அறிவுக்கு விருந்து – 16.08.2019 (வெள்ளி )

அறிவுக்கு விருந்து – 16.08.2019 (வெள்ளி )
வரலாற்றில் இன்று

ஆகத்து 16 (August 16) கிரிகோரியன் ஆண்டின் 228 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 229 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·  கிமு 1சீன ஆன் மரபு பேரரசர் அலி முந்தைய நாள் வாரிசுகள் இன்றி இறந்ததை அடுத்து வாங் மாங் ஆட்சியைக் கைப்பற்றினார்.
·  963பைசாந்தியப் பேரரசராக இரண்டாம் நிக்கொபோரசு போக்காசு முடி சூடினார்.
·  1513கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரும் அவரது உரோமைக் கூட்டுப் படையினரும் பிரெஞ்சுப் படைகளை வென்றனர்.
· 1652முதலாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: பிளைமவுத்தில் மைக்கெல் டி ருய்ட்டர், சியார்ச் ஐசுக்கியூ ஆகியோரின் கடற்படைகள் போரில் ஈடுபட்டன.
பிறப்புகள்
·  1954ஜேம்ஸ் கேமரன், கனடிய இயக்குநர்
·  1958மடோனா, அமெரிக்கப் பாடகி, நடிகை

இறப்புகள்

·  1327புனித ஆரோக்கியநாதர், பிரெஞ்சுப் புனிதர் (பி. 1295)
·  1886இராமகிருஷ்ணர், இந்திய ஞானி, மெய்யியலாளர் (பி. 1836)
·  1888ஜான் ஸ்டைத் பெம்பர்டென், கொக்கக் கோலாவைக் கண்டுபிடித்த அமெரிக்க மருந்தியலாளர் (பி. 1831)

·  1946ஆசை இராசையா, ஈழத்து ஓவியர்

சிறப்பு நாள்

·         குழந்தைகள் நாள் (பரகுவை)

·         விடுதலை நாள் (காபோன், பிரான்சிடம் இருந்து, 1960)

 குறளறிவோம்-  49 - இல்வாழ்க்கை

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
கலைஞர் மு. கருணாநிதி உரை: பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.
மு. வரதராசனார் உரை: அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
Translation: The life domestic rightly bears true virtue's name; That other too, if blameless found, due praise may claim.
Explanation: The marriage state is truly called virtue. The other state is also good, if others do not reproach it.
சிந்தனைக்கு
வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக இருக்கட்டும்.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்                                                       
·         ஆறு       -          வழி
·         ஆறு       -          நதி
விடுகதை விடையுடன்
என்னைத் தெரியாத போது புரிந்துகொள்ளும் ஆவல் 
தெரிந்த பிறகு  பகிர்ந்துகொள்ளும் ஆசை
நான் மறைக்கப்பட வேண்டியவன் நான் யார் ?  இரகசியம்
பழமொழி  
உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனது
மேலோட்டமாகப் பார்த்தால் உலக்கையானது அடிக்கடி உபயோகித்து வந்ததால் அது தேய்ந்து தச்சன் வேலை செய்யும் உளிக்குப் பிடி ஆனது என்று தோன்றும்.  ஆனால் இதுவே உண்மையல்ல.  சீரும் சிறப்புமாக வாழ்ந்த ஒரு மனிதன் திடீரென வறுமையால் அதாவது உலக்கையளவு வாழ்ந்த மனிதன் உளி அளவு தேய்ந்து கஷ்டப்படுவதையே இப்பழமொழி குறிப்பதாகும்.
Enrich your   vocabulary
·         Camel              ஒட்டகம்
·         Carnivores       ஊனுண்ணிகள்
Opposite Words 
Best —— Worst
  • He won the best actor award.
  • This is the worst recession for fifty years.
Better —— Worse
  • There must be a better way to do this.
  • The violence was worse than we expected.
மொழிபெயர்ப்பு
mustard greens
கடுகுக் கீரை
Onion
வெங்காயம்
Proverb
Learn to walk before you run
உட்கார்ந்து அல்லவோ படுக்க வேண்டும்

இனிக்கும் கணிதம்

முற்பகல் - A.M - Ante meridiem

பிற்பகல் - P.M - Post meridiem

கால அளவு பற்றி படிக்கும் பிரிவுஹாராலஜி

அறிவியல் துறையில் தமிழர்கள்   மயில்சாமி அண்ணாதுரை

பிறப்பு: சூலை 2, 1958; கோதவாடி - பொள்ளாச்சி - கோயம்புத்தூர்) தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர். தற்போது தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் உபதலைவராக உள்ளார் . இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராகப் பணிபுரிந்தார், அது சமயம் முப்பதுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவக்கிய சாதனை இவரைச் சாரும்

இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர். இவர் கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் இளங்கலைக் கல்வியைக் கற்றார். கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியலில் முதுமாணிப் பட்டம் பெற்றார். அண்ணாதுரை இதுவரை ஐந்து முனைவர் பட்டங்களைப்பெற்றுள்ளார்.

