அறிவுக்கு விருந்து – 07.09.2019 (சனி)

அறிவுக்கு விருந்து – 07.09.2019 (சனி)

வரலாற்றில் இன்று
 செப்டம்பர் 7 (September 7) கிரிகோரியன் ஆண்டின் 250 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 251 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·878திக்குவாயர் லூயி மேற்கு பிரான்சியாவின் மன்னராக எட்டாம் யோவான் திருத்தந்தையால் முடிசூடப்பட்டார்.
· 1159மூன்றாம் அலக்சாண்டர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
· 1191மூன்றாம் சிலுவைப் போர்: இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் அர்சுப் நகரில் நடந்த சண்டையில் சலாகுத்தீனைத் தோற்கடித்தார்.1818மூன்றாம் காருல் நோர்வே மன்னராக குடி சூடினார்.
பிறப்புகள்
·  1860அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ், அமெரிக்க ஓவியர் (. 1961)
·  1867சங்கரதாஸ் சுவாமிகள், தமிழக நாடகாசிரியர், நாடக நடிகர் (. 1922)1951மம்முட்டி, மலையாள நடிகர்
இறப்புகள்
·  1566முதலாம் சுலைமான், உதுமானியப் பேரரசர் (பி. 1494)
·  1809முதலாம் இராமா, தாய்லாந்து மன்னர் (பி. 1737)
·  1949எல்டன் மேயோ, ஆத்திரேலிய உளவியலாளர் (பி. 1880)
·  1974சி. மூ. இராசமாணிக்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1913)
சிறப்பு நாள்
விடுதலை நாள் (பிரேசில் போர்த்துகலிடம் இருந்து 1822 இல்)
குறளறிவோம்-  63 - மக்கட்பேறு
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.
மு.வரதராசனார் உரை: தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.
Translation:'Man's children are his fortune,' say the wise;
From each one's deeds his varied fortunes rise.
Explanation:  Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.
சிந்தனைக்கு
நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்
-----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு 
 -----> ஒழிவு
-----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை 
ஒள -----> பூமி, ஆனந்தம்                                               
விடுகதை விடையுடன்
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன? நிலா
பழமொழி
இரண்டு கையும் போதாது என்று அகப்பையும் கட்டிக்கொண்டான்.
பொருள்: கொடுத்ததை வாங்குவதற்கு இரு கைகள் போதாமல் அவன் சமையல் கரண்டியையும் கட்டிக்கொண்டானாம்!
விளக்கம்: ஏன் கைகள் போதவில்லை? வாங்கியது என்ன? கையூட்டு (லஞ்சம்).
Enrich your   vocabulary
·         Cloves....இலவங்கம் 
·         Ginger..... இஞ்சி 
·         Cardamom.....ஏலக்காய் 
Opposite Words 
Capable —— Incapable
  • All the staff at the nursing home seemed very capable.
  • He seemed incapable of understanding how she felt.
Captive —— Free
·         His son had been taken captive during the raid.
·         He knew he could be free in as little as three years.
மொழிபெயர்ப்பு
Aubergines/Eggplant    கத்தரிக்காய்
Avocado                     யாணைக்கொய்யா
Proverb
A friend in need is a friend indeed
உயிர் கொடுப்பான் தோழன்
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + K
இன்செர்ட் ஐபேர்லின்க்.
Ctrl + L
தேர்வு செய்த லைன்- அலைன் செய்ய மற்றும் தேர்வு செய்த எழுத்து லெப்ட் சைடு அலைன் செய்யலாம்.
இனிக்கும் கணிதம்     ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்.
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 -
குரல்வளைப்படி
1/575114661888000000 -
வெள்ளம்
1/57511466188800000000 -
நுண்மணல்
1/2323824530227200000000 -
தேர்த் துகள்.
