அறிவுக்கு விருந்து – 27.08.2019 (செவ்வாய்)


அறிவுக்கு விருந்து – 27.08.2019 (செவ்வாய்)

வரலாற்றில் இன்று

ஆகத்து 27 (August 27) கிரிகோரியன் ஆண்டின் 239 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 240 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·  410விசிகோத்துகளின் உரோமை மீதான மூன்று நாள் முற்றுகை முடிவுற்றது.
·  1172இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றி தனது வாரிசுகளாக என்றி (இளம் மன்னர்), பிரான்சின் மார்கரெட் ஆகியோருக்கு முடி சூடினார், ஆனாலும் அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் வழங்கவில்லை.
· 1593பிரான்சு மன்னர் நான்காம் என்றியைப் படுகொலை செய்ய பியேர் பாரியர் என்பவன் எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை.
·1689உருசியாவுக்கும் சீனாவின் சிங் பேரரசுக்கும் இடையில் நெர்ச்சின்ஸ்க் உடன்பாடு எட்டப்பட்டது.
·1776லோங் தீவுச் சண்டை: இன்று புரூக்ளின் என அழைக்கப்படும் இடத்தில் பிரித்தானியப் படைகள் சியார்ச் வாசிங்டன் தலைமையிலான அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.
பிறப்புகள்
·  865முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி, பாரசீகப் பல்துறை அறிஞர் (. 925)
·  1759எட்டாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (. 1776)
·  1770எகல், செருமானிய மெய்யியலாளர் (. 1831)
·  1908எம். எம். தண்டபாணி தேசிகர், கருநாடக, தமிழிசைப் பாடகர், நடிகர்
இறப்புகள்
·  1879ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் (பி. 1795)
·  1914ஆய்கென் வொன் பொம் போவர்க், ஆத்திரிய பொருளியலாளர், மார்க்சிய விமர்சகர் (பி. 1851)
·  1929எர்மன் போட்டோச்னிக், குரோவாசிய-ஆத்திரியப் பொறியியலாளர் (பி. 1892)

·  1956பெலகேயா பெதரோவ்னா சாய்ன், உருசிய வானியலாளர் (பி. 1894)

சிறப்பு நாள்

 குறளறிவோம்-  55 - வாழ்க்கைத் துணைநலம்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.
மு.வரதராசனார் உரை:
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.
Translation:
No God adoring, low she bends before her lord; Then rising, serves: the rain falls instant at her word!.
Explanation:
If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain.
சிந்தனைக்கு
அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்                                                       
·         அவலம்            -          துன்பம்
·         அவலம்            -          அழுகை
விடுகதை விடையுடன்
காட்டிலே பச்சை, கடையிலே கருப்பு, வீட்டிலே சிவப்பு அது என்ன? மரம், கரி, நெருப்பு
பழமொழி    இல்லது வாராது, உள்ளது போகாது.
பொருள்: நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த வினைகள் அதன் விளைவுகளை அனுபவிக்கும்வரை நீங்காது.
விளக்கம்: இதைவிட எளிய சொற்களில் கர்மபலன் விதியைச் சொல்ல முடிய்மோ? முற்பகல் தாண்டியதும் பிற்பகல் வருவது தவிர்க்க இயலாதது போலத்தான் முற்பகல் செய்தது பிற்பகல் விளைவதும்.
Enrich your   vocabulary
·         Snout....நீண்ட மூக்கு 
·         Cavity.....பொந்து 
·         Emerge.... வெளியேவருதல் 
Opposite Words 
Body X Soul
  • Your body temperature is higher in the daytime than at night.
  • There was a feeling of restlessness deep in her soul.
Bold  X  Timid
  • My aunt was a bold determined woman.
  • I was a timid child.
மொழிபெயர்ப்பு
Spinach
பசலைக்கீரை, முளைக்கீரை
Spring onion
வெங்காயத்தாள்
Proverb
Procrastination is the thief of time
இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்

இனிக்கும் கணிதம்     வாய்ப்பாடு
லிட்டர் அளவு முறை வருவதற்கு முன் தமிழ் நாட்டில் படி என்னும் அளவு பயன் படுத்தப்பட்டது. ஒரு படியில் இருக்கும் தானியங்கள்:
·         அவரை=1800
·         மிளகு=12,800
·         நெல்=14000
·         பயறு=14,800
·         அரிசி=38,000
·         எள்= 1,15,200

