அறிவுக்கு விருந்து – 06.09.2019 (வெள்ளி)
வரலாற்றில் இன்று
நிகழ்வுகள்
·394 – உரோமைப் பேரரசர்
முதலாம் தியோடோசியஸ்
தனது எதிராளியான இயூஜீனியசைப் போரில் தோற்கடித்துக் கொன்றார்.
·1522
– பேர்டினண்ட் மகலனின்
விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் எசுப்பானியாவை
வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல்
என்ற பெயரைப் பெற்றது.
·1620
– வட அமெரிக்காவில்
குடியேறுவதற்காக இங்கிலாந்தின்
பிளைமவுத் துறையில் இருந்து யாத்திரிகர்கள் புறப்பட்டனர்.
பிறப்புகள்
இறப்புகள்
சிறப்பு நாள்
குறளறிவோம்-
62 - மக்கட்பேறு
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
பண்புடை மக்கட் பெறின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.
மு.வரதராசனார் உரை: பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
Translation: Who
children gain, that none reproach, of virtuous worth,
No evils touch them, through the sev'n-fold maze of birth.
No evils touch them, through the sev'n-fold maze of birth.
Explanation: The
evils of the seven births shall not touch those who abtain children of a good
disposition, free from vice.
சிந்தனைக்கு
புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்தில்லாதது.
தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்
எ
-----> வினா
எழுத்து, ஏழு
என்பதின் தமிழ் வடிவம்
|
ஏ
-----> அம்பு
|
விடுகதை
விடையுடன்
பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன ? – கண்கள்
பழமொழி
ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.
பொருள்: ஒரு கொம்பில்லாத விலங்குகூட ஏழை
என்றால் அவன்மேல் பாயும்.
விளக்கம்: மோழை என்றல் கொம்பில்லாத விலங்கு: ’மூத்தது மோழை, இளையது காளை’ என்பர்.
விளக்கம்: மோழை என்றல் கொம்பில்லாத விலங்கு: ’மூத்தது மோழை, இளையது காளை’ என்பர்.
"Even a child may beat a man
that’s bound."
Enrich your vocabulary
·
Cinnamon......பட்டை
·
Garlic.....பூண்டு
·
Rattle......உப்பி வருகின்ற
·
Sesame...... எள்
Opposite Words
Buy X
Sell
- The money will be used to buy equipment for the school.
- If you offer him another hundred, I think he’ll sell.
Calm X
Windy
- It is a calm day.
- It’s too windy for a picnic.
மொழிபெயர்ப்பு
Proverb
Live and Let live -
வாழ் ,வாழவிடு
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl
+ I
|
தேர்வு செய்த லைன் அல்லது எழுத்தை இட்டாலிக் செய்ய
|
Ctrl
+ J
|
தேர்வு செய்த லைன் மற்றும் ஸ்கீரின் ஜஸ்டிபை செய்ய.
|
இனிக்கும்
கணிதம் ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்.
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
அறிவியல் அறிவோம் – மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
அறிவியல் அறிவோம் – மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்
*கடுக்காய் பொடி :-
குடல் புண் ஆற்றும், சிறந்த
மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி :-
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
அறிவியல் துளிகள்
குவாண்டம்
கொள்கை - மாக்ஸ் பிளாங்க்
தினம் ஒரு மூலிகை - சேடல்
சேடல் என்னும் மலர் மகளிர் தொகுத்து விளையாடிய மலர்களில் ஒன்று. வைகையாற்றுப்
படுகையில் இது பூத்துக் கிடந்தது என்றும், மதுரையைக் காவல் புரிந்துவந்த நாற்பெரும்
பூதங்களில் ஒன்று சேடல் மலரை அணிந்திருந்தது என்றும் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.இதற்குப்
பாரிஜாத மலர் என்ற பெயர் உண்டு. சேடல் மலரை அறிஞர்கள்
இக்காலப் பவள-மல்லி எனக் குறிப்பிடுகின்றனர். சேடல் என்னும் சொல்லில்
செந்நிறத்தைக் குறிக்கும் வேர்ச்சொல் உள்ளது. பவள நிறம் என்பது செந்நிறம்.
பவளமல்லிப் பூவின் புறவிதழில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூவின் காம்பு சிவப்பாக
இருக்கும். எனவே இதனைச் சேடல் எனல் பொருத்தமானதே.
இப்பூக்கள் இரவிற் பூத்து காலையில் உதிர்ந்து விடும். இதன் பழங்கள்
தட்டையாக,
வட்ட வடிவில் காணப்படும். இரு விதைகளைக் கொண்டிருக்கும்.
இம்மரத்தின் பூவின் வாசம் 100 அடி சுற்றளவுக்கு வீசும் தன்மை கொண்டது. இதன் பூ
முன்னிரவில், அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் பூப்பதால்
வடமொழியில் பிரம்மதர்ஷன் புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது. இதன் இலைகள்
கோடைகாலத்தில் உதிர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாட்டை வடிகட்டும் தன்மை கொண்டது.
