அறிவுக்கு விருந்து – 28.08.2019 (புதன்)
வரலாற்றில் இன்று
ஆகத்து 28 (August 28) கிரிகோரியன் ஆண்டின் 240 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 241 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·475 – உரோமைத்
தளபதி ஒரெசுடசு மேற்கு உரோமைப் பேரரசர்
யூலியசு நேப்போசை தலைநகர் ராவென்னாவில் இருந்து வெளியேற்றினான்.
· 632 – முகம்மது நபியின்
மகள் பாத்திமா
இறந்தார். இவரின் இறப்பின் காரணம் சுனி,
சியா
முசுலிம்களிடையே சர்ச்சைக்குரிய தலைப்பாக இருந்து வருகிறது.
· 1524
– எசுப்பானியரின்
குவாத்தமாலா
ஆக்கிரமிப்பின் போது, காக்சிக்கல் மாயா
மக்கள் தமது முன்னாள் எசுப்பானியக் கூட்டுப் படைகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
பிறப்புகள்
இறப்புகள்
· 1891 – ராபர்ட் கால்டுவெல், ஆங்கிலேய மதப்பரப்புனர், மொழியியலாளர் (பி. 1814)
குறளறிவோம்- 56 - வாழ்க்கைத் துணைநலம்
தற்காத்துத் தற்கொண்டாற்
பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: கற்புநெறியில் தன்னையும் தன்
கணவனையும் காத்துக் கொண்டு,
தமக்குப் பெருமை
சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி
குலையாமல் இருப்பவள் பெண்.
மு.வரதராசனார் உரை: கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து
உறுதி
தளராமல் வாழ்கின்றவளே பெண்.
Translation: Who guards herself, for husband's
comfort cares, her household's fame, In perfect wise with sleepless soul
preserves, -give her a woman's name.
Explanation: She is a wife who unweariedly guards
herself, takes care of her husband, and preserves an unsullied fame.
சிந்தனைக்கு
வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்றவனாவான்.
தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்
·
அவலம் - துன்பம்
·
அவலம் - அழுகை
விடுகதை விடையுடன்
காட்டிலே பச்சை, கடையிலே கருப்பு, வீட்டிலே சிவப்பு
அது என்ன?– மரம், கரி, நெருப்பு
பழமொழி தூர்த்த கிணற்றைத் தூர்வாராதே.
பொருள்: கிணற்றைத் தூர்த்து முடிவிட்டபின், மீண்டும் அதைத் தோண்டித் தூர்வாரினால் பயன் உண்டோ?
விளக்கம்: முடிந்துபோன விஷயத்தை மீண்டும் கிளறுவது குறித்துச் சொன்னது.
Enrich your vocabulary
Enrich your vocabulary
·
Fertile.....வளமான
·
Abandoned.....கவனிப்பாரற்ற
·
Vigorous.....தீவிரமான
Opposite Words
Boring
X Interesting
- I trudged through a boring day, knowing I’d return to an empty apartment as Betsy was off to Los Angeles for the entire week.
- Dr. Bell told me many interesting things about his work.
Bottom
X Top
- I waited for them at the bottom of the hill.
- She was standing at the top of the stairs.
மொழிபெயர்ப்பு
Sweet Potato
|
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
|
Tamarind
|
புளி
|
Proverb
Take time by the fore lock
காற்றுள்ள போதே
தூற்றிக் கொள்
இனிக்கும்
கணிதம் Tamil
Numerals தமிழ் எண்கள்
1 =௧ ,2 =௨ ,3=௩ ,4 =௪ ,5=௫ ,6=௬ ,7 =௭ ,8 =௮ ,9=௯ ,10=௰ ,100=௱ ,1000=௲
அறிவியல் அறிவோம் – வெர்னியர் அளவுகோல்
வெர்னியர் அளவியில் மீச்சிற்றளவு என்பது? – (முதன்மை கோல் பிரிவு – துணைக்கோல்
பிரிவு) =1 மி.மீ-0.9 மி.மீ = 0.01 செ.மீ
வெர்னியர் கோலில், துணைக்கோலின் சுழி, முதன்மைக்கோலின் சுழிக்கு வலப்புறமோ அல்லது இடப்புறமோ அமைவது_____எனப்படும் – சுழிப்பிழை
அறிவியல் துளிகள்
உடலில் கார, அமில தன்மையை
நிலை நிறுத்துவது எது? – ரத்தம்
தினம் ஒரு மூலிகை - தொழுகண்ணி
தொழுகண்ணி ( Desmodium
gyrans, Telegraph Plant, Semaphore plant or dancing grass ) என்பது
கிடைப்பதற்கு அரிதான ஒரு காயகற்ப மூலிகை ஆகும். இதன் இலை பார்ப்பதற்குச் சனப்ப இலை போல இருக்கும், இதைத்
தொட்ட உடன் பக்க இலையுடன் இலை சேர்ந்து கைகூப்புவது போல் இருக்கும். ஒரு முழ நீளம்
வரை வளரும், அந்தி மல்லிச் செடியின் தோற்றத்தை ஒத்து
இருக்கும். சூரியன் உச்சியில் இருக்கும் போது இலைகள் சேர்ந்து பிரிவது மிக வேகமாக
இருக்கும். சூரியனின் சக்தி இதற்கு அதிக ஆற்றல் அளிப்பதனாலேயே இது நிகழ்கிறது. சதுரகிரி மலையில் இம் மூலிகை இருக்கிறது.
