அறிவுக்கு விருந்து – 14.08.2019 (புதன்)


அறிவுக்கு விருந்து – 14.08.2019 (புதன்)
வரலாற்றில் இன்று
ஆகத்து 14 (August 14) கிரிகோரியன் ஆண்டின் 226 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 227 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·  1040இசுக்காட்லாந்து மன்னன் முதலாம் டங்கன் அவரது எதிராளி மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டான். மக்பெத் மன்னராக முடி சூடினான்.
·  1385அல்சுபரோட்டா சமரில் போர்த்துக்கீசப் படையினர் முதலாம் ஜான் மன்னர் தலைமையில் காஸ்டில் படைகளைத் தோற்கடித்தனர்.
·  1480இத்தாலியின் தெற்கே ஒத்ராந்தோ நகரில் இசுலாமுக்கு மதம் மாற மறுத்த 800 கிறித்தவர்கள் உதுமானியர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் பின்னர் திருச்சபையினால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.

பிறப்புகள்

·1777ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட், தென்மார்க்கு இயற்பியலாளர், வேதியியலாளர் (. 1851)
· 1848மார்கரெட் இலிண்டுசே அகின்சு, ஆங்கிலோ-ஐரிய வானியலாளர் (. 1915)
·1857வெ. . சுப்பிரமணிய முதலியார், தமிழக கால்நடை மருத்துவர். மொழிபெயர்ப்பாளர், கவிஞர் (. 1946)

இறப்புகள்

·  1941மாக்சிமிலியன் கோல்பே, போலந்து புனிதர் (பி. 1894)
·  1956பெர்தோல்ட் பிரெக்ட், செருமானியக் கவிஞர், இயக்குநர் (பி. 1898)
·  1979என். எம். பெரேரா, இலங்கையின் மாக்சியவாதி, அரசியல்வாதி (பி. 1905)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (பாக்கித்தான், பிரித்தானியாவிடம் இருந்து, 1947)

குறளறிவோம்-  48 - இல்வாழ்க்கை

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
கலைஞர் மு.கருணாநிதி உரை: தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.
மு.வரதராசனார் உரை: மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
Translation: Others it sets upon their way, itself from virtue ne'er declines; Than stern ascetics' pains such life domestic brighter shines.
Explanation: The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance
சிந்தனைக்கு
பரபரத்து ஓடுவதில் பயனில்லை; உரிய நேரத்தில் புறப்படுங்கள்..
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்                                                       
·         ஆசிரியர்        -          குரு
·         ஆசிரியர்        -          உபாத்தியார்
·         ஆசிரியர்        -          தேசிகன்
·         ஆசிரியர்        -          ஆசான்

விடுகதை விடையுடன்
உடம்பெல்லாம் பற்களைக்கொண்ட ஒருத்திக்கு கடிக்கத் தெரியாது  அவள் யார்?  சீப்பு
பழமொழி  
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரனுக்கு ஈடாகாது.
ஆயிரம் ஆயிரம் முட்டாள்கள் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தாலும் ஒரே ஒரு அறிவாளி தரும் முடிவுக்கு ஈடு இணையாகாது என்பது பொருள்.  எப்படியென்றால் அறிவாளி சந்திரனைப்போன்று மிகுந்த பிரகாசம் உடையவன் என்பதால்.
Enrich your   vocabulary
·         Buck                ஆண்மான்
·         Buffalo            எருமை
·         Bull                 காளை
·         Bullock            எருது
Opposite Words 
Beginning X  Conclusion
  • There’s a short poem at the beginning of every chapter.
  • At the conclusion of the meeting, little progress had been made.
Behind X  In front of
  • I turned to speak to the person standing behind me.
  • She spends all day sitting in front of her computer.
மொழிபெயர்ப்பு
Lotus root
தாமரை வேர்
mushroom
காளான்

Proverb
Cowards die many times before their death
வீரனுக்கு ஒரு முறை சாவு; கோழைக்கு தினந்தோறும் சாவு

 

இனிக்கும் கணிதம்

கணிதத்தின் ஆறு முகங்கள்
*கணிதத்தின் ஒரு முக்கியமான அங்கம் ? *கணித்தல் (Evaluation)*
துல்லியமாகவும் தர்க்கரீதியாகவும் அலசி ஆராய்ந்து, வேண்டாத காளான்களை பிரச்சினையிலிருந்து விலக்கி, சின்னங்களைப் பயன் படுத்தி, அடித்தளத்தில் புதைந்து கிடக்கும் உயிர்நாடியைப் பிடித்தவுடன் கண்ணுக்கு முன் எஞ்சி நிற்பது சின்னங்களுக்குள் ஒன்றுக்கொன்று பிணைந்திருக்கும் தொடர்புகள் தான். தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் இத்தொடர்புகளை வெளிக்கொணர்ந்து பிரச்சினையின் சிக்கலை விடுவிப்பதைத்தான் கணித்தல் என்று சொல்கிறார்கள். இந்த ஒரு முகமே பெரிதுபடுத்தப்பட்டு இதுதான் கணிதம் என்று தவறாக எண்ணப்பட்டு விடுகிறது. கணிதம் என்று பேசப்படும் போதெல்லாம், தவறுதலாக கணித்தல் என்ற இவ்வொரே அங்கத்தைத்தான் சொல்கிறார்கள் பாமரர்கள்.
ஆக இந்த ஆறு முகங்களும் சேர்ந்து உருவாக்கப்பட்டது தான் கணிதம். கணிதப் பாடங்கள் கற்கும் மாணவர்களும் சரி, அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களும் சரி, கணிதத்தின் இந்த ஆறு முகங்களையும் நினைவுகொண்டு செயல்பட்டால் கணிதம் உருப்போடும் ஒரு பளுவாக இல்லாமல் வேண்டத்தக்க நண்பனாகிவிடும்.

