அறிவுக்கு
விருந்து – 21.08.2019 (புதன்)
வரலாற்றில் இன்று
ஆகத்து 21 (August 21) கிரிகோரியன் ஆண்டின் 233 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 234 ஆம் நாள்
நிகழ்வுகள்
·1331 – மூன்றாம் இசுடெபான் உரோசு மன்னர் அவரது மகன் துசானிடம் சரணடைந்தார். துசான் செர்பியாவின் மன்னராக முடி சூடினான்.
·1770 – ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.1821 – ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புகள்
சிறப்பு நாள்
இளைஞர் நாள் (மொரோக்கோ)
குறளறிவோம்- 52 - வாழ்க்கைத் துணைநலம்
மனைமாட்சி இல்லாள்கண்
இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
எனைமாட்சித் தாயினும் இல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: நற்பண்புள்ள மனைவி
அமையாத
இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.
மு.வரதராசனார் உரை:இல்வாழ்க்கைக்கு தக்க
நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு
எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன்
இல்லை.
Translation:If household excellence be wanting in the wife, Howe'er with
splendour lived, all worthless is the life.
Explanation: If the wife be devoid of domestic
excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is
nothing.
சிந்தனைக்கு
உண்மை தனியாகச் செல்லும்; பொய்க்குத்தான் துணை வேண்டும்
தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்
·
அறுதி - முடிவு
·
அறுதி -
வரையறை
விடுகதை விடையுடன்
செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே அது என்ன? – தொலைபேசி
பழமொழி
பருப்பில்லாத கல்யாணம்
உண்டா?
ஒரு திருமணத்திற்கு
சமையல் செய்யும்பொழுதோ அல்லது நவ தானியங்கள் வைத்து சடங்குகள் செய்யும்பொழுதோ பருப்பு
எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறதோ, அதே போன்று அக்கல்யாணத்திற்கு ஊரில்
முக்கியமானவர்களை அழைத்தல் அதைவிட முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Enrich
your vocabulary
Opposite Words
Bless
X Curse
Antonyms
examples:
- God bless you!
- Elsa cursed herself for believing his lies.
Blunt
x Sharp
- Sharpen all your blunt knives.
Make sure you use a good sharp knife
மொழிபெயர்ப்பு
Potato
|
உருளைக் கிழங்கு
|
Pulses
|
பருப்பு
|
Proverb
Good Homer sometimes nods
ஆனைக்கும் அடி
சறுக்கும்
இனிக்கும் கணிதம்
பூசணிக்காயை உடைக்காமல், அதிலுள்ள விதைகளின் எண்ணிக்கையை காணவும் இந்த கணக்கதிகாரத்தில் ஒரு பாடல் உள்ளது.
"கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"
ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.
அதாவது, கீற்றுகளின் எண்ணிக்கை = X என்க. இதை மூன்று, ஆறு, ஐந்து ஆகியவற்றால் பெருக்க. 3*6*5*X = 90X ஆகிறது. இதை பாதியாக்கினால் 45X ஆகிறது. பின்னர் மூன்றால் பெருக்க 135X ஆகிறது. இதை சுலபமாக சொல்வதென்றால் கீற்றுகளின் எண்ணிக்கையை 135 ஆல் பெருக்கினால் விதைகளின் எண்ணிக்கை கிடைக்கும்.
அறிவியல் அறிவோம் - ஏன் மேல் நோக்கி நெருப்பு எரிகிறது?
விளக்கின் எல்லாச் சுடர்களும் மேல்நோக்கியே எரிகின்றதே எப்படி? ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி அதைத் தலைகீழாகப் பிடித்தாலும் புவியீர்ப்பு விசையையும் மீறி, அதன் சுடர் மேல்நோக்கித்தான் எரிகிறது.
நெருப்பின் சக்தி புவியீர்ப்பு விசையை விடப் பெரிதா?
நெருப்பு என்பது ஒரு வேதிச் செயல்பாடு (Chemical process) அந்தச் செயல்பாடு நடைபெற மூன்று விஷயங்கள் தேவை.
