அறிவுக்கு விருந்து – 29.08.2019 (வியாழன்)

அறிவுக்கு விருந்து – 29.08.2019 (வியாழன்)

வரலாற்றில் இன்று

 ஆகத்து 29 (August 29) கிரிகோரியன் ஆண்டின் 241 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 242 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·  708செப்பு நாணயம் முதன் முதலில் சப்பானில் வார்க்கப்பட்டது.
·  1009செருமனியில் மாயின்சு பேராலயம் அதன் திறப்பு விழாவின் போது தீயினால் பெரும் சேதத்துக்குள்ளானது.
·  1261நான்காம் உர்பானுக்குப் பின்னர் நான்காம் அலெக்சாந்தர் 182-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
·  1350வின்செல்சி போரில் ஆங்கிலேயக் கடற்படைக் கப்பல்கள் மூன்றாம் எடவர்டு மன்னர் தலைமையில் 40 காசுட்டீலியக் கப்பல்களைத் தாக்கி வெற்றி பெற்றன.
பிறப்புகள்
·  1632ஜான் லாக், ஆங்கிலேய மருத்துவர், மெய்யியலாளர் (. 1704)
·  1943விஜயகுமார், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
·  1947டெம்பிள் கிராண்டின், அமெரிக்க கால்நடை அறிவியலாளர்
·  1949கே. ராதாகிருஷ்ணன், இந்திய அறிவியலாளர்
·  1958மைக்கல் ஜாக்சன், அமெரிக்கப் பாடகர், நடிகர் (. 2009)
இறப்புகள்
·  ·  1604அமீதா பானு பேகம், முகலாயப் பேரரசர் உமாயூனின் மனைவி (பி. 1527)
·  1976காஜி நஸ்ருல் இஸ்லாம், வங்காளக் கவிஞர், புல்லாங்குழல் மேதை (பி. 1899)
·  1985எம். கே. ராதா, இந்தியத் தமிழ் நாடக, திரைப்பட நடிகர் (பி. 1910)
·  1987நயி அல் அலி, பாலத்தீன கேலிச்சித்திர ஓவியர் (பி. 1938)

