அறிவுக்கு விருந்து – 26.08.2019 (திங்கள்)
வரலாற்றில் இன்று
ஆகத்து 26 (August 26) கிரிகோரியன் ஆண்டின் 238 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 239 ஆம் நாள்.
நிகழ்வுகள்
· 1071 – செல்யூக்குகள் பைசாந்திய இராணுவத்தை மான்சிக்கெர்ட் போரில் தோற்கடித்தனர். இவர்கள் விரைவில் அனத்தோலியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர்.
· 1768 – கப்டன் ஜேம்ஸ் குக் தனது முதலாவது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து என்டெவர் கப்பலில் ஆரம்பித்தான்.
· 1789 – பிரெஞ்சுப் புரட்சி: மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை பிரெஞ்சு நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பிறப்புகள்
இறப்புகள்
· 1910 – வில்லியம் ஜேம்ஸ், அமெரிக்க மெய்யியலாளர், உளவியலாளர் (பி. 1842)
சிறப்பு நாள்
பெண்கள் சமத்துவ நாள் (ஐக்கிய அமெரிக்கா)
குறளறிவோம்- 54 - வாழ்க்கைத் துணைநலம்
பெண்ணின் பெருந்தக்க
யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
திண்மைஉண் டாகப் பெறின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
கற்பென்னும் திண்மை
கொண்ட
பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு
யாது?.
மு.வரதராசனார் உரை:
இல்வாழ்க்கையில் கற்பு
என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு
என்ன
இருக்கின்றன?.
Translation:
If woman might of chastity retain,
What choicer treasure doth the world contain?.
Explanation:
What is more excellent than a wife,
if she possess the stability of chastity?.
சிந்தனைக்கு
வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக இருக்கட்டும்
தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்
·
அறிஞன் - படித்தோன்
·
அறிஞன் - சான்றோன்
·
அறிஞன் - கற்றோன்
·
அறிஞன் -
அறிவாளி
விடுகதை விடையுடன்
கருப்பர்கள் மாநாடு போட்ட இடத்தில் கண்ணீர் பிரவாகம்
அது என்ன?– மேகம்,மழை
பழமொழி
குதிரை குணம் அறிந்து அல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை!
பொருள்: குதிரையின் மனம் தெரிந்துதான் ஆண்டவன் அதைக் கொம்புள்ள மிருகமாகப் படைக்கவில்லை.
விளக்கம்: குதிரையின் போக்கு அதன் மனப்போக்கு. இதனால்தான் குதிரைக்குக் கடிவாளம் போடுவது. தம்பிரான் என்பது சிவனைக் குறிக்கும் சொல் (’தம்பிரா னடிமைத் திறத்து’--பெரிய புராணம், இளையான்குடி 1). சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தம்பிரான் தோழர் என்று ஒரு பெயர் உண்டு. தவிர, தம்பிரான் என்பது சைவ மடத் தலவர்களைக்குறிக்கும் பட்டம்.
Enrich your vocabulary
·
Predators....ஊன் உண்ணிகள்
·
Haul....இழுத்தல்
·
Slash....வெட்டு
·
Labourios.....கடின உழைப்பாளர்
Opposite Words
Bless
X Curse
Antonyms
examples:
- God bless you!
- Elsa cursed herself for believing his lies.
Blunt
X Sharp
- Sharpen all your blunt knives.
- Make sure you use a good sharp knife.
மொழிபெயர்ப்பு
Ridged gourd
|
பீர்க்கங்காய்
|
Snake Gourd, pointed gourd
|
புடலங்காய்
|
|
|
Proverb
Good Homer sometimes nods
ஆனைக்கும் அடி
சறுக்கும்
இனிக்கும்
கணிதம் வாய்ப்பாடு
·
1/8 அரைக்கால்
·
1/16 மாகாணி
·
1/32 அரை வீசம்
·
1/160 அரைக்காணி
·
1/320 முந்திரி
அறிவியல் அறிவோம் – நுகரும்
திறன் குறைகிறதா....
நுகரும் திறனை இழப்பது 'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அறிவியல் துளிகள்
இட்லி பூவின் தாவரவியல் பெயர் – இக்சோரா
தினம் ஒரு
மூலிகை -
தாழை
தாழை மலர் (Pandanus fascicularis) தற்காலத்தில் தாழம்பூ என அழைக்கப்படுகிறது.
வழுவழுப்பான மரத்தை வாழை என்பது போன்று, தாழ்ந்து தொங்கும்
மடல்பூவைத் தாழை என்றனர். நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும். தாழம்பூவை
மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப்
பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர்.
கைதை
என்னும் மலரும் இதன் இனம். கைதை மேட்டுநிலங்களிலும் மழைநீர் வளத்தில் வளரும்.
கடற்கரை மணல்வெளியில் வளர்வது கைதை. தாழை என்பது சூடும் பூ. கைதை என்பது நிழல்
தரும் மரம்.
பயன்பாடுகள் - தாழைமர
இலைகளை மடல் என்பர். தாழைமடல்களைக் கொண்டு குடை செய்வர். தலையில் தொப்பி போலப்
போட்டுக்கொள்ளும் குடையாகவும், மழைக்குக் கையால் பிடித்துக்கொள்ளும்
குடையாகவும் இது தைக்கப்படும். இதன் வாசனைக்காக இதனை உணவில் சேர்ப்பார்கள்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் - பேரிக்காய்
பேரிக்காயில் நன்மைகள்:
பேரிக்காயிற்கு இன்னொரு பெயரும் உண்டு
அது
ஏழையின் ஆப்பிள் என்பது
தான்.