அறிவியல் அறிவோம்  மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்
அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
அறிவியல் துளிகள்
எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன்
தினம் ஒரு மூலிகை -  கொத்தமல்லி
கொத்தமல்லி (Coriandrum sativum) அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. சிறு செடி வகையைச் சார்ந்தது. இச்செடி 50 செமீ உயரம் வளரக் கூடியது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. இசுரேலில் கண்டெடுக்கப்பட்ட சில கொத்தமல்லி விதைகள் 8000 ஆண்டுகள் பழமையானவை எனக் கருதப்படுகின்றன.
பயன்கள் - உணவு கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. . . சாம்பார், இரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன.கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர். கொத்தமல்லி இலையை பச்சடியாக, பொடியாக அல்லது கீரையாக ஆக்குவர்.
பயிரிடல்- கொத்தமல்லி தட்பவெப்ப நிலை பொருந்திய இடத்தில் எளிதாக வளரக்கூடியது. நடவு செய்த 20 மற்றும் 35ம் நாட்களில் ஒரு கை களை எடுக்க வேண்டும். வாழையில் ஊடுபயிராக கொத்துமல்லியை சொட்டுநீர்ப் பாசன முறையில் சாகுபடி செய்கிறார்கள். (Coriandrum sativum) அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. சிறு செடி வகையைச் சார்ந்தது. இச்செடி 50 செமீ உயரம் வளரக் கூடியது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் - அன்னாசி பழம்
அன்னாசி பழத்தின் சுவை போலவே அதன் குணங்களும் அற்புதமானது. அனைவரும் விரும்பி சாப்பிடும் பழ வகைகளில் ஒன்றே அன்னாசி பழம்.
தாழை இலை போன்ற நீண்ட அடுக்கான மடல்களை உடைய செடி. கொல்லிமலை போன்ற இடங்களில் பேரளவில் பயிரிடப் பெற்றுப் பழமாக விலைக்குக் கிடைக்கும். இப்பழம் பூந்தாழம் பழம் எனவும் வழங்கப்பெறும். இலை பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
நுண்புழுக் கொல்லுதல், வியர்வை சிறுநீர் பெருக்குதல், மலமிளக்குதல், குருதிப்பெருக்கைத் தணித்தல், மாதவிலக்கைத் தூண்டுதல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.
நோய் தொற்றுகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து, எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்களை கொடுத்து வலிமை பெற செய்கிறது. வைட்டமின் பி அதிகம் காண படுவதால் பெண்கள் அதிகம் எடுத்து கொள்ள உடல் ஆரோக்கியம் பெற்று, பல வியாதிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளலாம். அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.
இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம்.
அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாகச் சாப்பிடலாம். தயிருடன் சேர்த்துச் சாப்பிடலாம். பழரசமாக, நீர் சேர்த்துச் சாப்பிடலாம். மற்ற காய்கறி சாலட்களுடன் சேர்த்துச் சாப்பிடலாம். கர்ப்பிணிப் பெண்களும், மூல நோய் உள்ளவர்களும் இப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.
வரலாற்றுச் சிந்தனை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 
சுபாஷ் சந்திர போஸ் இந்திய விடுதலைப் போராட்டத்தை தனி வழியில் நடத்திச்சென்றவர். 25வது வயதில் லண்டனில் படிப்பை முடித்துத் திரும்பிய நேதாஜியை சித்தரஞ்சன் தாஸ் தான் நிறுவிய தேசியக் கல்லூரிக்கு தலைராக நியமித்தார். லண்டனில் படித்தபோது மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் அறிந்திருந்த நேதாஜி கல்லூரி மாணவர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டும் உரைகள் ஆற்றினார்
இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க்கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். அப்படை மூலம் இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார்

