அறிவுக்கு விருந்து – 22.08.2019 (வியாழன்)
வரலாற்றில்
இன்று
ஆகத்து 22 (August 22) கிரிகோரியன் ஆண்டின் 234 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 235 ஆம் நாள்.
நிகழ்வுகள்
· 1485 – பொசுவர்த் பீல்டு என்ற இடத்தில் நடந்த போரில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ரிச்சார்டு கொல்லப்பட்டார்.
·1639 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னையை) அமைத்தார்கள்.
·1642 – இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஆங்கிலேய நாடாளுமன்றத்தை "துரோகிகள்" என வர்ணித்தார். இங்கிலாந்து உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
பிறப்புகள்
இறப்புகள்
· 1967 – கிரிகோரி குட்வின் பிங்கஸ், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1903)
சிறப்பு நாள்
சென்னை தினம் (தமிழ்நாடு)
குறளறிவோம்- 53 - வாழ்க்கைத் துணைநலம்
இல்லதென் இல்லவள்
மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.
இல்லவள் மாணாக் கடை?.
கலைஞர் மு.கருணாநிதி உரை: நல்ல பண்புடைய மனைவி
அமைந்த
வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி
அமையாத
வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.
மு.வரதராசனார் உரை: மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன?
அவள்
நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?.
Translation:There is no lack within the house, where wife in worth
excels, There is no luck within the house, where wife dishonoured dwells.
Explanation: If his wife be eminent (in virtue),
what does (that man) not possess ? If she be without excellence, what does (he)
possess ?.
சிந்தனைக்கு
உண்மை புறப்பட ஆரம்பிக்கும்முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.
தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்
·
அகம் - மனை
·
அகம் - மனம்
விடுகதை விடையுடன்
கந்தல் துணி கட்டியவன், முத்துப்
பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான் அது என்ன?
– சோளக்கதிர்
பழமொழி
துலக்காத ஆயுதம்
துருப்பிடிக்கும்.
உபயோகப் படுத்தாத
பொருள் துருப்பிடிக்கும். அதுபோல மெத்தப் படித்த மேதாவிகளாக இருப்பினும் மாதம் ஒரு
முறையோ அல்லது வாரம் ஒரு முறையோ தான் கற்றவற்றை நினைவில் கொண்டுவந்து செயல்பட்டால்
ஞாபக மறதியின்றி புதிய உற்சாகத்துடன் செயல்படலாம். இல்லையெனில் தக்க நேரத்தில் பயன்படாமல்
அது பேராபத்தை விளைவிக்கும்.
Enrich
your vocabulary
·
Marine.. நீரில் வாழுகின்ற
·
Species.......இனம்
·
Coastal. கடற்கரை
·
Flippers.. . துடுப்பு
Opposite Words
Black x White
- Matthew had thick black hair, but Natalie’s was blonde.
- His face is white, and he seems very weak.
Blame X
Praise
- Marie still blames herself for Patrick’s death.
- The mayor praised the rescue teams for their courage.
மொழிபெயர்ப்பு
Pumpkin
|
பூசணிக்காய், பரங்கிக்காய்
|
Radish
|
முள்ளங்கி
|
Proverb
Procrastination is the thief of time
இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை
என்பதற்கு அடையாளம்
இனிக்கும் கணிதம் இம்மி என்னும் அளவு
தமிழர்கள் பேச்சு
வழ்க்கில் பயன்படுத்தும் மிகச்
சிறிய
அளவு
இம்மி.
ஒரு
இம்மி
கூடப்
பிசகவில்லை என்று
கூறுவார்கள். இது
பற்றி
1968 உலகத்
தமிழ்
மாநாட்டு மலரில்
ஸ்தபதி
கணபதி
எழுதியது இதோ:
·
8 அணு= ஒரு
தேர்த்துகள்
·
8 தேர்த்துகள்= ஒரு
இம்மி
·
8 இம்மி= ஒரு
எள்ளு
·
8 எள்= ஒரு
நெல்
·
8 நெல்= ஒரு
பெரு
விரல்
அறிவியல் அறிவோம் –
ஏப்பம்
ஏற்படுவது
ஏன்?
ஏப்பம்
விடும்போது
சத்தம்
வருகிறதே,
எப்படி?
ஏப்பம் ஏற்படுவது ஏன்?