இதற்கு
காரணம்
இதன்
விலையோ
குறைவு
அது
மட்டுமில்லாமல் ஒரு
ஆப்பிளில் என்னென்ன சத்துகள் அடங்கியுள்ளனவோ அதே
அளவு
சத்து
பேரிக்காயிலும் அடங்கியுள்ளது.
வாய் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்ணை
சரி
செய்யும் ஆற்றல்
பேரிக்காயிற்கு உண்டு.
தினம்
ஒரு
பேரிக்காய் சாப்பிட்டால் இந்த
புண்
வரவே
வராது. இதய படபடப்பு மற்றும் இதயம்
பலவீனமானவர்கள் தினம்
ஒரு
பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல
பலன்
கிடைக்கும்.
உடல் சூட்டை
குறைக்கும் ஆற்றல்
இதற்கு
உண்டு.
மேலும்
சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களையும் சரி
செய்யும் தன்மை
இதற்கு
உண்டு.
குழந்தைகளுக்கு இதை
தினமும் கொடுத்தால் இதில்
உள்ள
இரும்புச் சத்து,
கால்சியம், சுண்ணாம்பு சத்து
போன்றவை குழந்தைகளின் உடல்
வளர்ச்சிக்கு தேவையான எல்லாவற்றையும் கொண்டுள்ளது.
சாப்பிடும் உணவினால் ஏற்படும் அலர்ஜி
காரணமாக ஏற்படும் வயிற்றுப் போக்கை
குறைக்க கூடிய
ஆற்றல்
பேரிக்காயிற்கு உண்டு.
கர்ப்பிணி பெண்கள் இதை
சாப்பிட்டால் கருவில் உள்ள
குழந்தை நல்ல
வளர்ச்சி பெற
உதவியாக இருக்கும். மேலும்
குழந்தை பேறுக்கு பின்னர் தாய்ப்பால் சுரப்பதற்கு காலை
மற்றும் மாலையில் பேரிக்காய் சாப்பிட்டால் அப்பிரச்சனை சரியாகும்
வரலாற்றுச் சிந்தனை மகாகவி பாரதியார்
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக
சீர்திருத்தவாதி என பன்முகங்கள் கொண்டவர் சுப்பிரமணிய பாரதி. தமிழ் கவிதையிலும்
உரைநடையிலும் தன்னிகரற்று விளங்கும் பாரதி, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத்
திகழ்பவர். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவரது
கவித்திறனை எட்டப்ப நாயக்கர் வியந்து பாராட்டி பாரதி என்ற பட்டத்தை வழங்கினார்.
1949ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்ட பாரதியாரின் படைப்புகள் இந்தியாவிலேயே
முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியமாகும்.
பால கங்காதர திலகர், உ.வே.சாமிநாதையர், வ.உ.சிதம்பரனார், மகான்
அரவிந்தர், விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதா தேவி ஆகியோரைப் போற்றி
பின்பற்றியவர்.
தன்னம்பிக்கை கதை - புத்திசாலி கிளி
ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு... கதை Posted by Unknown | Labels: அறிவு கதைகள், குட்டி கதைகள், குழந்தைகளுக்கான கதைகள், நகைசுவை கதைகள்
18September 2013 ஆப்பிரிக்கக் கிளி ஒன்றை கூண்டினுள் வைத்து ஒருவர் வளர்த்து வந்தார். ஒரு முறை அவர் ஆப்பிரிக்கா செல்லும் போது கிளி சொல்லிற்றாம், ''என் ஜோடிக் கிளி அங்கிருக்கும்.
அதனிடம் நான் இங்கு கூண்டில் இருப்பதாகச் சொல்லுங்கள்.'' அவரும் தன வேலை முடிந்த பின் சிரமப்பட்டு காட்டில் தனியாக இருந்த அந்தக் கிளியைக் கண்டு விபரம் சொல்ல, அது உடனே கண்ணீர் உகுத்துக் கீழே சுருண்டு விழுந்து விட்டது. 'அடடா, இந்தக் கிளி இறந்ததற்கு நாம் காரணமாகிவிட்டோமே,' என்று வருத்தப்பட்டு ஊருக்கு வந்து கூண்டுக் கிளியிடம் விபரம் சொல்ல, அக்கிளியும் கண்ணீர் உகுத்து கூண்டினுள்ளேயே விழுந்து விட்டது. நம்மால் இந்தக் கிளியும் அநியாயமாய் இறந்து விட்டதே என்ற வருத்தத்துடன் கூண்டைத் திறந்தார். உடனே அந்தக் கிளி ஜிவ்வென்று பறந்து போய் பக்கத்திலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. உடனே அவர், ''உன் ஜோடிக் கிளி இறந்தது தெரிந்தும் நீ என்னிடம் நடித்துத் தப்பி விட்டாயே! ''என்றார். அதற்கு அக்கிளியும், 'என் ஜோடிக் கிளியும் இறக்க வில்லை.கூண்டில் அடைபட்ட நான் தப்பிக்கும் வழியை உங்களிடமே அது சொல்லி அனுப்பியிருக்கிறது.' என்று கூறி விட்டுத் தன ஜோடிக் கிளியைத் தேடி பறந்து விட்டது. ஜோடிகளை பிரிப்பது பாவம்மல்லவா...!
பறவைகளை கூண்டுக்குள் அடைக்காதீர்கள்
சுதந்திரம் நமக்குமட்டுமல்ல அவைகளுக்கும்தான்...!
No comments:
Post a Comment