அறிவுக்கு விருந்து – 08.08.2019 (வியாழன் )


அறிவுக்கு விருந்து – 08.08.2019 (வியாழன் )
வரலாற்றில் இன்று
ஆகஸ்டு 8 (August 8) கிரிகோரியன் ஆண்டின் 220 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 221 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 145 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1509 – கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசின் மன்னனாக முடிசூடினான். இவனது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது.
பிறப்பு  1948 – ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா, ரஷ்ய விண்வெளி வீராங்கனை
இறப்பு 1946 – உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1867)
குறளறிவோம்-  45 - இல்வாழ்க்கை

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
கலைஞர் மு.கருணாநிதி உரை: இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.
மு.வரதராசனார் உரை: இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
Translation: If love and virtue in the household reign, This is of life the perfect grace and gain.
Explanation: If the married life possess love and virtue, these will be both its duty and reward.
சிந்தனைக்கு
சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்                                                       
·         அயில்          -கூர்மை
·         அயில்          - வேல்
விடுகதை விடையுடன்
உடம்பில்லா ஒருவன் பத்துச் சட்டை அணிந்திருப்பான் அவன் யார்?  வெங்காயம்
பழமொழி  
சேற்றிலே புதைந்த யானையைக் உயர்ந்த காக்கையும் கொத்தும்.
இடத்தில்  இருந்தவர்கள்  சந்தர்ப்ப சூழ்னிலையால்   அவர்களின் நிலையிலிருந்து இறங்கி விட்டார்களானால் அவர்களைவிடத் தாழ்ந்தவர்கள் அவர்களை ஏளனமாகப் பேசி எள்ளி நகையாடுவர்.
Enrich your   vocabulary
·         Fascinating.... கவர்ந்திழுத்தல் 
·         Decade.....பத்து ஆண்டுகள் .
·         Improve....முன்னேறு    
·         Cheerful.....மகிழ்ச்சியான           
·         Gently......மென்மையான 
Opposite Words 
Back X Front
  • I found some old photos at the back of the drawer.
  • There’s a garden at the front of the house.
Bad X  Good
  • I have some bad news for you.
  • The train service is not very good.
மொழிபெயர்ப்பு
Green Gram
பச்சைப்பயறு, பாசிப்பயறு
Ivy Gourd, Little Gourd
கோவைக்காய்
Proverb
Pride goes before fall
வீழ்ச்சியின் முன் எழுகிறது தற்பெருமை