வழக்கமாக நாம்
சாப்பிடும்போது உணவுடன் கொஞ்சம் காற்றையும் விழுங்கி விடுகிறோம். அது
வயிற்றில் சேர்ந்துவிடுகிறது. அதிலும் குறிப்பாக, அவசர
அவசரமாக உண்ணும்போது, பேசிக்கொண்டே உண்ணும்போது, பரபரப்பாக இருக்கும்போது, காற்றடைத்த மென்பானங்களைக் குடிக்கும்போது, மது
அருந்தும்போது, சூயிங்கம் மெல்லும்போது, புகைபிடிக்கும்போது, வெற்றிலை, பாக்கு,
புகையிலை மற்றும் பான்மசாலா போடும்போது, காபி,
பால்,
டீ,
தண்ணீர் குடிக்கும்போது நம்மை
அறியாமலேயே காற்றையும் விழுங்கி விடுகிறோம். சிலருக்கு இந்தக்
காற்று
விழுங்கல் அளவுக்கு அதிகமாக இருக்கும். இதற்கு ‘ஏரோபேஜியா’ (Aerophagia) என்று பெயர்.
பிறந்த
குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போதும், இதுபோலக் காற்றை
விழுங்கிவிடுவார்கள். அதை
வெளியேற்றக் குழந்தையைத் தோளில்
சாய்த்துக்கொண்டு முதுகில் தட்டுவது வழக்கம்.ஏப்பத்துக்கான காரணம்
என்னவாக இருந்தாலும் விழுங்கிய காற்று
இரைப்பையிலிருந்து வெளியேற வேண்டும், இல்லையா? இதற்காக இயற்கை
நமக்குக் கொடுத்திருக்கும் தற்காப்பு வழிதான் ஏப்பம்
(Belching). சுருக்கமாகச் சொன்னால், சோடா
பாட்டிலைத் திறக்கிற மெக்கானிசம்தான் இது.
விளக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், நம்
உணவுக்குழாயின் அமைப்பைக் கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டும்.
நல்லதோ, கெட்டதோ, திடமோ,
திரவமோ
நாம்
சாப்பிடுவது எதுவானாலும் வாயிலிருந்து வயிற்றுக்குள் செல்வது முக்கால் அடி
நீளமுள்ள (25 செ.மீ.) உணவுக் குழாய்
வழியாகத்தான். சுருங்கி விரியக்கூடிய தசைநார்களால் ஆன
இந்த
உறுப்பு, தொண்டையின் நடுப்
பகுதியில் தொடங்குகிறது. குரல்வளைக்குப் பின்புறமாக அமைந்துள்ளது.நெஞ்சின் நடுப்
பகுதியில் ஒரு
குழாய்
போலத்
தொங்கிக்கொண்டிருக்கிறது. இதன்
அடிப்பகுதி உதரவிதானத்தை (Diaphragm) கடந்து, சுமார்
4 செ.மீ. நீண்டு, இரைப்பையின் ஆரம்பப் பகுதியோடு இணைந்து கொள்கிறது.
உணவுக் குழாயின் மேல்
முனையிலும் கீழ்
முனையிலும் சுருக்குத் தசையால் ஆன
இரண்டு
கதவுகள்(Sphincters) உள்ளன, மேல்
முனையில் இருக்கும் கதவு,
நாம்
உணவை
விழுங்கும்போது அது
மூச்சுக்குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது. கீழ்
முனையில் இருக்கும் கதவு,
இரைப்பையில் சுரக்கும் அமிலம்
மேல்நோக்கி வந்து,
உணவுக்
குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது. இந்தக்
கதவு
உணவுக்
குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர்
எல்லைக்கோடு போல்
செயல்படுகிறது. இதைச்
சோடா
பாட்டில் மூடியாகக் கற்பனை
செய்துகொள்ளுங்கள்.
நாம் உணவுடன் விழுங்கிய காற்று
மிகவும் கொஞ்சமாக இருந்தால் இரைப்பையில் செரிக்கப்பட்ட உணவுடன் கலந்து
சிறுகுடலுக்குச் சென்றுவிடும். இதன்
அளவு
அதிகமானால் இரைப்பைக்குத் திண்டாட்டம். இதனால்
வயிறு
உப்பிக்கொள்கிறது. இரைப்பையில் காற்றின் அழுத்தம் அதிகமாக அதிகமாக, அதை
வெளியேற்ற வழி
பார்க்கும். தனக்குள்ள சிரமத்தைக் குறைக்க உதரவிதானத்தின் உதவியைக் கேட்கும்.
