அறிவுக்கு விருந்து – 03.09.2019 (செவ்வாய்)


அறிவுக்கு விருந்து – 03.09.2019 (செவ்வாய்)

வரலாற்றில் இன்று
 செப்டம்பர் 3 (September3) கிரிகோரியன் ஆண்டின் 246 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 247 ஆம் நாள்.
நிகழ்வுகள்
· 301உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது.
· 590முதலாம் கிரகோரி இரண்டாம் பெலாகியசுக்குப் பின்னர் திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
· 863அரபுகளுக்கு எதிரான லலக்காவோன் போரில் பைசாந்தியர்கள் முக்கிய வெற்றியைப் பெற்றனர்.
பிறப்புகள்
·  1814ஜேம்ஸ் சில்வெஸ்டர், பிரித்தானியக் கணிதவியலாளர் (. 1897)
·  1829அடோல்ஃப் ஃபிக், செருமானியக் கண்டுபிடிப்பாளர் (. 1901)
·  1856லூயிசு சலிவன், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (. 1924)
·  1891வி. . கந்தையா, இலங்கை அரசியல்வாதி (. 1963)
இறப்புகள்
·  1658ஆலிவர் கிராம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர்,
·  1898முருகேச பண்டிதர், ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (பி. 1830)
·  1969ரிச்சர்ட் லயனல் ஸ்பிட்டெல், இலங்கை மருத்துவர், எழுத்தாளர் (பி. 1881)
·  1973சி. இலக்குவனார், தமிழகத் தமிழறிஞர் (பி. 1909)

·  1991பிராங்க் காப்ரா, இத்தாலிய-அமெரிக்க இயக்குநர் (பி. 1897)

சிறப்பு நாள்

 குறளறிவோம்-  59 - வாழ்க்கைத் துணைநலம்
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
கலைஞர் மு.கருணாநிதி உரை: புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.
மு.வரதராசனார் உரை: புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
Translation: Who have not spouses that in virtue's praise delight, They lion-like can never walk in scorner's sight.
Explanation: The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them.
சிந்தனைக்கு
ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.
தமிழ் அறிவோம்                                                        
 சுட்டெழுத்துஎட்டுசிவன்விஷ்ணுபிரம்மா
 பசு(ஆவு), ஆன்மாஇரக்கம்நினைவுஆச்சாமரம்
விடுகதை விடையுடன்
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்? மீன் வலை
பழமொழி அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண்ணும் சமைக்கும்.
பொருள்: ஐந்து சமையல் பொருள்களும் மூன்று சமையல் தேவைகளும் அருகில் இருந்தால் ஒன்றும் அறியாத சிறுபெண்கூட எளிதில் சமைத்துவிடுவாள்.
விளக்கம்: அஞ்சு என்பது சமையலுக்குப் பயன்படும் மிளகு, உப்பு, கடுகு, தனியா மற்றும் புளி. மூன்று என்பது நீர், நெருப்பு, விறகு.
Enrich your   vocabulary
·         Mirror.....கண்ணாடி 
·         Beckon... சைகை செய் 
·         Quiver.....அசைதல் 
Opposite Words 
Brief X  Long
  • We stopped by Alice’s house for a brief visit.
  • He’s been gone a long time.
Bright X  Dull
  • The weather was bright and sunny.
  • Outside the weather was hazy and dull.
மொழிபெயர்ப்பு
வெள்ளைக் கத்தரி

