அறிவுக்கு விருந்து – 06.08.2019 (செவ்வாய்)
குறளறிவோம்- 43 - இல்வாழ்க்கை
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
கலைஞர் மு.கருணாநிதி உரை: வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்.
மு.வரதராசனார் உரை: தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
Translation: The manes, God, guests kindred, self, in due degree, These
five to cherish well is chiefest charity.
Explanation: The chief (duty of the householder) is to preserve the
five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his
relations and himself.
சிந்தனைக்கு
கோபமாய்
பேசினால் குணத்தை இழப்பாய்
வேகமாய்
பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
வெட்டியாய்
பேசினால் வேலையை இழப்பாய்
அதிகமாய்
பேசினால் அமைதியை இழப்பாய்
ஆணவமாய்
பேசினால் அன்பை இழப்பாய்
சிந்தித்து
பேசினால் சிறப்போடு வாழ்வாய்
தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்
·
அத்தி
– யானை
·
அத்தி
– அத்தி மரம்
விடுகதை
விடையுடன்
நான்கு கால்கள் உள்ளவன்,
இரண்டு கைகள் கொண்டவன்,உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்
? – நாற்காலி
பழமொழி
அடியாத மாடு படியாது
ஒரு மாடு நம் கட்டளைக்கு அடங்காமல் துள்ளித் திரிந்துகொண்டும், மற்றவர்களுக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டும் இருந்தால் அந்த மாட்டை கம்பால் அடித்து நம் கட்டளைக்குப் பணியும்படிச் செய்யவேண்டும்.
இங்கு மாடு என்பது நம் மனமாகும். அதாவது, நம் மனமென்னும் மாட்டை அடக்காமல் அதன் போக்கிற்கு விட்டுவிட்டோமேயானால், நம் எதிர்காலம் என்பது சூன்யமாகிவிடும் என்பதால், நம் மனதை அவ்வப்போது எது தவறு என்பதையறிந்து மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது இதன் உட்பொருள்.
Enrich
your vocabulary
·
Ginger..... இஞ்சி
·
Cardamom.....ஏலக்காய்
·
Jungle....காடு
·
Provisions.....மாளிகைப்பொருட்கள்
·
Virtue.....தூய்மை
Opposite Words
Attack
—— Defend
- There have been several attacks on foreigners recently.
- We need to defend against military aggression.
Attractive
—— Repulsive
- She is an attractive woman.
- What a repulsive man!
மொழிபெயர்ப்பு
Garbanzo Beans, Chickpea, Bengal
Gram
|
கொண்டைக் கடலை
|
Garlic
|
பூண்டு, வெள்ளைப் பூண்டு
|
Proverb
Measure thrice before you cut once
ஒரு
செயலை
செய்யும் முன்
பலமுறை
சிந்திக்கவும்
இனிக்கும் கணிதம்
கணிதத்தின் ஆறு முகங்கள்
*கணிதத்தின்
ஒரு முக்கியமான அங்கம் ? *தர்க்க நியாயம் (Logic)*
கணிதத்தின் ஒரே வழிமுறை தர்க்க
நியாயம். தர்க்க ரீதியாக ஒப்புக்கொள்ள முடியாத எதையும் கணிதம் ஒப்புக்கொள்ளாது. அவை கணிதமே இல்லை
என்று ஒதுக்கப்படும். இதுவே கணிதத்தின் முக்கிய மரபு. மற்ற அறிவுத் துறைகளில்
எவ்வளவுக் கெவ்வளவு இம்மரபு ஒரு துறையினுள் ஊடுருவிச்
செல்லுமோ அவ்வளவுக் கவ்வளவு அத்துறையில் கணிதமே ஊடுருவி விடும். கணிதம் மற்ற துறைகளில் படர்வதற்கு
இது முக்கிய காரணமாகும்.
அறிவோம் அறிவியல்
வீட்டு வாசலில் முருங்கை மரம் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.