அதுவும் சம்மதித்துக் கீழே
இறங்கி
இரைப்பையைப் பலமாக
அழுத்தும். இந்த
அழுத்தத்தை ஈடுகட்ட இரைப்பைத் தசைகள்
எல்லாமே ஒன்றுகூடி மேல்நோக்கி அழுத்தம் கொடுக்கும். இந்த
அதீத
அழுத்தத்தைத் தாங்க
முடியாமல் உணவுக்
குழாயின் கீழ்க்
கதவும்
மேல்
கதவும்
திறந்துகொள்ள, ‘அப்பாடா……வழி
கிடைத்துவிட்டது’ என்ற
சந்தோஷத்துடன், இரைப்பை தன்னிடமுள்ள காற்றை
ஒருவித
சத்தத்துடன் வாய்வழியாக வெளியேற்றும். இதுதான் ஏப்பம்.
சோடா
பாட்டிலில் நாம்தான் மூடியைத் திறக்கிறோம். இங்கு
இரைப்பையே திறக்கச் செய்து
விடுகிறது என்பதுதான் வித்தியாசம்.
சப்தம் எப்படி? சரி, ஏப்பம் விடும்போது சத்தம்
வருகிறதே, எப்படி?
இரைப்பையிலிருந்து மேல்நோக்கிக் காற்று அழுத்தமாகச் செல்லும்போது, உணவுக் குழாயின் மேல் கதவையும் அது திறக்க வைக்கிறது என்று சொன்னோம் அல்லவா?
இரைப்பையிலிருந்து மேல்நோக்கிக் காற்று அழுத்தமாகச் செல்லும்போது, உணவுக் குழாயின் மேல் கதவையும் அது திறக்க வைக்கிறது என்று சொன்னோம் அல்லவா?
அப்போது மேல்
கதவை
ஒட்டி
இருக்கிற குரல்வளையையும் தொண்டைச் சதைகளையும் இந்தக்
காற்று
அழுத்துவதால், குரல்வளை மேல்
எழும்புகிறது; குரல்நாண்கள் சத்தம்
இடுகின்றன. இந்தச்
சத்தம்தான் ‘ஏவ்வ்வ்வ்…….’ என்கிற
ஏப்பச்
சத்தம்.
ஒரு
நாளில்
ஓரிரு
முறை
ஏப்பம்
வந்தால் பிரச்சினை இல்லை.
அதுவே
அடிக்கடி வருமானால் வயிற்றில் பிரச்சினை இருக்கிறது என்று
அர்த்தம். அது
சாதாரண
அஜீரணக் கோளாறாகவும் இருக்கலாம். இரைப்பை அல்சர்,
அசிடிட்டி, புற்றுநோய் போன்றவற்றின் ஆரம்பமாகவும் இருக்கலாம். கல்லீரல், பித்தப்பை, கணையக்
கோளாறாகவும் இருக்கலாம். மருத்துவரிடம் பரிசோதித்துச் சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது.
தடுக்க என்ன வழி?
சாப்பிடும்போது பேசாதீர்கள்; கோபத்தோடும் கவலையோடும் சாப்பிடாதீர்கள். வாயை மூடி உணவை மென்று விழுங்குங்கள். மென்றதை விழுங்கிய பிறகே, அடுத்த கவளம் உள்ளே போகவேண்டும்.
காரம்,
மசாலா, உப்பு, கொழுப்பு, புளிப்பு, எண்ணெய் அதிகமுள்ள உணவு வகைகளை முடிந்த அளவுக்குக் குறைத்துக்கொள்ளுங்கள். ஆவியில் அவித்த உணவு வகைகளை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். சோடா மற்றும் காற்றடைத்த பாட்டில் பானங்களைக் கண்டிப்பாக அருந்தக் கூடாது. முக்கியமாக இந்தப் பானங்களை ஸ்டிரா மூலம் உறிஞ்சி குடிப்பதைத் தவிருங்கள். மது, புகையிலை, வெற்றிலை, பாக்கு, பான்மசாலா இவற்றையெல்லாம் ஓரங்கட்டுங்கள். ஏப்பத்தைக் கூடிய மட்டும் தவிர்க்கலாம்.
அறிவியல் துளிகள்
சுருக்கெழுத்து
- சர் ஐசக் பிட்மேன்
தினம்
ஒரு மூலிகை – தண்ணீர் விட்டான் கிழங்கு
சாத்தாவாரி அல்லது தண்ணீர் விட்டான் (Asparagus racemosus) என்பது இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய இடங்களில் காணப்படும் அஸ்பராகஸ் இனத் தாவரம். ஒன்று அல்லது
இரண்டு மீட்டர் வளரும் இது சரளைக்கல், கற்கள் கொண்ட
மணலில், கடல்மட்டத்திலிருந்து 1,300–1,400 மீட்டர் சமவெளிகளில் வளரும்.