இனிக்கும் கணிதம்

கணிதத்தின் ஆறு முகங்கள்
*கணிதத்தின் ஒரு முக்கியமான அங்கம் ? *கருத்தியல் வழிகாணல் (Abstraction)*
            தத்துவப்படுத்தல், அல்லது பண்பியல் என்று கூறக்கூடிய இக்கருத்தைப் புரிந்துகொள்ள நாம் அன்றாடம் கையாளும் 1, 2, 3, ... என்ற எண்களையே எடுத்துக் கொள்வோம். ‘இரண்டுஎன்ற சொல், அல்லது அந்த சொல்லுக்குரிய எண், எதைக் குறிக்கிறது என்று துல்லியமாக்ச் சொல்ல முடியுமா? சற்று சிந்தித்துப் பார்த்தால்இதென்ன கேள்வி? ‘இரண்டுஎன்ற சொல் ‘2’ என்ற எண்ணைக் குறிக்கிறதுஎன்ற பதில் சரியான பதில் அல்ல என்று புரியும். ‘2’ என்பதுஇரண்டுஎதைக் குறிக்கிறதோ அதற்கு ஒரு குறியீடு. அவ்வளவுதான். அதேஇரண்டுஎன்ற சொல்லின் பொருளுக்கு வெவ்வேறு நாகரிகங்களில் வெவ்வேறு குறியீடுகள் உண்டு. அதனால்இரண்டுஎன்பது எதைக் குறிக்கிறது என்ற கேள்விக்கு இவை விடையாகா.
இரண்டு பழங்கள்’, ‘இரண்டு விரல்கள்’, ‘இரண்டு நபர்கள்என்று சொல்லும்போது நன்றாகவே புரிகிறது. அப்படியானால்இரண்டுஎன்பதுதான் என்ன? ‘இரண்டுஎன்பது ஒரு தத்துவம் (abstraction). எந்த கணங்கள் எல்லாம் A = {1, 2} என்ற கணத்துடன் ஒன்றுக்கொன்றான இயைபு (பார்க்கவும்எண்ணுறுமையும் எண்ணுறாமையும்)பெற்றிருக்கின்றனவோ அந்த கணங்களுக்கெல்லாம் பொதுவான ஒரே தத்துவம் தான்இரண்டு’. ‘இரண்டுஎன்ற ஒரு எளிமையான பொருளைச் சொல்ல இவ்வளவு சிக்கல் வேண்டுமா என்று கேட்கலாம். ‘எண்என்ற தத்துவம் துல்லியமாக வரையறுக்கப்பட வேண்டுமானால் இப்படி தத்துவப்படுத்தித் தான் ஆகவேண்டும். வேறு வழி இல்லை.
தத்துவப்படுத்தல் அல்லது பண்பியல் என்ற செயற்பாங்கிற்கு இன்னொரு எடுத்துக்காட்டும் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதுவரை கொடுத்தது பொருட்பண்பு (Object Abstraction). இப்பொழுது கொடுக்கப்பட இருப்பது செயற்பண்பு (Process Abstraction).
இரண்டும் மூன்றும் ஐந்து . மூன்றும் இரண்டும் ஐந்து .
இவ்விரண்டு வாக்கியங்களும் ஒரே பொருளைச் சொன்னாலும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. நாம் வழக்கமாகக் காலுறையைப் போட்ட பிறகு தான் காலணி அணிகிறோம். மாறாகக் காலணியை முதலில் போட்டுவிட்டுப் பிறகு காலுறையைப் போட முடியாது. சுருங்கச் சொன்னால் காலுறை போடுவதும் காலணி போடுவதும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் தான் செய்யப்படவேண்டும். மாற்று வரிசையில் செய்யப்பட முடியாது.
இரண்டும் மூன்றும் ஐந்து என்று சொல்லும்போது இரண்டையும் மூன்றையும் கூட்டுவது என்ற செய்கையை ஒரு குறிப்பிட்ட வரிசையில் செய்கிறோம். இதையே மாற்று வரிசையில் செய்தால் மூன்றையும் இரண்டையும் கூட்டுவது என்ற செய்கையாகும். ஆனால் இம்மாற்று வரிசைக் கூட்டலும் அதே விடையைத்தான் கொடுக்கிறது. எந்த இரண்டு எண்களை எடுத்துக் கூட்டினாலும் நேர்வரிசை, மாற்றுவரிசை இரண்டிலும் ஒரே விடைதான் வரும்.
நேர் வரிசையிலும் மாற்று வரிசையிலும் செய்யப்படும் ஒரு செயற்பாங்கிற்கு இரண்டிலும் ஒரே பயன் கிட்டினால் அச்செயற்பாங்குபரிமாற்றுச்செயற்பாங்கு (commutative process, operation ) எனப்படும். இதனால் காலுறை அணிந்து காலணி போட்டுக்கொள்வது என்பது ஒரு பரிமாற்றாச்செயற்பாங்கு. எண்களைக் கூட்டல் என்பது ஒரு பரிமாற்றுச்செயற்பாங்கு. கழித்தல் என்பது பரிமாற்றக்கூடாதது (non-commutative).
ஆக, பண்பியலுக்குள்ள இரண்டு பரிமாணங்களையும் பார்த்தோம். இவ்விதம் தத்துவப்படுத்தி ஆழ நுழைந்து ஆராய்வதால் பலவித பொதுவிதிகளின் உண்மைகள் வெளிப்படும். புதுவிதப் பொதுவிதிகளும் உருவாகும். தத்துவப்படுத்துதல், பொதுவிதி உருவாக்கல், கருத்தியல் வழிகாணல், பண்பியல், எல்லாமே கணிதத்தில் வழக்கமாகச் செய்யப்படும் இயல்பான வழிமுறைகள். இதுதான் கணிதத்தை மற்ற எல்லாத் துறைகளிலிருந்தும் தனிப்படுத்திக் காட்டும் முகம்.
அறிவோம் அறிவியல்   
உச்சி வெயில்ல கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.
            உச்சிவெயில் படும் நேரங்களில், சூரியஒளி நேரடியாக கிணற்றில் விழுகிறது. இதனால், திடீரென வேதிவினை நடைபெற்று, கிணற்றுக்குள் விஷவாயு உண்டாகலாம். அத்தருணம்,கிணற்றில் எட்டிப் பார்ப்பதால், மயக்கம் உண்டாகவோ, அதன் காரணமாக கிணற்றுக்குள் தவறி விழவோ வாய்ப்புண்டு
அறிவியல் துளிகள்
தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப்
தினம் ஒரு மூலிகை – சீந்தில்
சீந்தில் (Tinospora cordifolia) என்பது மரங்களில் தொற்றிப் படரும் ஒரு மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் மூடி இருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம் மூடியிருக்கும். இலைகள்இதய வடிவில் இருக்கும். இவை மரங்களின் மேல் ஏறி படரும். கொடியை அறுத்து விட்டாலும் உலர்ந்து போகாது. காற்றிலுள்ள நீரை உறிஞ்சும் வாழும் திறனுடையது. அறுபட்ட இடத்திலிருந்து மெல்லிய கம்பி போன்ற கொடிகளை கீழ் நோக்கி வளர விட்டு பூமியில் வேரூன்றி கொண்டு பூமியிலிருந்து நீரை உறிஞ்சி வாழ ஆரம்பிக்கும்.

