அறிவுக்கு விருந்து – 23.09.2019 (திங்கள்)


 

அறிவுக்கு விருந்து – 23.09.2019 (திங்கள்)


வரலாற்றில் இன்று
செப்டம்பர் 23 (September 23) கிரிகோரியன் ஆண்டின் 266 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 267 ஆம் நாள்.
நிகழ்வுகள்
  1409 – 1368 வெற்றியின் பின்னர் முக்கிய வெற்றியை மிங் சீனா மீதான சமரில் மங்கோலியர்கள் பெற்றனர்.
  1641 – 100,000 பவுண்டு எடை தங்கத்துடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.
  1799இலங்கையில் அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.[1]
  1821 – திரிப்பொலீத்சா நகரைக் கிரேக்கர்கள் தாக்கி 30,000 துருக்கியரைக் கொன்றனர்.
  1846நெப்டியூன் கோள் பிரெஞ்சு வானியலாளர் உர்பெயின் ஜோசப் மற்றும் பிரித்தானிய வானியலாளர் ஜோன் அடம்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  1889 – நின்டெண்டோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள்
  கிமு 63அகஸ்ட்டஸ், உரோமைப் பேரரசர் (இ. 14)
  1215குப்லாய் கான், மொங்கோலியப் பேரரசர் (இ. 1294)
  1791யோகான் பிரான்சு என்கே, செருமானிய வானியலாளர் (இ. 1865)
  1851எல்லன் காயேசு, அமெரிக்கக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1930)
  1871பிரான்டிசேக் குப்கா, செக் நாட்டு ஓவியர் (இ. 1957)
இறப்புகள்
  1877உர்பைன் லெவெரியே, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர்
  1939சிக்மண்ட் பிராய்ட், ஆத்திரிய மருத்துவர் (பி. 1856)
 1951பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர்

  1968பியட்ரல்சினாவின் பியோ, இத்தாலியப் புனிதர் (பி. 1887)

சிறப்பு நாள்

குறளறிவோம்-  75 . அன்புடைமை

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.
மு.வரதராசனார் உரை: உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.
Translation:  They say that the felicity which those who, after enjoying the pleasure (of the conjugal state) in this world, obtain in heaven is the result of their domestic state imbued with love.
Explanation:  The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.
சிந்தனைக்கு
சிறிதளவு ஊக்கம் ஒரு பெரிய சாதனையின் துவக்கமாகும் ஈட்டி முனையால் சாதிக்க முடியாததைக்கூட இதய கனிவால் சாதிக்க முடியும்.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்
மு -----> மூப்பு 
மூ -----> மூன்று 
மே -----> மேன்மை, மேல் 
விடுகதை விடையுடன்
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?தவளை
 பழமொழி சேணியனுக்கு ஏன் குரங்கு?
பொருள்: நெசவு செய்பவன் ஒரு குரங்கை வளர்த்தால் தாங்குமா?
விளக்கம்: சேணியன் என்ற சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம்: ’ஆடை நெய்யுஞ் சாதி வகையான்’. இந்திரனுக்குச் சேணியன் என்றொரு பெயர் உண்டு. "இந்திரன். சேணியனு மன்றே தெரிந்து" (தனிப்பா). பழமொழி நாம் கெட்ட பழக்கங்களை வளர்த்துக்கொள்வது ஆத்மநலனுக்கு எவ்வளவு விரோதமானது என்று சுட்டுகிறது
Enrich your   vocabulary
unlock      பூட்டைத்திற
unravel     பிரச்சனை தீர்
unruffle     அமைதியாக்கு
Opposite Words 
Copy —— Original
  • We have six copies of the movie to give away.
  • He copied paintings of famous artists and passed them off as originals.
Correct —— Incorrect
  • If my calculations are correct, we’re about ten miles from Exeter.
  • The information you gave us was incorrect.
மொழிபெயர்ப்பு
ஒரு விதத் தண்டுக்கீரை
சாரணைக்கீரை
Proverb
A bad work man blames these tools
ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தை குறை சொல்வான்.
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl +
ஒரு வார்த்தை வலது பக்கம் நகர்த்த
Ctrl + <அம்புக்குறி>
வரி அல்லது பத்தி தொடக்கத்தில் நகரும்
இனிக்கும் கணிதம்      முகத்தல் அளவு
300
நெல் - 1 செவிடு
5
செவிடு - 1 ஆழாக்கு
2
ஆழாக்கு - 1 உழக்கு
அறிவியல் அறிவோம்  மூலிகைப் பொடிகள்
*பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