இது மூலிகை மருந்து உட்பட பல பயன்களைத் தரவல்லது.
இது
தண்ணீர்விட்டான், சதாவேரி, சதாவரி, நாராயணி,
உதகமூலம், சீக்குவை, பறணை, பீருதந்தி ஆகிய பல்வேறு பெயர்களைக்
கொண்டது ஆகும். இதன் ஊசி போன்ற இலைகளும் கிளைகளும் வரிவரியாக மேலேறுவதால் ‘வரிவரி’
எனும் பெயரும் உண்டு. இந்தக் கொடியில் இருந்து கிடைக்கும் கிழங்கானது வெப்பத்தைக்
குறைக்கும் குளிர்ச்சித் தன்மைக் கொண்டது என்பதால், ‘நீர்’விட்டான்,
‘நீர்’வாளி ஆகிய பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம். நூறு (சதா)
நோய்களைத் தீர்க்கும் மூலம் (வேர்) என்பதால் ‘சதாமூலம்’ என்ற பெயரும் இதற்குண்டு.
இது
முட்கள் கொண்ட கொடி வகைத்
தாவரமாகும். இதன் இலைகள் மெல்லியதாகவையாகவும், ஊசி போல்
சிறுசிறுயதாகவும் இருக்கும். இது வெள்ளை நிறத்தில் வாசனை மிக்கப் பூக்களைக்
கொண்டதாகவும், இதன் பழங்கள் சிவப்பு நிறம் கொண்டவையாகவும்
இருக்கும். இது தன் வேர்களில் விரல் வடிவ வெண்ணிறத்திலான கிழங்குகளைக்
கொண்டிருக்கும். இதில் தனக்கான நீரையும், உணவையும்
சேமித்து வைத்திருக்கும். இந்த கிழங்கானது பல வகையில் மருந்தாக
பயன்படுத்தப்படுகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் - பேரீச்சம்பழம்
பேரீச்சம்பழம் தினமும் இரவில்
படுக்க
செல்லும் முன்னர் ஒரு
டம்ளர்
காய்ச்சிய பசும்
பாலையும், இரண்டு
பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு
வந்தால் உடல்
நல்ல
பலம்பெறும். புதிய
ரத்தமும் உண்டாகும். தோல்
பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும்.
பிறகு
கண்
சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு
சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று
நோய்
கிருமிகள் நம்மை
அணுகாது. மற்றும் பல்
சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல்
கெட்டிப்படும்.
பேரீச்சம் பழத்தின் இருக்கும் கொட்டைகளை நீக்கி
பாலில்
போட்டு
காய்ச்சி ஆறியபின் பழத்தை
சாப்பிட்டு பாலையும் பருகி
வந்தால் சளி,
இருமல்
குணமாகும். நீரழிவு நோயால்
பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம்
இழந்து
காணப்படும்.
இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து
தேவை.
இவர்கள் தினமும் ஒன்று
அல்லது
இரண்டு
பழம்
வீதம்
சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
பேரீச்சம் பழத்தை
பசும்பாலில் வேக
வைத்து
அருந்திவந்தால் இதய
நோய்கள் அண்டாது. இரும்புசத்து அதிகம்
உள்ள
பேரீச்சம் பழம்
நோய்
எதிர்ப்பு சக்தி
வாய்ந்தது. வைட்டமின் மற்றும் மினரல்
நிறைந்த இந்த
பழம்
நரம்பு
தளர்ச்சியை போக்கும். புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ள பேரிட்சம் பழங்கள் புற்றுநோய் வராமல்
தடுக்கும்.
வரலாற்றுச்
சிந்தனை
- மஞ்சிட்டி என்ற நீர்ப்பூண்டு வகையைப் பயன்படுத்திச் சிந்து சமவெளி மக்கள் துணிகளுக்குச் சிவப்பு நிறத்தை ஏற்றியிருக்கிறார்கள்.
- குழந்தைகள் விளையாடச் சக்கரம் கொண்ட பொம்மைகள், குட்டி வண்டியில் பொருத்தப்பட்ட பொம்மைகள் கிடைத்துள்ளன.
தன்னம்பிக்கை கதை -
உச்சியை தொட செவிடாய் இரு
No comments:
Post a Comment