சிறப்பு நாள்

 குறளறிவோம்-  57 - வாழ்க்கைத் துணைநலம்
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
கலைஞர் மு.கருணாநிதி உரை: தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.
மு.வரதராசனார் உரை: மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.
Translation: Of what avail is watch and ward? Honour's woman's safest guard.
Explanation: What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity.
சிந்தனைக்கு
கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம்தான் கடினம்.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்                                                       
·         அனல்    - தீ
·         அனல்  - சூடு
விடுகதை விடையுடன்
கிட்ட இருக்கும் பட்டணம், எட்டித்தான் பார்க்க முடிவதில்லை அது என்ன? முதுகு
பழமொழி உருட்டப்புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.
பொருள்: ஒருவனது வஞ்சகச் செயல்களால் அவனுக்குள் இருக்கும் உண்மை ஒடுங்கிவிடும்.
விளக்கம்: உருளச்செய்தல் என்ற பொருளில் வரும் உருட்டு என்ற சொல், வார்த்தைகளை உருட்டி ஏமாற்றுவதையும் குறிக்கிறது: "சப்தஜா லத்தால் மருட்டுதல் கபடமென்றுருட்டதற்கோ"--தாயுமானவர்,
நின்ற. புரட்டு என்ற சொல் மாறுபட்டபேச்சைக் குறிக்கிறது. ’பொய்யும் புராட்டும்என்பது பொதுவழக்கு. ’இந்த உருட்டலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்என்கிறோம். உள்ளது என்பது ஒருவனுக்குள் உள்ள உண்மையை, அதாவது ஆத்மாவைக் குறிக்கிறது. உள்ளம் உண்மையை ஆராயாது கள்ளத்தை ஆராயும்போது, ஆத்மா மேன்மேலும் உள்ளுக்குள் ஒடுங்கிவிடுவதை இந்தப் பழமொழி எளிய சொற்களில் விளக்குகிறது.
Enrich your   vocabulary
·         Protested.....எதிர்த்தல் 
·         Nightmare.......இரவுக்கனவு 
·         Interfering......குறுக்கீடு Rambling......உலாத்துதல் 
Opposite Words 
Boundless X Limited
  • Today, the opportunities for leaders are boundless, but so are the challenges.
  • My knowledge of the business is limited.
Boy X Girl
  • The boys wanted to play football.
  • I’ve known Mollie ever since I was a little girl.
மொழிபெயர்ப்பு
Tomato
தக்காளி
Tapioca
மரவள்ளிக்கிழங்கு
Proverb
Measure thrice before you cut once
ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்
இனிக்கும் கணிதம்     ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்.
1 - ஒன்று
3/4 -
முக்கால்
1/2 -
அரை கால்
1/4 -
கால்
1/5 -
நாலுமா
3/16 -
மூன்று வீசம்
3/20 -
மூன்றுமா
அறிவியல் அறிவோம்  அறிவியல் ஆத்திசூடி
·         அவனென்ற கருத்தின்றி அசைவில்லை என்பது அறியாமை
·         அணுவென்ற பொருளின்றி அசைவில்லை என்பது அறிவுடைமை
·         ஆத்திகம் உண்டியல் வைப்பது
·         நாத்திகம் அதற்குப் பூட்டுப் போடுவது
·         இல்லாததற்கு இருப்பு என்பதில்லை
அறிவியல் துளிகள்
வெப்பநிலையின் அலகு என்ன? – கெல்வின் (பனிக்கட்டி, நீர் மற்றும் நீராவியும் ஒருங்கே அமைந்த வெப்பநிலையில் 1/273.15 பகுதியாகும்)
தினம் ஒரு மூலிகை  -  நீர்முள்ளி
நீர்முள்ளி அல்லது நிதகம் அல்லது இக்குரம் அல்லது காகண்டம் (Hydrophila spinosa) மருத்துவ மூலிகையாகப் பயன்படும் செடியாகும். முழுச் செடியும் மருத்துவ குணமுடையதாகும்.  இத்தாவரமானது இக்குரம், காகண்டம், துரகதமூலம், பாண்டுசமனி, முண்டகம், சுவேதமூலி, நிதகம் போன்ற பல்வேறு பெயர்களைக் கொண்டது. இது நீர் ஆதாரம் உள்ள இடங்களில் வளரும் முட்செடி என்பதால் ‘நீர்முள்ளி’ என்ற பெயர் பெற்றது. மேலும் இந்தத் தாவரத்திலிருக்கும் முட்களைக் குறிக்கும் வகையில் ‘முண்டகம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
இது வயல்கள்குளம், குட்டைகளில் நிமிர்ந்து வளரக்கூடியது. இதன் இலைகள் ஈட்டி வடிவமுடையவை. இதன் கணுக்களில் நீண்ட முட்கள் காணப்படும். இதன் பூ ஊதா நிற இதழ்களைப் பிரித்தது போன்ற வடிவமுடையது. இதன் விதைகள் பழுப்பு நிறத்தவை.
மருத்துவ குணங்கள் நீர்முள்ளிக் குடிநீர் உட்கொள்ள சிறுநீர் எரிவு, சிறுநீர்க்கட்டு, கால் வீக்கம் போன்ற நோய்கள் குணமாகும்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்  - செவ்வாழை
செவ்வாழை பழத்தின் அற்புத மருத்துவம் பார்ப்பதற்கு  அழகான தோற்றம் கொண்ட செவ்வாழையில் மருத்துவ  ஆரோக்கியம் அதிகம் உள்ளது. செவ்வாழையை தொடர்ந்து சாப்பிட்டு வர மாலை கண்  நோய் இருபவர்கள் நல்ல பலனை பெறலாம். அதன் பிறகு ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும், சீரான ரத்த ஓட்டத்தை கொடுக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கும், தோல்களில் ஏற்படும் வெடிப்புகள், தழும்புகள் , சொறி, சிரங்கு போன்றவைகளுக்கு சிறந்த மருந்து செவ்வாழை பழம் ஆகும்.
உணவு சாப்பிட்ட பின் ஒரு செவ்வாழை சாப்பிட ஜீரண அடையும். தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு.
வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும். தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.
செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம், சிறுநீர் கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது.
எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சமாக தெளிவடையும்.
வரலாற்றுச் சிந்தனை சுந்தரலிங்கம் 
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு அவருடன் போரில் பங்கு பெற்றவர்களை பற்றி நாட்டுபுற பாடல்களும், கூத்துகளும் இயற்றப்பட்டன. இப்படியாக இப்பகுதியில் வழங்கப்பட்ட நாட்டுப்புற பாடல்களை ஆய்வாளர் நா.வானமாமலை தொகுத்துள்ளார். இதனின் ஊடாக இப்போரில் பங்கு பெற்ற சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, முத்தன் பகடை , கட்டன கருப்பணன் போன்றவர்களை அறிய முடிகிறது. 
சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன. கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் மோதல் உருவானபோது சுந்தரலிங்கம் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.

1799 செப்டம்பர் 8ம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனான். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள். அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது. 
வ.உ.சி. ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி", இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்
தன்னம்பிக்கை கதை -  ஓட்டை பானையும் ஒளிரும் பூவும்
 ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும். இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது. "ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன்.

உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்" அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்" இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!

ஓவியம் வரைவோம்  How to Draw Cute Animals

https://www.youtube.com/watch?v=VvIqKOTvTsA

இணையம் அறிவோம்  http://www.sciencekids.co.nz/gamesactivities.html

செயலி iTooch 5th Grade Science

 


No comments:

Post a Comment