1.வெப்பம்.2.எரிபொருள். 3. ஆக்சிஜன்.
இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் நெருப்பு உருவாகாது.
எந்த ஒரு வேதிச் செயல்பாட்டிலும் சக்தி (energy) உருவாகும். அந்தச் சக்தி சிலவற்றில் வெளியே வரும். சிலவற்றில் உள்வாங்கிக் கொள்ளப்படும்.
இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் நெருப்பு உருவாகாது.
எந்த ஒரு வேதிச் செயல்பாட்டிலும் சக்தி (energy) உருவாகும். அந்தச் சக்தி சிலவற்றில் வெளியே வரும். சிலவற்றில் உள்வாங்கிக் கொள்ளப்படும்.
நெருப்பு என்னும் வேதிச்
செயல்பாட்டில் வெப்பம் என்ற
சக்தி
வெளியே
வருகிறது.அது
நெருப்பைச் சுற்றியுள்ள காற்றைச் சூடேற்றுகிறது. காற்றின் எடையை
விட
(Density) (ஆமாம்,
காற்றுக்கும் எடை
உண்டு.
30 டிகிரி
செல்சியஸ் வெப்பத்தில் உள்ள
அறையில், ஒரு
தபால்தலை அளவில்
உள்ள
இடத்தில் சுமார்
7 கிலோ
காற்று
இருக்கும்) வெப்பக் காற்றின் எடை
அல்லது
எரியும் வாயுக்களின் எடை
குறைவாக இருப்பதால் அவை
மேல்நோக்கி எழும்.
எடை குறைவானவை மேல்நோக்கிச் செல்லும். எடை அதிகமானவை கீழ்நோக்கிச் செல்லும். தண்ணீர் கனமானது. அதனால்
மேல்நோக்கிச் செல்ல
முடியாது. தண்ணீரைக் கொதிக்க வைத்தால் வெளிப்படும் நீராவி
லேசானது. அது
மேல்நோக்கிச் செல்லும். அதே போல
வெப்பக் காற்று
எப்போதும் மேல்நோக்கியே எழும்.
அதனால்தான் பெரிய
பெரிய
பலூன்கள் பறக்கின்றன.
வெப்பக் காற்று மேலே செல்வதால் அங்கு காற்று இருந்த இடம் காலியாகிறது. காலியிடத்தை நிரப்ப அதை நோக்கிச் சுடருக்கு மேல்பகுதியில் உள்ள காற்றை இழுக்கிறது புவியீர்ப்பு விசை. நெருப்பின் அருகில் வந்ததும் அந்தக் காற்றும் சூடாகி மேலே போகிறது. இப்படி தொடர்ந்து நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வெப்பக் காற்று, தான் போகும் திசையை நோக்கிச் சுடரை இழுக்கிறது. அதனால்தான் சுடர் ஒரு மொட்டுப் போல, மேல்நோக்கிக் குவிந்து நமக்குத் தோன்றுகிறது,.
புவியீர்ப்பு விசை இல்லாத இடத்திலும் சுடர் இப்படித்தான் மொட்டுப் போல இருக்குமா?
வெப்பக் காற்று மேலே செல்வதால் அங்கு காற்று இருந்த இடம் காலியாகிறது. காலியிடத்தை நிரப்ப அதை நோக்கிச் சுடருக்கு மேல்பகுதியில் உள்ள காற்றை இழுக்கிறது புவியீர்ப்பு விசை. நெருப்பின் அருகில் வந்ததும் அந்தக் காற்றும் சூடாகி மேலே போகிறது. இப்படி தொடர்ந்து நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வெப்பக் காற்று, தான் போகும் திசையை நோக்கிச் சுடரை இழுக்கிறது. அதனால்தான் சுடர் ஒரு மொட்டுப் போல, மேல்நோக்கிக் குவிந்து நமக்குத் தோன்றுகிறது,.
புவியீர்ப்பு விசை இல்லாத இடத்திலும் சுடர் இப்படித்தான் மொட்டுப் போல இருக்குமா?