பயன் : இலைகள் தளவாடங்களை மெருகேற்றத் தேய்ப்பதற்காகப் பயன்படும். பூவின்
காம்பிலிருந்து பெறப்படும் பவளநிறச் சாயம் டுசார்(Tussar/Tussore Silk) பட்டு
எனப்படும் பட்டுத்துணிகளுக்கு நிறமேற்றப் பயன்படும்.
ஆயுர்வேத
மருத்துவத்தில் பவளமல்லி விதைகளும் இலைகளும் பூக்களும் வயிற்றுத் தொந்தரவு, மூட்டு/என்பு
வலி, காய்ச்சல், தலைவலி
என்பவற்றிற்கும் இன்னும் பல விதங்களிலும் மருந்தாகப் பயன்படுகின்றன.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் - பப்பாளி
நாள்தோறும் 1 துண்டு
பப்பாளிப் பழம்
சாப்பிட்டு வர
கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும். செரிபாற்றல் பெருகும். குன்மம், ரணம்,
அழற்சி,
வயிற்றுப் பூச்சி,
மலச்சிக்கல், சிறுநீர்பாதை அழற்சி
ஆகியவை
தீரும்.
பப்பாளி மிகச்சிறந்த மலமிளக்கி. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், அடிக்கடி பப்பாளி சாப்பிட்டு வந்தால் நல்ல
பலன்
கிடைக்கும். அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளி மிகச்சிறந்த மருந்தாகிறது. வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்றவற்றுக்கும் பப்பாளி நிவாரணம் தரும்.
நன்கு பழுத்த
பழத்தைக் கூழாகப் பிசைந்து தேன்
கலந்து
முகத்தில் பூசி,
ஊறிய
பின்
சுடுநீரால் கழுவி
வர
முகச்சுருக்கம் மாறி,
முகம்
அழகு
பெறும்.
இளமைப் பொலிவைக்கூட்டி
வயோதிகத்தை கட்டுப்படுத்தும் பப்பாளி, உடம்பிலுள்ள நச்சுக்கள் முழுவதையும் சுத்திகரிக்கக் கூடியது.
பப்பாளிக் காயை
கூட்டாக செய்து
உண்டு
வர
குண்டான உடல்
படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை
சாப்பிட்டு வரக்
கல்லீரல் வீக்கம் குறையும். உடல்
எடை
குறைக்க விரும்புவோர், அதற்கான டயட்டுடன், தினமும் காலை
உணவாக
பப்பாளிப்பழத்தை எடுத்துக்கொண்டால் நல்ல
பலன் கிடைக்கும். உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், ஒரு
மாதம்
தொடர்ந்து பப்பாளியை வெறும்
வயிற்றில் சாப்பிட்டால், இரத்த
அழுத்த
பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
பப்பாளி
பழத்தை
அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர
உடல்
வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல்
உறுதி
ஏற்படும். பப்பாளி பாலை
விளக்கெண்ணையில் கலந்து
கொடுக்க வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். பப்பாளியில் உள்ள
பாப்பைன் மற்றும் சைமோபாப்பைன், செரிமானம் சிறப்பாக நடக்க
உதவி
புரியும். மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்கள், பப்பாளியை உட்கொண்டால், அதில்
உள்ள
நார்ச்சத்து நல்ல
நிவாரணத்தை வழங்கும்.
வரலாற்றுச் சிந்தனை நீலகண்ட பிரம்மச்சாரி
1911ஆம்
ஆண்டில் மணியாச்சி ரயில்
நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவட்ட
ஆட்சியர் ஆஷ்
கொலை
வழக்கில் முதல்
குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டபோது தான்
நீலகண்டனின் பெயர்
நாடு
முழுவதும் பிரபலமானது. ஆஆனல்,
அதற்கு
முன்பே
இவரது
விடுதலைப் போராட்ட ஈடுபாடு அளப்பரியதாக இருந்த்து. இளம்
வயதில்
20,000 போராளிகளை ஒன்று
திரட்டி இந்திய
விடுதலைப் போராட்டத்திற்கான புரட்சி இயக்கம் ஒன்றை
தோற்றுவித்துப் போராடியவர்.
பாரதியாருடன் நெருங்கிப் பழகியவர். பாரதி புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த
காலத்தில், இந்தியா பத்திரிகையை பொறுப்பேற்று நடத்தியவர். வாழ்வின் பெரும்பகுதியை இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் நாட்டுச் சிறைகளில் கழித்தவர். உணவில்லாமல் சென்னையில் அலைந்து திரிந்த நீலகண்ட பிரம்மச்சாரியைக் கண்டதும் தான்
பாரதி
‘தனியொருவனுக்கு உணவில்லை எனில்
இந்த
ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று
பாடினார்.