மரங்களில் மிகவும் அடர்த்தியில்லாத மென்மையான கிளைகளைக் கொண்ட
மரம்
முருங்கை. அதனால்,
வீட்டில் இருக்கும் குழந்தைகள் விளையாட்டாக அதில்
ஏறி
விளையாடினால், கிளை
முறிந்து குழந்தைகள் கீழே
விழுந்து காயம்
பட்டுக்கொள்ள வாய்ப்புண்டு. மேலும்,
கம்பளிப்பூச்சிகளின் புகலிடம் முருங்கை என்பதால், வீட்டுக்குள்ளும் கம்பளிப்பூச்சிகள் அதிகம்
பரவும்.
அறிவியல் துளிகள்
கோள்களின் இயக்க விதி - கெப்ளர்
தினம் ஒரு மூலிகை – சித்தரகம்
சித்தரகம்: White Leadwort (தாவரவியல் பெயர்: Plumbago zeylanica)005D என்றழைக்கப்படும் இது, தென்னிந்திய பிராந்தியத்தை பூர்வீகமாகக்
கொண்டது.
சித்தரகத்தின்
இலைகள், இலைக்காம்புள்ளமை அல்லது
ஒட்டிவாழ் தன்மையும், மற்றும் முட்டை வடிவம் கொண்ட,
மற்றும் நீளம் 5-9 × 2.5-4 செ.மீ.
அளவில் கத்திகள் தலைகீழ் ஈட்டி வடிவானது. தொற்றிப் படரும் புதர் வகை பல பருவத்
தாவரமான இது 5 மீ உயரம் வரை வளரக்கூடியது. மஞ்சரி,
காம்பு தூவிகளால் அல்லது சுரப்பிகளால் மூடியவாறு அமைந்துள்ள இத்தாவரத்தின்
கனிகள், நீள் வடிவம் கூர்நுனி கொண்டவையாக உள்ளது.[1]
மருத்துவப் பயன்கள்
சித்தரகத்தின் வேர், வேர்ப்பட்டை மற்றும் இலைகள்
மருத்துவப் பயன் கொண்டவை, கசப்புத் தன்மையைக் கொண்ட இதன்
வேர், வியர்வைத் தூண்டியாகச் செயற்பட்டு சொறி, தேமற் படை ஆகியவற்றின் மீது
களிம்பாகப் பூசப்படுகிறது. இலை மற்றும் வேர் வயிற்றுப் போக்கு போன்ற ஜீரண
கோளாறுகளுக்கு மருந்தாகும். உடல் எடைகுறைப்பதற்கு உதவும் வேர் கசாயம் தலை
வழுக்கையினைப் போக்கப் பயன்படுத்தப்படுகிறது
பழங்களும்
அவற்றின் பயன்பாடுகளும் சீத்தாப் பழம்
பொட்டாஷியம்
340 மி.கி. நார்ப்பொருள் 3.1 கிராம்
உள்ளன. இது தவிர கால்ஷியம்,
பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும்
வைட்டமின்கள் பி, சி-யும்
உள்ளன. நார்ச்சத்து குறைவினால் மலச் சிக்கல் ஏற்படும்.
பொட்டாஷியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும்.
வரலாற்றுச் சிந்தனை
1858
|
பிபின் சந்திர பால்
பிறப்பு நவம்பர் 7 (1858-1932)
|
1861
|
ரவீந்திரநாத் தாகூர் மே
8 ஆம்
தேதி
பிறந்தார்
|
தன்னம்பிக்கை கதை நொண்டிக் குதிரை!
காட்டில் அடர்ந்த புல்வெளியில் ஏராளமான குதிரைகள் வசித்து வந்தன. அந்தக் குதிரைகளின் கூட்டத்தில் நொண்டிக் குதிரை ஒன்றும் இருந்தது. மற்றக் குதிரைகள் எல்லாம் அந்த நொண்டிக் குதிரையை மட்டமாகவே நினைத்தன.
எல்லாக் குதிரைகளும் அந்தப் புல்வெளியில் ஓடியாடி விளையாடுகின்ற நேரத்தில் அந்த நொண்டிக் குதிரையானது அமைதியுடன் ஒரிடத்தில் படுத்திருக்கும். அதனால், மற்ற குதிரைகள் எல்லாம் அதனை சோம்பேறி என்று கேலி செய்தன.