அறிவியல் அறிவோம்  வெர்னியர் அளவுகோல்
வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு இடப்புறம் அமைந்தால் அப்பிழை_________எனப்படும்எதிர் பிழை
அறிவியல் துளிகள்
இரப்பர் தாவரரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இர்ப்பர் பெயரிட்டவர்ஜோசப் பிரிஸ்ட்லி
தினம் ஒரு மூலிகை  -  தேத்தாங்கொட்டை
தேற்றா அல்லது தேத்தா (Strychnos potatorum) என்பது ஒருவகை மரம். இது தமிழிலக்கியத்தில் இல்லம்என்றும் தேத்தாங்கொட்டைதேறு போன்ற வேறு பெயர்களும் உள்ளன. இதன் இலைகள் பளபளப்பான சற்று நீண்ட கரும்பச்சை இலைகளையும், உருண்டையான விதையினையும் உடைய குறுமரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும், சமவெளிகளில் ஒவ்வோர் இடத்தில் காணப்படுகிறது. இதன் பழம்,விதை, ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை.
ஊருணிகளின் இருந்து பெறப்படும் நீர் கலங்கலாக இருக்கும். இந்நீரை அப்படியே குடிக்க இயலாது. எனவே சிவகங்கைதஞ்சை மாவட்டங்களில் நீரைத் தெளிய வைக்க தேத்தாங்கொட்டையை கலங்கிய நீருள்ள பானையின் உட்புறம் தேய்ப்பர். சில மணி நேரங்களுக்கப் பிறகு பானை நீர் தெளிந்து காணப்படும். சிலர் தேற்றா மரத்தின் காய்களை இடித்து கொட்டையை எடுத்த பின் கிடைக்கும் சக்கையைக் கரைத்து மீன்கள் உள்ள குட்டைகளில் இடுவர். இச்சக்கையின் சாறு மீன்களை ஒரு வித மயக்க நிலைக்கு இட்டுச் சென்று கரையில் ஒதுங்கச் செய்யும். இவ்வாறு மீன் பிடிப்புக்கும் தேற்றா மரம் பயன்படுகிறது.
மருத்துவ குணங்கள் - தேற்றா மரத்தின் அனைத்து உறுப்புகளும் பாரம்பரிய மருத்துவத்தில் முக்கியத்துவம் கொண்டவை. உடல் இளைக்கவும், தேறாத உடம்பைத் தேற்றவும் தேத்தாங்கொட்டை லேகியம் பயன்படுகிறது. இதன் பழம், விதை இரண்டுமே சளியை நீக்கும், கபத்தைப் போக்கும், சீதபேதி - வயிற்றுப்போக்கைக் குணமாக்கும், புண்கள் - காயங்களை ஆற்றும், கண் நோய் போக்கும், சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்கும்; இதன் கொட்டை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்  - அவோகேடோ பழம்
அவகோடா பழத்தில்  நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன. இதில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புற்றுநோய்ப் போன்ற கொடிய நோய் தாக்கியவர்களுக்கு அவகோடா பழம் அதிகமாக கொடுத்தால் அது நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கும். இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தும். அவகோடா பழத்திலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்னைகளை சரிசெய்வதாக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே எலும்புகள் வலிமையடைகின்றன.
அவகேடோவில் லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் பண்புகள் அடங்கியுள்ளது. இந்த கரோட்டினாய்டுகள் கண் புரை மற்றும் மாகுலர் திசு செயலிழப்பு ஏற்படுவதைக் குறைக்க உதவும். மேலும் வேறு சில கண் பார்வை பிரச்சனைகளையும் சரிசெய்து, ஆரோக்கியமான பார்வைக்கு உதவும். சிறுநீரக பிரச்னையால் அவதிப்படாமல் இருக்கவும், தெளிவான கண்பார்வைக்கும் அவகோடா பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வருவது அவசியமாகும்.
அவகேடோ பழத்தில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலி நியூட்ரியன்ட்டுகள் உள்ளது. இவை நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தி, ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, அதனால் செல்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரும் வாய்ப்பைத் தடுக்கும். கர்ப்பிணிகள் இதைச் சாப்பிட்டு வந்தால், பிறக்க போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். வயதானவர்களுக்குப் பக்கவாதம் வராமல் தடுக்கும். குடலை சுத்தம் செய்யும் அதோடு நாக்கின் மேல் உள்ள கிருமிகளை நீக்கி, வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