அறிவியல் துளிகள்    - புரோட்டான் - ரூதர்ஃபோர்டு
தினம் ஒரு மூலிகை -  மாசிக்காய்  :
            மாசிக்காய் (GALLNUT, தாவரவியல்:Quercus incana) மற்ற மரங்களின் காயைப் போல், பூவிலிருந்து காயாகாது. குறிப்பிட்ட சில மரங்களின் கிளைகளில் வளரும் ஒரு வகை குடம்பிகள் (larva) , சுரக்கும் திரவம் உறைந்து திரண்டு உருண்டையாகக் கெட்டிப்படும். இதுவே மாசிக்காயாகும். துவர்ப்பு சுவையுடன் கூடிய மாசிக்காய், சித்த மருத்துவத்தில் வாய், தொண்டை மற்றும் குடல் புண்களை ஆற்றும் அற்புதமான மருந்தாகும். சீன மருத்துவத்திலும் மாசிக்காய் பயன்படுத்தப்படுகிறது.  குழந்தைகளுக்கும் உரைத்துக் கொடுக்கப்படும், உரை மருந்து வகைகளில் மாசிக்காயும் ஒன்றாகும்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்வாழைப்பழம்
வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதன் முதலாக கடித்து சாப்பிடும் பழம் இந்த வாழைப்பழமாகத்தான் இருக்கும். தமிழர்கள் வகுத்த முக்கனிகளுள் மூன்றாவது கனி இது. எந்த சுபவிழாக்களாக இருந்தாலும், அங்கே முதலிடம் பிடிப்பது வாழைப்பழம்தான்.
வாழையில் பல வகைகள் இருந்தாலும், அதன் அனைத்து பாகங்களுமே நமக்கு நிறைய பயன்களை அள்ளித் தருகின்றன. ஹோர்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம் [வாழைப்பழம்  ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன.
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.  நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப்படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது.
வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக்(Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சுக்ரோஸ்(Sucrose), பிரக்டோஸ்(Fructose) மற்றும் குளுக்கோஸ்(Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும்(Fiber) கொண்டுள்ளது.
இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூளை வலிமை(Brain Power):  வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நெஞ்செரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.  இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம். குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன்கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.
உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள். இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.

 

வரலாற்றுச் சிந்தனை  ராணி முதலாம் மேரி  (கி.பி. 1553 - 1558)

மன்னர் எட்டாம் ஹென்றியின் ஒரே மகள்! இவர் பதவிக்கு வந்தபோது பிராட்டஸ்டன்ட் மற்றும் கத்ேதாலிக்கர்களிடையே கடும் மனக்கசப்பு  நிலவி
வந்தது! மேரி  பதவி ஏற்கும் வரை இங்கிலாந்து பிராட்டஸ்டன்ட் நாடாகத்தான் இருந்தது. ஆனால் மேரி தீவிர கத்தோலிக்க வெறியர்! அதிகாரம் கிடைத்த உடனே பிரிட்டனை கத்தோலிக்க நாடாக அறிவித்து செயல்பட்டார். இதனால் இரு பிரிவிடையே நடந்தநீயா? நானா?’ போராட்டத்தில் ரத்தக் களேபரம்  நிகழ்ந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதை வைத்தே மேரி ஏராளமான  பிராட்டஸ்டன்ட்டுகளைக் கொன்றொழித்தார்அதன்பின் இவரை ‘Bloody Mary’ என அழைக்கலாயினர்.

தன்னம்பிக்கை கதை -  சொல் புத்தி

    ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு" என்று ஏளனம் செய்தனர்.
இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், "இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்" என்று கிண்டலடித்தனர்.
இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்" என்றான்.
வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார். கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!" என்று காட்டமாக விமர்சித்தான்.
இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு "மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!" என்று முடிவு செய்தனர்.
அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
நீதி : சொல் புத்தியைவிட சுயபுத்தி மிக அவசியம்.


செய்துபார்ப்போம் Origami jumping frog

https://www.youtube.com/watch?v=2dxXuIhKt3c

இணையம் அறிவோம் https://www.classzone.com/books/earth_science/terc/navigation/investigation.cfm

செயலி Origami Instructions For Fun

https://play.google.com/store/apps/details?id=com.mobilicos.howtomakeorigamifun&hl=en_US