அறிவியல் துறையில் தமிழர்கள்
அறிவியல் துளிகள்
கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்

தினம் ஒரு மூலிகை – எலிக்காதிலை

எலிக்காதிலை ஒரு சிறு கொடி இனம். அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளரக்கூடியது. இது பார்ப்பதற்கு வல்லாரை இலையை ஒத்து காணப்பட்டாலும்  குத்துச் செடியாக இல்லாமல் பெருங் கொடியாக ஓடும். இதனை கால் நடைகளுக்கு வழங்குவது நடைமுறை வழக்கம். இதன் குணம் நீரைச் சுண்டச் செய்வது. ஆரைக்கீரையின் தன்மையும் இதன் தன்மையும் ஒத்துக் காணப்படுகிறது.

பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்   கிவி:                                                இந்த பழம் (Fruit Benefits In Tamil) மிகவும் சுவையாக இருக்கும். இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
 கிவி பழத்தை நாம் அதிகமாக சாப்பிட்டால் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க பயன்படுகிறது.
வரலாற்றுச் சிந்தனை 
·        சிந்து சமவெளி எழுத்துக்களுக்கு pictograph என்று பெயர்.
·        எழுதும் முறைவலமிருந்து இடமாகவும், இரண்டாவது வரியை இடமிருந்து வலமாகவும் எழுதினர்.
·        உலகத்திலேயே சிந்து சமவெளியில் தான் பருத்தி முதன் முதலாகப் பயிரிடப்பட்டது.பருத்திக்குக் கிரேக்க மொழியில் சிந்தோன் என்று பெயர்.
தன்னம்பிக்கை கதை -  நம்பிக்கையை தளர விடாதே!!!

ஜென் குரு ஒருவர் தன் சீடர்களுக்கு தன்னம்பிக்கை பாடத்தை சொல்லிக் கொடுத்தார். அதனால் அந்த பாடத்தை தன் சீடர்களுக்கு புரியும் படியாக கதையின் வாயிலாக சொல்ல ஆரம்பித்தார். அந்த கதை என்னவென்றால் "வேடன் ஒருவனுக்கு யானை என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவன் காட்டில் குழிகள் பலவற்றை வெட்டி, அவற்றில் விழும் குட்டி யானைகளை பிடித்து, இரும்புச்சங்கிலியில் கட்டிவிடுவான். அந்த யானைகளோ அவனிடமிருந்து தப்பிக்க எவ்வளவோ முயற்சிக்கும். இருப்பினும் அவற்றால் முடியாத காரணத்தினால், நாளடைவில் நம்பிக்கையை இழிந்துவிடும். பின் அந்த யானைகள் பெரிதானவுடன், அதனை கயிற்றால் கட்டிவிடுவான். அப்போது ஒரு நாள் வேட்டைக்கு ராஜா அந்த காட்டிற்கு தன் மகனுடன் வந்தார். அப்போது பெரிய யானைகள் கயிற்றிலும், குட்டி யானைகள் இரும்புச்சங்கிலியிலும் கட்டியிருப்பதை பார்த்து, அந்த வேடனிடம் "எதற்கு குட்டி யானைகளை இரும்புச்சங்கிலியிலும், பெரிய யானைகளை கயிற்றிலும் கட்டியுள்ளாய். அவை கயிற்றை அறுத்துக் கொண்டு போய்விடுமல்லவா?" என்று கேட்டார்.

அதற்கு அந்த வேடன் "மன்னா! பெரிய யானைகள் குட்டியாக இருக்கும் போது இரும்புச்சங்கிலியால் தான் கட்டப்பட்டிருந்தன. இவை பெரிதானதும் வேறு இடத்திற்கு போய் என்ன செய்வது என்று நம்பிக்கையை இழந்துவிட்டன. ஆகவே தான் கயிற்றில் கட்டியுள்ளேன்." என்றான்." என்ற கதையை சொல்லி, எனவே இந்த யானைகளைப் போல் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை நம்பிக்கையை இழக்காமல், ஏற்கனவே மேற்கொள்ளும் முயற்சியை விட அதிக முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லி, அன்றைய தன்னம்பிக்கை பாடத்தை முடித்தார்.


ஓவியம் வரைவோம்    3D Trick Art on Paper, Letter "A" with Graphite Pencil https://www.youtube.com/watch?v=nFUg51Kqz8g

இணையம் அறிவோம்    https://www.elcot.in/tn_virtual_univ.php

செயலி   acceleratAR https://play.google.com/store/apps/details?id=com.ChrisEdmonds.acceleratAR&hl=en_US

No comments:

Post a Comment