நண்பர்கள் எல்லாம் தன்னைக் கேலி செய்கிறார்களே என்று நொண்டிக் குதிரைக்கு சற்று வருத்தமாகயிருந்தது. நண்பர்கள் எல்லாம் அறியாமையின் காரணமாக இப்படிக் கேலி செய்கின்றனர். அதனால் நாம் அவர்களின் மீது கோபப்படுவது நல்லதல்ல... என்று முடிவு செய்தது அந்த நொண்டிக் குதிரை.
ஒருநாள் சிங்கம் ஒன்று அந்தப் புல்தரையில் பக்கமாக வந்தது. அந்த இடத்தில் ஏராளமான குதிரைகள் புற்களை மேய்ந்தபடி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது.
""ஆஹா, இந்த இடத்தில் ஏராளமான குதிரைகள் நிற்கின்றதே... இந்தக் குதிரைகள் எல்லாம் நன்கு கொழுத்து காணப்படுகின்றன. நாம் வந்திருப்பது தெரிந்துவிட்டால், இந்தக் குதிரைகள் எல்லாம் ஒரே ஓட்டமாக எங்காவது ஓடி விடும். அதனால், இந்தக் குதிரைகளுக்குத் தெரியாமல் மறைந்திருந்து நாம் இவைகளைத் தாக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்தது சிங்கம்.
புல்தரையின் ஓர் ஓரத்தில் படுத்திருந்த நொண்டிக் குதிரை, சிங்கத்தை கவனித்து விட்டது. இந்தச் சிங்கம் நம்மையும், நம் நண்பர்களையும் கவனித்து விட்டது. நிச்சயமாக இதனால் நமக்கு ஆபத்து நேரிடும். சிங்கம் அந்த இடத்தை விட்டுச் சென்ற பின்னர், உடனடியாக "இதனைப்பற்றி நம் நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்' என்று நினைத்தது அந்தக் குதிரை.
சிறிது நேரத்தில் சிங்கம் அந்த இடத்தை விட்டுச் சென்றது. உடனே அந்த நொண்டிக் குதிரை மற்ற குதிரைகளை நோக்கியது.
""நண்பர்களே, சற்று நேரத்திற்கு முன்னர் சிங்கராஜா மறைந்திருந்து நம்மையெல்லாம் கவனித்துச் சென்றுவிட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அவரால் நமக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள, உடனடியாக இந்த புல் வெளியினை விட்டு வேறு இடத்திற்குச் சென்று விட வேண்டும்,'' என்றது.
நொண்டிக் குதிரையின் பேச்சைக்கேட்ட மற்ற குதிரைகள் எல்லாம் சிரித்தன.
""நண்பர்களே, இந்த நொண்டிக் குதிரையின் பேச்சைக் கவனித்தீர்களா? இவன் நம்மையெல்லாம் பயம் காட்டுகின்றான். சிங்கராஜா நம்மைப் பார்த்து விட்டாராம். அதனால் நாம் இந்த இடத்தை விட்டு வேறு எங்காவது செல்ல வேண்டுமாம். கேட்பதற்கே மிகவும் வேடிக்கையாக இருக்கிறது,'' என்று ஒன்றுக்குள் ஒன்று கூறியபடி சிரித்துக் கொண்டன.
"நண்பர்கள் எல்லாம் நம்மை ஏளனம் செய்கின்றார்களே, இவர்களுக்கு நான் நல்லதை சொல்ல நினைத்தேன். ஆனால், இவர்களோ என்னை ஏளனப்படுத்துகின்றனர். இவர்கள் எல்லாம் சிங்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்டால், என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. என்ன இருந்தாலும் இவர்கள் எல்லாம் எனது நண்பர்கள்தானே, இவர்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக்கொள்வது என்னுடைய கடமையல்லவா? சிங்க ராஜாவின் பிடியில் இருந்து எப்படியாவது நண்பர்களை காப்பாற்ற வேண்டும். வரப்போகிற ஆபத்தை உடனே தடுத்தாக வேண்டும், அதற்கு நாம் என்ன செய்யலாம்' என்று யோசனை செய்தது. திடீரென அதன் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. அதன்படி அந்தக் குதிரையானது சிங்கத்தைத் தேடிச் சென்றது. தன் எதிரே தைரியத்துடன் ஒரு குதிரை நொண்டியபடி வருவதை, வியப்போடு பார்த்தது சிங்கம்.