அங்கு சுடர்,
முட்டை
வடிவில் மொட்டுப் போல
மேல்நோக்கிக் கூம்பியில்லை. மாறாக, அது
குடை
வடிவில் வட்டமாக இருந்தது. ஏன்?ஏனென்றால் அங்கு புவியீர்ப்பு விசை
இல்லை.
அதனால்
சுடரின் மேல்
உள்ள
காற்று
இழுக்கப்படவில்லை. மாறாக
வெப்பத்தினால் காற்று
மேலே
செல்வதால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப
எல்லாத் திசைகளிலிருந்தும் காற்று
விரைந்தோடி வந்தது.
அதனால்
மொட்டுச் சுடர்
வட்டச்
சுடராகி விட்டது. இந்தியக் கலாச்சாரத்தில் மட்டுமல்ல, உலகில்
உள்ள
பல
கலாச்சாரங்களில் நெருப்பைக் கடவுள்
அல்லது
கடவுள்
தந்த
பரிசு
என்று
நினைக்கிறார்கள். ஏனெனில் சூரியனுக்கு அடுத்தபடியாக மக்கள்
பயன்படுத்தும் சக்தி
நெருப்புதான். ஆனால் அது
வெறும்
வாயுக்கலவை! (gases!).
அறிவியல் துளிகள்
மக்கள்தொகைகோட்பாடு - மால்தஸ்
தினம் ஒரு மூலிகை – பொரி கரப்பான்
பூ தழை பழம் மற்றும் விதை
பொரி கரப்பான் (Desmodium triflorum) என்பது மூன்றாவது பெரிய குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் உலகம் முழுவதிலும் காணப்பாட்டாலும்
பொதுவாக வெப்பமண்டல பிராந்தியத்திலிருந்து பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் தென் பகுதியில் அதிக அளவு காணப்படுகிறது.
பழங்களும்
அவற்றின் பயன்பாடுகளும் - விளாம்பழம்
விளாம்பழம் பல
வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த
பழமாகும். இதில்
இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின்.ஏ
சத்தும் உள்ளது.
இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.
பித்தத்தால் தலை
வலி,
கண்பார்வை மங்கல்,
காலையில் மஞ்சளாக வாந்தி
எடுத்தல், சதா
வாயில்
கசப்பு,
பித்த
கிறுகிறுப்பு, கை
கால்களில் அதிக
வேர்வை,
பித்தம் காரணமாக இளநரை,
நாவில்
ருசி
உணர்வு
அற்றநிலை இவைகளை
விளாம்
பழம்
குணப்
படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய்
அணுக்களை சாகடிக்கும் திறன்
உண்டு.
எனவே
எந்த
நோயும்
தாக்காமல் பாதுகாக் கும்.
அஜீரண
குறைபாட்டை போக்கி
பசியை
உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு.
முதியவர்களின் பல்
உறுதி
இழப்பிற்கு விளாம்பழம் நல்ல
மருந்து.
வரலாற்றுச்
சிந்தனை
·
1707 அவுரங்கசீப் இறப்பு
·
1724 ஐதராபாத்தில் சுதந்திர நிசாம் உருவாதல்
·
1740 வங்காள நவாப் சுதந்திரத்தை அறிவித்தல்
தன்னம்பிக்கை கதை - குழந்தைகள் என்றும் குழந்தைகளே!
ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான், ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான்.வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை.
பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம்
அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள். அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை
சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், 'இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி
அழுகிறாய்? எங்க தாத்தா கூட போன வாரம் செத்துப் போனார். நான் என்ன அழுகிறேனா பார்'
என்றார். உடனே அந்தப் பையன் "நீங்க
என்ன, என்னை மாதிரி குட்டியில இருந்தா உங்க தாத்தாவை வளர்த்தீங்க?" என்றான்
கோபத்தோடு. டாக்டர் வாயே பேசவில்லை.
ஓவியம்
வரைவோம் How to
Draw Cute Animals
செயலி iTooch 4th Grade Science
No comments:
Post a Comment