தன்னம்பிக்கை கதை -  எண்ணுவது உயர்வு
ஒரு ஊரில் ஒரு மலையடிவாரத்தில் ஒரு பெரிய ஆலமரமொன்றில் ஒரு காகமும், ஒரு புறாவும் நெடுநாட்களாகத் தவம் செய்துக் கொண்டிருந்தன. அவைகளைப் பார்த்த இறைவன் மனமிரங்கினார். அந்த மலையடிவாரத்தில் அப்பறவைகள் முன் காட்சியளித்தார். இறைவனைத் தங்கள் கண் முன்னேக் கண்டதும் புறாவும், காகமும் மகிழ்ச்சியடைந்தன.
           பறவைகளே! உங்கள் தவத்தைக் கண்டு என் மனமிரங்கிவிட்டது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன். என்று கூறினார். உடனே காகம் இறைவா எனதுக் கருமை நிறம் மாறி என்னுடல் பொன்னிறமாக வேண்டும். என் பொன்னிற இறக்கைகளைப் பார்த்து எல்லோரும் பொறாமைப் படவேண்டும். அதனைப் பார்த்து நான் ரசிக்க வேண்டும். என்று கூறியது.
காகமே உனக்கு உனது எண்ணப்படியே வரம் தந்தேன் என்று கூறியவாறு இறைவன் உடனே புறாவைப் பார்த்தார். புறாவும் இறைவா இந்த உலகில் இப்போது எல்லா உயிர்களுக்குமே கருணையுள்ளம் குறைந்து வருகிறது. அன்பும் இல்லாமல், இரக்கமும் இல்லாமல் பலக் கொடிய வழிகளில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறான மனப்போக்கெல்லாம் அவர்களை விட்டு மறையவேண்டும். எல்லா நாடுகளும் செழித்து எல்லா மக்களும் நலமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றது.
இறைவன் புறாவை வியப்போடு பார்த்தார். புறாவே உனது நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் உன்னுடைய வேண்டுகோளை அப்படியே என்னால் நிறைவேற்ற முடியாது. இந்த உலகில் எல்லா உயிரினங்களுக்கும் அவரவர்கள் எண்ணப்படியே வாழ்க்கையமைகிறது. நல்ல எண்ணத்தை உடையவர்கள் நலமடைவார்கள். தீய எண்ணத்தை உடையவர்கள் துன்பமடைவார்கள். அவர்களின் வாழ்க்கை அவர்கள் கையில்தான் உள்ளது. நீ நல்லெண்ணம் உடையதாக இருக்கின்றாய். எனவே நீ கூறும் நல்ல வார்த்தைகளைக் கேட்கும் அனைவரும் அதை மதித்து நடப்பார்கள். உனக்கு எந்த துன்பமும் ஏற்படாதவாறு நலமாக வாழ வரமளிக்கிறேன். இருவரும் மகிழ்ச்சியாகச் செல்லுங்கள் என்று கூறி மறைந்தார். காகத்தின் இறக்கைகள் எல்லாம் உடனே பொன்னிறமாக மாறிவிட்டது. அதனைப் பார்த்து காகம் மட்டற்ற மகிழ்சியடைந்து அந்த இடத்தை விட்டுப் பறந்து சென்றது. புறாவும் உற்சாகமடைந்து, மகிழ்ச்சியோடு அந்த இடத்தைவிட்டு பறந்து சென்றது.
புறாவைக் கண்ட மற்ற பறவைகள் எல்லாம் அதனிடம் ஏதோ ஓர் சக்தி இருப்பதாக உணர்ந்தன. புறாவைக் கண்டு வணங்குகின்றன. புறாவும் அந்தப் பறவைகளுக்கெல்லாம் நல்லறிவுரைகளை எடுத்துக் கூறியது. புறா சென்ற இடமெல்லாம் அதற்கு மதிப்புக் கிடைத்தது. புறாவும் மிகவும் மகிழ்ச்சியோடு தமக்குக் கிடைத்த உணவு வகைகளை மற்ற பறவைகளுக்கும் பகிர்ந்துக் கொடுத்தது. ஒரு நாள் பொன்னிறமான இறக்கைகள் கொண்டக் காகத்தை வேடன் பார்த்தான். உடனே அந்த காகத்தைப் பிடித்துச் சென்று கூண்டிலடைத்து வேடிக்கைப் பொருளாக்கினான்.
வேடன் பிடியில் சிக்கிய காகம் அப்போதுதான் தன் தவறை உணர்ந்தது. எனது பேராசை பிடித்து கீழ் தரமான எண்ணத்தால் இறைவனின் வரத்தை வீணாக்கிவிட்டேனே. நானும் புறாவைப் போன்று நல்லெண்ணத்தோடு வரம் கேட்டிருந்தால் இந்தத் துன்பம் நேர்ந்திருக்காதே. இறைவன் சொன்னது உண்மைதான். ஒருவரின் எண்ணப்படியே வாழ்க்கை அமைகிறது. உயர்வான எண்ணம் உடையோர் உயர்ந்த வாழ்க்கையை அடையலாம். தாழ்வான எண்ணம் உடையோர் தாழ்ந்த வாழ்க்கையை அடைவார்கள் என்பதை இப்போது புரிந்து கொண்டேன் என்று தனக்குள் கூறியபடி மனம் வருந்தியது.
எண்ணத்தால் எண்ணம் போல் வாழ்க்கை அமைவதால், நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு வாழ வேண்டும்.

ஓவியம் வரைவோம் HOW TO DRAW A ROSE?

https://www.youtube.com/watch?v=EgEgJphSZ6U

இணையம் அறிவோம்https://wonderville.org/

செயலி Tamil Quiz Game

https://play.google.com/store/apps/details?id=com.whiture.tamil.apps.cp


No comments:

Post a Comment