""சிங்க ராஜாவே, வணக்கம். என் வருகை உங்களுக்கு வியப்பினை ஏற்படுத்தலாம். இருந்தாலும் உங்களுக்கு சந்தோஷமான செய்தி சொல்லவே வந்துள்ளேன். என்னை நம்புங்கள்,'' என்று பணிவோடு கூறியது குதிரை.
சிங்கமோ கர்....கர்... என்று உறுமியது. அதன் முகம் கோபத்தால் சிவந்திருந்தது. இருந்தாலும் நொண்டியபடி நடந்து வந்த குதிரையைப் பார்த்து சற்று பரிதாபப்பட்டது. சிங்கம் ஓரளவுக்கு தன்னைப் பார்த்து பரிதாபப்படுகிறது என்பதை குதிரை உணர்ந்து, தன் எண்ணத்தைத் தெரிவிக்க இதுதான் சரியான சமயம் என்று முடிவு செய்தது.
""சிங்க ராஜாவே, நீங்கள் கருணை மிக்கவர் என்று எனக்குத் தெரிகிறது. உங்கள் முகத்தில் கருணை பொங்குகிறது. கருணையே வடிவான உங்கள் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்று எனக்குத் தோன்றுகிறது,'' என்றது.
""குதிரையே, நீ கூறியது போல் கோபமாக இருக்கும் நேரம் போக அவ்வப்போது எனக்குக் கருணை ஏற்படுவது உண்மைதான். என் கருணை பார்வையை குறிப்பால் உணர்ந்து கொண்ட நீ அறிவு மிக்கவனாகத்தான் தெரிகிறாய். முதலில் நீ எதற்காக என்னை சந்திக்க வந்தாய்? ஏதோ சந்தோஷமான செய்தி என்றாயே, அது என்னவென்று உடனடியாக எனக்குத் தெரியப்படுத்து,'' என்றது சிங்கம்.
""சிங்க ராஜாவே, ஒருநாள் நானும் என் நண்பர்களும் புல்தரையில் நின்ற போது மறைந்திருந்து நீங்கள் எங்களை கவனித்து விட்டீர்கள். தாங்கள் எங்களை உடனடியாகத் தாக்க வராமல் அமைதியுடன் அந்த இடத்தை விட்டுச் சென்றீர்கள். தாங்கள் அமைதியுடன் செல்வதை நான் கவனித்தேன். தங்கள் மூலம் என் நண்பர்களுக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்தேன். அதனால் தான் அதனைத் தடுக்க வேண்டி ஓடோடி வந்தேன்.
""சிங்க ராஜாவே, நான் என் நண்பர்களை, என் உயிரை விட மேலாக மதித்து வருகிறேன். தங்களால் என் நண்பர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் அதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, நானே என் உயிரைக் கொடுத்து உங்களுக்கு விருந்தாக வந்துள்ளேன். நீங்கள் என்னைச் சாப்பிடுங்கள். என் நண்பர்களை விட்டு விடுங்கள்,'' என்று கெஞ்சிக் கேட்டது நொண்டிக் குதிரை.
தன் நண்பர்களுக்காக இந்த அளவுக்கு கெஞ்சும் நொண்டிக் குதிரையைக் கண்டு சிங்கத்தின் மனம் மேலும் இளகியது. அதன் கண்களில் இருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது.
""சிங்கமே, நீ எதற்காக அழுகிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது? நான் ஏதாவது உன் மனத்தை புண்படுத்தும் விதத்தில் பேசிவிட்டேனா?'' என்று கேட்டது குதிரை.