அறிவியல் துளிகள்
வெர்னியர் அளவியில் மீச்சிற்றளவு என்பது? – (முதன்மை கோல் பிரிவுதுணைக்கோல் பிரிவு) =1 மி.மீ-0.9 மி.மீ = 0.01 செ.மீ
தினம் ஒரு மூலிகை – சேம்பு (அ) சேப்பங் கிழங்கு 
 சேம்பு (அ) சேப்பங் கிழங்கு (Colocasia esculenta)[3][4] என்பது ஒரு பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த ஒரு வித்திலைத் தாவரமாகும். இத்தாவரத்தின் குடும்பப் பெயர் அரேசியா (Araceae) என்பதாகும்.  இது ஒரு மூலிகைத்தாவரம் என்பதாலும், இதன் கிழங்கு உணவாகப் பயன்படுவதாலும் ஆசியப் பகுதியில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிடப்பட்டுவருகிறது.
இதன் கிழங்குகளும் இலைகளும் உண்பதற்கு ஏற்றவை. இவற்றில் கால்சியம் ஆக்ஸலேட் என்ற அரிக்கும் தன்மையுடைய வேதிப்பொருள் இருப்பதால், வேகவைத்தே உண்ண வேண்டும். இதன் வளர்ச்சி குட்டையாக இருந்தாலும், நிலத்தில் இதன் வேரில் கிழங்கு உண்டாகிறது. இக்கிழங்கு மூலிகையாகப் பயன்படுகிறது. இதன் இலைகளில் உயிர்ச்சத்துக்களும், தாது உப்புக்களும் உள்ளன. இது அலங்காரச் செடியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
சேப்பங்கிழங்கு,கொலகேசியா எஸ்குலெண்டா, டாரோ, எடோ, மலங்கா என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. சேம்பு மலேசியாவின் சதுப்பு நிலங்களை தாயகமாகக் கொண்டது. இந்தியா, எகிப்து, ரோம், கிரேக்க நாடுகளுக்கு பின்னர் பரவியது. கொலகேசியா எஸ்குலெண்டா ரகம் அக்வேடிலிஸ்ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டது. இதன் இலைகள் 40x24.8 செ.மீ.அளவுடையது. முக்கோண முட்டை வடிவம் உடையது. இலையின் மேற்பரப்பு கரும்பச்சை நிறமாகவும், கீழ்ப்பகுதி இளம்பச்சை நிறமாகவும் இருக்கும். பாளை 25 செ.மீ. நீளமுடையது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்   சீமை அத்திப்பழம்
மூட்டு வலியைப் போக்கி இரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப்பழம் சிறப்பாக உதவுகிறது.  தீனசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும்.   இரத்தச் சோகை விலகும்.

வரலாற்றுச் சிந்தனை 

  • சிந்து சமவெளி மக்கள் பலவிதமான சின்னங்களை வியாபாரத்திற்கு பயன்படுத்தினர்
  • சிந்து சமவெளி மக்கள் விளையாட்டுப் பொருள்கள் செய்ய சுடுமண் பயன்படுத்தினர்.
  • சிந்து சமவெளி மக்கள் அறியாத விலங்குகுதிரை
தன்னம்பிக்கை கதை -  வேகத்தை விட விவேகம் வேண்டும்
            ஜென் துறவி ஒருவர் பெரிய மடாலயத்தில் சீடர்கள் சிலருக்கு கல்வி போதித்து வந்தார். அவர் எப்போதும் தன்னிடம் சீடனாக சேர்ப்பவர்களை பரிசோதித்து தான் சேர்ப்பார். அது போல் ஒரு நாள் மூன்று பேர் வந்து, அந்த துறவியை சந்தித்து அவரது சீடர்களாக ஆசைபடுகிறோம் என்று கூறினார்கள். அந்த துறவியும் அவர்களை மறுநாள் வந்து பார்க்குமாறு கூறினார். அவர்களும் "சரி!" என்று சொல்லி சென்று விட்டனர். பின் துறவி தன் சீடன் ஒருவனிடம் "மறுநாள் அவர்கள் வரும் போது எனது காதில் ஓணான் புகுந்து இறந்துவிட்டாதாக சொல்" என்று சொன்னார். அந்த மூவரும் மறுநாள் வந்தபோது, துறவியின் சீடனும் அவர்களிடம் துறவி சொன்ன மாதிரியே சொன்னான். அதற்கு முதலாமவன், "துறவியின் ஜாதகப்படி சனித்திசை என்பதால் இப்படி நடந்திருக்கலாம்!" என்று வருத்தத்துடன் சொல்லிச் சென்றான். இரண்டாமவன், "துறவி போன ஜன்மத்தில் செய்த பாவத்தால், இவ்வாறு ஆகியிருக்கும்!" என்று கவலையுடன் சென்றான். ஆனால் மூன்றாமவன், அந்த சீடனின் முகத்தை உற்று பார்த்து, துறவி நிச்சயம் இறக்கவில்லை என்று அடித்துக் கூறினான். அதுவரை மடாலயத்திற்குள் இருந்த துறவி வெளியே வந்து "எப்படி சரியாக சொன்னாய்?" என்று கேட்டார்.
 "குருவே! உங்கள் இறப்பினால் வரக்கூடிடய வருத்தம் உங்கள் சீடனின் முகத்தில் சிறிது கூட தென்படவில்லை. அதிலும் ஒருவரின் காதுக்குள் ஓணான் நுழைவது என்பது சாத்தியமே இல்லை. ஆகவே தான் நான் உறுதியுடன் சொன்னேன்" என்று கூறினான். அவனது விவேகத்தைக் கண்டு திகைத்துக் போன துறவி, அன்று முதல் அவனை தனது சீடனாக ஏற்றுக்கொண்டார். ஆகவே ஒருவனிடம் வேகம் இருக்கலாம். ஆனால் அதே நேரம் விவேகம் நிச்சயம் வேண்டும் என்பதை இந்த கதை நன்கு கூறியுள்ளது.

ஓவியம் வரைவோம்     Very Easy!! How To Drawing 3D Floating Letter "A" #2 - Anamorphic Illusion - 3D Trick Art on paper      

https://www.youtube.com/watch?v=jr-zAzxfTVU

 

இணையம் அறிவோம்     https://www.elcot.in/tn_virtual_univ.php

செயலி Complete Mathematics https://play.google.com/store/apps/details?id=com.chidi.elearning&hl=en_US



No comments:

Post a Comment