மருத்துவ குணங்கள் - அழுகண்ணி போலவே இக்காயகற்ப மூலிகையையும் முறைப்படி உண்டுவந்தால் உடலில்
வெட்டுப்பட்ட பாகங்களை உடனே இணைக்கும் என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுகின்றன
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் - இலந்தை பழம்
நோய்களை தீர்க்க இலந்தை பழம் உதுவுமா
.இலந்தை பழத்தை இன்று காணவே முடிவது இல்லை. அதில் இருந்து கிடைக்கும் உடல்
ஆரோக்கியத்தை தெரிந்து கொண்டு, அதனை உண்ண ஆரம்பியுங்கள்.
உடலில் அடிக்கடி ஏற்படும் மூட்டு வலி,
கை, கால்களில் ஏற்படும் வலி, தசை பிடிப்புகள், எலும்புகளில் ஏற்படும் வலிகளை போக்க
முதலில் இலந்தை பழத்தை சாப்பிடுங்கள்.
ஞாபக திறன் : மூளையில் ஏற்படும் சோர்வை போக்கவும் மற்றும் சுவாச உறுப்புகளில்
ஏற்படும் குறைபாடுகளை குணப்படுத்தவும் உதவுகிறது. இரவு தூக்கம் இன்றி அவதி படுவோர்
இலந்தை பழத்தை சாப்பிட நல்ல ஆழ்ந்த உறக்கத்தை பெறலாம் மற்றும் மன அழுத்தங்களை
நீக்கி, நல்ல மன நிலையை தருகின்றன .
அஜீரண கோளாறு பெரிய கோளறுங்க. இதனை
சரி செய்ய இலந்தை பழத்தின் விதைகளை நீக்கி, சதை பற்றை மட்டும் எடுத்து,
விரும்பினால் தோல்களை நீக்கி கொள்ளலாம். இதனுடன் சுவைக்கு உப்பு, காரத்திற்கு
மிளகாய் பொடியை கலந்து உண்ண செரிமான பிரச்சனைகள் தீரும், அதனால் ஏற்படும் வயிற்று
கோளாறுகளும் தடுக்கப் பயன்படுகிறது . ஒவ்வாமை தொல்லையால் ஏற்படும் வாந்தி, பித்த
கோளாறுகள், தலை சுத்தல் ஏற்படுவதால் மயக்கமான நிலையை உணருவார்கள். இதற்கு உகந்த
தீர்வு இலந்தை பழத்தை சாப்பிடலாம்.
கால்சியம் : எலும்புகளுக்கும் மற்றும் பற்களுக்கும் உறுதியை கொடுக்க
உதவும் கால்சியம் சத்துக்களை கொண்டுள்ள இலந்தை பழத்தை சாப்பிட நல்லதே.
எலும்புகளில் ஏற்படும் வலிகளையும் போக்க உதவுகிறது. பசியின்மையால் அவதி படுவோர்
தினம் ஒரு இலந்தை பழத்தை உண்ண நன்கு பசி எடுக்கும்.
வரலாற்றுச் சிந்தனை கொடிகாத்த குமரன்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார் குமரன். 1932
ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்தது. அப்போது,
திருப்பூரில் ’தேசபந்து இளைஞர் மன்றம்’ மறியல் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.
1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி நடந்த போராட்ட அணிவகுப்பின்
போது கையில் இந்திய தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று முன்
நடந்தார் குமரன். அந்த போராட்டத்தின் போது ஆங்கிலேய காவலர்களால் தலையில் தடியால்
தாக்கப்பட்டார். தலையிலிருந்து ரத்தம் வழிய கீழே சரிந்தபோதும், கையில் இந்திய
தேசியக் கொடியை ஏந்தியபடி தேசியக்கொடி தரையில் விழாமல் காத்தார். சிகிச்சைக்காக
மருத்துவமனை சென்றவர் அங்கேயே உயிர் துறந்தார். திருப்பூரில் நடந்த போராட்டதில்
உயிர்நீத்த்தால் திருப்பூர் குமரன் என்றும் தேசியக் கொடியை ஏந்தியபடி வீரமரணம்
அடைந்ததால் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
தன்னம்பிக்கை கதை - 100 சதவீத அன்பை காட்டுங்கள்
தன்னம்பிக்கை கதை - 100 சதவீத அன்பை காட்டுங்கள்
ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது. அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று கேட்டான். குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள். அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்.
குட்டி பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள். அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக உறங்கினாள். அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை. அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்திருப்பாளா இல்லை நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் அவஸ்த்தைப்பட்டான். நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.
இது காதலுக்கும், நட்புக்கும்,வேலை செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி தொழிலாளி உறவுக்கும் பொருந்தும். எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை காட்டுங்கள்....!!!!
No comments:
Post a Comment