வரலாற்றுச் சிந்தனை சுப்பிரமணிய சிவா 
அரசியலையும் ஆன்மீகத்தையும் விடுதலைப் போராட்டத்தில் இணைத்துப் போராடியவர். தமிழக மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த பேச்சாளர் 'ஞானபாநு' என்ற இதழை நடத்தியவர். தனது வீரமிக்க பேச்ச்சால் விடுதலை வேட்கையைத்த தூண்டியதால் ’வீரமுரசு’ என்று போற்றப்படுபவர். 
வ.உ.சிதம்பரனார் மற்றும் மகாகவி பாரதியார் ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டங்களில் தீவிரமாக செயல்பட்டவர். தேசிங்குராஜன், சிவாஜி உள்ளிட்ட நாடகங்க நூல்களையும் வேதாந்த ரகஸ்யம், மோட்ச சாதனை ரகசியம் உள்ளிட்ட ஆன்மீக நூல்களையும் எழுதியுள்ளார். 
தன்னம்பிக்கை கதை -  அறிவுத்திறனும், உடல் பலமும்
ஒரு முதலாளி, தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு செய்தார். மரக் கன்றுகள் நடுவதற்குப் பள்ளம் வெட்ட வேண்டிய வேலையை ரங்கன் என்பவனிடம் ஒப்படைத்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நன்றாக உழைத்து நிறையச் சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைத்தான் ரங்கன். ஏனென்றால், அவன் தன் மகளின் திருமணத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து வருகிறான். இன்னும் போதுமான அளவு பணம் சேரவில்லை. ரங்கன், முதல் நாளில் இருபது மரக் கன்றுகளை நடுவதற்குப் பள்ளம் தோண்டினான். அவன் உழைப்பைக் கண்டு முதலாளி அவனை மிகவும் பாராட்டினார். பிறகு, ஒவ்வொரு நாளும் அவன் தோண்டுகிற பள்ளத்தின் எண்ணிக்கை குறைந்து வரத் தொடங்கியது. நாற்பதாம் நாளில் அவன், காலையிலிருந்து மாலை வரை எவ்வளவோ முயன்றும் இரண்டு பள்ளங்கள்தான் தோண்ட முடிந்தது.
ரங்கன் மிகவும் ஏமாற்றமடைந்தான். "முதல் நாளின்போது இருபது பள்ளங்கள் தோண்டியவன் நாற்பதாம் நாளில் இரண்டு பள்ளம் தோண்டுகிறானே, இவனுக்கு என்ன ஆயிற்று?" என்று முதலாளியும் குழம்பினார். அவர் ரங்கனின் மண்வெட்டியை வாங்கிப் பரிசோதித்துப் பார்த்தார். மண்வெட்டியின் முனை கூர் மழுங்கியிருந்தது. அவர் ரங்கனிடம் கேட்டார்: "நீ உன் பணி ஆயுதத்தைக் கூர்தீட்டி நன்றாக வைத்துக் கொண்டால் என்ன?'' ரங்கன் சொன்னான்: "இதற்கெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூட நேரமே இல்லை அய்யா! நான், நாள் முழுதும் சிறிதும் ஓய்வெடுக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன். நிறைய வேலை செய்து நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டுமே!'' முதலாளி சொன்னார்: "ரங்கா, இந்த மண்வெட்டியைப் போலத்தான் நாமும். நம் அறிவுத்திறனும், உடல் பலமும் மழுங்கிவிட்டால் நம்மால் எதுவுமே செய்யமுடியாது.
நமக்கு எவ்வளவோ கடமைகள் இருக்கலாம். நிறைய உழைக்க வேண்டி வரலாம். ஆயினும் நம் உடலையும், மனதையும், அறிவையும் எப்போதும் பேணிக் கூர்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் நிறையச் சாதிக்க முடியும். நம் இலக்கை விரைவில் அடைய முடியும்!''

ஓவியம் வரைவோம்  Easy 9 Drawing from Numbers for Kids 1-9

https://www.youtube.com/watch?v=7SWvlUd2at8

இணையம் அறிவோம்   http://www.teacherstryscience.org/

செயலி Math & Science Tutor - Algebra, Calculus, Physics

https://play.google.com/store/apps/details?id=com.mathtutordvd.mathtutor.mathtutor&hl=en_US

No comments:

Post a Comment