பெயர்கள்

சீந்திலுக்கு அமிர்தவல்லிசோமவல்லிஅமிர்தைகுண்டலிஅமிர்தக்கொடி போன்ற பல பெயர்கள் உண்டு. ‘வல்லி’ என்றால் ‘கொடி’ என்ற பொருளில், கொடி வகையான சீந்திலுக்கு அமிர்த‘வல்லி’ எனும் பெயரும், அமிர்தம் என்றால் ‘அழியாத தன்மையைக் கொடுக்கும்’ என்ற பொருளில் ‘அமிர்தை’ எனும் பெயர் இதற்கு ஏற்பட்டிருக்கிறது. இதில் பொற்சீந்தில் எனும் இனமும் உண்டு.


பயன்கள்  சித்த மருத்துவத்தில் சீந்தில் கொடியை கற்ப மருத்துவ குணம் (கற்ப மருந்து என்பது மனிதன் நீண்ட நாள் உயிர் வாழ உதவுவது என்பது பொருள்) கொண்டதாக கூறப்பட்டுள்ளது. கிராமங்களில் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க கொடியின் சிறு துண்டை எண்ணெயில் பொரித்து ஆற வைத்து தலைக்குத் தேய்த்து குளிப்பாட்டுவது வழக்கம். பெரியவர்களூக்கும் சளிக்கு சீந்தில் கொடியிலிருந்து மருந்து தயாரிக்கலாம். முற்றிய சீந்தில் கொடியிலிருந்து சீந்தில் சர்க்கரை என்னும் வெண்மையான பொடி தயாரிப்பர். அதற்கு சீந்தில் சர்க்கரை என்று பெயர். சித்த மருந்து தயாரிப்பில் சீந்தில் சர்க்கரை பயன்படுகின்றது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் நெல்லிக்காய்
ஒரு நெல்லிக்காயிலுள்ள சத்துக்கள் இரண்டு ஆரஞ்சுப் பழங்களில் உள்ள சத்துக்குகளுக்கு நிகர் என்பர். வைட்டமின் சி வெப்பத்தில் எளிதில் அழிந்துவிடக் கூடியவை. ஆகவே சீக்கிரத்தில் உபயோகப்படுத்துவது நல்லது. பச்சையாக நெல்லிக்காயை சாப்பிடுவது அதன் சத்துக்களை அப்படியே நமக்கு தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வரலாற்றுச் சிந்தனை 
·        ஏழு நதிகள் பாயும் நிலத்தின் பெயர்சப்த சிந்து
·        இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் தந்தைஅலெக்ஸாண்டர் கன்னிங்காம்.

தன்னம்பிக்கை கதை  குதிரையும்!!! ஆடும்!!!

ஒரு மடத்தில் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஜாலியான குணமுடையவர். எப்போதுமே கோபப்படமாட்டார். அவரிடம் சீடர்கள் சிலர் கல்வி கற்று வந்தனர். அவரது சீடர்களுக்கு அந்த துறவி என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் அந்த துறவி தன் சீடர்களிம் பேசிக் கொண்டிருக்கையில், சீடர்கள் அவரிடம் "குருவே! உங்களுக்கு பிடித்த கதை என்ன?" கேட்டனர். அதற்கு அவர் "குதிரையும் ஆடும்" என்று சொன்னார். அதென்ன குதிரையும் ஆடும், அது எந்த மாதிரியான கதை, எங்களுக்கும் அந்த கதையை சொல்லுங்களேன் என்று வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குரு அந்த கதையை சொல்ல ஆரம்பித்தார்.
அதாவது "ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார்.
இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து, "எழுந்து நட நண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.
மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார்.
அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.
எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரை ஓடியதைப் பார்த்து சந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம் "என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!" என்று சொன்னார்" என்று கதையை சொல்லி முடித்தார்.
பின் அவர்களிடம் "பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள். ஆகவே இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்." என்று இறுதியில் சொல்லி விடைபெற்றார்.

ஓவியம் வரைவோம்   How to draw Common Moorhen bird with nature scenery | Watercolor Pencils Painting https://www.youtube.com/watch?v=DMwn6q-vDqs

 

இணையம் அறிவோம்   http://www.noolagam.com/

 

செயலி  GLOBE Observer https://play.google.com/store/apps/details?id=gov.nasa.globe.observer&hl=en_US

No comments:

Post a Comment