டிலா தி ஹன் (கி.பி. 434 - 453)
ஹங்கேரி நாட்டின் ஒரு பகுதியில் ஆட்சி செய்த தன் சொந்த சகோதரனையே கொன்று தன்னை மகாராஜாவாக உயர்த்திக் கொண்டவர் அட்டிலா! பிறகு முழு ஹங்கேரி, ஜெர்மனி, ரஷ்யா, உக்ரைன், பால்கன் போன்ற பகுதிகளையும் கைப்பற்றி கொடுங்கோல் ஆட்சி நடத்தி இவர் அரங்கேற்றிய அட்டூழியங்கள் ஏராளம்! ‘‘நான் கடந்து சென்ற பகுதிகளில் புல்லின் பச்சைத் தளிர்கூட அதன்பின் வளராது’’ என திகில் பன்ச் பேசி நாட்டை டர்ரியலாக்கியவர் அட்டிலா.
ஒரு நாட்டை ஆண்ட அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.
தலைமை மருத்துவன் "மன்னா! இதற்கு மருந்தே கிடையாது" என்று உண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான். ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான்.
மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர். "வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா" என்று கூறினர்.
நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியவில்லை. அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமை மருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும் புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் "என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்" என்று கூறினான்.
 வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள். அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான். அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.
அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். "மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம் முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்" என்றான். மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. "இப்போதே அந்தப்புரத்திற்குப் போய் தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்" என்று கிளம்பினான். அப்போது மருத்துவன் "மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!" என்றான்.
முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான். மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டே ஓடி விட்டார்கள்.
அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான். அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. "குரங்கை நினைக்கக் கூடாது" என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை. மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான்.
ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது. பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப் பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.
நீதி : பிடிவாதக்காரர்களையும், முட்டாள்களையும் திருத்த நேர்வழி பயன்படாது.

 

செய்துபார்ப்போம் DIY Origam-Butterfly

https://www.youtube.com/watch?v=_3Vo__0nuFc

 

இணையம் அறிவோம் https://depts.washington.edu/vurchin/?view=main

 

செயலி Origami Instructions For Fun

https://play.google.com/store/apps/details?id=com.mobilicos.howtomakeorigamifun&hl=en_US


No comments:

Post a Comment