""குதிரையே, நீ என் மனம் புண்படும்படியாகப் பேசவில்லை. ஆனால், உன் நண்பர்கள் அனைவருமே உன் மனம் புண்படும்படியாகப் பேசுவதை நான் மறைந்திருந்து கவனித்தேன். ஆனால், நீயோ அதனை எல்லாம் மனத்தில் வைத்துக் கொள்ளாமல் உன் நண்பர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறாயே, உன்னைப் பற்றி உன் நண்பர்கள் இதுவரையிலும் புரிந்து கொள்ளாதது துரதிர்ஷ்டம்தான். இதோ இப்போதே உன்னை அழைத்துச் சென்று, உனது உயர்ந்த குணத்தைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கிறேன்,'' என்றவாறு குதிரையை அழைத்துக் கொண்டு புறப்பட்டது சிங்கம்.
அந்த நேரத்தில் புல் தரையில் எல்லா குதிரைகளும் கூட்டமாக நின்று புற்களை மேய்த்து கொண்டிருந்தன. நொண்டிக் குதிரை சிங்கத்தோடு வருவதைக் கண்டதும் எல்லாக் குதிரைகளும் திடுக்கிட்டன.
உடனே சிங்கம், ""நீங்கள் யாரும் என்னைக் கண்டு பயப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு உண்மையை எடுத்துரைத்து, உங்கள் அறியாமையைப் போக்கும் பொருட்டே உங்களைத் தேடி வந்துள்ளேன்,'' என்றது சிங்கம்.
சிங்கத்தின் பேச்சைக்கேட்ட மாத்திரத்தில் எல்லா குதிரைகளும் திகைப்படைந்தன.
""சிங்க ராஜாவே, வணக்கம். தங்களின் அன்பான பேச்சைக் கேட்டதும் எங்கள் அச்சம் விலகிவிட்டது. தாங்கள் எங்களுக்கு என்ன நீதி வழங்கினாலும் அதனை ஏற்றுக்கொண்டு உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு இருப்போம்,'' என்றன குதிரைகள்.
""நல்லது குதிரைகளே! இதோ நிற்கின்ற உங்கள் நண்பனான இந்த நொண்டிக் குதிரையை நீங்கள் உங்களில் ஒருவனாக எண்ணாமல் அதன் மனத்தை புண்படுத்தி வந்தீர்கள். ஆனால், உங்கள் நண்பனான இவனோ, என்னால் உங்களுக்கு வரப் போகின்ற ஆபத்தைத் தடுத்து, உங்களுக்காக எனக்கு விருந்தாக உணவளிக்க வந்தது. அதன் தியாகத்தை நான் என்னவென்று சொல்வது. இப்படி ஒரு தியாகமிக்க நண்பனை இத்தனை காலமும் நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருந்து வீட்டீர்கள்,'' என்றது சிங்கம்.
சிங்கத்தின் பேச்சைக் கேட்டதும் எல்லா குதிரைகளும் தலை குனிந்தன. அன்போடு அந்த நொண்டிக் குதிரையினை சூழ்ந்து கொண்டன. அதனைக் கண்டு சிங்கமும் மகிழ்ச்சியடைந்தது.
மற்ற குதிரைகளோ நொண்டிக் குதிரையைப் பார்த்தன.
""நண்பா, உனக்கு கால்தான் ஊனம். ஆனால், எங்களுக்கோ மனமே ஊனமாகி விட்டது. அதனால்தான் உன் நட்பின் அருங்குணத்தை தெரியாமல் இருந்து விட்டோம். நீ அமைதியாக இருந்தே சிங்க ராஜாவே போற்றும்படியான அன்பான செயலைச் செய்துவிட்டாய். நாங்கள் எல்லாரும் உன்னை வாழ்த்தி
வணங்க கடமைப்பட்டுள்ளோம்,'' என்றன குதிரைகள்.
"நாம் வந்த வேலை இனிதே முடிவடைந்து விட்டது. குதிரைகள் எல்லாம் திருந்திவிட்டன. இனிமேல் அவற்றுக்குள் எந்தவிதமான பேதமும் ஏற்படாது' என்று நினைத்து திரும்பி சென்றது சிங்கம்.
No comments:
Post a Comment