வாழ்வின் பிற்பகுதியில் துறவு மேற்கொண்டு பெற்று
மைசூரில் உள்ள
நந்தி
மலையடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு
வாழ்ந்தார். அப்போது தனது
பெயரை
ஸ்ரீ
ஓம்காரானந்த சுவாமி
என்றும் மாற்றிக்கொண்டார்.
கோதையூர் என்ற ஒரு ஊரை வெகு நாட்களுக்கு முன் கோதண்டராமன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். மன்னர் நீதி தவறாமல் ஆட்சி செய்து வந்தார். அதோடு ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை எல்லாம் உடனுக்குடன் செய்து கொடுப்பார். கலைஞர்களுக்கும், கவிஞர்களுக்கும் பரிசுகளை வாரி வாரி வழங்குவார். இதனால் மன்னரின் புகழ் எல்லா நாட்டிலும் பரவத் தொடங்கியது.
வேங்கை நாட்டு மன்னர் வேழவேந்தன் கோதண்டராமனைக் கண்டு பொறாமையடைந்தார். அவரும் என்னைப் போன்ற மன்னர்தானே. அவருக்கு மட்டும் எப்படி இந்தப் பேரும்புகழும் கிடைத்தது? என்று வியப்போடு தனது மந்திரியாரான காளதீபனிடம் அடிக்கடி கேட்டுக் கொள்வார். மந்திரியார் காளதீபன் வேழவேந்தரின் கஞ்சத்தனத்தையும், கொடூர குணத்தையும் நன்கு அறிவார்.
நம் மன்னரைத் திருத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதை உணர்ந்து கொண்ட அவர். மன்னரை வணங்கி அரசே! மன்னர் கோதண்டராமனுக்கு தாங்களும் இணையானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உங்களுக்கு ஏற்படாத பேரும், புகழும் அவருக்கு எப்படி ஏற்பட்டது என்பதை விளக்க நீங்களும், நானும் மாறுவேடம் அணிந்து அவர் அரண்மனைக்குச் செல்ல வேண்டும். நான் சொன்னபடி நீங்களும் அங்கே நடிக்க வேண்டும். அதற்கு சம்மதமானால் நாம் இன்றே கோதையூருக்குப் புறப்படலாம் என்று கூறினார். மன்னர் வேழவேந்தனும் ஆர்வத்துடன் அதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் ஏழை விவசாயியைப்போன்று மாறுவேடம் அணிந்து கொண்டு கோதையூருக்குப் புறப்பட்டார்கள். அரண்மனையில் நுழையும் நேரம் காவலர்கள் அவர்களை இன்முகத்தோடு வரவேற்று, என்ன காரணத்திற்காக வந்திருக்கிறீர்கள்? என்று விசாரித்தார்கள்.
"ஐயா! நாங்கள் இருவரும் மிகவும் வறுமையால் வாடிக் கொண்டிருக்கின்றோம். மன்னரிடம் உதவி பெற்று எங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம் என்று வந்துள்ளோம்" என்று கூறினார் மாறுவேடத்தில் இருந்த காளதீபன்.காவலர்கள் இருவரையும் தர்பாருக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த நேரத்தில் தர்பாரில் மன்னர் இல்லை. மன்னர் அவசர வேலை காரணமாக தன் அறையைவிட்டு வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார். காவலர்கள் மன்னரை வணங்கி அவர் காதருகே ஏதோ கூறினார்கள்.
மன்னர் புன்னகைத்தபடி "நண்பர்களே! நீங்கள் இருவரும் என்னிடம் உதவிபெற வந்திருப்பததைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதோ எனது முத்துமாலை இரண்டை உங்கள் இருவருக்கும் பரிசளிக்கிறேன்" என்று கூறியவாறு தன் கழுத்தில் கிடந்த இரண்டு முத்து மாலைகளையும் மாறுவேடத்தில் இருந்த மன்னர் வேழவேந்தனிடமும், மந்திரியார் காளதீபனிடமும் கொடுத்து விட்டுச் சென்றார். நினைத்த மாத்திரத்தில் தர்மம் செய்கின்ற மன்னரின் கொடைத் தன்மையைக் கண்டு மன்னர் வேழவேந்தன் வியப்புற்றார். இருவரும் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். மந்திரியார் காளதீபன் அரசே இப்போது கவனித்தீர்களா மன்னர் கோதண்டராமனின் தர்மம் செய்யும் முறையே, அவரை புகழ் உச்சியில் கொண்டு சென்றுள்ளது. ஒரு நாட்டை ஆளுகின்ற மன்னருக்கு ஈகை திறன் மிகவும் முக்கியம் என்றார்.
No comments:
Post a Comment