வெண்ணுருண்டை முள்ளங்கி

சீமைக்கூடாரக்காய்

Proverb
Procrastination is the thief of time
இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + A                                 
அனைத்தையும் செலெக்ட் செய்ய
Ctrl + B
நீங்கள் தேர்வு செய்த எழுத்து அல்லது லைன் போல்டாக தேறிய
இனிக்கும் கணிதம்     ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்.
1/32 - அரைவீசம்
1/40 -
அரைமா
1/64 -
கால் வீசம்
1/80 -
காணி
அறிவியல் அறிவோம்  அறிவியல் ஆத்திசூடி
எல்லாம் ஓடிக்கொண்டே இருக்கிறது
எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறது
ஏன் எதற்காக என்று கூர்மையான அறிவால்
எண்ணிப் பார்ப்பதே பகுத்தறிவு
அய்ம்புலன்களால் உணரப்படாத எதுவும் உலகத்தில் இல்லை
அய்ம்புலன்களின் அனுபவங்களில் வருவதுதான் பகுத்தறிவு
அறிவியல் துளிகள்
குருடர்களுக்கான எழுத்துமுறை - லூயி பிரெய்லி
தினம் ஒரு மூலிகை  -  பொடுதலை
பொடுதலைபொடுதினை பூஞ்சாதம் பூற்சாதம் (Phyla nodiflora) என்பது ஒரு மூலிகைச் செடியாகும். இது ஈரப்பாங்கான தரையுடன் ஒட்டிப் படர்ந்து வளர்கிறது. இது மருத்துவக் குணங்களுடைய ஒரு மூலிகைச் செடியாகும். இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணையானது பொடுகுத் தொந்தரவைத் தீர்க்கப் பயன்படுவதால் பொடுதலை எனும் பெயரால் அழைக்கப்படுகிறது.
பொடுதலையின் தண்டானது சிறிய ரோம வளரிகள் கொண்டதாக இருக்கும். இது சிறிய இலைகளைக் கொண்டது. இலைகளின் விளிம்புகளில் வெட்டுகள் கொண்டதுபோன்ற தோற்றம் கொண்டது. பொடுதலையின் காயானது சிறியதாகவும் திப்பிலிபோன்றும் இருக்கும். தண்டில் உள்ள கணுப்பகுதிகளில்யில் வேர்கள் உருவாகி தரையைப் பற்றிக்கொள்ளும். இதன் மலர்கள் அழகியதாகவும் கருஞ்சிவப்புடன் வெண்ணிறம் கலந்த நிறத்தோடு இருக்கும். இது பலவகையில் சித்த மருத்துவத்திலும், வீட்டுவைத்தியத்திலும் பயன்படுகிறது.
"பொடுதலை என்ற பேருரைக்கில் விடுதலையாகும் பேதி" என்பது பழமொழி.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்  - திராட்சை
· ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில் வைட்டமின்கள் பி1,பி2,பி6,பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவைத்தவிர பாஸ்பரஸ்,இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.
·  இப்பழத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், உடல் வறட்சியை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, புதிய ரத்தத்தை ஊறவைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. அதனால் மூளையும், இதயமும் வலிமை பெறும். கல்லீரலின் பலவீனத்தால் உணவு செரிமானமாகாத தொல்லையை நீக்கும். உஷ்ணத்தினால் உடலில் ஏற்படும் நமைச்சல், சிறுநீர் கடுப்பை குணப்படுத்துகிறது.
·திராட்சை சீரற்ற மாதவிடாய் சீராடைகிறது. மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்குகிறது. இதயபலவீனமானவர்களுக்கு திராட்சை சிறந்த மருந்து. தலைவலி, காய்க்காய் வலிப்பு போன்றவற்றை குணப்படுத்தகிறது.
·சிறிய அளவில் எடுத்துக்கொள்ளப்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும் உள்ளது , இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு.திராட்சைப்பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் resveratrol என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அதிகம் உள்ளதால் . நாளும் சிறிதளவு சிவப்பு ஒயின் சாப்பிடுவதை வல்லுநர்கள் ஆதரிக்கிறார்கள்.
·அதிகம் சளிப்பிடித்திருக்கும் போதும், ஆஸ்துமா நோயுள்ளவர்களும், வாதஉடம்புக்குள்ளானவர்களும், அதிக அளவில் திராட்சைப்பழத்தை சாப்பிடக்கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை.திராட்சையில் உள்ள ஃப்ளேவோனாய்டுகளுள் ஒன்றான க்யூயர்சிடின் இருப்பதால், அவை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் உடலில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.
வரலாற்றுச் சிந்தனை புலித்தேவர் 
இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறுஎன்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்
1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த புலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான்
நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போரில் டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் புலித்தேவர் மறுத்துவிட்டார்.
தன்னம்பிக்கை கதை -உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும்
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது. சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.
பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான். பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான். பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய்.
உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

ஓவியம் வரைவோம்  Easy drawing for beginners, Independence Day drawing

https://www.youtube.com/watch?v=LmWpLRPWi6I

இணையம் அறிவோம்  https://www.natgeokids.com/uk/

செயலி Daily Current Affairs 2019 & General Knowledge App

https://play.google.com/store/apps/details?id=in.oliveboard.gkprep&hl=en

No comments:

Post a Comment